search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆர். வேலூர் ஊராட்சியில் பொதுமக்கள் சாலை மறியல்
    X

    சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களின் காட்சி.

    ஆர். வேலூர் ஊராட்சியில் பொதுமக்கள் சாலை மறியல்

    • கூட்டுக் குடிநீர் திட்டங்கள் வாயிலாக நாள்தோறும் குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது.
    • கிராமங்களில் தற்போது உள்ள மக்கள் தொகைக்கு ஏற்றவாறு குடிநீர் வழங்கப்படுவதில்லை.

    உடுமலை:

    உடுமலை சுற்றுப்புற கிராமங்களுக்கு திருமூர்த்தி அணையின் மூலம் செயல்படுத்தப்படுகின்ற கூட்டுக் குடிநீர் திட்டங்கள் வாயிலாக நாள்தோறும் குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் குடிநீர் திட்டத்தில் நிலவுகின்ற பல்வேறு குளறுபடிகள் காரணமாக கிராமங்களில் தண்ணீர் பற்றாக்குறை தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.

    இதனால் ஆவேசம் அடையும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது.அந்த வகையில் நேற்று ஆர். வேலூர் ஊராட்சியில் பூலாங்கிணறு குடிநீர் திட்டத்திற்கு வால்வு பொருத்துவதற்கு அதிகாரிகள் வருகை தந்தனர். ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால் வால்வு பொருத்தக் கூடாது என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் சீரான முறையில் குடிநீர் வழங்குமாறும் தெரிவித்தனர் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,

    கிராமங்களில் தற்போது உள்ள மக்கள் தொகைக்கு ஏற்றவாறு குடிநீர் வழங்கப்படுவதில்லை. பழைய பட்டியலில் உள்ள எண்ணிக்கைக்கு தகுந்தவாறு குடிநீர் வழங்குகிறார்கள்.அது மட்டுமின்றி குடிநீர் குழாயில் பொருத்தப்பட்டுள்ள பழைய வால்வை அகற்றிவிட்டு அளவு சிறியதாக உள்ள வால்வை பொருத்துகிறார்கள்.

    இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகிறார்கள் என்று தெரிவித்தனர்.

    Next Story
    ×