என் மலர்
உள்ளூர் செய்திகள்

மரக்காணத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட பா.ம.க.வினர் 25 பேர் மீது வழக்கு
- நேற்று பா.ம.க. சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
- போலீசார் சாலை மறியல் போராட்டம் நடத்தியவர்களை அப்புறப்படுத்தினர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் விலை நிலங்களில் நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகத்தின் சார்பில் கால்வாய் அமைப்பதற்கான பணியில் ஈடுபட்டனர் இதனால் நெய்வேலி என்.எல்.சி.நிர்வாகத்தினை கண்டித்து நேற்று பா.ம.க. சார்பில் முற்றுகை போ ராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கிய பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் உட்பட பலரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் மரக்காணம் நகர பா.ம.க .சார்பில் விவசாயிகளுக்காக போராட்டம் நடத்திய அன்புமணியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி மரக்காணம்கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று மாலை சாலை மறியல் போராட்டம் நடத்தினர் .இதனைப் பார்த்த மரக்காணம் போலீசார் சாலை மறியல் போராட்டம் நடத்தியவர்களை அப்புறப்படுத்தினர். இந்நிலையில் மரக்காணத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நகர செயலாளர் ரமேஷ் ,முன்னாள் நகர செயலாளர் திருநாவுக்கரசு ,கர்ணன், மணிகண்டன், விநாயகமூர்த்தி உள்பட 25 பேர்கள் மீது மரக்காணம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.






