என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிணத்துடன் சாலை மறியலில் ஈடுபட்ட அண்ணாதுரை உறவினர்கள்.
பண்ருட்டி அருகே அ.தி.மு.க. பிரமுகர் தூக்குபோட்டு தற்கொலைபிணத்துடன் உறவினர்கள் சாலை மறியல்
- அண்ணாதுரை (44) அ.தி.மு.க.பிரமுகர். இவர், டீக்கடை நடத்தி வந்தார் .இவரது டீக்கடையை காலி செய்ய கோரி நோட்டீஸ் வந்ததாக கூறப்படுகிறது.இதனால் விரக்தி அடைந்த அண்ணாதுரை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- அண்ணாதுரை உறவினர்கள், அவரது உடலுடன் பண்ருட்டி- சிதத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே அ.தி.மு.க. பிரமுகர் தற்கொலை செய்து கொண்டார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எஸ்.ஏரிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை (44) அ.தி.மு.க.பிரமுகர். இவர், அதே பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார்.இவரது டீக்கடையை காலி செய்ய கோரி நோட்டீஸ் வந்ததாக கூறப்படுகிறது.இதனால் விரக்தி அடைந்த அண்ணாதுரை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்குமனைவி 2 மகள்கள் உள்ளனர். இதனால் அண்ணாதுரை உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அண்ணாதுரை உடலுடன்பண்ருட்டி- சிதத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது..இது பற்றிதகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர்நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுசாலை மறியலில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.