search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "petrol diesel price hike"

    சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85.26-க்கும், டீசல் லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து 78.04-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. #FuelPriceHike #PetrolDieselPriceHike
    சென்னை:

    பெட்ரோல்-டீசல் விலை கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து உயர்ந்த வண்ணமாய் இருந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாலும், கச்சா எண்ணை உற்பத்தி சற்று குறைந்ததாலும் பெட்ரோல் - டீசல் விலை உயர்வு கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்தன.

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும், தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் இந்த விலை உயர்வு ஏற்படுகிறது.

    இதற்கிடையே, மத்திய அரசு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 2.50 ரூபாய் குறைக்கப்படும் என சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருந்தது. 

    இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் உயர்த்த தொடங்கியுள்ளன.



    சென்னையில் நேற்று பெட்ரோல் ரூ.85.04-க்கும், டீசல் ரூ.77.73-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்றும்  (திங்கட்கிழமை) பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. அதன்படி, பெட்ரோல் விலையில் 22 காசுகள் உயர்ந்து, 85.26 ரூபாய்க்கும், டீசல் விலையில் 31 காசுகள் உயர்ந்து 78.04 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் - டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். #FuelPriceHike #PetrolDieselPriceHike

    சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 19 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு லிட்டர் பெட்ரோல் 84 ரூபாய் 89 காசுக்கு விற்பனையாகிறது. #FuelPrice
    சென்னை:

    பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயம் என்ற நிலைக்கு மாறியதில் இருந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி மத்திய-மாநில அரசுகள் வைக்காதா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து இருக்கின்றனர். கடந்த 2 தினங்களுக்கு முன்பு மத்திய அரசு உற்பத்தி வரியை குறைத்து, பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு தலா 2 ரூபாய் 50 காசு வீதம் குறைத்தது.

    அதன்படி, தமிழகத்தில் பெட்ரோல்-டீசல் விலை குறைந்தது. இது வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆறுதல் தந்தாலும், விலை குறைத்த மறுநாளில் இருந்து மீண்டும் அதன் விலை ஏறுமுகத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

    நேற்று முன்தினம் 84 ரூபாய் 70 காசுக்கு விற்பனையான பெட்ரோல், நேற்று லிட்டருக்கு 19 காசு உயர்ந்து, 84 ரூபாய் 89 காசுக்கு விற்பனை ஆனது. இதேநிலை நீடித்தால் இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85-ஐ தொட்டுவிடும்.

    இதேபோல், 77 ரூபாய் 11 காசுக்கு நேற்று முன்தினம் விற்பனை செய்யப்பட்ட டீசல், நேற்று 31 காசு அதிகரித்து, 77 ரூபாய் 42 காசுக்கு விற்பனை ஆனது.  #PetrolDieselPrice
    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து பா.ம.க. சார்பில் சோழிங்கநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் மத்திய, மாநில அரசுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர்.
    சோழிங்கநல்லூர்:

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து பா.ம.க. சார்பில் சோழிங்கநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் மோகனசுந்தரம் தலைமை தாங்கினார்.

    இதில் மாநில இளைஞர் அணி செயலாளர் ராஜேஷ் பிரியா, மாநில தொழில் சங்கம் தலைவர் கண்ணன் நந்தகோபால், முன்னாள் மாவட்ட செயலாளர் நிர்மல் குமார் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் மத்திய, மாநில அரசுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய-மாநில அரசை கண்டித்து ராமதாஸ் தலைமையில் திண்டிவனத்தில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #PMK #Ramadoss #FuelPrice #BJP
    திண்டிவனம்:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய-மாநில அரசை கண்டித்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காந்தி திடலில் பா.ம.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ரமேஷ் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

    பெட்ரோல், டீசல் விலை 118 சதவீதம் உயர்ந்து விட்டது. தினமும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணை உற்பத்தியாளர்கள் நிர்ணயித்து கொள்ளலாம் என்று அரசு உத்தரவு பிறப்பித்ததே இதற்கு காரணம்.

    2014-16-ம் ஆண்டில் உலகளவில் கச்சா எண்ணை விலை குறைவாகத்தான் இருந்தது. அப்போதாவது பெட்ரோல், டீசல் விலையை குறைத்து இருக்கலாம். மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஒவ்வொரு முறையும் பெட்ரோல், டீசல் விலை குறையும் என கூறுகிறார். ஆனால், இதுவரை குறையவில்லை.

    தற்போது பாராளுமன்ற தேர்தல் வரும் காரணத்தினால் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.


    பெட்ரோல், டீசல் விலை உயர்வில் அதிகமாக கொள்ளையடிப்பது தமிழக அரசுதான். கடந்த ஆண்டு பெட்ரோல், டீசல் விற்பனையில் தமிழக அரசுக்கு ரூ.470 கோடியில் இருந்து ரூ.900 கோடி வரை கிடைத்திருந்தது. இந்த ஆண்டு ரூ.4 ஆயிரம் கோடி கிடைக்கும். மற்ற மாநிலங்களை போல தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகி இருக்கிறார்கள். எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைத்து பொதுமக்கள் நிம்மதியாக வாழ வழிவகை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தின் முடிவில் நகர தலைவர் குமார் நன்றி கூறினார். #PMK #Ramadoss #FuelPrice #BJP
    சென்னையில் பெட்ரோல் விலையை 19 காசாகவும், டீசல் விலையை 24 காசுகளாகவும் லிட்டருக்கு எண்ணை நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. #FuelPrice
    சென்னை:

    பெட்ரோல்-டீசல் விலை கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து உயர்ந்த வண்ணமாய் இருக்கிறது.

    சர்வதேச கச்சா எண்ணை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாலும், கச்சா எண்ணை உற்பத்தி சற்று குறைந்ததாலும் பெட்ரோல் - டீசல் விலை உயர்வு கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.

    மேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்து வருவதாலும் இந்த விலை உயர்வு இருந்து வருகிறது.

    இந்த நிலையில் இன்றும் பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்தது. சென்னையில் பெட்ரோல் விலையை 19 காசாகவும், டீசல் விலையை 24 காசுகளாகவும் லிட்டருக்கு எண்ணை நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன.

    நேற்று பெட்ரோல் விலை ரூ. 87.05 ஆக இருந்தது. இன்று லிட்டருக்கு ரூ. 87.24 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

    ரூ. 79.40 ஆக இருந்த டீசல் விலை இன்று ரூ. 79.64 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    பெட்ரோல்-டீசல் விலையின் இந்த தொடர் உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். #FuelPrice
    பழைய முறையில் தேர்தலுக்கு ஓட்டுச்சீட்டு முறையை கொண்டுவர வேண்டும் என்று சொல்லும் காங்கிரஸ் மீண்டும் காட்டில் போய் வாழ சொல்கிறதா? என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வியெழுப்பியுள்ளார். #PonRadhakrishnan
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள பனக்கள்ளி கிராமத்தில் அனைவருக்கும் நலவாழ்வு திட்டதின்கீழ் துணை சுகாதார நிலையம் திறப்பு விழா நடந்தது.

    மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு நலவாழ்வு மையத்தை ரிப்பன் கத்தரித்து திறந்து வைத்தார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் என தவறான பொய்பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. உலக அளவில் கச்சா எண்ணை விலை உயர்வால் தான் எண்ணை நிறுவனங்களால் உயர்த்தப்பட்டு வருகிறது.


    பாதுகாப்பு மற்றும் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு போதிய அனுபவம் இல்லை என்று கூறி இருக்கிறார் ப.சிதம்பரம். அவர் நிதிமந்திரியாக இருக்கும்போது என்ன ஊழல் செய்தார்? என்று மக்களுக்கு தெரியும். நிர்மலா சீதாராமன் எவ்வாறு பதவியை கையாண்டு வருகிறார்? என்பதும் மக்களுக்கு தெரியும்.

    மீண்டும் பழைய முறையில் தேர்தலுக்கு ஓட்டுச்சீட்டு முறையை கொண்டுவர வேண்டும் என கூறி உள்ளது காங்கிரஸ்! மீண்டும் நாம் காட்டில்போய் வாழ முடியுமா? காட்டுக்குள் போய் வாழ சொல்கிறதா காங்கிரஸ்? நடந்தே காட்டுக்கு செல்ல முடியுமா?

    பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால் தான் நல்லது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும்.

    இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் பேசினார். #BJP #PonRadhakrishnan
    தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு சென்று திரும்புபவர்களுக்காக 22 ஆயிரம் அரசு பஸ்களை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #TNMinister #MRVijayabaskar
    சென்னை:

    ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை கே.கே.நகர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் தொழில் துறையில் முன்னணியில் இருப்பதால் இந்திய அளவில் வாகன எண்ணிக்கையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. இதனால் விபத்துக்களை குறைப்பதற்கு போக்குவரத்து துறை முனைப்போடு செயல்பட்டு வருகிறது.

    தீபாவளிக்கு சிறப்பு பஸ்கள் விட ஏற்பாடு செய்வதற்கான ஆய்வுக் கூட்டம் நடத்த இன்னும் நேரம் உள்ளது. ஏற்கனவே தீபாவளி, பொங்கல் பண்டிகையையொட்டி பொது மக்கள் சிரமமின்றி பயணம் செய்ய ஏற்பாடுகளை செய்து கொடுத்தோம். அது வழக்கமான வேலைதான்.

    தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு சென்று திரும்புபவர்களுக்காக 22 ஆயிரம் அரசு பஸ்களை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


    சாலை விபத்தில் வருடத்துக்கு 17 ஆயிரம் பேர் இறப்பதாக புள்ளி விவரம் இருக்கின்றது. சாலை விதிகளை அனைவரும் முறையாக கடைபிடிக்க வேண்டும். காற்று மாசுவை கட்டுப்படுத்துவதற்கும், மின்சார வாகனங்களை கொண்டு வருவதற்காகவும் நான் அமெரிக்கா மற்றும் லண்டனுக்கு சென்றிருந்தேன். அங்கு சாலை விதிகளை ஒவ்வொருவரும் கடைபிடிப்பதை பார்த்தால் நமது நாட்டில் மிக மிக குறைவு.

    அந்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு வர வேண்டும். எனவே பள்ளிக்கல்வித்துறை சார்பில் பாடத்திட்டத்தில் அது சேர்க்கப்பட்டுள்ளது.

    சாலைகள் நல்ல சாலைகளாக இருப்பதால் வாகனங்கள் வேகமாக செல்லும் போது விபத்துகள் நடக்கின்றன. விபத்துக்களை குறைக்க இனிவரும் காலங்களில் அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கும்.

    அடுத்த வாரம் 475 புதிய பேருந்துகளை முதல்- அமைச்சர் தொடங்கி வைக்கிறார். 100 மின்சார பஸ்களை வாங்க நாங்கள் லண்டன் சென்றிருந்தோம். அதில் 80 பஸ்களை சென்னையிலும், 20 பஸ்களை கோவையிலும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் மின்சார பஸ்கள் சென்னையில் இயக்கப்படும்.

    பஸ் கட்டண உயர்வை மக்கள் தலையில் சுமத்த அரசு தயாராக இல்லை. டீசல் விலை உயர்வு அரசு போக்குவரத்து துறைக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்ட பிறகு சென்னையில் கூடுதலாக 300 பஸ்களை விட்டுள்ளோம்.

    இது மக்களின் பயணத்துக்கு போதுமாக இருக்கும் என்று கருதகிறோம். தேவைப்பட்டால் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்.

    விரைவில் போக்குவரத் துறையையும், மெட்ரோ ரெயில் சேவையையும் இணைத்து கார்டு சிஸ்டம் கொண்டு வர உள்ளோம். அது மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். தமிழகம் முழுவதும் உள்ள பஸ்களுக்கு ஜி.பி.எஸ். கருவி பொருத்தி பஸ் எப்போது வரும் என்பதை ‘ஆப்’ மூலம் தெரிந்து கொள்வதற்கான முயற்சிகளை எடுத்துள்ளோம். போக்குவரத்து துறையில் உள்ள காலி இடங்கள் டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #MRVijayabaskar
    சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு லிட்டர் பெட்ரோல் 87 ரூபாய் 5 காசுக்கு விற்பனையாகிறது. #FuelPrice
    சென்னை:

    பெட்ரோல், டீசல் விலை கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து உயர்ந்தபடி உள்ளது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கட்டுப்படுத்த முடியாதபடி உள்ளது.

    கச்சா எண்ணை உற்பத்தி சற்று குறைந்து போனதும் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் தேவை அதிகரிப்பதால் விலை உயர்வு கட்டுப்படுத்த இயலாதபடி உள்ளது.

    கடந்த வாரம் ஒரு பேரல் கச்சா எண்ணை விலை 80 டாலராக இருந்தது. நேற்று ஒரு பேரல் 83 டாலராக உயர்ந்தது. இன்று அது 83.20 டாலராக நிர்ணயமாகி இருக்கிறது.

    இதன் காரணமாக பெட்ரோலியம் பொருட்களின் விலையை இந்திய எண்ணை நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. அதன்படி இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 87 ரூபாய் 5 காசுக்கு விற்பனையானது.

    மும்பை நகரில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.90.75 ஆக இருந்தது. இன்று அது 91 ரூபாயை எட்டியுள்ளது. மராட்டிய மாநிலத்தில் அதிக வாட் வரி விதிப்பு காரணமாக சில ஊர்களில் மட்டும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.94 ஆக இருந்தது.

    டீசல் விலை இன்று 32 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. சமீப நாட்களில் இன்றுதான் டீசல் விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளது.

    இதன் காரணமாக சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 80 ரூபாயை நெருங்கி உள்ளது. சென்னையில் உள்ள பங்குகளில் இன்று ஒரு லிட்டர் டீசல் ரூ.79.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    பெட்ரோல், டீசல் போன்று சமையல் கியாஸ் விலையும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. மானிய விலை சமையல் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.2.89 உயர்ந்துள்ளது. மானியம் இல்லாத கியாஸ் விலை ரூ.59 அதிகரிக்கப்பட்டுள்ளது.

    சமையல் கியாசுக்கு வழங்கப்படும் மானியம் நேரடியாக மக்களின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் ரூ.320.49 மானியம் வழங்கப்பட்டது. இந்த மாதம் (அக்டோபர்) கியாஸ் மானியம் ரூ.376.60 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #FuelPrice
    ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 19 காசுகள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் சென்னையில் 86 ரூபாய் 70 காசுகளுக்கு விற்பனையானது. #FuelPrice
    சென்னை:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலையில் நேற்று மாற்றம் ஏற்பட்டது.

    இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையை எண்ணை நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன.

    இன்று (சனிக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 19 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் சென்னையில் 86 ரூபாய் 70 காசுகளுக்கு விற்பனையானது.

    சில பெட்ரோல் நிலையங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 87 ரூபாயை எட்டி விட்டது. நாளையும் விலை உயர்ந்தால் சென்னையில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் ஒரு லிட்டர் பெட் ரோல் ரூ.87-க்கு வந்து விடும்.

    டீசல் விலை இன்று அதிகளவு உயர்த்தப்பட்டுள்ளது. லிட்டருக்கு 22 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால் ஒரு லிட்டர் டீசல் இன்று 78 ரூபாய் 91 காசுகளாக உயர்ந்துள்ளது.

    மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 95 ரூபாயை கடந்து உள்ளது. அடுத்த வாரம் கச்சா எண்ணை விலை உயரும் பட்சத்தில் மும்பை சுற்று வட்டார பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை தொட்டு விடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. #FuelPrice
    சென்னையில் இன்று பெட்ரோல் விலை 23 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.86.51 ஆக உயர்ந்தது. டீசல் விலையும் 20 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.78.69-க்கு விற்கப்படுகிறது. #FuelPrice
    சென்னை:

    பெட்ரோல்-டீசல் விலை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்த மாற்றம் செய்யப்படுகிறது.

    சென்னையில் இன்று பெட்ரோல் விலை 23 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.86.51 ஆக உயர்ந்தது. நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.86.28-க்கு விற்கப்பட்டது.

    கடந்த 19-ந்தேதி பெட்ரோல் விலை ரூ.85.41 ஆக இருந்தது. 9 நாளில் ஒரு ரூபாய் 10 காசுகள் அதிகரித்துள்ளது. பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

    டீசல் விலையில் 20 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.78.69-க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு லிட்டர் டீசல் ரூ.78.49 ஆக விற்கப்பட்டது.

    டீசல் கடந்த 19-ந்தேதி 78.10 ஆக இருந்தது. 9 நாளில் 59 காசுகள் அதிகரித்துள்ளது.

    டெல்லியில் டீசல் ரூ.74.42-க்கும், பெட்ரோல் ரூ.83.22-க்கும் விற்கப்படுகிறது. மும்பையில் கடந்த 24-ந்தேதியே பெட்ரோல் ரூ.90-ஐ தாண்டியது குறிப்பிடத்தக்கது. #FuelPrice
    டீசல் விலை ஏற்றத்தால் மீண்டும் போக்குவரத்து கழகங்களுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #DieselPriceHike #MTC #ChennaiBus
    சென்னை:

    டீசல் விலை உயர்வால் தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு கடுமையான நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது.

    இதை சமாளிக்க போக்குவரத்து கழகங்களுக்கு அரசு டீசல் மானியம் அளித்து வந்தது. இந்த மானியத்தையும் அரசு குறைத்து விட்டது. இதனால் போக்குவரத்து கழகங்கள் மேலும் நிதி நெருக்கடிக்கு ஆளாகி உள்ளன.

    இதுபற்றி தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கூறுகையில், நாளுக்கு நாள் உயர்ந்து வரும் டீசல் விலை ஏற்றத்தாலும், மாநில அரசின் டீசல் மானியம் குறைக்கப்பட்டதாலும் போக்குவரத்து கழகங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    கடந்த ஜனவரி மாதம் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் பஸ் சர்வீஸ் குறைக்கப்பட்டது. அதன் பிறகு பயணிகள் வருகை அதிகரித்த நிலையில் டீசல் விலை ஏற்றத்தால் மீண்டும் போக்குவரத்து கழகங்களுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால் பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    சென்னைக்கு வெளியே உள்ள மாவட்டங்களில் போக்குவரத்து கழகங்கள் புறநகர் பஸ்களின் எண்ணிக்கையை 1000 வரை குறைத்து விட்டன. இதேபோல் சென்னையில் மாநகர பஸ்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு உள்ளதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.


    போக்குவரத்து கழகங்களுக்கு நாள் ஒன்றுக்கு 2 லட்சம் லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து லிட்டருக்கு ரூ.16 வரை அதிகரித்து இருப்பதால் போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.100 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து கழகங்களுக்கு ஆகும் செலவில் 27 சதவீதம் டீசலுக்கு செலவிடப்படுகிறது.

    செலவினங்களை கட்டுப்படுத்துவதற்காக தற்போது மாநகர பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. சில வழித்தடங்களில் சிறிய அளவிலும், நஷ்டத்தில் இயங்கும் வழித்தடங்களில் பாதி அளவுக்கும் பஸ்கள் குறைக்கப்பட்டுள்ளது.

    இதனால் பஸ்கள் செல்லும் இடைவெளி நேரம் அதிகரித்துள்ளது. 30 நிமிடத்துக்கு மேல்தான் பஸ்கள் வருகின்றன. இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து அவதிப்படுகிறார்கள்.

    டீசல் விலை ஏற்றத்தால் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணங்கள் உயர்ந்த நிலையில், பஸ்களின் எண்ணிக்கை குறைப்பு பயணிகளை மேலும் சிரமத்துக்கு ஆளாக்கியுள்ளது.

    நாட்டிலேயே தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள்தான் எரிபொருள் சேமிப்பில் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசு விருது வழங்கியுள்ளது.

    அரசு பஸ்கள் சீராக இயக்கப்படுவதால் லிட்டருக்கு 5 கி.மீ.க்கு மேல் கிடைக்கிறது. தனியார் பஸ்களில் லிட்டருக்கு 4 கி.மீ. அளவில் தான் ஓடுகிறது. அரசு பஸ் ஓட்டுனர்களால்தான் சாதனை இலக்கை எட்ட முடிகிறது என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்தன. #DieselPriceHike #MTC #ChennaiBus
    பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அக்டோபர் 5-ந்தேதி போராட்டம் நடைபெறும் என்று ராமதாஸ் அறிவித்துள்ளார். #PMK #Ramadoss #FuelPrice
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகள் இன்று மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 15 காசுகள் உயர்ந்து ரூ.86.28ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 13 காசுகள் உயர்ந்து ரூ.78.49 ஆகவும் அதிகரித்திருக்கிறது. ஏழை மக்களின் நலனில் அக்கறையின்றி எரிபொருள் விலையை மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் தொடர்ந்து உயர்த்துவது கண்டிக்கத்தக்கது.

    கடந்த ஆகஸ்ட் 15-ந்தேதி தொடங்கிய விலை உயர்வு நீடிக்கிறது. கடந்த 43 நாட்களில் ஒருமுறை கூட பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்படவில்லை. அதேநேரத்தில் கடந்த 43 நாட்களில் பெட்ரோல் விலை 40 முறை ரூ.6.14 உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை 43 நாட்களில் 35 முறை ரூ.5.90 உயர்த்தப்பட்டு ரூ.78.49 என்ற உச்சத்தை எட்டியிருக்கிறது.

    சென்னையில் விருப்பம் போல பயணிப்பதற்கான மாதந்திர பயணக் கட்டண அட்டையின் விலை 1000 ரூபாயிலிருந்து 1300 ரூபாயாக, அதாவது 30 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல மேலும் பல பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளன. இதனால் தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்கள் வாழ்வதற்கு வழியில்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் தமிழக அரசுக்கு ரூ.470 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் இது ரூ.600 கோடியாக அதிகரிக்கும். நடப்பாண்டில் பெட்ரோல், டீசல் மீதான வரிகள் மூலம் ரூ.4000 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும் எனும் போது அதை விட்டுக்கொடுத்தால் பெட்ரோல், டீசல் விலையை ரூ.5.00 வரை குறைக்க முடியும். ஆனால், அதை செய்ய தமிழக அரசு தயாராக இல்லை.

    மத்திய, மாநில அரசுகளின் இந்த மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அக்டோபர் 5-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை உட்பட அனைத்து மாவட்ட மற்றும் வட்டத் தலைநகரங்களிலும் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #PMK #Ramadoss #FuelPrice
    ×