என் மலர்
நீங்கள் தேடியது "PMK Demonstration In Sholinganallur"
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து பா.ம.க. சார்பில் சோழிங்கநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் மத்திய, மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
சோழிங்கநல்லூர்:
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து பா.ம.க. சார்பில் சோழிங்கநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் மோகனசுந்தரம் தலைமை தாங்கினார்.
இதில் மாநில இளைஞர் அணி செயலாளர் ராஜேஷ் பிரியா, மாநில தொழில் சங்கம் தலைவர் கண்ணன் நந்தகோபால், முன்னாள் மாவட்ட செயலாளர் நிர்மல் குமார் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் மத்திய, மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.






