என் மலர்

  நீங்கள் தேடியது "Fuel Price Hike"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒன்றிய அரசின் வரி குறைப்பால் பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரி ரூ.1.95 குறைந்துள்ளது.
  • மேலும், பெட்ரோல் மீதான வரி ரூ.5 குறைக்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் ரூ.4.95 குறைக்கப்பட்டுள்ளது.

  மக்களவையில் நேற்று விலைவாசி உயர்வு குறித்த விவாதத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், எரிபொருள் மீதான வரியை மாநில அரசு குறைக்கவில்லை என கூறினார்.

  இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார்.

  இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், " பெட்ரோல், டீசல் மீதான வரியை ஒன்றிய அரசு குறைப்பதற்கு முன்பே தமிழக அரசு குறைத்துள்ளது.

  ஒன்றிய அரசின் வரி குறைப்பால் பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரி ரூ.1.95 குறைந்துள்ளது.

  மேலும், பெட்ரோல் மீதான வரி ரூ.5 குறைக்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் ரூ.4.95 குறைக்கப்பட்டுள்ளது.

  இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த உலக மற்றும் இந்திய எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் மோடி இன்று(திங்கட்கிழமை) டெல்லியில் ஆலோசனை நடத்துகிறார். #PetrolDiesel #Modi #IndianOil
  புதுடெல்லி:

  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயுவின் விலை தொடர்ந்து கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன்காரணமாக நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயமும் உருவாகி இருக்கிறது.

  இந்த நிலையில் அடுத்த மாதம் (நவம்பர்) 4-ந் தேதிக்கு பிறகு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்யக்கூடாது என்று அமெரிக்கா எச்சரித்து உள்ளது.  இதுபோன்ற நெருக்கடியான சூழலை சமாளிக்க பிரதமர் மோடி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் எண்ணெய், எரிவாயு ஆய்வில் ஈடுபடுவதற்கும், இவற்றின் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக முதலீடுகளை ஈர்ப்பதற்கும் பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று(திங்கட்கிழமை) டெல்லியில் நடக்கிறது. நிதி ஆயோக் இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.

  இதில் சவுதி அரேபியாவின் எண்ணெய் இலாகா மந்திரி அல் பாலிஹ், ஆஸ்திரேலியாவின் பி.பி. எண்ணெய் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பாப் டுத்லே, டோட்டல் நிறுவன தலைவர் பாட்ரிக் பவ்யானே, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, வேதாந்தா நிறுவன தலைவர் அனில் அகர்வால் ஆகியோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இந்த கூட்டத்தில் பெட்ரோல், டீசல், எரிவாயுவின் விலையை கட்டுப்படுத்துவது, இவற்றின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது, எண்ணெய் துறையில் முதலீடுகளை ஈர்ப்பது, முதலீடுகளுக்கான விதிமுறைகளை எளிதாக்குவது, ஆழ்கடலில் எண்ணெய் வள ஆய்வு, ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை ஆகியவை பற்றி பிரதமர் விரிவான ஆலோசனை நடத்துகிறார்.

  குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருவதால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுவதை தடுப்பதற்கான திட்டங்கள் குறித்த ஆலோசனைகளுக்கு கூட்டத்தில் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும், எனத் தெரிகிறது.

  கடந்த 3 ஆண்டுகளில் பிரதமர் மோடி எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் நடத்தும் 3-வது ஆலோசனை கூட்டம் இதுவாகும்.   #PetrolDiesel #Modi #IndianOil
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85.50-க்கும், டீசல் லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து 78.35-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. #FuelPriceHike #PetrolDieselPriceHike
  சென்னை:

  பெட்ரோல்-டீசல் விலை கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து உயர்ந்த வண்ணமாய் இருந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருதல், கச்சா எண்ணெய் உற்பத்தி சற்று குறைதல் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதாலும் இந்த விலை உயர்வு ஏற்படுகிறது.
   
  மத்திய அரசு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 2.50 ரூபாய் குறைக்கப்படும் என சமீபத்தில் அறிவித்ததை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருந்தது.   இதையடுத்து, கடந்த சில நாட்களாக எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் உயர்த்த தொடங்கியுள்ளன.

  சென்னையில் நேற்று பெட்ரோல் ரூ.85.26-க்கும், டீசல் ரூ.78.04-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்றும்  பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. அதன்படி, பெட்ரோல் விலையில் 24 காசுகள் உயர்ந்து, 85.50 ரூபாய்க்கும், டீசல் விலையில் 31 காசுகள் உயர்ந்து 78.35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  அதிகரித்து வரும் பெட்ரோல் - டீசல் விலை உயர்வு பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. #FuelPriceHike #PetrolDieselPriceHike
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85.26-க்கும், டீசல் லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து 78.04-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. #FuelPriceHike #PetrolDieselPriceHike
  சென்னை:

  பெட்ரோல்-டீசல் விலை கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து உயர்ந்த வண்ணமாய் இருந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாலும், கச்சா எண்ணை உற்பத்தி சற்று குறைந்ததாலும் பெட்ரோல் - டீசல் விலை உயர்வு கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்தன.

  அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும், தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் இந்த விலை உயர்வு ஏற்படுகிறது.

  இதற்கிடையே, மத்திய அரசு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 2.50 ரூபாய் குறைக்கப்படும் என சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருந்தது. 

  இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் உயர்த்த தொடங்கியுள்ளன.  சென்னையில் நேற்று பெட்ரோல் ரூ.85.04-க்கும், டீசல் ரூ.77.73-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்றும்  (திங்கட்கிழமை) பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. அதன்படி, பெட்ரோல் விலையில் 22 காசுகள் உயர்ந்து, 85.26 ரூபாய்க்கும், டீசல் விலையில் 31 காசுகள் உயர்ந்து 78.04 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் - டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். #FuelPriceHike #PetrolDieselPriceHike

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 15 காசுகளாகவும், டீசல் விலையை 31 காசுகளாகவும் எண்ணை நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. #FuelPrice
   சென்னை:

  பெட்ரோல்-டீசல் விலை கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து உயர்ந்த வண்ணமாய் இருந்தது. சர்வதேச கச்சா எண்ணை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாலும், கச்சா எண்ணை உற்பத்தி சற்று குறைந்ததாலும் பெட்ரோல் - டீசல் விலை உயர்வு கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்தன.

  அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் இந்த விலை உயர்வு இருந்து வருகிறது. இதற்கிடையே, கலால் வரியை குறைத்துக் கொள்வதன் மூலம் 2.50 ரூபாய் குறைக்கப்படும் என மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. 

  இதனால், சென்னையில் நேற்று பெட்ரோல் விலை 84.89 ரூபாயாகவும், டீசல் விலை 77.42 ரூபாயாகவும் விற்பனையானது.
  இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன.

  அதன்படி, பெட்ரோல் விலையில் 15 காசுகள் உயர்த்தி 85.04 ரூபாய்க்கும், டீசல் விலையில் 31 காசுகள் உயர்த்தி 77.73 ரூபாய்க்கும் எண்ணை நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றன.

  பெட்ரோல்-டீசல் விலையின் இந்த தொடர் உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். #FuelPrice
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் 5 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை 18 காசு உயர்ந்து ரூ.85.87-க்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் விலை 10 காசு அதிகரித்து 78 ரூபாய் 20 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. #PetrolDieselPrice #PetrolPriceHike
  சென்னை:

  சென்னையில் நேற்று பெட்ரோல் விலை 18 காசு உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85.87-க்கு விற்பனை செய்யப்பட்டது. 5 நாட்களாக மாற்றம் இல்லாமல் இருந்த டீசல் விலையானது நேற்று 10 காசு உயர்ந்து ஒரு லிட்டர் டீசல் 78 ரூபாய் 20 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது.

  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் இந்திய ரூபாய் மதிப்பின் ஏற்ற இறக்கத்தால் பெட்ரோல், டீசல் விலையானது கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் டீசல் விலை மட்டும் கடந்த 18-ந் தேதி முதல் 5 நாட்களாக மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் டீசல் 78 ரூபாய் 10 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.  இந்த நிலையில் டீசல் விலையானது 5 நாட்களுக்கு பிறகு நேற்று 10 காசு அதிகரித்து ஒரு லிட்டர் டீசல் 78 ரூபாய் 20 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் விலையானது நேற்று 18 காசு அதிகரித்தது.

  அதன்படி, நேற்று முன்தினம் 85 ரூபாய் 69 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்று 85 ரூபாய் 87 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. பெட்ரோல் விலையை பொறுத்தவரையில் இன்னும் 13 காசுகள் அதிகரித்தால் 86 ரூபாயை எட்டும் நிலையில் உள்ளது.

  தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் பெரிதும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக பெரும்பாலான வாகன ஓட்டிகள் தங்கள் பயண திட்டங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி சொந்த வாகனங்களில் பயணிப்பதை குறைத்து, பொது வாகன பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  #PetrolDieselPrice #PetrolPriceHike 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் நடத்தும் நாடு தழுவிய போராட்டத்துக்கு மகாராஷ்டிரா நவ்நிர்மன் சேனா ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. #PetrolDieselPriceHike #BharatBandh
  மும்பை:

  பெட்ரோல் - டீசலுக்கு மத்திய அரசு அளித்து வந்த மானியத்தை பெருமளவில் குறைத்ததுடன் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கே வழங்கியது. இதனால் பெட்ரோல்-டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வந்தது. இந்த நிலையில் சர்வதேச சந்தை விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

  சென்னையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ந்தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.81.40 ஆக இருந்தது. அது தினமும் 50 காசு அளவுக்கு உயர்ந்து தற்போது ரூ.83.22க்கு அதிகரித்துள்ளது. இதே போல் ஆகஸ்ட் 30-ந்தேதி ரூ.73.43 ஆக இருந்த டீசல் ஒரு லிட்டர் தற்போது ரூ.76.64-க்கும் விற்கப்படுகிறது.


  பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை (10-ந்தேதி) நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

  தமிழகத்திலும் நாளை முழு அடைப்பு நடக்கிறது. காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. அதன் பிறகு மாலை 4 மணிக்கு மாவட்ட தலைநகரங்களில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டமும், சென்னையில் மட்டும் 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது  முழு அடைப்புக்கு தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, பா.ம.க., தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

  இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் அறிவித்துள்ள இந்த நாடு தழுவிய ஒரு நாள் முழுஅடைப்பு போராட்டத்துக்கு மகாராஷ்டிராவின் நவ்நிர்மன் சேனா ஆதரவு அளிப்பதாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. #PetrolDieselPriceHike #BharatBandh
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தினம்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வரும் பெட்ரோல், டீசல் விலையால் சாமானியர்கள் தினறி வரும் நிலையில், இன்று சென்னையில் பெட்ரோல் விலை 12 காசுகள் அதிகரித்து 83.66 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. #FuelHike #PetrolPriceHike
  சென்னை:

  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.பெட்ரோல், டீசல் விலை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தினந்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் லிட்டருக்கு ஒற்றை இலக்க பைசா அளவில் 2 பைசா, 5 பைசா என்ற அளவில் உயர்த்தப்பட்டு வந்தது. அதே அளவு அவ்வப்போது குறைக்கப்பட்டும் வந்தது.

  ஆனால் சமீப காலமாக அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர் சரிவை சந்தித்து வருவதால், பெட்ரோல், டீசல் விலை உயர்வு இரட்டை இலக்க பைசாக்களில் 25 பைசா, 40 பைசா என்ற அளவில் தினந்தோறும் உயர்ந்து வருகிறது. இவற்றின் விலையை ஓரளவு குறைப்பதற்கு வசதியாக, மத்திய அரசு உற்பத்தி வரியை குறைக்க முடியாது என திட்டவட்டமாக கூறி விட்டது. மாநில அரசுகளும் மதிப்பு கூட்டு வரியை குறைக்க முன்வரவில்லை.

  இப்படி பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து சாதாரண மக்களையும், வாகன ஓட்டிகளையும் வதைத்து வருகிற நிலையில், இது தொடர்பாகவோ, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பற்றியோ பிரதமர் நரேந்திர மோடியும் சரி, பிற மத்திய மந்திரிகளும் சரி வாய் திறக்காமல் மவுனம் காத்து வருவது எதிர்க்கட்சிகளின் சாடலுக்கு வழி வகுத்து உள்ளது.

  இதனிடையே எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் நேற்றைய விலையிலிருந்து 12 காசுகள் அதிகரித்து பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.83.66 ஆகவும், 11 காசுகள் அதிகரித்து டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.76.75 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

  இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை நாடு முழுவதும் ‘பாரத் பந்த்’ என்ற பெயரில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஹைதியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக எழுத்த போராட்டத்தின் விளைவாக பிரதமர் ஜாக் தான் பதவி விலகி விட்டதாக அறிவித்தார். #HyitiPrimeMinster #JackGuyLafontant #Resign
  போர்ட் ஆ பிரின்ஸ்:

  கரீபியன் கடல் தீவு நாடுகளில் ஒன்று, ஹைதி. இந்த நாட்டின் வளர்ச்சிக்காக சீர்திருத்தங்கள் கொண்டு வருவதற்கு கடந்த பிப்ரவரி மாதம், சர்வதேச நிதியத்துடன் (ஐ.எம்.எப்.) ஒரு ஒப்பந்தம் போட்டனர்.

  அப்போது எரிபொருளுக்கான மானியத்தை விலக்கிக்கொண்டால்தான், கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு உருவாக்கல் போன்றவற்றுக்கு நிதி கிடைக்கும் என சர்வதேச நிதியம் கூறியது.

  இதையடுத்து எரிபொருட்களுக்கான மானியம் விலக்கப்பட்டது. இதனால் பெட்ரோல் விலை 38 சதவீதமும், டீசல் விலை 47 சதவீதமும், மண்எண்ணெய் விலை 51 சதவீதமும் உயர்ந்தது.

  இதை எதிர்த்து மக்கள் கடந்த சில நாட்களாக பெருமளவில் திரண்டு அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தினர். இதில் வெடித்த வன்முறையில் 4 பேர் பலியாகினர். பல கட்டிடங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

  இதன் காரணமாக அந்த நாட்டின் பிரதமர் ஜாக் கய் லபோன்டன்ட் மீது, நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று குரல்கள் எழுந்தன.

  இந்த நிலையில் நாடாளுமன்ற கீழ் சபையில் பிரதமர் ஜாக் பேசினார். அப்போது அவர் தான் பதவி விலகி விட்டதாக அறிவித்தார். பதவி விலகலை அதிபர் ஜோவேனெல் மெய்சே ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார். #HyitiPrimeMinster #JackGuyLafontant  #Resign  #tamilnews
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெட்ரோல், டீசல் விலை ஒரு பைசா குறைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி இதுதான் உங்கள் யோசனை என்றால் அது குழந்தைத்தனமானது என மோடியை ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார். #RahulGandhi #PMModi #FuelChallenge
  புதுடெல்லி:

  பெட்ரோல், டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தை தொட்டுள்ளது. அதிகபட்சமாக மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 86 ரூபாயை தொட்டுள்ளது. கர்நாடக தேர்தலுக்காக 20 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்ட விலையேற்றம், தேர்தல் முடிந்ததும் தினமும் ஏறி வருகிறது. திடீர் திருப்பமாக இன்று பெட்ரோல், டீசல் விலை ஒரு பைசா குறைந்தது.

  ரூபாய் கணக்கில் தினமும் விலை ஏறி, ஒரு பைசா மட்டுமே குறைந்துள்ளதை சமூக வலைத்தளத்தில் பலரும் விமர்சித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் விராட் கோலியின் உடற்பயிற்சி சவாலை ஏற்றுக்கொள்வதாக மோடி தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

  அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பெட்ரோல் விலை உயர்வை சுட்டிக்காட்டி #FuelChallenge என்ற சவாலை அளித்திருந்தார். இந்நிலையில், இன்றும் இதே போல, பெட்ரோல் விலை ஒரு பைசா குறைவை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

  அன்புள்ள பிரதமருக்கு,

  இன்று பெட்ரோல், டீசல் விலையை ஒரு பைசா குறைத்துள்ளீர்கள். ஒரு பைசா?

  இது தான் உங்களது குறும்பு யோசனை என்றால் அது குழந்தைத்தனமானது மற்றும் மோசமான ரசணை கொண்டது.

  பின்குறிப்பு:- ஒரு பைசா விலை குறைப்பு என்பது நான் கடந்த வாரம் விடுத்த சவாலுக்கு சரியான எதிர்வினை அல்ல

  இவ்வாறு ராகுல் காந்தி கிண்டலாக பதிவிட்டுள்ளார். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆந்திர மாநிலத்தில் ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்தி தெலுங்கு தேசம் தொண்டர் ஒருவர் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பை காட்டியுள்ளார். #FuelPriceHike #TeleguDesamParty
  ஐதராபாத் :

  கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவடைந்ததை அடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை கிடுகிடு உயர்வை சந்தித்து வருகிறது. இதனால் இரு சக்கர வாகனங்கள் வைத்திருப்போர், ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுனர்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். விலை உயர்வுக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்புக்கள் மற்றும் கண்டன குரல்கள் வலுத்து வருகிறது.

  இந்நிலையில் ஆந்திரப்பிரதேச மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள நந்திகமா கிராமத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இதில், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த தொண்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்தினார். #FuelPriceHike #TeleguDesamParty
  ×