search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "diesal"

    சென்னையில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 15 காசுகளாகவும், டீசல் விலையை 31 காசுகளாகவும் எண்ணை நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. #FuelPrice
     சென்னை:

    பெட்ரோல்-டீசல் விலை கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து உயர்ந்த வண்ணமாய் இருந்தது. சர்வதேச கச்சா எண்ணை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாலும், கச்சா எண்ணை உற்பத்தி சற்று குறைந்ததாலும் பெட்ரோல் - டீசல் விலை உயர்வு கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்தன.

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் இந்த விலை உயர்வு இருந்து வருகிறது. இதற்கிடையே, கலால் வரியை குறைத்துக் கொள்வதன் மூலம் 2.50 ரூபாய் குறைக்கப்படும் என மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. 

    இதனால், சென்னையில் நேற்று பெட்ரோல் விலை 84.89 ரூபாயாகவும், டீசல் விலை 77.42 ரூபாயாகவும் விற்பனையானது.
    இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன.

    அதன்படி, பெட்ரோல் விலையில் 15 காசுகள் உயர்த்தி 85.04 ரூபாய்க்கும், டீசல் விலையில் 31 காசுகள் உயர்த்தி 77.73 ரூபாய்க்கும் எண்ணை நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றன.

    பெட்ரோல்-டீசல் விலையின் இந்த தொடர் உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். #FuelPrice
    ×