என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
காங்கிரஸ் தலைமையிலான நாடு தழுவிய போராட்டத்துக்கு மகாராஷ்டிரா நவ்நிர்மன் சேனா ஆதரவு
Byமாலை மலர்9 Sep 2018 9:03 AM GMT (Updated: 9 Sep 2018 2:09 PM GMT)
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் நடத்தும் நாடு தழுவிய போராட்டத்துக்கு மகாராஷ்டிரா நவ்நிர்மன் சேனா ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. #PetrolDieselPriceHike #BharatBandh
மும்பை:
பெட்ரோல் - டீசலுக்கு மத்திய அரசு அளித்து வந்த மானியத்தை பெருமளவில் குறைத்ததுடன் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கே வழங்கியது. இதனால் பெட்ரோல்-டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வந்தது. இந்த நிலையில் சர்வதேச சந்தை விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ந்தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.81.40 ஆக இருந்தது. அது தினமும் 50 காசு அளவுக்கு உயர்ந்து தற்போது ரூ.83.22க்கு அதிகரித்துள்ளது. இதே போல் ஆகஸ்ட் 30-ந்தேதி ரூ.73.43 ஆக இருந்த டீசல் ஒரு லிட்டர் தற்போது ரூ.76.64-க்கும் விற்கப்படுகிறது.
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை (10-ந்தேதி) நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
முழு அடைப்புக்கு தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, பா.ம.க., தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் அறிவித்துள்ள இந்த நாடு தழுவிய ஒரு நாள் முழுஅடைப்பு போராட்டத்துக்கு மகாராஷ்டிராவின் நவ்நிர்மன் சேனா ஆதரவு அளிப்பதாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. #PetrolDieselPriceHike #BharatBandh

தமிழகத்திலும் நாளை முழு அடைப்பு நடக்கிறது. காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. அதன் பிறகு மாலை 4 மணிக்கு மாவட்ட தலைநகரங்களில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டமும், சென்னையில் மட்டும் 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
முழு அடைப்புக்கு தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, பா.ம.க., தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் அறிவித்துள்ள இந்த நாடு தழுவிய ஒரு நாள் முழுஅடைப்பு போராட்டத்துக்கு மகாராஷ்டிராவின் நவ்நிர்மன் சேனா ஆதரவு அளிப்பதாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. #PetrolDieselPriceHike #BharatBandh
Next Story
×