search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீண்டும் ஏறுமுகம்: பெட்ரோல் 19 காசு, டீசல் 31 காசு உயர்வு
    X

    மீண்டும் ஏறுமுகம்: பெட்ரோல் 19 காசு, டீசல் 31 காசு உயர்வு

    சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 19 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு லிட்டர் பெட்ரோல் 84 ரூபாய் 89 காசுக்கு விற்பனையாகிறது. #FuelPrice
    சென்னை:

    பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயம் என்ற நிலைக்கு மாறியதில் இருந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி மத்திய-மாநில அரசுகள் வைக்காதா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து இருக்கின்றனர். கடந்த 2 தினங்களுக்கு முன்பு மத்திய அரசு உற்பத்தி வரியை குறைத்து, பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு தலா 2 ரூபாய் 50 காசு வீதம் குறைத்தது.

    அதன்படி, தமிழகத்தில் பெட்ரோல்-டீசல் விலை குறைந்தது. இது வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆறுதல் தந்தாலும், விலை குறைத்த மறுநாளில் இருந்து மீண்டும் அதன் விலை ஏறுமுகத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

    நேற்று முன்தினம் 84 ரூபாய் 70 காசுக்கு விற்பனையான பெட்ரோல், நேற்று லிட்டருக்கு 19 காசு உயர்ந்து, 84 ரூபாய் 89 காசுக்கு விற்பனை ஆனது. இதேநிலை நீடித்தால் இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85-ஐ தொட்டுவிடும்.

    இதேபோல், 77 ரூபாய் 11 காசுக்கு நேற்று முன்தினம் விற்பனை செய்யப்பட்ட டீசல், நேற்று 31 காசு அதிகரித்து, 77 ரூபாய் 42 காசுக்கு விற்பனை ஆனது.  #PetrolDieselPrice
    Next Story
    ×