search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ODI"

    பெர்த்தில் இன்று நடக்கும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. #ODI #SouthAfrica #Austrialia #Perth
    பெர்த்:

    தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி குறுகிய கால சுற்றுப்பயணமாக ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது. அங்கு மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் பங்கேற்கிறது. இதன்படி தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் இன்று நடக்கிறது.

    கடந்த 2 ஆண்டுகளாக ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் செயல்பாடு மோசமாக இருந்து வருகிறது. அதுவும் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்ட பிறகு ஆஸ்திரேலியா மிகவும் பலவீனமாகி விட்டது. கடைசியாக மழை பாதிப்பின்றி முழுமையாக நடந்த 18 ஒரு நாள் போட்டிகளில் 16-ல் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்துள்ளது. தற்போது புதிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் தலைமையில் களம் காணும் ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் எழுச்சி பெறும் முனைப்புடன் தயாராகி வருகிறது.

    பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணியில் காயம் காரணமாக அம்லா, டுமினி இடம் பெறவில்லை. என்றாலும் பந்து வீச்சு, பேட்டிங் இரண்டிலும் அந்த அணி வலுவாகவே காணப்படுகிறது. வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின், இந்த தொடரில் அசத்தினால் உலக கோப்பைக்கான அணியில் இடத்தை சிக்கலின்றி தக்க வைத்துக்கொள்ளலாம்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 96 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 47-ல் ஆஸ்திரேலியாவும், 45-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. 3 ஆட்டம் ‘டை’ ஆனது. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஷான் மார்ஷ், கிறிஸ் லின், கிளைன் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் காரி, மிட்செல் ஸ்டார்க் அல்லது நாதன் கவுல்டர்-நிலே, பேட் கம்மின்ஸ், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

    தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், எய்டன் மார்க்ராம், ரீஜா ஹென்ரிக்ஸ், பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), டேவிட் மில்லர், பெஹர்டைன், பெலக்வாயோ அல்லது பிரிடோரியஸ், ஸ்டெயின், காஜிசோ ரபடா, நிகிடி, இம்ரான் தாஹிர்.

    இந்திய நேரப்படி காலை 8.50 மணிக்கு தொடங் கும் இந்த ஆட்டத்தை சோனி இ.எஸ்.பி.என். சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.  #ODI #SouthAfrica #Austrialia #Perth 
    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி மோதிய 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நேற்று திருவனந்தபுரத்தில் நடந்தது. #INDvWI
    டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 31.5 ஓவரில் 104 ரன்னில் சுருண்டது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், பும்ரா, கலீல் அகமது தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். அடுத்து விளையாடிய இந்தியா 14.5 ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 105 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன்மூலம் 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஏற்கனவே இந்தியா முதல் மற்றும் 4-வது ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்தது. 3-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வென்றது. 2-வது போட்டி டை ஆனது.

    5 ஆட்டத்தில் 453 ரன் குவித்த இந்திய கேப்டன் விராட் கோலி தொடர் நாயகன் விருது பெற்றார். வெற்றி குறித்து விராட் கோலி கூறியதாவது:-

    இது ஒரு முழுமையான செயல்பாடு. எல்லா பெருமையும் பந்து வீச்சாளர்களையே சாரும். சரியான இடத்தில் பந்துகளை பிட்ச் செய்தனர். டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது ஆச்சரியம் அளித்தது. நாங்கள் முதலில் பந்து வீசவே விரும்பினோம். அது அதிர்ஷ்டவசமாக கிடைத்தது. எல்லா துறையிலும் அணி சிறப்பாக செயல்படுவது நல்ல உணர்வை தருகிறது.

    கலீல் அகமது சிறப்பாக பந்து வீசினார். 4-வது வரிசையில் களம் இறங்கிய அம்பதி ராயுடு பொறுப்பை உணர்ந்து விளையாடினார். ஹர்த்திக் பாண்டியா அணிக்கு திரும்பும்போது இன்னும் வலிமைபெறும்.



    ஒரு கேப்டனாக ரன்களை குவிப்பது எப்போதுமே எனக்கு நம்பிக்கையை அளிக்கிறது. ரன் குவிப்பது என்பது எல்லா நேரத்திலும் நடப்பதில்லை. ஆனால் நான் களத்தில் செல்லும்போது நீண்ட நேரம் விளையாட முயற்சிக்கிறேன். நான் விருதுகளுக்காக விளையாடுவதில்லை. அணி வெற்றிக்காக உதவவும், தொடரை கைப்பற்றவும் விளையாடுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அடுத்து இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடர் நடக்கிறது. இதன் முதல் ஆட்டம் வருகிற 4-ந் தேதி கொல்கத்தாவில் நடக்கிறது. 20 ஓவர் போட்டி தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    சாமுவேல்ஸை வீழ்த்தியபின் ஆத்திரமுட்டும் வகையில் சந்தோசத்தை வெளிப்படுத்திய இளம் பந்து வீச்சாளரான கலீல் அஹமதுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #INDvWI, #ICC
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 4-வது ஒருநாள் போட்டி மும்பையில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்தது இந்தியா ரோகித் சர்மா (162), அம்பதி ராயுடு (100) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 377 ரன்கள் குவித்தது.

    பின்னர் 378 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. ஷாய் ஹோப்பை (0) குல்தீப் யாதவும், பொவேலை (4) விராட் கோலியும் டைரக்ட் ஹிட் மூலம் ரன்அவுட் ஆக்க, இளம் வேகப்பந்து வீச்சாளரான கலீல் அஹமது ஹெட்மையர் (13), சாமுவேல்ஸ் (18), ரோவ்மேன் பொவேல் ஆகியோரை தனது இன்ஸ்விங் மற்றும் அவுட்ஸ்விங் பந்தால் வெளியேற்றினார்.



    5 ஓவரில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து முக்கியமான மூன்று விக்கெட்டுக்களை சாய்த்து வெஸ்ட் இண்டீஸ் 153 ரன்னில் ஆல்அவுட் ஆக காரணமாக இருந்தார். சாமுவேல்ஸ் விக்கெட்டை வீழ்த்தியபோது, சாமுவேல்ஸ் அருகில் சென்று ஆத்திரமுட்டும் வகையில் உற்சாக மிகுதியால் சந்தோசத்தை வெளிப்படுத்தினார்.

    கலீல் அஹமதின் செயல் ஐசிசி-யின் வீரர்களின் நன்னடத்தை விதிக்கு எதிராக இருந்ததால் மைதான நடுவர்கள் குற்றம்சாட்டினார்கள். இதனால் ஐசிசி எலைட் நடுவர் பிராட் அவரை எச்சரித்ததுடன், போட்டி தடைக்கான ஒரு புள்ளியையும் வழங்கினார். போட்டிக்குப்பின் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டு அபராதத்தை ஏற்றுக்கொண்டார். இதனால் அதற்கு மேல் விசாரணை இல்லை என ஐசிசி முடிவு செய்துள்ளது.
    ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலியை வாழ்த்த வார்த்தைகள் இல்லை என்று கங்குலி புகழாரம் சூட்டியுள்ளார். #ViratKohli #INDvWI
    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் அசத்தி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இரண்டு ஒருநாள் போட்டியிலும் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

    நேற்றைய விசாகப்பட்டினம் போட்டியில் 157 ரன்கள் குவித்தார். 81 ரன்கள் எடுத்திருந்தபோது 205 இன்னிங்சில் 10 ஆயிரம் ரன்களை கடந்து அதிகவேகமாக அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    சாதனைப் படைத்துள்ள விராட் கோலிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் முன்னாள் கேப்டனும், மேற்கு வங்காள கிரிக்கெட் சங்கத் தலைவரும் ஆன சவுரவ் கங்குலி, விராட் கோலி ஆட்டத்தை பற்றிக்கூற வார்த்தைகள் இல்லை என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

    விராட் கோலி குறித்து சவுரவ் கங்குலி கூறுகையில் ‘‘விராட் கோலியின் ஆட்டத்தை வாழ்த்த எனக்கு வார்த்தைகளே இல்லை. விசாகப்பட்டினம் ஆடுகளம் வித்தியாசமானதாக இருந்தது. சூழ்நிலையிலும் மாறுபட்டிருந்தது. ஆனால், விராட் கோலி ஒட்டுமொத்த ஆட்டத்தையும் மாற்விட்டார். விராட் கோலியின் சதம் மிகவும் சிறப்பான ஆட்டம்’’ என்றார்.
    2-வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி, அம்பதி ராயுடு ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ்க்கு 322 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்தியா #INDvWI
    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி துறைமுக நகரான விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மைதானத்தில் பகல்- இரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.

    இந்திய அணியில் கலீல் அஹமது நீக்கப்பட்டு குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார். ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தவான் தொடக்கத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் போட்டியில் சதம் அடித்த ரோகித் சர்மா, இந்த ஆட்டத்தில் சொற்ப ரன்களில் வெளியேறினார். 4-வது ஓவரை ரோச் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் நான்கு ரன்கள் எடுத்த நிலையில் ரோகித் சர்மா ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

    அடுத்து தவான் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்தியா முதல் 8 ஓவரில் 39 ரன்கள் எடுத்திருந்தது. 9-வது ஓவரை நர்ஸ் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் தவான் எல்பிடபிள்யூ மூலம் வெளியேறினார். தவான் 30 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 29 ரன்கள் சேர்த்தார்.

    3-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 10.1 ஓவரில் 50 ரன்னைத் தொட்ட இந்தியா, 19.2 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. 25 ஓவர் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்தது. 25-வது ஓவரின் கடைசி பந்தில் விராட் கோலி 56 பந்தில் அரைசதம் அடித்தார்.

    விராட் கோலியைத் தொடர்ந்து அம்பதி ராயுடு 61 பந்தில் 5 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த பின்னர் அம்பதி ராயுடு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து விளையாடிய அவர் 80 பந்தில் 8 பவுண்டரியுடன் 73 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.



    விராட் கோலி - அம்பதி ராயுடு ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 139 ரன்கள் குவித்தது. அம்பதி ராயுடு ஆட்டமிழந்ததும் எம்எஸ் டோனி களம் இறங்கினார். இவர் 25 பந்தில் 20 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    அடுத்து களம் இறங்கிய ரிஷப் பந்த் 13 பந்தில் 17 ரன்கள் சேர்த்தார். அடுத்து ஜடேஜா களம் இறங்கினார். இதற்கிடையில் விராட் கோலி சதத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். சிறப்பாக விளையாடிய அவர் 106 பந்தில் 10 பவுண்டரியுடன் சதம் அடித்தார். இது அவரின் 37-வது ஒருநாள் சதம் ஆகும்.

    சதம் அடித்த பின்னர் விராட் கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 47-வது ஓவரில் இரண்டு சிக்சரும், 48-வது ஓவரில் ஒரு சிக்சரும், இரண்டு பவுண்டரியும் விளாசினார்.

    49-வது ஓவரில் இந்தியா பவுண்டரி ஏதும் அடிக்கவில்லை. ஜடேஜா 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடிக்க இந்தியா 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் குவித்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 322 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

    விராட் கோலி 129 பந்தில் 157 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷமி கடைசி பந்தை சந்தித்து அதில் ரன் அடிக்கவில்லை.
    இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. #INDvWI #ODI #ViratKohli
    ஐதராபாத்:

    ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

    இதற்கிடையே, இரு அணிகள் மோதும் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. கவுகாத்தியில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி துறைமுக நகரான விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர். ரோகித் சர்மா 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ரோச் பந்து வீச்சில் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து கேப்டன் விராட் கோலி களம் இறங்கி விளையாடி வருகிறார்.


     
    போட்டிக்கான இரு அணிகளின் வீரர்கள் வருமாறு:

    இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), அம்பத்தி ராயுடு, ரிஷாப் பான்ட், டோனி, குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், முகமது ஷமி, உமேஷ் யாதவ், ரவீந்திர ஜடேஜா.

    வெஸ்ட் இண்டீஸ்: சந்தர்பால் ஹேம்ராஜ், கிரன் பாவெல், ஷாய் ஹோப், ஹெட்மயர், சாமுவேல்ஸ், ரோவ்மன் பாவெல், ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), ஆஷ்லே நர்ஸ், கேமர் ரோச், ஓபட் மெக்காய், தேவேந்திர பிஷூ, #INDvWI #ODI #ViratKohli
    இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. #INDvWI #ODI #ViratKohli
    கவுகாத்தி:

    ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

    இரு அணிகள் மோதும் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதல் போட்டி கவுகாத்தியில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் துவங்கியது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்த உள்ளது. #INDvWI #ODI #ViratKohli
    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. #INDvWI #RishabhPant #TeamIndia
    புதுடெல்லி:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதல் போட்டி நாளை கவுகாத்தியில் நடக்கிறது. 

    இப்போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 12 வீரர்கள் கொண்ட இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் வருமாறு:- 

    விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் சர்மா, அம்பதி ராயுடு, ரிஷப் பன்ட், டோனி(கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாகல், உமேஷ் யாதவ், முகமது ஷமி, கலீல் அகமது.

    கடந்த சில மாதங்களாக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ரிஷப் பன்ட், ஒருநாள் போட்டியில் அறிமுகமாகிறார். ஆடும் லெவனில் அவர் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது. 

    விராட்கோலி தலைமையிலான இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சில் சமநிலையில் உள்ளது. டெஸ்ட் தொடரை கைப்பற்றிய அதே உற்சாகத்தில், ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் நோக்கில் இந்திய அணி ஆக்ரோஷமாக விளையாடும். 

    அதேசமயம், டெஸ்ட் தொடரை இழந்த வெஸ்ட்இண்டீஸ் அணி ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், கடுமையாக போராடும்.  எனவே, டெஸ்ட் போட்டித் தொடர் போன்று இல்லாமல், ஒருநாள் தொடரில் இந்திய அணி கூடுதல் எச்சரிக்கையுடன் ஆட வேண்டியது அவசியம். #INDvWI #RishabhPant #TeamIndia
    இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முக்கிய வீரர்களான வெய்ன்பிராவோ, பொல்லார்ட், சுனில் நரீன் ஆகிய 3 வீரர்கள் அணியில் இடம் பெறவில்லை. #INDvWI #Bravo #Pollard #Narine
    கிங்ஸ்டன்:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் போட்டித்தொடரில் ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் வருகிற 12-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது.

    இதைதொடர்ந்து இரு அணிகள் இடையே 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் ஒருநாள் தொடர் 21-ந்தேதி தொடங்குகிறது. ஒருநாள் தொடருக்கான 25 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் உத்தேச அணி அறிவிக்கப்பட்டது

    வெய்ன்பிராவோ, போல்லார்ட், சுனில் நரீன் ஆகிய 3 வீரர்கள் அணியில் இடம் பெறவில்லை இதனால் அவர்களின் ஒரு நாள் போட்டி எதிர்காலம் இனி கேள்விக்குறியே. இதேபோல் 20 ஓவர் போட்டி அணியிலும் அவர்கள் இடம் பெறுவதற்கான வாய்ப்பு குறைவே.

    இந்த 3 பேரும் 20 ஓவர் போட்டிக்கு ஏற்ற மிகச் சிறந்த வீரர்கள் ஆவார்கள். பிராவோவும் பொல்லார்ட்டும் கரீபியன் பிரியர் லீக் போட்டியில் ஆடி வருகிறார்கள்.



    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துக்கும் பிராவோவுக்கும் ஏற்கனவே ஊதிய விவகாரத்தில் பிரச்சினை இருந்து வருகிறது. அவர் ஒரு நாள் போட்டி அணியில் விளையாடி 4 ஆண்டுகளும், 20 ஓவர் போட்டிகளில் விளையாடி 2 ஆண்டுகளும் ஆகிறது.

    ஒரு நாள் தொடருக்கான 15 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி விரைவில் அறிவிக்கப்படும். #INDvWI #Bravo #Pollard #Narine
    ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாகீர் ‘ஹாட்ரிக்’ விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளார்.#SAvZIM #ZIMvSA #ImranTahir
    ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

    இதில் தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீரர் இம்ரான் தாகீர் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்தார். ஒருநாள் போட்டியில் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்த 4-வது தென்ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

    இதற்கு முன்பு லாங்வெல்ட் (2005), டுமினி, ரபடா (2015) ஆகியோர் ஹாட்ரிக் சாதனை புரிந்து இருந்தனர்.

    இந்த ஆட்டத்தில் இம்ரான் தாகீர் 24 ரன் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றினார். #SAvZIM #ZIMvSA #ImranTahir
    நெதர்லாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது முதல் வெற்றியை நேபாளம் பதிவு செய்துள்ளது. #NEDvNEP #NepalCricket

    கடந்த மார்ச் மாதம் நேபாளம் அணி சர்வதேச அணிக்கான அந்தஸ்தை பெற்றது. இதன் பின்னர் முதன் முறையாக அந்த அணி நெதர்லாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. முதல் ஒரு நாள் போட்டியில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், நேற்று இரண்டாவது ஒரு நாள் போட்டி நடந்தது. 

    முதலில் பேட்டிங் செய்த நேபாளம் 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 216 ரன்கள் எடுத்தது. சோம்பால் காமி 51, கேப்டன் பராஸ் காட்கா 51 ரன்கள் எடுத்தனர்.

    அடுத்து விளையாடிய நெதர்லாந்து அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் ஒரு ரன்னில் நேபாளம் வென்றது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவை என்ற நிலையில் நெதர்லாந்து இருந்தது. கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவை என்ற நிலையில், பவுலிங் செய்த பராஸ் காட்கா, நெதர்லாந்து அணியின் கடைசி விக்கெட்டை ரன் அவுட்டாக்கினார்.

    இந்த வெற்றியின் மூலம் தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டி வெற்றியை நேபாளம் பதிவு செய்துள்ளது. 2 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற தொடர் சமனானது.
    வெஸ்ட்இண்டீஸ்- வங்காளதேசம் இடையேயான தொடரை வெல்வது யார்? என்பது நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது. #WIvBAN
    வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து வங்காளதேச கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய 3 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரில் முதல் ஆட்டத்தில் வங்காளதேசமும், 2-வது ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீசும் வெற்றி பெற்றன. ஒருநாள் போட்டி தொடரை வெல்வது யார்? என்பது நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.இதில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும். #WIvBAN
    ×