search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெஸ்ட்இண்டீஸ்"

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
    நாட்டிங்காம்:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 2-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) நாட்டிங்காமில் நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி, ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட்இண்டீசை எதிர்கொள்கிறது.

    பாகிஸ்தான் அணி தான் கடைசியாக ஆடிய 10 ஒரு நாள் போட்டிகளில் தோல்வியையே சந்தித்தது. அத்துடன் உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது.

    1992-ம் ஆண்டு சாம்பியனான பாகிஸ்தான் கணிக்க முடியாத ஒரு அணியாகும். தனக்குரிய நாளில் அந்த அணி எந்த அணியையும் வீழ்த்தும் வல்லமை படைத்தது. பாபர் அசாம், பஹார் ஜமான், இமாம் உல்-ஹக் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் முகமது அமிர், ஷதப் கான், ஆசிப் அலி ஆகியோர் சரியான பங்களிப்பை அளிப்பார்கள் எனலாம்.



    1970-களில் கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்திய வெஸ்ட்இண்டீஸ் அணி சமீப காலங்களில் சரிவை சந்தித்தது. அயர்லாந்தில் நடந்த 3 நாடுகள் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி, வங்காளதேச அணியிடம் தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தது. ஆனால் கிறிஸ் கெய்ல், ஆந்த்ரே ரஸ்செல், இவின் லீவிஸ் ஆகியோர் அணிக்கு திரும்பிய பிறகு வெஸ்ட்இண்டீஸ் புதிய எழுச்சி கண்டு இருப்பதை உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் பார்க்க முடிந்தது. நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி 421 ரன்கள் குவித்ததுடன் 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    வெஸ்ட்இண்டீஸ் அணியில் அதிரடி ஆட்டக்காரர்களும், ஆல்-ரவுண்டர்களும் அதிகம் இருக்கிறார்கள். அந்த அணியின் பந்து வீச்சு பக்க பலமாக அமைந்து விட்டால் அந்த அணி வலுவான அணிக்கும் சவால் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இரு அணிகளும் வெற்றியுடன் போட்டியை தொடங்க முயற்சிக்கும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இன்றைய ஆட்டத்துக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    பாகிஸ்தான்: இமாம் உல்-ஹக், பஹார் ஜமான், பாபர் அசாம், ஹாரிஸ் சோகைல் அல்லது முகமது ஹபீஸ், சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), இமாத் வாசிம் அல்லது சோயிப் மாலிக், ஆசிப் அலி, ஷதப்கான், முகமது அமிர், ஹசன் அலி, ஷகீன் அப்ரிடி.

    வெஸ்ட்இண்டீஸ் : கிறிஸ் கெய்ல், இவின் லீவிஸ், ஷாய் ஹோப், ஹெட்மயர், டேரன் பிராவோ, ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), ஆந்த்ரே ரஸ்செல், ஆஷ்லே நர்ஸ், கெமார் ரோச், ஷெல்டன் காட்ரெல், ஒஷானே தாமஸ் அல்லது ஷனோன் கேப்ரியல்.

    இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. 
    ‘இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரை நாங்கள் முழுமையாக இழந்தது மோசமானதாகும்’ என்று வெஸ்ட்இண்டீஸ் அணி கேப்டன் பிராத்வெய்ட் தெரிவித்தார். #India #WestIndies #CarlosBrathwaite
    சென்னை:

    சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் குவித்தது. டேரன் பிராவோ 43 ரன்னும், நிகோலஸ் பூரன் 53 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.



    பின்னர் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி கடைசி பந்தில் வெற்றி இலக்கை எட்டியது. வெற்றிக்கான கடைசி ரன்னை மனிஷ் பாண்டே அடித்தார். 3-வது விக்கெட்டுக்கு ஷிகர் தவான் (92 ரன்கள்), ரிஷாப் பாண்ட் (58 ரன்கள்) ஜோடி 130 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது. ஷிகர் தவான் ஆட்டநாயகன் விருதையும், குல்தீப் யாதவ் தொடர்நாயகன் விருதையும் பெற்றனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

    வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஆஸ்திரேலியா தொடர் வருகிற 21-ந் தேதி தொடங்க இருக்கும் நிலையில் இந்த போட்டியில் ஷிகர் தவான் சிறப்பான ரன் குவித்து பார்முக்கு திரும்பி இருப்பது முக்கியமானதாகும். இது அணிக்கு நல்ல விஷயமாகும். முதல் 6 ஓவர்களுக்குள் நாங்கள் 2 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியை சந்தித்தாலும், ஷிகர் தவான், ரிஷாப் பாண்ட் ஆகியோர் அதனை திறம்பட கையாண்டு போட்டியை வெல்லக்கூடிய பார்ட்னர்ஷிப்பை அமைத்து கொடுத்தனர்.

    இந்த போட்டி தொடர் வெற்றி வீரர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும். ஆஸ்திரேலிய போட்டி தொடர் வித்தியாசமானது. ஆஸ்திரேலிய போட்டி தொடர் எப்பொழுதும் வீரர்களின் திறமை மற்றும் அணியின் திறனை சோதிப்பதாகவும், சவால் நிறைந்ததாகவும் இருக்கும். இந்த போட்டி தொடரில் நமது அணியின் பீல்டிங் நல்ல முன்னேற்றம் கண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சில குறைபாடுகள் இருந்தாலும், சில சிறப்பான செயல்பாடுகளும் வெளிப்பட்டது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடர் குறித்து தற்போது நான் அதிகம் சிந்திக்கவில்லை. முதலில் 20 ஓவர் போட்டி தொடர் நடைபெறுகிறது. 20 ஓவர் போட்டிக்கு முதலில் தயாராக வேண்டும். டெஸ்ட் போட்டி குறித்து சிந்திக்க இன்னும் போதிய கால அவகாசம் இருக்கிறது. இந்த தொடரில் அணியாக நாம் சிறப்பாக செயல்பட்டது போல் ஆஸ்திரேலிய தொடரிலும் நன்றாக செயல்பட முடியும்.

    குர்ணல் பாண்ட்யா போன்று அச்சம் இல்லாமல் விளையாடும் வீரர்களால் இந்திய அணிக்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது. அவர், அவருடையை சகோதரர் ஹர்திக் பாண்ட்யா போல் எல்லா சூழ்நிலையிலும் பயமின்றி செயல்படுகிறார். குர்ணல் பாண்ட்யாவிடம் இருக்கும் அபார திறமையால் அவர் அணியில் நீண்ட நாட்கள் இடம் பிடிப்பார். டோனி போன்ற வீரர் இல்லை என்பது எந்தவொரு அணிக்கும் பெரிய இழப்பாகும். டோனி அணியில் இடம் பெறுவது குறிப்பாக இளம் வீரர்களுக்கு பெரிய ஊக்கம் அளிக்கக்கூடியதாகும்.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

    தோல்வி குறித்து வெஸ்ட்இண்டீஸ் அணியின் கேப்டன் கார்லோஸ் பிராத்வெய்ட் கருத்து தெரிவிக்கையில், ‘20 ஓவர் போட்டி தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்தது மோசமானதாகும். கேப்டன் என்ற முறையில் இந்த தோல்வி எனக்கு தர்மசங்கடத்தை அளிக்கிறது. குறுகிய வடிவிலான இந்த போட்டி தொடரில் நாங்கள் வெற்றிக்காக கடுமையாக உழைத்தோம். முதல் ஆட்டத்தில் எங்களது பந்து வீச்சில் நம்பிக்கையுடன் போராடினோம். 2-வது ஆட்டத்தில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. கடைசி ஆட்டத்தில் நாங்கள் பேட்டிங்கில் அசத்தினோம். ஷிகர் தவான்-ரிஷாப் பாண்ட் பார்ட்னர் ஷிப் வெற்றியை எங்களிடம் இருந்து பறித்தது. இருப்பினும் நாங்கள் கடைசி பந்து வரை வெற்றிக்காக போராடினோம். நிகோலஸ் பூரன் அதிரடியாக பேட்டிங் செய்தார். எங்கள் அணியில் 3 முதல் 4 மேட்ச்வின்னர் பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அவர்கள் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் எங்களால் எந்த அணியையும் வீழ்த்த முடியும். கடைசி போட்டியில் எங்களது தொடக்க ஆட்டக்காரர்கள் 6 ஓவர்களுக்குள் 50 ரன்களை கடந்து நல்ல தொடக்கம் அளித்தனர். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் நல்ல ஆட்டத்தை அளித்தனர். 18-வது ஓவரில் ரிஷாப் பாண்ட்க்கு, நான் வீசிய பந்து அவர் நின்று விளையாடி இருந்தால் காலில் தான் பட்டு இருக்கும். அவர் துள்ளியதால் நடுவர் தவறாக கணித்து அந்த பந்தை ‘வைடு’ என்று அறிவித்தார். அந்த பந்தை ‘வைடு’ என்று அறிவிக்காமல் இருந்தால் நாங்கள் வெற்றி பெற வாய்ப்பு இருந்தது. அந்த முடிவு எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது’ என்று தெரிவித்தார்.
    டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த இந்தியர் பட்டியலில் விராட் கோலியை முந்தி சாதனை படைத்தார் ரோகித் சர்மா. #INDvWI #RohitSharma
    லக்னோ:

    20 ஓவர் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற பட்டியலில் விராட் கோலி முதல் இடம் பிடித்துள்ளார். இவர் 2,102 ரன்கள் எடுத்துள்ளார்.

    இந்நிலையில், இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உ.பி.யின் லக்னோவில் புதிதாக கட்டப்பட்ட அடல் பிகாரி வாஜ்பாய் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது.

    இதில் முதலில் ஆடிய இந்தியா, ரோகித் சர்மாவின் அபாரமான சதத்தால் 2 விக்கெட்டுக்கு 195 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய வெஸ்ட்இண்டீஸ் 9 விக்கெட்டுக்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. இதன்மூலம் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

    வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக நேற்று நடைபெற்ற 20 ஓவர் போட்டியில் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி விராட் கோலியை முந்தினார். தற்போது 20 ஓவர் போட்டிகளில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    மேலும், 20 ஓவர் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர் என்ற சாதனைக்கும் ரோகித் சர்மா சொந்தக்காரர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. #INDvWI #RohitSharma
    உள்நாடு, வெளிநாடு என இருபது ஓவர் போட்டியில் தொடர்ந்து ஏழு தொடர்களில் வெற்றி பெற்று இந்திய அணி அசத்தி வருகிறது. #INDvWI
    லக்னோ:

    இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.

    கொல்கத்தாவில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
     
    இந்நிலையில் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரப்பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அடல் பிகாரி வாஜ்பாய் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெற்றது.



    இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா, ரோகித் சர்மாவின் அபாரமான சதத்தால் 2 விக்கெட்டுக்கு 195 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 9 விக்கெட்டுக்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. இதன்மூலம் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

    இந்த வெற்றியின் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்ற டி 20 போட்டியில் தொடர்ந்து ஏழு தொடர்களில் இந்தியா வெற்றி பெற்று அசத்தி வருகிறது.

    நியூசிலாந்துடனான தொடரை 2-1 என்ற கணக்கிலும், இலங்கையுடனான தொடரை 3-0 என்ற கணக்கிலும், இலங்கையில் நடைபெற்ற நிதாஹாஸ் டிராபியையும், அயர்லாந்துடனான தொடரை 2-0 என்ற கணக்கிலும், இங்கிலாந்துடனான தொடரை 2-1 என்ற கணக்கிலும், வெஸ்ட் இண்டீசுடனான தொடரை 2-0 எனவும் கைப்பற்றி அசத்தியுள்ளது. #INDvWI
    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டியில் ரோகித்தின் அபார சதத்தால் இந்தியா வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. #INDvWI #RohitSharma
    லக்னோ:

    இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
     
    இந்நிலையில் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரப்பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அடல் பிகாரி வாஜ்பாய் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெற்றது. லக்னோ மைதானத்தில் நடைபெறும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும்.

    டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ் அணி கேப்டன் பிராத்வெய்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர்.இருவரும் இணைந்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினர்.

    முதல் விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்த நிலையில் ஷிகர் தவான் 43 ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து இறங்கிய ரிஷப் பண்ட் 5 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.



    ஆனாலும் ரோகித் சர்மா அதிரடியாக ஆடி சதமடித்தார். அவர் 61 பந்துகளில் 8 பவுண்டரி, 7 சிக்சர்கள் அடித்து 111 ரன்கள்  எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். லோகேஷ் ராகுல் 14 பந்தில் 26 ரன் எடுத்து அட்வுடாகாமல் இருந்தார். இறுதியில், இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு195 ரன்கள் எடுத்தது.

    196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட்இண்டீஸ் அணி களமிறங்கியது. இந்திய பந்து வீச்சாளர்களின் சிறப்பான பங்களிப்பால் அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

    இதையடுத்து, 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என தொடரையும் கைப்பற்றி அசத்தியது. #INDvWI #RohitSharma
    இந்திய மண்ணில் ஆடுவது மிகப்பெரிய சவால் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா கூறியுள்ளார். #WestIndies #StuartLaw #India
    ராஜ்கோட்:

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இதையொட்டி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்தியா உலகின் ‘நம்பர் ஒன்’ அணியாக விளங்குகிறது. நாங்கள் தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கிறோம். இந்திய அணியை அவர்களது சொந்த மண்ணில் எதிர்கொள்வது மிகப்பெரிய சவாலாகும். இந்தியாவுக்கு வரும் பெரும்பாலான அணிகள் வெற்றி பெறுவதில்லை. அதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். ஆனால் நாங்கள் வேகமாக முன்னேற்றம் கண்டு வரும் ஒரு அணியாகும்.

    இந்தியாவுக்கு வருவதற்கு முன்பாக துபாயில் 8 நாட்கள் தங்கியிருந்தோம். அங்கு 45 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தியது. அதனால் இங்கு (ராஜ்கோட்) வெயில் தாக்கம் எங்களுக்கு ஒரு பிரச்சினை அல்ல. இந்திய தொடர் குறித்து நிறைய பேசி விட்டோம். இனி பேசுவதை நிறுத்தி விட்டு, வீரர்கள் களத்தில் தங்களது திறமையை காட்ட வேண்டிய நேரம் இது.

    இவ்வாறு ஸ்டீவர்ட் லா கூறினார்.

    இதற்கிடையே தனது பாட்டி இறந்ததால் தாயகம் திரும்பிய வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் கெமார் ரோச் முதலாவது டெஸ்டில் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது டெஸ்ட் தொடங்கிய பிறகே அவர் மீண்டும் அணியுடன் இணைவார் என்பது தெரியவந்துள்ளது.  #WestIndies #StuartLaw #India
    வெஸ்ட்இண்டீசுடன் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி ஐ.சி.சி. தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தை தக்கவைக்கும் முனைப்புடன் உள்ளது. #India #WestIndies #ICC #TestRanking #INDvWI
    துபாய்:

    இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நாளை தொடங்குகிறது. இதே போல் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றுள்ள டிம் பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுடன் 2 டெஸ்டில் மோதுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 7-ந்தேதி துபாயில் தொடங்கிறது.



    இவ்விரு தொடர்களின் முடிவுகள் தரவரிசையில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற விவரத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது.

    டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் தற்போது இந்தியா முதலிடத்திலும் (115 புள்ளி), தென்ஆப்பிரிக்கா 2-வது இடத்திலும் (106 புள்ளி), ஆஸ்திரேலியா 3-வது இடத்திலும் (106 புள்ளி) உள்ளன. பாகிஸ்தான் 7-வது இடமும் (88 புள்ளி), வெஸ்ட் இண்டீஸ் 8-வது இடமும் (77 புள்ளி) வகிக்கின்றன.

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றினால் ஒரு புள்ளி உயர்ந்து 116 புள்ளிகளை எட்டும். 1-0 என்ற கணக்கில் வென்றால் ஒரு புள்ளி குறையும். தொடர் சமனில் முடிந்தால் இந்தியாவின் புள்ளி எண்ணிக்கை 112 ஆக குறையும். ஆனால் முதலிடத்திற்கு பிரச்சினை வராது.

    அதே சமயம் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் வசப்படுத்தினால் இந்தியாவின் புள்ளி எண்ணிக்கை 108 ஆக சரிவடையும். வெஸ்ட் இண்டீஸ் அணி 85 புள்ளிகளை எட்டும். அவ்வாறு நிகழ்ந்தால் இந்திய அணியின் முதலிடத்திற்கும் ஆபத்து வந்து விடும். ஏனெனில் ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தான் தொடரை 2-0 என்ற கணக்கில் வெல்லும்பட்சத்தில் அந்த அணியின் புள்ளி எண்ணிக்கை 109 ஆக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்திய அணியினர், முதலிடத்தை தக்கவைக்கும் நோக்குடன் இந்த தொடரில் ஆடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

    ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை பாகிஸ்தானை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தினால் 107 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேற முடியும். பாகிஸ்தான் அணி இந்த தொடரில் இரண்டு டெஸ்டிலும் வெற்றி கண்டால் அந்த அணியின் புள்ளி எண்ணிக்கை 97 ஆக எகிறுவதுடன், மயிரிழை வித்தியாசத்தில் இலங்கையை பின்னுக்கு தள்ளி 6-வது இடத்தை பிடிக்கும். இத்தகைய முடிவு ஆஸ்திரேலியாவை 100 புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கு சறுக்கி விடும்.

    சில வீரர்களுக்கு தனிப்பட்ட முறையில் தங்களது தரவரிசையை வலுப்படுத்திக்கொள்ளவும் இந்த தொடர் உதவும். பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய கேப்டன் விராட் கோலி (930 புள்ளி) ரன்மழை பொழிந்தால் அவரது புள்ளிகள் கணிசமாக ஏற்றமடையும். இந்தியாவின் புஜாரா (6-வது இடம்), லோகேஷ் ராகுல் (19), வெஸ்ட் இண்டீசின் கிரேக் பிராத்வெய்ட் (13), பாகிஸ்தானின் அசார் அலி (15) ஆகியோரும் அசத்தினால் தங்களது தரவரிசையை மேம்படுத்திக்கொள்ளலாம்.

    இதே போல் பந்து வீச்சாளர்களில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா (4-வது இடம்), அஸ்வின் (8), ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட் (10) வெஸ்ட் இண்டீசின் ஷனோன் கேப்ரியல் (11), ஜாசன் ஹோல்டர் (13), பாகிஸ்தானின் யாசிர் ஷா(18) உள்ளிட்டோர் தரவரிசையில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.  #India #WestIndies #ICC #TestRanking #INDvWI
    வெஸ்ட்இண்டீஸ்- வங்காளதேசம் இடையேயான தொடரை வெல்வது யார்? என்பது நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது. #WIvBAN
    வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து வங்காளதேச கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய 3 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரில் முதல் ஆட்டத்தில் வங்காளதேசமும், 2-வது ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீசும் வெற்றி பெற்றன. ஒருநாள் போட்டி தொடரை வெல்வது யார்? என்பது நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.இதில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும். #WIvBAN
    இலங்கை-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று தொடங்குகிறது. #westindies #srilanka #test
    போர்ட் ஆப் ஸ்பெயின்:

    தினேஷ் சன்டிமால் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி, வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடுகிறது. இலங்கை-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணி இந்த ஆண்டில் ஆடும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும். இலங்கை அணி இதுவரை வெஸ்ட்இண்டீஸ் மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. அந்த குறையை போக்க இலங்கை அணி முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. #westindies #srilanka #test
    ஐசிசி உலக லெவன்- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடக்கிறது.#WorldXIvsWestIndies #ICC #WorldXi #WestIndies #Lords
    லார்ட்ஸ்:

    ஐ.சி.சி. உலக லெவன்- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடக்கிறது.

    உலக லெவன் அணிக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் ‌ஷகீத் அப்ரிடி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இங்கிலாந்தை சேர்ந்த மோர்கன் தான் முதலில் கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருந்தார். அவர் காயம் அடைந்ததால் அப்ரிடிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்திய வீரர்களில் தினேஷ் கார்த்திக், முகமது‌ஷமி ஆகியோர் உலக லெவன் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

    வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு பிராத்வெயிட் கேப்டனாக உள்ளார். கிறிஸ் கெய்ல், ஆந்த்ரே ரஸ்சல் போன்ற வீரர்கள் உள்ளனர்.

    இந்தப்போட்டி இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணி வீரர்கள் விவரம்:-

    ஐ.சி.சி. உலக லெவன்:

    அப்ரிடி (கேப்டன்), சோயிப் மாலிக் (இருவரும் பாகிஸ்தான்), தினேஷ் கார்த்திக், முகமது‌ஷமி (இந்தியா), சாம்பில்லிங்ஸ், மில்ஸ், சாம்குர்ரான், ஆறில் ரஷீத் (இங்கிலாந்து), ரோஞ்சி, மெக்லகன் (நியூசிலாந்து), திசாரா பெரைரா (இலங்கை), ரஷீத்கான் (ஆப்கானிஸ்தான்) தமீம் இக்பால் (வங்காளதேசம்), சந்தீப் லிமிச்சே (நேபாளம்).

    வெஸ்ட்இண்டீஸ்: பிராத் வெயிட் (கேப்டன்), சாமு வேல் பத்ரி, ரேயன்ட் எமிட், பிளச்சர், கிறிஸ்கெய்ல், லீவிஸ், ஆஸ்லே நர்ஸ், கீமோபவுல், போவெல், ராம்தின், ரஸ்சல், சாமுவேல்ஸ், வில்லியம்ஸ்.#WorldXIvsWestIndies #ICC #WorldXi #WestIndies #Lords
    ×