search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bravo"

    • 17 வயதாகும் இளம் தென்னாப்பிரிக்க வீரர் க்வேனா மபாகா மும்பை அணிக்காக அறிமுகமானார்
    • ஐபிஎல் வரலாற்றில் அறிமுகப் போட்டியிலேயே அதிக ரன்கள் கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையைப் படைத்தார்.

    ஐபிஎல் 2024 சீசனில் நேற்று ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் குவித்தது.

    பின்னர் 278 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் அடித்து 31 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    அண்மையில் நடந்த 19 வயதிற்குட்பட்டோருக்கான ஐசிசி உலகக் கோப்பையில் அதிக விக்கெட் எடுத்து தொடர்நாயகன் விருது வென்று சாதனை படைத்த 17 வயதாகும் இளம் தென்னாப்பிரிக்க வீரர் க்வேனா மபாகா மும்பை அணிக்காக அறிமுகமானார்.

    அப்போட்டியில் அவரது பந்துவீச்சை இந்த போட்டியில் ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் அடித்து விளாசினார்கள். அதனால் 4 ஓவரில் 1 விக்கெட் கூட எடுக்காமல் 66 ரன்கள் கொடுத்த அவர் ஐபிஎல் வரலாற்றில் அறிமுகப் போட்டியிலேயே அதிக ரன்கள் கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையைப் படைத்தார்.

    இந்நிலையில் இளம் வீரர் க்வேனா மபாகாவுக்கு உத்வேகம் கொடுக்கும் வகையில் ட்வயன் ப்ராவோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "உன்னுடைய தலையை நிமிர்ந்து வைத்துக்கொள் சாம்பியன். கண்டிப்பாக நீ மீண்டெழுந்து வருவாய் என்று உறுதியாக சொல்வேன். இந்த ஒரு போட்டியை வைத்து உன் மீது சந்தேகப்பட துவங்கி விடாதே. இது உனக்கு மிகப்பெரிய சவால். இந்தத் தொடர் செல்லும் போது தான் இன்னும் நீ முன்னேற்றமடைவாய்" என்று பதிவிட்டுள்ளார்.

    அதே போல கைரன் பொல்லார்ட்டும் தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் அவருக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார். அதில்,

    "தலையை உயர்த்து இளைஞனே. இன்னும் பெரிய விஷயங்கள் அடைய வேண்டும். உங்கள் குடும்பத்தினர் அன்புக்குரியவர்கள், உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுவார்கள் என்று நான் நம்புகிறேன். கெரியரில் முதல் நாள் கடினமாக இருந்தது. ஆனால் உங்களது எதிர்காலம் பிரகாசமாக உள்ளது" ஏன்னு பதிவிட்டுள்ளார்.

    • டோனி 2024 ஐபிஎல்-லில் 100 சதவீதம் விளையாடுவார்.
    • கடினமான சூழல்களை எப்படி சமாளிப்பது என்பது டோனிக்கு தெரியும்.

    சென்னை:

    ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டுவரும் டோனி, இந்த தொடருடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வுபெறுவார் என்று பரவலாக கூறப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக அவரிடமே கேள்விகள் கேட்கப்பட்டது. ஆனால் தனது ஓய்வு முடிவு குறித்து டோனி இதுவரையில் எந்த தகவலும் அளிக்கவில்லை. டோனி இந்த தொடருடன் ஓய்வு பெற்றுவிடுவார் என்றும் சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறி வந்தாலும், சிலரோ அவர் அடுத்த சீசனும் விளையாடுவார் என்றும் கூறி வருகின்றனர்.

    சமீபத்தில் நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற பிளே ஆப் போட்டிக்கு பிறகு ஓய்வு முடிவு குறித்து டோனி கூறுகையில், மைதானத்திலோ அல்லது மைதானத்துக்கு வெளியிலோ எதுவானாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் தான் இருப்பேன்.

    விளையாடுகிறேனோ அல்லது வேறு ஏதாவது பொறுப்பில் இருப்பேனோ என்பது தெரியவில்லை. எப்படியானாலும், நான் எப்போதும் சிஎஸ்கே அணியின் அங்கமாகவே இருப்பேன் என்று அவர் கூறியிருந்தார்.

    இந்த நிலையில், டோனி அடுத்த ஆண்டு விளையாடுவார் என சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பிராவோ கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    டோனி 2024 ஐபிஎல்-லில் 100 சதவீதம் விளையாடுவார். குறிப்பாக இம்பேக்ட் பிளேயர் விதி அவரை நீண்ட நாட்களுக்கு விளையாட வைக்கும். ரகானேவும், சிவம் துபேவும் அணிக்கு வலிமை சேர்ப்பதால், டோனியிடம் இருந்து அதிகம் எதிர்பார்ப்பதில்லை. ஆனால் கடினமான சூழல்களை எப்படி சமாளிப்பது என்பது டோனிக்கு தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குவாலிபையர் 2-ல் குஜராத் அணியும் மும்பை அணியும் நாளை அகமதாபாத்தில் மோதவுள்ளது.
    • சென்னை இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே முன்னேறியுள்ள நிலையில் மும்பை அணியும் இறுதிப் போட்டிக்கு வரவேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனின் பிளே சுற்றில் குஜராத், சென்னை, லக்னோ, மும்பை ஆகிய அணிகள் இடம் பெற்றது.

    இந்நிலையில் முதல் இரண்டு இடங்களை பிடித்த சென்னை - குஜராத் அணிக்கு குவாலிபையர் சுற்று நடைபெற்றது. இந்த போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 172 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி டோனியின் சிறப்பான கேப்டன்ஷிப்பால் 157 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    இதனால் சென்னை அணி 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று எலிமினேட்டர் சுற்றில் மும்பை - லக்னோ அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 182 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து ஆடிய லக்னோ அணி 101 ரன்னில் சுருண்டது.

    இதன்மூலம் குவாலிபையர் 2-ல் குஜராத் அணியும் மும்பை அணியும் நாளை அகமதாபாத்தில் மோதவுள்ளது.

    சென்னை இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே முன்னேறியுள்ள நிலையில் மும்பை அணியும் இறுதிப் போட்டிக்கு வரவேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு மும்பை அணி வரக்கூடாது என்பது தனது தனிப்பட்ட விருப்பம் என சென்னை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பிராவோ சிரித்தபடி கூறியுள்ளார்.

    இதனை கிரிக்கெட் ரசிகர்கள் பயந்துட்டியா குமாரு என்று சமூக வலைதளங்களில் மீம்ஸ் போட்டு வருகின்றனர். 

    ஐபிஎல் கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறையும் சென்னை அணி நான்கு முறையும் கைப்பற்றியுள்ளது.

    • சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் இந்த வீடியோவை அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.
    • அகமதாபாத்தில் நடக்கும் முதல் போட்டியில் குஜராத் மற்றும் சென்னை அணிகள் மோதுகிறது.

    இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் வருகிற 31-ந் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதனால் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக வலைதளங்களில் அணி வீரர்களின் பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் புகைப்படம் வெளியீட்டு வருவது வழக்கமாக வைத்துள்ளனர்.


    இந்நிலையில் நம்ம ஊரு சென்னைக்கு விசில் போடுங்க பாடலுக்கு அணியின் கேப்டனான எம்எஸ் டோனி பந்து வீச்சு பயிற்சியாளரான பிராவோவுக்கு விசில் அடிக்க கற்றுக் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.

    கேப்டன் பதவியில் டோனி 50-வது வெற்றியை பெற்ற போட்டியில் பிராவோ சிக்ஸ் அடித்தும், 100-வது வெற்றியை பெற்ற போட்டியில் சான்ட்னெர் சிக்ஸ் அடித்தும் அசத்தியுள்ளனர். #IPL2019 #MSDhoni
    ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து வெற்றியை ருசித்தது. எம்எஸ் டோனிக்கு கேப்டனாக இது 100-வது வெற்றியாகும்.

    எம்எஸ் டோனிக்கு சாதனையான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து வெற்றியை ருசித்துள்ளது. கடந்த 2012 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது.



    கடைசி பந்தில் ஐந்து ரன்கள் தேவைப்பட்டது. ராஜட் பாட்டியா பந்து வீச வெயின் பிராவோ கடைசி பந்தை சந்தித்தார். லோ புல்டாஸ்-ஆக வீசப்பட்ட பந்தை சிக்சருக்கு தூக்கி வெயின் பிராவோ வெற்றி பெற வைத்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த வெற்றி ஐபிஎல் தொடரில் டோனிக்கு கேப்டனாக 50-வது வெற்றியாகும்.

    அதேபோல் நேற்று சான்ட்னெர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக 3 ரன்கள் தேவை என்ற நிலையில் சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். இந்த வெற்றி டோனிக்கு கேப்டனாக 100-வது வெற்றியாகும். இதன்மூலம் டோனி முக்கியமான சாதனை வெற்றிகளை ருசித்த போட்டிகளில் சென்னை அணிக்கு கடைசி பந்தில் சிக்ஸ் மூலமே வெற்றி கிடைத்துள்ளது.
    வயது பிரச்சினை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் பிராவோ விளக்கம் அளித்துள்ளார். #IPL2019
    சென்னை:

    சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் பிராவோவிடம் வயது பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், ``வயது வெறும் நம்பர்தான் என்பதை நாங்கள் கடந்த ஐ.பி.எல். சீசனிலேயே நிரூபித்துவிட்டோம்.

    நாங்கள் ஒன்றும் 60 வயது ஆனவர்கள் கிடையாது. 30 வயதுக்கு மேல்தான் ஆகிறது எங்களுக்கு. நாங்கள் இன்னும் இளமையாகத்தான் இருக்கிறோம். எங்கள் உடற் தகுதியை சரியாகக் கவனிக்கிறோம். மற்றவர்களைவிட எங்கள் அணியில் உள்ள நிறைய பேருக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. உலகின் தலைசிறந்த கேப்டன் எங்களை சிறப்பாக வழிநடத்துகிறார்.



    இவ்வாறு அவர் கூறினார். #IPL2019
    முன்னாள் ஆல்ரவுண்டர் வீரர்களான வெயின் பிராவோ, பால்க்னெர் ஆகியோர் T10 கிரிக்கெட் போட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். #Bravo #T10
    ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 10 ஓவர்கள் கொண்ட T10 கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னாள் ஆல்ரவுண்டர்களான வெயின் பிராவோ, ஜேம்ஸ் பால்க்னெர் ஆகியோர் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

    தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்கப்பட்டுள்ள டி20 லீக், உலகளவில் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பிராவோ கூறுகையில் ‘‘டி10 தற்போது வளர்ந்து வருவதாக நான் நினைக்கிறேன். இது டி20 கிரிக்கெட்டை போல் இருப்பதால் உலகில் உள்ள மற்ற நாடுகளும் இந்த தொடரை நடத்தும்.

    டி20 கிரிக்கெட் போட்டி தொடங்கும்போது, தற்போது புகழ்பெற்றது போல் பிரபலம் அடையும் என்று யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்கள். டி20 போட்டியும் அதேபோல் பிரபலம் அடைய சாத்திக்கூறுகள் உள்ளன. உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளை இது சென்றடையும் வரை, ஒரு சாதரணமாக போட்டி போன்றுதான் தோன்றும்’’ என்றார்.

    ஜேம்ஸ் பால்க்னெர் ‘‘அடுத்த மூன்று வருடத்தில் இந்த ஆட்டம் எப்படி செல்ல இருக்கிறது என்பதை பார்க்க ஆர்வமாக இருக்கிறது’’ என்றார்.
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் வெய்ன் பிராவோ சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார்.#Bravo #WestIndies
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் வெய்ன் பிராவோ. 35 வயதான இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார். அவர் கடைசியாக 2014-ம் ஆண்டு ஒரு நாள் போட்டியில் விளையாடினார்.

    பிராவோ டெஸ்டில் 2,200 ரன்னும், 86 விக்கெட்டும் எடுத்தார். ஒரு நாள் போட்டியில் 2968 ரன்னும், 199 விக்கெட்டும், 20 ஓவரில் 1142 ரன்னும், 52 விக்கெட்டும் எடுத்தார்.



    சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் பல்வேறு நாடுகளில் நடைபெறும் உள்ளூர் 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுவார். #Bravo #WestIndies
    இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முக்கிய வீரர்களான வெய்ன்பிராவோ, பொல்லார்ட், சுனில் நரீன் ஆகிய 3 வீரர்கள் அணியில் இடம் பெறவில்லை. #INDvWI #Bravo #Pollard #Narine
    கிங்ஸ்டன்:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் போட்டித்தொடரில் ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் வருகிற 12-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது.

    இதைதொடர்ந்து இரு அணிகள் இடையே 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் ஒருநாள் தொடர் 21-ந்தேதி தொடங்குகிறது. ஒருநாள் தொடருக்கான 25 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் உத்தேச அணி அறிவிக்கப்பட்டது

    வெய்ன்பிராவோ, போல்லார்ட், சுனில் நரீன் ஆகிய 3 வீரர்கள் அணியில் இடம் பெறவில்லை இதனால் அவர்களின் ஒரு நாள் போட்டி எதிர்காலம் இனி கேள்விக்குறியே. இதேபோல் 20 ஓவர் போட்டி அணியிலும் அவர்கள் இடம் பெறுவதற்கான வாய்ப்பு குறைவே.

    இந்த 3 பேரும் 20 ஓவர் போட்டிக்கு ஏற்ற மிகச் சிறந்த வீரர்கள் ஆவார்கள். பிராவோவும் பொல்லார்ட்டும் கரீபியன் பிரியர் லீக் போட்டியில் ஆடி வருகிறார்கள்.



    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துக்கும் பிராவோவுக்கும் ஏற்கனவே ஊதிய விவகாரத்தில் பிரச்சினை இருந்து வருகிறது. அவர் ஒரு நாள் போட்டி அணியில் விளையாடி 4 ஆண்டுகளும், 20 ஓவர் போட்டிகளில் விளையாடி 2 ஆண்டுகளும் ஆகிறது.

    ஒரு நாள் தொடருக்கான 15 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி விரைவில் அறிவிக்கப்படும். #INDvWI #Bravo #Pollard #Narine
    வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி வீரர்களான சுனில் நரைன், பொல்லார்டு, பிராவோ ஆகியோர் மீண்டும் சர்வதேச ஒருநாள் போட்டிக்கு திரும்ப வாய்ப்புள்ளது. #WI
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வீரர்களாக கிறிஸ் கெய்ல், பொல்லார்டு, சுனில் நரைன், பிராவோ, அந்த்ரே ரஸல் ஆகியோர் திகழ்ந்து வந்தார்கள். இவர்கள் அனைவரும் வெளிநாட்டில் நடைபெறும் ஏறக்குறைய அனைத்து டி20 லீக் தொடரிலும் இடம்பிடித்து விளையாடி வந்தார்கள்.

    இதனால் உள்ளூர் தொடர்களில் அவர்கள் பங்கேற்பதில்லை. உள்ளூர் தொடரில் பங்கேற்றால்தான் வீரர்கள் ஒப்பந்தத்தில் இடம்பெற முடியும் எனவும், வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பெற முடியும் எனவும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக கூறியது.

    இதனால் முக்கியமான இந்த வீரர்கள் சர்வதேச அணிக்காக விளையாட விரும்பவில்லை. அதற்குப் பதிலாக ஐபிஎல், பிக் பாஷ், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாட விரும்பினார்கள்.

    ஜிம்பாப்வேயில் நடைபெற்ற உலகக்கோப்பை தகுதிச் சுற்றிற்கான தொடரில் கூட விளையாட விரும்பவில்லை. அடுத்த வருடம் உலகககோப்பை தொடர் நடக்க இருப்பதால் தலைசிறந்த வீரர்களுடன் களம் இறங்க திட்டமிட்டுள்ளது.

    இதனால் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் வீரர்களை அழைத்து பேசியுள்ளது. இதில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் சர்வதேச அணிகளுக்கு திரும்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.



    வெஸ்ட் இண்டீஸில் நடத்தப்படும் உள்ளூர் 50 ஓவர் தொடர்களில் இவர்கள் விளையாடினால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தானாக தேர்வு ஆவார்கள் என்று தேர்வுக்குழு தலைவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது கெய்ல், அந்த்ரே ரஸல் ஆகியோர் வங்காள தேச அணிக்கெதிரான ஆட்டத்தில் விளையாடி வருகிறார்கள்.

    பிராவோ, பொல்லார்டு, நரைன் அணிக்கு திரும்பினால் வலுவான அணியாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
    ×