search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "piyush chawla"

    • பிராவோ ஐபிஎல் கிரிக்கெட்டில் 183 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
    • சாவ்லா 184 விக்கெட்டுகள் வீழ்த்தி பிராவோவை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

    மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 169 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா ரிங்கு சிங்கை 9 ரன்னில் ஆவுட்டாக்கினார். இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த பிராவோவை 3-வது இடத்திற்கு தள்ளி, 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    பிராவோ 183 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். பியூஷ் சாவ்லா ரிங்கு சிங்கை அவுட்டாக்கியதன் மூலம் 184 விக்கெட்டுகள் வீழ்த்தி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

    சாஹல் 200 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். புவனேஷ்வர் குமார் 178 விக்கெட்டுகள் வீழ்த்தி 4-வது இடத்தில் உள்ளார்.

    • நடப்பு ஐபிஎல் தொடரை என் மகனுக்காகவே விளையாடி வருகிறேன்.
    • நான் இந்திய அணிக்காக ஆடிய போது, என் மகன் குழந்தையாக இருந்தார்.

    மும்பை:

    ஐபிஎல் தொடரின் 57-வது லீக் போட்டியில் குஜராத்- மும்பை அணிகள் மோதின. இந்த போட்டி மும்பையில் நடைபெற்றது. 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் மும்பை அணியின் பியூஷ் சாவ்லா 4 ஓவர்களில் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    நடப்பு சீசன் முழுவதும் மும்பை அணியின் மிகச் சிறந்த பந்து வீச்சாளர்களாக பியூஷ் சாவ்லா இருந்து வருகிறார். மொத்தமாக 12 போட்டிகளில் விளையாடியுள்ள பியூஷ் சாவ்லா 19 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். கடந்த சீசனில் வர்ணனை செய்து கொண்டிருந்த பியூஷ் சாவ்லா, நடப்பு சீசனில் களமிறங்கி மிரட்டலாக விளையாடி வருவது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரை என் மகனுக்காகவே விளையாடி வருகிறேன் என பியூஷ் சாவ்லா கூறியுள்ளார்.

    இது குறித்து பியூஷ் சாவ்லா கூறியதாவது:-

    நடப்பு ஐபிஎல் தொடரை என் மகனுக்காகவே விளையாடி வருகிறேன். ஏனென்றால் நான் இந்திய அணிக்காக ஆடிய போது, என் மகன் குழந்தையாக இருந்தார். கிரிக்கெட்டை அவரால் அந்த அளவுக்கு புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் இப்போது அப்படியல்ல. கிரிக்கெட்டை நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. என் ஆட்டத்தை தொலைக்காட்சி முன் அமர்ந்து பார்க்கிறான்.

    ஒவ்வொரு ஆட்டம் முடிவடைந்த பின்னரும், என்னுடைய பந்துவீச்சை இருவரும் சேர்ந்து ரிவ்யூ செய்து வருகிறோம்.

    என்று அவர் கூறினார். 

    • முகமது ஷமி வீசிய பந்தை சூர்யகுமார் யாதவ் தேர்ட் மேன் திசையில் சிக்சர் அடித்தார்.
    • இந்த சிக்சரை அனைவரும் ஆச்சரியத்தில் பார்த்தனர்.

    குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இந்த வெற்றிக்கு சூர்யகுமார் யாதவின் அபார சதமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்றையப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் விளாசிய சிக்சர் ஒன்று ரசிகர்கள் மட்டுமல்லாமல் கிரிக்கெட் கடவுள் என்று கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. முகமது ஷமி வீசிய பந்தை சூர்யகுமார் யாதவ் தேர்ட் மேன் திசையில் சிக்சராக்கினார்.


    இந்த சிக்சரை அனைவரும் ஆச்சரியத்தில் பார்த்தனர். பந்து வீசிய முகமது சமி கூட திகைத்து போனார் என்றே சொல்லலாம். இதனை நேரில் பார்த்த சச்சின் டெண்டுல்கரே, மிரண்டு போய் சாவ்லாவிடம் அந்த ஷாட் எப்படி அடித்தார் என்பதை சைகை மூலம் செய்து காட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த புகைப்படத்தை வைத்து நெட்டிசன்கள் அது எப்படி திமிங்கலம் என்ற சந்தானம் காமெடி டெம்லேட்டை வைத்து மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

    ×