search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நேபாள்"

    • காத்மாண்டு பகுதியில் காலராவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
    • பானிபூரி விற்பனைக்கு தடை விதிக்கும் முடிவுக்கு உணவு பிரியர்கள் எதிர்ப்பு.

    காத்மாண்டு:

    சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் நொருக்கு தீனி வகைகளில் பானிபூரி முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மாலை வேலைகளில் ஏராளமானோர் பானி பூரி கடைகளுக்கு படையெடுப்பது அதிகரித்து வரும் நிலையில், நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் பானி பூரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    காத்மாண்டு பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகளில் ஏராளமான பானிபூரி விற்பனை கடைகள் உள்ளன. இங்கு அச்சுத்தமான தண்ணீர் பயன்படுத்தப்படுவதால் லலித்பூர் பகுதியில் காலாரா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 19ந் தேதி ஒருவருக்கு காலார பாதிப்பு நோய் ஏற்பட்ட நிலையில், தற்போது 12க்கும் மேற்பட்டோர் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதில் எட்டு பேர் குணமடைந்த  வீடு திரும்பினர். மேலும் நான்கு பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பாக்பஜாரில் இருவர் காலராவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து ஒருவாரம் பானிபூரி விற்பனைக்கு தடை விதிக்க சுகாதார அதிகாரிகள் முடிவு செய்தனர். எனினும் இதற்கு உணவு பிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பானி பூரி விற்பனைக்கு தடை விதிக்கும் முடிவு முற்றிலும் பொருத்தமற்றது என்றும், இது சிறு வணிகம் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் எனறும், அதற்கு பதில் சுகாதாரமான தண்ணீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    முன்னதாக நேபாளம் முழுவதும் பாதுகாப்பற்ற குடிநீர் விநியோகம் மற்றும் சுகாதாரமற்ற சூழ்நிலைகள் காரணமாக 30,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் வரையில் 911 பேர் சுகாதார சீர்கேட்டால் இறந்துள்ளனர்.

    நெதர்லாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது முதல் வெற்றியை நேபாளம் பதிவு செய்துள்ளது. #NEDvNEP #NepalCricket

    கடந்த மார்ச் மாதம் நேபாளம் அணி சர்வதேச அணிக்கான அந்தஸ்தை பெற்றது. இதன் பின்னர் முதன் முறையாக அந்த அணி நெதர்லாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. முதல் ஒரு நாள் போட்டியில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், நேற்று இரண்டாவது ஒரு நாள் போட்டி நடந்தது. 

    முதலில் பேட்டிங் செய்த நேபாளம் 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 216 ரன்கள் எடுத்தது. சோம்பால் காமி 51, கேப்டன் பராஸ் காட்கா 51 ரன்கள் எடுத்தனர்.

    அடுத்து விளையாடிய நெதர்லாந்து அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் ஒரு ரன்னில் நேபாளம் வென்றது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவை என்ற நிலையில் நெதர்லாந்து இருந்தது. கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவை என்ற நிலையில், பவுலிங் செய்த பராஸ் காட்கா, நெதர்லாந்து அணியின் கடைசி விக்கெட்டை ரன் அவுட்டாக்கினார்.

    இந்த வெற்றியின் மூலம் தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டி வெற்றியை நேபாளம் பதிவு செய்துள்ளது. 2 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற தொடர் சமனானது.
    நேபாளத்தில் இரு முக்கிய பிரிவுகளாக உள்ள ஆளும் இடதுசாரி கட்சிகள் ஒரே கட்சியாக நேபாள கம்யூனிஸ்ட் கட்சி என ஒருங்கிணைந்துள்ளது. #Nepal #NepalCommunistParty
    காத்மண்டு:

    மன்னராட்சியின் கீழ் இருந்த நேபாளம் பெரும் மக்கள் போராட்டத்திற்கு பின்னர் குடியரசு நாடானது. 2015-ம் ஆண்டு புதிய அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்டது. இதில், பிரதிநிதிகள் சபை (கீழ்சபை), தேசிய சபை (மேல்சபை) ஆகிய இரண்டு சபைகள் கொண்ட பாராளுமன்றம் அமைக்கப்பட்டது.

    கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) மற்றும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் சென்டர்) கட்சிகள் அடங்கிய கூட்டணி அபார வெற்றி பெற்றது. நேபாள காங்கிரஸ் கட்சி கூட்டணி படுதோல்வியை சந்தித்தது.

    பாராளுமன்ற மேல்சபை தேர்தலிலும் மொத்தமுள்ள 59 இடங்களில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஒருங்கினைந்த மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சி 27 இடங்களையும், மாவோயிஸ்ட் சென்டர் கட்சி 12 இடங்கள் என இடதுசாரிகள் கூட்டணி 39 இடங்களில் வென்றது.

    தேர்தல் முடிவுகளை அடுத்து, புதிய பிரதமராக நேபாள கம்யூனிஸ்ட் (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சி தலைவரான சர்மா ஒலி தேர்வு பதவியேற்றார்.

    இதற்கிடையே இரண்டு கட்சிகளையும் இணைப்பது தொடர்பாக முடிவெடுக்க அமைத்த குழுவின் முடிவுப்படி, இரு கட்சிகளும் ஒன்றாக இணைந்து நேபாள கம்யூனிஸ்ட் கட்சி என இனி அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் சர்மா ஒலி, மாவோயிஸ்ட் சென்டர் கட்சியின் தலைவராக இருந்த பிரசந்தா ஆகியோருக்கு நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் சம அதிகாரங்கள் கொண்ட பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    மார்க்ஸ் மற்றும் லெனின் ஆகியோரின் கோட்பாடுகளின் அடிப்படையில் கட்சி இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரு பிரிவுகள் இணைந்ததன் மூலம் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி பழைய பலத்தை பெற்று புதிதாக உருவெடுத்துள்ளதாக அந்நாட்டின் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். 
    ×