நேபாள இடைக்கால பிரதமர் சுசிலா கார்கிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

இடைக்கால பிரதமாராக இடைக்கால தலைவராக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி (73) பதவியேற்றார்.நேபாள பாராளுமன்றம் கலைக்கப்பட்டு அடுத்த வருடம் மார்ச் 21 தேர்தல் அறிவிக்கப்பட்டது.
நேபாள இடைக்கால பிரதமர் சுசிலா கார்கிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
Published on

சமூக வலைதள தடை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளைக் தொடர்ந்து ஏற்பட்ட இளைஞர்கள் போராட்டத்தால் கடந்த செப்டம்பர் 9 ஆம் நீதி நேபாள் பிரதமர் சர்மா ஒலி ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் நேற்று இடைக்கால பிரதமாராக இடைக்கால தலைவராக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி (73) பதவியேற்றார்.

அதேவேளை நேபாள பாராளுமன்றமும் கலைக்கப்பட்டு அடுத்த வருடம் மார்ச் 21 தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சுசிலா கார்கிக்கு பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "நேபாள இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள திருமதி சுசிலா கார்கிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேபாள மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் " நேபாளத்தில் திருமதி சுசிலா கார்கி தலைமையில் ஒரு புதிய இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டதை நாங்கள் வரவேற்கிறோம். இது அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை வளர்ப்பதற்கு உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.

நெருங்கிய அண்டை நாடு மற்றும் நீண்டகால வளர்ச்சி கூட்டாளியாக, இந்தியா நமது இரு மக்கள் மற்றும் நாடுகளின் நல்வாழ்வு மற்றும் செழிப்புக்காக நேபாளத்துடன் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றும்" என்று தெரிவித்திருந்தது.   

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com