நேபாளத்தில் மீண்டும் GEN Z போராட்டம்.. ஊரடங்கு அமல்

நேபாளத்துக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. சிமாராவில் பிற்பகல் 1:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
செப்டம்பர் 15, 2025 அன்று நேபாளத்தின் காத்மாண்டுவில் பாராளுமன்றத்திற்கு வெளியே நடந்த போராட்டம்
செப்டம்பர் 15, 2025 அன்று நேபாளத்தின் காத்மாண்டுவில் பாராளுமன்றத்திற்கு வெளியே நடந்த போராட்டம்
Published on

நேபாளத்தில் கடந்த செப்டம்பர் மாதம் சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாட்டை எதிர்த்தும் சர்மா ஒலி அரசின் ஊழல் மற்றும் நாட்டின் பொருளாதார பிரச்னைகளை எதிர்த்தும் ஜெனரல் z இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் வன்முறையாக மாறி, பாராளுமன்றம், நீதிமன்றம், அலுவலகங்களுக்கு தீ வைக்கப்பட்டது. வன்முறையில் 76 பேர் கொல்லப்பட்டனர். இதைதொடர்ந்து சர்மா ஒலி மற்றும் அமைச்சர்கள் பதவி விலகினர்.

தொடர்ந்து ஜெனரல் z விருப்பப்படி அந்நாட்டின் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுசீலா கார்க்கி இடைக்கால தலைவராக பதவி ஏற்றார். நேபாளத்துக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த சூழலில் நேபாளத்தின் பாரா மாவட்டத்தின் சிம்பாரா பகுதியில் ஜெனரல் z மற்றும் சர்மா ஒலி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

அரசாங்க எதிர்ப்பு பேரணியில் உரையாற்ற சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் வருவதை எதிர்த்து ஜெனரல் z எதிர்த்து வீதியில் இறங்கி போராடிய நிலையில் நேற்று, சிமாரா விமான நிலையம் அருகே அவர்களுக்கும் சர்மா ஒழி ஆதரவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மோதலை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

நிலைமை மோசமடைவதை தடுக்க சிமாராவில் இன்று பிற்பகல் 1:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com