search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாமுவேல்ஸ்"

    சாமுவேல்ஸை வீழ்த்தியபின் ஆத்திரமுட்டும் வகையில் சந்தோசத்தை வெளிப்படுத்திய இளம் பந்து வீச்சாளரான கலீல் அஹமதுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #INDvWI, #ICC
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 4-வது ஒருநாள் போட்டி மும்பையில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்தது இந்தியா ரோகித் சர்மா (162), அம்பதி ராயுடு (100) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 377 ரன்கள் குவித்தது.

    பின்னர் 378 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. ஷாய் ஹோப்பை (0) குல்தீப் யாதவும், பொவேலை (4) விராட் கோலியும் டைரக்ட் ஹிட் மூலம் ரன்அவுட் ஆக்க, இளம் வேகப்பந்து வீச்சாளரான கலீல் அஹமது ஹெட்மையர் (13), சாமுவேல்ஸ் (18), ரோவ்மேன் பொவேல் ஆகியோரை தனது இன்ஸ்விங் மற்றும் அவுட்ஸ்விங் பந்தால் வெளியேற்றினார்.



    5 ஓவரில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து முக்கியமான மூன்று விக்கெட்டுக்களை சாய்த்து வெஸ்ட் இண்டீஸ் 153 ரன்னில் ஆல்அவுட் ஆக காரணமாக இருந்தார். சாமுவேல்ஸ் விக்கெட்டை வீழ்த்தியபோது, சாமுவேல்ஸ் அருகில் சென்று ஆத்திரமுட்டும் வகையில் உற்சாக மிகுதியால் சந்தோசத்தை வெளிப்படுத்தினார்.

    கலீல் அஹமதின் செயல் ஐசிசி-யின் வீரர்களின் நன்னடத்தை விதிக்கு எதிராக இருந்ததால் மைதான நடுவர்கள் குற்றம்சாட்டினார்கள். இதனால் ஐசிசி எலைட் நடுவர் பிராட் அவரை எச்சரித்ததுடன், போட்டி தடைக்கான ஒரு புள்ளியையும் வழங்கினார். போட்டிக்குப்பின் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டு அபராதத்தை ஏற்றுக்கொண்டார். இதனால் அதற்கு மேல் விசாரணை இல்லை என ஐசிசி முடிவு செய்துள்ளது.
    ×