search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Khaleel Ahmed"

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. குருணால் பாண்டியா, கலீல் அஹமது அறிமுகம். #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிந்துள்ள நிலையில் இன்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று கொல்கத்தாவில் தொடங்குகிறது.

    இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிக்கான டாஸ் 6.30 மணிக்கு சுண்டப்பட்டது. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சு தெர்வு செய்துள்ளார். இந்திய அணியில் குருணால் பாண்டியா, கலீல் அஹமது அறிமுகமாகியுள்ளனர். புவனேஸ்வர் குமார் அணியில் இடம்பெறவில்லை.

    இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ரோகித் (கேப்டன்), 2. ஷிகர் தவான், 3. கேஎல் ராகுல், 4. ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), 5. மணிஷ் பாண்டே, 6. தினேஷ் கார்த்திக், 7. குருணால் பாண்டியா, 8. குல்தீப் யாதவ், 9. உமேஷ் யாதவ் 10. பும்ரா, 11. கலீல் அஹமது.
    சாமுவேல்ஸை வீழ்த்தியபின் ஆத்திரமுட்டும் வகையில் சந்தோசத்தை வெளிப்படுத்திய இளம் பந்து வீச்சாளரான கலீல் அஹமதுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #INDvWI, #ICC
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 4-வது ஒருநாள் போட்டி மும்பையில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்தது இந்தியா ரோகித் சர்மா (162), அம்பதி ராயுடு (100) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 377 ரன்கள் குவித்தது.

    பின்னர் 378 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. ஷாய் ஹோப்பை (0) குல்தீப் யாதவும், பொவேலை (4) விராட் கோலியும் டைரக்ட் ஹிட் மூலம் ரன்அவுட் ஆக்க, இளம் வேகப்பந்து வீச்சாளரான கலீல் அஹமது ஹெட்மையர் (13), சாமுவேல்ஸ் (18), ரோவ்மேன் பொவேல் ஆகியோரை தனது இன்ஸ்விங் மற்றும் அவுட்ஸ்விங் பந்தால் வெளியேற்றினார்.



    5 ஓவரில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து முக்கியமான மூன்று விக்கெட்டுக்களை சாய்த்து வெஸ்ட் இண்டீஸ் 153 ரன்னில் ஆல்அவுட் ஆக காரணமாக இருந்தார். சாமுவேல்ஸ் விக்கெட்டை வீழ்த்தியபோது, சாமுவேல்ஸ் அருகில் சென்று ஆத்திரமுட்டும் வகையில் உற்சாக மிகுதியால் சந்தோசத்தை வெளிப்படுத்தினார்.

    கலீல் அஹமதின் செயல் ஐசிசி-யின் வீரர்களின் நன்னடத்தை விதிக்கு எதிராக இருந்ததால் மைதான நடுவர்கள் குற்றம்சாட்டினார்கள். இதனால் ஐசிசி எலைட் நடுவர் பிராட் அவரை எச்சரித்ததுடன், போட்டி தடைக்கான ஒரு புள்ளியையும் வழங்கினார். போட்டிக்குப்பின் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டு அபராதத்தை ஏற்றுக்கொண்டார். இதனால் அதற்கு மேல் விசாரணை இல்லை என ஐசிசி முடிவு செய்துள்ளது.
    ஆசிய கோப்பை பரிசளிப்பு விழாவின்போது வெற்றிக் கோப்பையை என்னிடம் வழங்குமாறு ரோகித் சர்மாவை டோனி கேட்டுக்கொண்டார் என்று கலீல் அகமது தெரிவித்துள்ளார். #AsiaCup2018
    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங் காங் அணிகள் பங்கேற்ற ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபு தாபியில் நடைபெற்றது.

    இந்தியா - வங்காள தேசம் அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா கடைசி பந்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

    இந்த தொடரில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது இடம் பிடித்திருந்தார். பரிசளிப்பு விழாவின்போது ஆசிய கோப்பையை கேப்டன் ரோகித் சர்மா வாங்கியதும், உடனடியாக கலீல் அகமது கையில் கொடுத்தார். கலீல் அகமது உற்சாக மிகுதியால் கோப்பையை தூக்கி காண்பித்து சந்தோசத்தை வெளிப்படுத்தினார்.



    அறிமுக தொடரை இந்தியா கைப்பற்றியதில் அவருக்கு எல்லையிலா மகிழ்ச்சி. அத்துடன் கோப்பையை வாங்கியதும் அதைவிட மகிழ்ச்சி. நான் மிகவும் இளம் வீரர் மற்றும் எனக்கு தொடக்க தொடர் என்பதால் டோனிதான் ரோகித் சர்மாவிடம் கோப்பையை என்னிடம் வழங்குமாறு கூறினார் என்ற நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

    இதுகுறித்து கலீல் அகமது கூறுகையில் ‘‘வெற்றிக் கோப்பையை என்னிடம் வழங்கி இருவரும் கோப்பையை பெறுமாறு ரோகித் சர்மாவிடம் டோனி கேட்டுக்கொண்டார். ரோகித் சர்மா என்னிடம் கோப்பையை வழங்கினார்.

    ஏனென்றால், நான்தான் அணியில் இளம் வீரர். மேலும், இது என்னுடைய அறிமுக தொடர். இது எனக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்’’ என்றார்.
    ×