search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister geethajeevan"

    • ரூ.80 லட்சம் மதிப்பில், பழுதடைந்த 20 காலனி வீடுகளை இடித்து விட்டு, புதிதாக கான்கிரீட் தொகுப்பு வீடுகள் கட்டும்பணி தொடங்கியது.
    • இதில் சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு புதிய தொகுப்பு வீடுகளை திறந்து வைத்து பேசினார்.

    கயத்தாறு:

    கயத்தாறு யூனியன் தெற்கு இலந்தைகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட மானங்காத்தான் கிராமத்தில், 1996-ம் ஆண்டில் கட்டப்பட்ட காலனி தொகுப்பு வீடுகள் மிகவும் பழுதடைந்து இருந்தது.

    சிதிலமடைந்திருந்த இந்த வீடுகளுக்கு மாற்றாக கான்கிரீட் வீடு கட்டித் தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் தூத்துக்குடி எம்.பி. கனிமொழியிடம் கோரிக்கை வைத்தனர்.

    இதனைத்தொடர்ந்து, கனிமொழி எம்.பி.யின் முயற்சியால், தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியில் இருந்து ரூ.80 லட்சம் மதிப்பில், பழுதடைந்த 20 காலனி வீடுகளை இடித்து விட்டு, புதிதாக கான்கிரீட் தொகுப்பு வீடுகள் கட்டும்பணி தொடங்கியது.

    இதில் 9 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி தலைமை தாங்கினார். அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலை வகித்தார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக கனிமொழி

    எம்.பி. கலந்து கொண்டு புதிய தொகுப்பு வீடுகளை திறந்து வைத்து பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் முன்னிலை வகித்தார். திறப்பு விழாவில் கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னப் பாண்டியன், சுற்றுச்சூழல் அணியின் துணை அமைப் பாளர் ராஜதுரை, மாவட்ட திட்ட குழு உறுப்பினர் கே.கே.ஆர்.அய்யாத்துரை பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் பிரியாகுருராஜ், கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி, கயத்தாறு நகர செயலாளர் சுரேஷ் கண்ணன், தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து தலைவர் செல்வி ரவிக் குமார், முன்னாள் பஞ்சா யத்து தலைவர் செல்லையா, கோவில்பட்டி ரமேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள், ஒன்றிய கவுன்சிலர்கள், நகர, கிளை நிர்வாகிகள், கயத்தாறு யூனியன் வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் பாண்டியராஜன், சுப்பு லட்சுமி, பொறியா ளர்கள் சித்ரா, செல்வாக்கை யும், செந்தில், பீர் முஹம்மது, மற்றும் பிற துறை அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கான ஓட்டப்பந்தய போட்டியில் மாநில அளவில் முதலிடமும், தேசிய அளவில் 2-வது இடமும் பெற்ற காயத்ரிக்கு இளைஞர் அணி சார்பில் நினைவு பரிசு வழங்கினார்.
    • தி.மு.க. ஆட்சி வந்தபிறகு எல்லா கோவில்களிலும் எல்லா நிகழ்ச்சிகளும் நல்ல முறையில் நடை பெறுகிறது என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சண்முக புரம் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தி யப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் தசரா விழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினசரி அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

    9-ம் நாள் நவராத்திரி சரஸ்வதி பூஜையை யொட்டி 50-ம் ஆண்டு சண்முகபுரம் இளைஞர் முன்னேற்ற அணியினர் சார்பில் நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சிக்கு இளைஞர் அணி ஓருங்கிணைப்பாளரும் தி.மு.க. வட்டச்செயலாள ருமான பொன்ராஜ், தலைமை தாங்கினார்.

    அமைச்சர் கீதாஜீவன்

    அமைப்பாளர்கள் முத்து மாரியப்பன், சுரேஷ், முத்துக்கு மார். ராஜேஷ், செல்வசுபாஷ், சூரியகாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் பேபி ஏஞ்சலின் வரவேற்று பேசினார்.

    இதில் சிறப்பு விருந்தின ராக அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து இன்னிசை கச்சேரியை கண்டுகளித்து பின்னர் மாற்றுத்திறனாளி களுக்கான ஓட்டப்பந்தய போட்டியில் மாநில அளவில் முதலிடமும், தேசிய அளவில் 2-வது இடமும் பெற்ற காயத்ரிக்கு இளைஞர் அணி சார்பில் நினைவு பரிசு வழங்கினார். மேலும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தங்கநாணயம் உள்பட 50 பரிசு பொருட்களை வழங்கினார்.

    1,000 கோவில்களில் கும்பாபிஷேகம்

    தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு 2 ½ ஆண்டுகளில் அறநிலைத்துறை சார்பில் 1,000 கோவில்களில் கும்பா பிஷேகம் நடைபெற்றுள்ளது. அதே போல் 5 ஆயிரம் கோடி மதிப்பிலான அறநிலைய துறைக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டுள்ளன. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து மதத்தினரும் மகிழ்ச்சியாக இருக்கின்றன. எல்லா மதத்ததையும் நாங்கள் மதிக்கிறோம். ஆனால் மதவெறியைதான் வெறுக்கிறோம்.

    தி.மு.க. ஆட்சி வந்தபிறகு எல்லா கோவில்களிலும் எல்லா நிகழ்ச்சிகளும் நல்ல முறையில் நடை பெறுகிறது. அதே போல் வியாபாரிகளுக்கு இரவு 10 மணி வரை கடைகள் இயங்கலாம் என்று இருந்ததை அவர்களது கோரிக்கையை ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 12 மணி வரை கடைகளை திறந்திருப்பதற்கு ஆணை பிறப்பித்துள்ளார்.

    இப்படி தமிழகத்தில் எல்லா துறைகளிலும் நல்ல வளர்ச்சியடைந்து பொருளாதார நிலை உயர்ந்து இந்தியாவிற்கே வழிகாட்டும் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்கு கிறது.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    விழாவில் மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட பொருளாளர் ரவீந்திரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வக்கீல் சீனிவாசன், வட்ட செயலாளர் சுரேஷ், கோவில் துணைசெயலாளர் பொன் ஆனந்த், தொழிலதிபர் சுந்தர்ராஜ், வியாபாரிகள் சங்க செயலாளர் கணேசன், முன்னாள் கவுன்சிலர் ஜெயசிங், திருப்பணி கமிட்டி முன்னாள் செயலாளர் சண்முகசுந்தரம், நிர்வாகிகள் ராஜசேகர், கலியுகவரதன், சந்தர், ஜெயக்குமார், ரவி, சங்கர், நாகேந்திரன், ராஜா, பாஸ்கர், குமரன், காமாட்சி, ஸ்டார் உள்பட பக்தர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெற்ற கையெழுத்து இயக்கம் தொடக்க நிகழ்ச்சி தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கையெழுத்து இயக்க அறப்போர் தமிழகத்தில் இருந்து விரட்டும் வரை தொடர் நிகழ்வாக இருக்கும் என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி மாணவரணி, மருத்துவரணி இணைந்து நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெற்ற கையெழுத்து இயக்கம் தொடக்க நிகழ்ச்சி தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    அமைச்சர் கீதாஜீவன்

    வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைதுறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், மாணவரணி அமைப்பாளர் சீனிவாசன், மருத்துவரணி அமைப்பாளர் சவுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கி ணங்க, தி.மு.க. இளைஞரணி செயலாளரும், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்ச ருமான உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மாணவரணி, மருத்துவரணி இணைந்து நடத்துகின்ற நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கையெழுத்து இயக்க அறப்போர் தமிழகத்தில் இருந்து விரட்டும் வரை தொடர் நிகழ்வாக இருக்கும்.

    மாணவர்களின் எதிர்காலம்

    தேவையில்லாத ஒன்றை நம்மீது திணிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. மாணவர்களின் எதிர்காலம் கருதி இந்த நீட் தேர்வை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    நிகழ்ச்சியில், மேயர் ஜெகன் பெரியசாமி, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., துணை மேயர் ஜெனிட்டா, மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செய லாளர் ராஜ்மோகன் செல்வின், மாநகர துணைச்செயலாளர்கள் கனகராஜ், பிரமிளா, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரி தங்கம், ராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் அன்ன லெட்சுமி, கலைச்செல்வி, கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி,

    ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், சின்னப்பாண்டி யன், ராதாகிருஷ்ணன், காசிவிஸ்வநாதன், மும்மூர்த்தி, செல்வராஜ், சின்னமாரி முத்து, நவநீத கண்ணன், அன்புராஜன், ராமசுப்பு, மாவட்ட அணி அமைப்பாளர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்பழகன், குபேர்இளம்பரிதி, கவிதா தேவி, ரமேஷ், துணை அமைப்பா ளர்கள் பிரதீப், ஜோசப் அமல்ராஜ், ஜுடி, பார்வதி, மகேந்திரன், ராதாகிருஷ்ணன், பாரதி, கோகுல்நாத், பார்வதி, பெனில்டஸ், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், மேகநாதன், ஜெயக்குமார், ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • செல்வம் தனது துறையில் உலகளாவிய அளவில் 99,567 இடங்களில் 1,053 இடத்தை பிடித்துள்ளார்.
    • இதனையடுத்து செல்வம் எட்டையபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    தூத்துக்குடி:

    அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம், மற்றும் எல்சேவியர் பதிப்பகம் வெளியிட்ட உலகின் தலை சிறந்த 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலில் தொடர்ந்து 3-வது ஆண்டாக, வ.உ.சிதம்பரம் கல்லூரியின் நிலத்தியல் துறையின் உதவி பேராசிரியர் செல்வம் இடம்பெற்றுள்ளார்.

    உலகளாவிய தரவரிசை பட்டியலில் இந்த வருடம் 84,658 இடத்தை பெற்றுள்ளார். கடந்த ஆண்டு 1,23,040 மற்றும் 2021-ல் 1,78,847 தரவரிசை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    36 வயதான இளம் விஞ்ஞானி செல்வத்தின் ஆய்வு கட்டுரைகள் 2013 முதல் 2022 வரை பூமி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறையில் சுற்றுச்சூழல் அறிவியல், புவி வேதியியல் மற்றும் புவி இயற்பியல் ஆகிய பல்வேறு பிரிவுகளில் செல்வம் வெளியிட்ட 87 ஆய்வுக் கட்டுரைகளை அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகம், மற்றும் எல்சேவியர் பதிப்பகம் எடுத்துக் கொண்டது.

    செல்வம் தனது துறையில் உலகளாவிய அளவில் 99,567 இடங்களில் 1,053 இடத்தை பிடித்துள்ளார். நிலத்தியல் பிரிவில் தமிழ்நாட்டில் இருவர் இடம்பெற்றுள்ளார்கள் அதில் இவர் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    எல்சேவியர் அனைத்து துறைகளிலிருந்தும் மொத்தம் 210,198 விஞ்ஞானிகளைத் தேர்ந்துஎடுத்துள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட விஞ்ஞானிகளில் 4,635 பேர் இந்தியாவைச் சேர்ந்த வர்கள். இந்தப் பட்டியல் ஆராய்ச்சியாளர்களை 22 அறிவியல் துறைகள் மற்றும் 174 துணைத் துறைகளாக வகைப்படுத்தியது என்பது குறிப்பிடதக்கது.

    இதனையடுத்து எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலா ளரும் சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்ச ருமான கீதாஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    அப்போது மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், அரசு வக்கீல் ஆனந்த கபரியேல்ராஜ், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, கவுன்சிலர் சரவணக்குமார், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், பகுதி பொருளாளர் உலகநாதன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மற்றும் கருணா, மணி, உள்பட பலர் உடனிருந்தனர்.

    • ரூ.6.27 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • அமைச்சர் கீதாஜீவன், மார்க்கண்டே யன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்துகொண்டு பாலம் அமைக்கும் பணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே வைப்பாற்றின் குறுக்கே உருளைகுடி ஊராட்சி பீக்கிலி பட்டி கிராமம் முதல் சங்கராபுரம் கிராமம் வரை தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டத்தை இணைக்கும் வகையில் நெல்லை நபார்டு நெடுஞ்சாலை கிராமப்புற சாலை திட்டத்தின் கீழ் ரூ.6.27 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மார்க்கண்டே யன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாலம் அமைக்கும் பணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலா ளர்கள் முருகேசன், ராதா கிருஷ்ணன், நவநீத கண்ணன், சின்ன மாரி முத்து, ராம சுப்பு, விளாத்தி குளம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கி ணைப்பாளர் ஸ்ரீதர், சாத்தூர் ஒன்றிய பிரதிநிதிகள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

    • ராஜேஸ்வரி, அமைச்சர் கீதாஜீவனிடம் தையல் எந்திரம் தந்து உதவுமாறு கோரிக்கை மனு அளித் திருந்தார்.
    • கோரிக்கையை ஏற்று அமைச்சர் கீதாஜீவன் கலைஞர் அரங்கில் அந்த பெண்ணுக்கு தையல் எந்திரம் வழங்கினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட் சிக்குட்பட்ட சங்கரப்பேரி பகுதியை சேர்ந்த பொன் ராஜேஸ்வரி, அமைச்சர் கீதாஜீவனிடம் வருகின்ற தீபாவளியை முன்னிட்டும், தன் குடும்பத்தின் வாழ்வா தாரத்திற்காகவும் தையல் எந்திரம் தந்து உதவுமாறு கோரிக்கை மனு அளித் திருந்தார்.

    இதனையடுத்து அவரது கோரிக்கையை உடனடியாக ஏற்ற வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சரு மான கீதாஜீவன் கலைஞர் அரங்கில் அந்த பெண்ணுக்கு தையல் எந்திரம் வழங்கி னார்.

    மாநகர தி.மு.க. செயலா ளர் ஆனந்தசேகரன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், துணை அமைப்பாளர் பிரபு, மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் குபேர் இளம்பரிதி, மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, வட்ட செயலாளர் கதிரேசன், பெருமாள் கோவில் அறங்காவலர்குழு தலைவர் செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    தூத்துக்குடி அண்ணா பஸ் நிலைய ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க நிர்வாகி கள் மற்றும் உறுப்பினர்கள் கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாள ரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவனை மரியாதை நிமித்த மாக சந்தித்ததுடன் சில கோரிக்கைகளையும் முன் வைத்ததையடுத்து, நிறை வேற்றி தருவதாக உறுதி யளித்தார்.

    தூத்துக்குடி- தன சேகரன் நகர் பகுதியைச் சேர்ந்த மக்கள் அப்பகுதியில் சாலை வசதிகள் அமைக்கப் பட்டதற்கு அமைச்சர் கீதாஜீவனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். மாவட்ட பிரதிநிதி செல்வ குமார் உடனிருந்தார்.

    தூத்துக்குடி மாநகராட்சி 53-வது வார்டு பொது மக்கள் அப்பகுதியில் சாலை வசதிகள் அமைக்கப்பட்ட தற்கும் மற்றும் தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் வேகத்தடை அமைத்துக் கொடுத்ததற்கும் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலா ளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். கவுன்சிலர் முத்துவேல் உடனிருந்தார்.

    • கோவில்பட்டியில் முன்னாள் முதல்- அமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
    • முகாமில் டாக்டர் அனுராதா தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் முன்னாள் முதல்- அமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கண் சிகிச்சை முகாம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட விவசாய தொழி லாளர் அணி, கோவில்பட்டி 14-வது வார்டு தி.மு.க., விருதுநகர் ரோட்டரி சங்கம் மற்றும் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து நடத்தினர்.

    கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி தலைமை தாங்கினார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட விவசாய தொழிலா ளர் அணி அமைப்பாளர் தவமணி முன்னிலை வகித் தார். அமைச்சர் கீதாஜீவன் முகாமை தொடங்கி வைத்தார். டாக்டர். அனுராதா தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு கண் பரிசோதனை செய்யப் பட்டது. இதில் விருதுநகர் ரோட்டரி கிளப் வடிவேல், கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட பஞ்சா யத்து துணைத்தலைவர் சந்திரசேகர், திமுக ஒன்றிய செயலாளர் பீக்கிலிப்பட்டி முருகேசன், மாவட்ட சிறு பான்மையினர் பிரிவு இணை அமைப்பாளர் அமலி. அந்தோணி பிரகாஷ், கவுன்சிலர்கள் ஜாஸ்மின் லூர்துமேரி, முத்து லட்சுமி பூல்பாண்டியன், முத்து பாண்டியன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணியின் துணை அமைப் பாளர் சந்திரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நகர்மன்ற உறுப்பினரும், பொறியாளரு மான தவமணி செய்திருந் தார்.

    • இப்போட்டியில் இளங்கலை, முதுகலை பயிலும் பொறியியல் மாணவர்கள், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
    • மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கு பெற்று முதல் பரிசு பெறும் மாணவருக்கு பரிசுத் தொகையாக ரூ.5 லட்சம் மற்றும் சுழற்கோப்பையும் வழங்கப்படும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கலைஞர் நூற்றாண்டு விழா தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பு அணிகளின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி சார்பில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு குறுக்குச்சாலையில் உள்ள கீதாஜீவன் கலை, அறிவியல் கல்லூரியில் பொறியியல் பயிலும் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெற இருக்கிறது.

    இப்போட்டியில் இளங்கலை, முதுகலை பயிலும் பொறியியல் மாணவர்கள், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. மாணவர்கள் கலந்து கொள்ளலாம். தொழில்நுட்ப கல்விக்கு தோள்கொடுத்த கலைஞர், தொழில்துறையை உயர்த்திய தமிழினத்தலைவர், திராவிட மாடலும், திறன் மிக்க கல்வியும், தெற்குச் சூரியன், கலைஞரும், தமிழும் ஆகிய 5 தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பில் 5 நிமிடங்கள் பேச வேண்டும்.

    மாவட்ட அளவில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.5 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.3 ஆயிரம் ரொக்கப்பரிசும், கேடயமும் வழங்கப்படும்.

    மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மண்டல அளவில் நடைபெறும் போட்டியிலும், மண்டல அளவில் வெற்றிபெறும் மாணவர்கள் மாநில அளவிலும் நடைபெறும் பேச்சுப் போட்டியிலும் பங்கு பெறலாம். மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கு பெற்று முதல் பரிசு பெறும் மாணவருக்கு பரிசுத் தொகையாக ரூ.5 லட்சம் மற்றும் சுழற்கோப்பையும் வழங்கப்படும்.

    இந்நிகழ்ச்சியானது தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறியாளரணி அமைப்பாளர் அன்பழகன் தலைமையில் மாவட்ட, மாநகர பொறியாளரணி துணை அமைப்பாளர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது. மாநகர பொறியாளரணி அமைப்பாளர் ரூபன் நன்றி கூறுகிறார்.

    போட்டியை தொடங்கி வைத்து வெற்றி பெறும் மாணவர்களுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் (நான்) பரிசுகள் வழங்க உள்ளார்.

    நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநில பொறியாளரணி துணை செயலாளர் பிரதீப் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்க இருக்கிறார்கள்.

    எனவே இந்நிகழ்ச்சியில் இளங்கலை, முதுகலை பயிலும் பொறியியல் மாணவர்கள் போட்டியில் பங்கு கொள்ள அழைக்கிறேன்.

    இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

    • சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர், சிறுமிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கினார்.
    • எந்த துறையை தேர்ந்தெடுத்து பணியாற்றினாலும் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அமைச்சர் பேசினார்.

    தூத்துக்குடி:

    கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. விளை யாட்டு மேம்பாட்டு அணி யின் சார்பில் கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர், சிறுமிகளுக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரி மைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி னார்.

    பின்னர் அவர் பேசு கையில், கலைஞர் நூற்றா ண்டு விழாவை ஒரு வருடம் முழுவதும் கொண்டாட வேண்டும். அவரது சாத னைகள் மற்றும் எல்லாத்து றையிலும் முத்திரை பதித்ததை நாட்டு மக்களுக்கு நினைவுப்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் கேட்டுக் கொண்ட திற்கி ணங்க வடக்கு மாவட்ட தி.மு.க. விற்குட்பட்ட எல்லா பகுதி களிலும் நலத்திட்ட உதவி களுடன் பல்வேறு நிகழ்ச்சி கள் நடை பெறுகின்றன. ஏற்கனவே விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

    இதனையடுத்து சிறுவர், சிறுமிகளுக்கான சதுரங்க போட்டி நடத்தப் பட்டுள்ளது. இந்த போட்டியும் திறமைகள் அதிகம் தேவைப்படுகின்ற விளையாட்டாகும். எந்த துறையை தேர்ந்தெடுத்து பணியாற்றினாலும் முழு மையாக தன்னை ஈடுப டுத்திக் கொண்டு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். கல்வியும், விளையாட்டும் நமக்கு அவசியமானது என்பதை உணர்ந்து எதிர்கால தலைமுறை யின ராகிய நீங்கள் நல்ல பழக்க வழக்க ங்களுடன் எல்லாத் துறைகளிலும் சாதனை படைக்க வேண்டும் என்றார்.

    விழாவில் பள்ளி தாளாளர் ஜீவன் ஜேக்கப், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமை ப்பாளரும், மாநகராட்சி மண்டலத் தலைவருமான வக்கீல் பாலகுருசாமி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அன்ப ழகன், துணை அமைப்பாளர் சின்னத்துரை, மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஆரோ க்கிய ராபின், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் கருணா, மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் கவிதைகள், திரைப்பட வசனங்கள் ஓப்புவித்தல் போட்டி தூத்துக்குடி போல்பேட்டை கீதா மெட்ரிக்பள்ளியில் நடைபெற்றது.
    • போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் பரிசு வழங்கினார்.

    தூத்துக்குடி:

    கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வடக்கு மாவட்ட தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் கவிதைகள், திரைப்பட வசனங்கள் ஓப்புவித்தல் போட்டி தூத்துக்குடி போல்பேட்டை கீதா மெட்ரிக்பள்ளியில் நடை பெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் சரத்பாலா தலைமை தாங்கி னார். மாவட்ட துணைத் தலைவர் ஞானப்பிரகாஷம், மாவட்ட துணை அமைப்பா ளர்கள் சோமநாதன், மனோ கரன், மாரியப்பன், தாமோதரகண்ணன், பால முருகன், ஆவுடையப்பன், மாநகர தலைவர் கணேசன், துணைத்தலைவர் சாமி, துணை அமைப்பாளர்கள் ஆனந்த், அற்புதராஜ், பழனி, சீதாலட்சுமி, ரமேஷ், ஆகி யோர் முன்னிலை வகித்த னர். மாநகர அமைப்பாளர் மரிய ஜோன் பிரான்சிஸ் வரவேற்று பேசினார். வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவன் விழாவை தொடங்கி வைத்து பேசி னார்.

    விழாவில் மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் தில்லை செல்வம், மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் வசந்தம் ஜெயக் குமார், மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், துணைச்செய லாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, பொருளாளர் அனந்தையா, மாவட்ட துணைச்செய லாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ராஜா, மாவட்ட அணி அமைப்பாளர்கள் அந்தோணி ஸ்டாலின், வக்கீல் பாலகுருசாமி, வக்கீல் அசோக், ரமேஷ், விஸ்வநாதராஜா, சீனி வாசன், துணை அமைப்பா ளர்கள் அந்தோணி கண்ணன், பிரபு, ராமர், பகுதி செயலாளா ஜெயக் குமார், மாவட்ட பிரதிநிதி கள் நாராயணன், செல்வ குமார், சேர்மபாண்டியன், மாநகர அணி அமைப்பா ளர்கள் ஜீவன் ஜேக்கப், அருண்சுந்தர், சீதாராமன், துணை அமைப்பாளர்கள் கிறிஸ்டோபர் விஜயராஜ், ரவி, குமரன், இலக்கிய அணி சக்திவேல், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், கவுன்சி லர்கள் சரவணக்குமார், ஜாக்குலின்ஜெயா, நாகேஸ்வரி, விஜயகுமார், வட்டச்செயலாளர்கள் பால குருசாமி, பொன்னுச்சாமி, கருப்பசாமி, சேகர், முத்து ராஜா, ராஜாமணி, சக்தி வேல், சதீஷ்குமார், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயசிங், குருசாமி மற்றும் கருணா, மணி, அல்பட், சத்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் பரிசு வழங்கி னார். மாவட்ட தலைவர் இருதயராஜ் நன்றி கூறினார்.

    • தூத்துக்குடி மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டிகள் தொடக்க விழா மாவட்ட விளையாட்டு அரங்கம் முன்பு நடைபெற்றது.
    • இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக கோப்பையும், ரூ.5 ஆயிரமும், முதல் 10 இடங்களை பிடிப்பவர்களுக்கு தலா ரூ.ஆயிரம் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டிகள் தொடக்க விழா மாவட்ட விளையாட்டு அரங்கம் முன்பு நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்.

    மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட விளை யாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ் வரவேற்று பேசினார். 3 வகையான போட்டியை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடைத்துறை அமைச்ச ருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ டேவிட் செல்வின், மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், வக்கீல் அணி அமைப்பாளர் செல்வக்குமார், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், ஓன்றிய செயலாளர் சரவணக்குமார், தெற்கு மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆறுமுகம், மாப்பிள்ளை யூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா மற்றும் கபடிகந்தன், கவுதம், செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக கோப்பையும், ரூ.5 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.2 ஆயிரமும், முதல் 10 இடங்களை பிடிப்பவர்களுக்கு தலா ரூ.ஆயிரம் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.

    நெடுந்தூர ஓட்டப் போட்டியையொட்டி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மயிலேறும் பெருமாள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தி ருந்தார். இப்போட்டியில் மாணவ-மாணவிகள் முதல் முதியவர்கள் வரை கலந்து கொண்டனர்.

    • பரிசளிப்பு விழாவிற்கு சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கி பேசினார்.
    • வெற்றி பெற்ற தூத்துக்குடி எம்.எஸ்.எம். அணிக்கு முதல் பரிசாக கலைஞர் கோப்பையும், 50 ஆயிரம் வழங்கினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வடக்கு மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மீளவிட்டான் பெரியசாமி திடலில் நடை பெற்ற கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா விற்கு வடக்கு மாவட்ட தி.மு.க. செய லாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரி மைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கி பேசினார்.

    பரிசுக் கோப்பை

    இதில் மாவட்ட விளை யாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பா ளர்கள் குருராஜ், மாதே ஸ்வரன், கணேசன், லவ ராஜா, டினோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு மேம்பா ட்டு அணி அமை ப்பாளரும், மாநகராட்சி மண்டலத் தலைவருமான வக்கீல் பாலகுருசாமி வரவேற்று பேசினார்.

    பின்னர் வெற்றி பெற்ற தூத்துக்குடி எம்.எஸ்.எம். அணிக்கு முதல் பரிசாக கலைஞர் கோப்பையும், 50 ஆயிரமும், வி.சி.சி. அணிக்கு 2-ம் பரிசாக கலைஞர் கோப்பையும், 30 ஆயிரமும், பொட்டல்காடு யு.எஸ்.சி. அணிக்கு 3-ம் பரிசாக கலைஞர் கோப்பையும், 20 ஆயிரமும், முள்ளக்காடு எம்.கே.சி.சி. அணிக்கு 4-ம் பரிசாக கலைஞர் கோப்பையும், 10 ஆயிரம் ஆகியவற்றை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வழங்கினர்.

    சிறந்த விளையாட்டு வீரர்கள்

    மகளிர் அணியினருக்கும், தகவல் தொழில்நுட்ப அணியினருக்கும், இளைஞர் அணியினருக்கும் நடைபெற்ற சிறப்பு போட்டி யை தொடங்கி வைத்து அதில் வெற்றி பெற்றவ ர்கள், சிறந்த விளை யாட்டு வீரர்கள் அனை வருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

    விழாவில் தி.மு.க மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாநில விளை யாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் நம்பி, மாநகர துணைச் செய லாளர்கள் கீதா முருகேசன், கனக ராஜ், பிரமிளா, மாவட்ட துணைச்செ யலா ளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பி னர்கள் கோட்டு ராஜா, கஸ்தூரிதங்கம், ராஜா, மாநகராட்சி மண்ட லத்தலைவர் கலைச்செல்வி, அரசு வக்கீல் மோகன்தாஸ் சாமுவேல், மாவட்ட பொறி யாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், துணை அமைப்பாளர் சின்ன த்துரை, மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, தொண்டரணி அமை ப்பாளர் ரமேஷ், வக்கீல் அணி அமைப்பாளர் குபேர் இளம்பரிதி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமி நாதன், துணை அமைப்பா ளர்கள் அந்தோணி கண்ணன், அருணாதேவி, நாகராஜன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், துணை அமைப்பாளர் மகிழ்ஜான், இலக்கிய அணி அமை ப்பாளர் ஜீவன் ஜேக்கப், பகுதி செயலாளர்கள் மேகநாதன், ராமகிருஷ்ணன், ரவீந்திரன், மாநகர மகளிர் அணி அமைப்பா ளர் ஜெயக்கனி, இளைஞர் அணி அமை ப்பாளர் அருண்சுந்தர், துணை அமைப்பாளர்கள் ரவி, சங்கரநாராயணன், மாநகர நெசவாளர் அணி அமைப்பாளர் சீதாராமன், துணை அமைப்பாளர் குமரன், தொழிலாளர் அணி துணைத்தலைவர் செந்தில் குமார், கவுன்சி லர்கள் சரவணக்குமார், விஜயகுமார், ஜெயசீலி, நாகேஸ்வரி, அந்தோணி பிரகாஷ்மார்ஷல், வைதேகி, இசக்கியப்பன், கந்தசாமி, சுப்புலட்சுமி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில் குமார், மாவட்ட பிரதிநிதிகள் சக்தி வேல், நாராயணன், மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பா ளர்கள் செல்வகுமார், ராஜா, அன்பழகன், பிரதீப், சில்வெஸ்டர் சாமுவேல், வட்ட செயலாளர்கள் கதிரேசன், பாலகுருசாமி, சதீஷ்குமார், பகுதி பொரு ளாளர் உலகநாதன், பகுதி இளைஞர் அணி அமை ப்பாளர் சூர்யா, மகளிர் அணி ரேவதி, சத்யா, சந்தன மாரி, கன்னிமரியாள், பெல்லா மற்றும் கருணா, மணி, கணேசன், மகே ஸ்வர சிங், பிரபாகர், அல்பட் உள்பட பலர் கலந்து கொ ண்டனர். முடிவில் மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஆரோக்கிய ராபின் நன்றி கூறினார்.

    ×