search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டிகள் - அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
    X

    அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டிகளை அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அருகில் கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் பலர் உள்ளனர்.

    தூத்துக்குடியில் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டிகள் - அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

    • தூத்துக்குடி மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டிகள் தொடக்க விழா மாவட்ட விளையாட்டு அரங்கம் முன்பு நடைபெற்றது.
    • இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக கோப்பையும், ரூ.5 ஆயிரமும், முதல் 10 இடங்களை பிடிப்பவர்களுக்கு தலா ரூ.ஆயிரம் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டிகள் தொடக்க விழா மாவட்ட விளையாட்டு அரங்கம் முன்பு நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்.

    மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட விளை யாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ் வரவேற்று பேசினார். 3 வகையான போட்டியை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடைத்துறை அமைச்ச ருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ டேவிட் செல்வின், மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், வக்கீல் அணி அமைப்பாளர் செல்வக்குமார், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், ஓன்றிய செயலாளர் சரவணக்குமார், தெற்கு மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆறுமுகம், மாப்பிள்ளை யூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா மற்றும் கபடிகந்தன், கவுதம், செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக கோப்பையும், ரூ.5 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.2 ஆயிரமும், முதல் 10 இடங்களை பிடிப்பவர்களுக்கு தலா ரூ.ஆயிரம் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.

    நெடுந்தூர ஓட்டப் போட்டியையொட்டி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மயிலேறும் பெருமாள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தி ருந்தார். இப்போட்டியில் மாணவ-மாணவிகள் முதல் முதியவர்கள் வரை கலந்து கொண்டனர்.

    Next Story
    ×