search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி இளம் ஆராய்ச்சியாளருக்கு அமைச்சர் கீதாஜீவன் பாராட்டு
    X

    தூத்துக்குடி இளம் ஆராய்ச்சியாளருக்கு அமைச்சர் கீதாஜீவன் பாராட்டு

    • செல்வம் தனது துறையில் உலகளாவிய அளவில் 99,567 இடங்களில் 1,053 இடத்தை பிடித்துள்ளார்.
    • இதனையடுத்து செல்வம் எட்டையபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    தூத்துக்குடி:

    அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம், மற்றும் எல்சேவியர் பதிப்பகம் வெளியிட்ட உலகின் தலை சிறந்த 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலில் தொடர்ந்து 3-வது ஆண்டாக, வ.உ.சிதம்பரம் கல்லூரியின் நிலத்தியல் துறையின் உதவி பேராசிரியர் செல்வம் இடம்பெற்றுள்ளார்.

    உலகளாவிய தரவரிசை பட்டியலில் இந்த வருடம் 84,658 இடத்தை பெற்றுள்ளார். கடந்த ஆண்டு 1,23,040 மற்றும் 2021-ல் 1,78,847 தரவரிசை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    36 வயதான இளம் விஞ்ஞானி செல்வத்தின் ஆய்வு கட்டுரைகள் 2013 முதல் 2022 வரை பூமி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறையில் சுற்றுச்சூழல் அறிவியல், புவி வேதியியல் மற்றும் புவி இயற்பியல் ஆகிய பல்வேறு பிரிவுகளில் செல்வம் வெளியிட்ட 87 ஆய்வுக் கட்டுரைகளை அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகம், மற்றும் எல்சேவியர் பதிப்பகம் எடுத்துக் கொண்டது.

    செல்வம் தனது துறையில் உலகளாவிய அளவில் 99,567 இடங்களில் 1,053 இடத்தை பிடித்துள்ளார். நிலத்தியல் பிரிவில் தமிழ்நாட்டில் இருவர் இடம்பெற்றுள்ளார்கள் அதில் இவர் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    எல்சேவியர் அனைத்து துறைகளிலிருந்தும் மொத்தம் 210,198 விஞ்ஞானிகளைத் தேர்ந்துஎடுத்துள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட விஞ்ஞானிகளில் 4,635 பேர் இந்தியாவைச் சேர்ந்த வர்கள். இந்தப் பட்டியல் ஆராய்ச்சியாளர்களை 22 அறிவியல் துறைகள் மற்றும் 174 துணைத் துறைகளாக வகைப்படுத்தியது என்பது குறிப்பிடதக்கது.

    இதனையடுத்து எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலா ளரும் சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்ச ருமான கீதாஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    அப்போது மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், அரசு வக்கீல் ஆனந்த கபரியேல்ராஜ், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, கவுன்சிலர் சரவணக்குமார், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், பகுதி பொருளாளர் உலகநாதன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மற்றும் கருணா, மணி, உள்பட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×