search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கண் சிகிச்சை முகாம் - அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
    X

    கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கண் சிகிச்சை முகாமை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்த காட்சி.

    கோவில்பட்டியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கண் சிகிச்சை முகாம் - அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்

    • கோவில்பட்டியில் முன்னாள் முதல்- அமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
    • முகாமில் டாக்டர் அனுராதா தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் முன்னாள் முதல்- அமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கண் சிகிச்சை முகாம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட விவசாய தொழி லாளர் அணி, கோவில்பட்டி 14-வது வார்டு தி.மு.க., விருதுநகர் ரோட்டரி சங்கம் மற்றும் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து நடத்தினர்.

    கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி தலைமை தாங்கினார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட விவசாய தொழிலா ளர் அணி அமைப்பாளர் தவமணி முன்னிலை வகித் தார். அமைச்சர் கீதாஜீவன் முகாமை தொடங்கி வைத்தார். டாக்டர். அனுராதா தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு கண் பரிசோதனை செய்யப் பட்டது. இதில் விருதுநகர் ரோட்டரி கிளப் வடிவேல், கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட பஞ்சா யத்து துணைத்தலைவர் சந்திரசேகர், திமுக ஒன்றிய செயலாளர் பீக்கிலிப்பட்டி முருகேசன், மாவட்ட சிறு பான்மையினர் பிரிவு இணை அமைப்பாளர் அமலி. அந்தோணி பிரகாஷ், கவுன்சிலர்கள் ஜாஸ்மின் லூர்துமேரி, முத்து லட்சுமி பூல்பாண்டியன், முத்து பாண்டியன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணியின் துணை அமைப் பாளர் சந்திரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நகர்மன்ற உறுப்பினரும், பொறியாளரு மான தவமணி செய்திருந் தார்.

    Next Story
    ×