search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் பெண்ணுக்கு தையல் எந்திரம்  - அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
    X

    ஒரு பெண்ணுக்கு அமைச்சர் கீதாஜீவன் தையல் எந்திரத்தை வழங்கிய போது எடுத்த படம். 

    தூத்துக்குடியில் பெண்ணுக்கு தையல் எந்திரம் - அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

    • ராஜேஸ்வரி, அமைச்சர் கீதாஜீவனிடம் தையல் எந்திரம் தந்து உதவுமாறு கோரிக்கை மனு அளித் திருந்தார்.
    • கோரிக்கையை ஏற்று அமைச்சர் கீதாஜீவன் கலைஞர் அரங்கில் அந்த பெண்ணுக்கு தையல் எந்திரம் வழங்கினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட் சிக்குட்பட்ட சங்கரப்பேரி பகுதியை சேர்ந்த பொன் ராஜேஸ்வரி, அமைச்சர் கீதாஜீவனிடம் வருகின்ற தீபாவளியை முன்னிட்டும், தன் குடும்பத்தின் வாழ்வா தாரத்திற்காகவும் தையல் எந்திரம் தந்து உதவுமாறு கோரிக்கை மனு அளித் திருந்தார்.

    இதனையடுத்து அவரது கோரிக்கையை உடனடியாக ஏற்ற வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சரு மான கீதாஜீவன் கலைஞர் அரங்கில் அந்த பெண்ணுக்கு தையல் எந்திரம் வழங்கி னார்.

    மாநகர தி.மு.க. செயலா ளர் ஆனந்தசேகரன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், துணை அமைப்பாளர் பிரபு, மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் குபேர் இளம்பரிதி, மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, வட்ட செயலாளர் கதிரேசன், பெருமாள் கோவில் அறங்காவலர்குழு தலைவர் செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    தூத்துக்குடி அண்ணா பஸ் நிலைய ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க நிர்வாகி கள் மற்றும் உறுப்பினர்கள் கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாள ரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவனை மரியாதை நிமித்த மாக சந்தித்ததுடன் சில கோரிக்கைகளையும் முன் வைத்ததையடுத்து, நிறை வேற்றி தருவதாக உறுதி யளித்தார்.

    தூத்துக்குடி- தன சேகரன் நகர் பகுதியைச் சேர்ந்த மக்கள் அப்பகுதியில் சாலை வசதிகள் அமைக்கப் பட்டதற்கு அமைச்சர் கீதாஜீவனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். மாவட்ட பிரதிநிதி செல்வ குமார் உடனிருந்தார்.

    தூத்துக்குடி மாநகராட்சி 53-வது வார்டு பொது மக்கள் அப்பகுதியில் சாலை வசதிகள் அமைக்கப்பட்ட தற்கும் மற்றும் தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் வேகத்தடை அமைத்துக் கொடுத்ததற்கும் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலா ளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். கவுன்சிலர் முத்துவேல் உடனிருந்தார்.

    Next Story
    ×