search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர்களின் எதிர்காலம் கருதி நீட் தேர்வை தொடர்ந்து எதிர்ப்போம் - அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
    X

    நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டபோது எடுத்த படம். அருகில் மேயர் ஜெகன் பெரியசாமி, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., உள்பட பலர் உள்ளனர்.

    மாணவர்களின் எதிர்காலம் கருதி நீட் தேர்வை தொடர்ந்து எதிர்ப்போம் - அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

    • நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெற்ற கையெழுத்து இயக்கம் தொடக்க நிகழ்ச்சி தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கையெழுத்து இயக்க அறப்போர் தமிழகத்தில் இருந்து விரட்டும் வரை தொடர் நிகழ்வாக இருக்கும் என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி மாணவரணி, மருத்துவரணி இணைந்து நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெற்ற கையெழுத்து இயக்கம் தொடக்க நிகழ்ச்சி தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    அமைச்சர் கீதாஜீவன்

    வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைதுறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், மாணவரணி அமைப்பாளர் சீனிவாசன், மருத்துவரணி அமைப்பாளர் சவுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கி ணங்க, தி.மு.க. இளைஞரணி செயலாளரும், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்ச ருமான உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மாணவரணி, மருத்துவரணி இணைந்து நடத்துகின்ற நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கையெழுத்து இயக்க அறப்போர் தமிழகத்தில் இருந்து விரட்டும் வரை தொடர் நிகழ்வாக இருக்கும்.

    மாணவர்களின் எதிர்காலம்

    தேவையில்லாத ஒன்றை நம்மீது திணிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. மாணவர்களின் எதிர்காலம் கருதி இந்த நீட் தேர்வை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    நிகழ்ச்சியில், மேயர் ஜெகன் பெரியசாமி, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., துணை மேயர் ஜெனிட்டா, மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செய லாளர் ராஜ்மோகன் செல்வின், மாநகர துணைச்செயலாளர்கள் கனகராஜ், பிரமிளா, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரி தங்கம், ராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் அன்ன லெட்சுமி, கலைச்செல்வி, கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி,

    ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், சின்னப்பாண்டி யன், ராதாகிருஷ்ணன், காசிவிஸ்வநாதன், மும்மூர்த்தி, செல்வராஜ், சின்னமாரி முத்து, நவநீத கண்ணன், அன்புராஜன், ராமசுப்பு, மாவட்ட அணி அமைப்பாளர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்பழகன், குபேர்இளம்பரிதி, கவிதா தேவி, ரமேஷ், துணை அமைப்பா ளர்கள் பிரதீப், ஜோசப் அமல்ராஜ், ஜுடி, பார்வதி, மகேந்திரன், ராதாகிருஷ்ணன், பாரதி, கோகுல்நாத், பார்வதி, பெனில்டஸ், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், மேகநாதன், ஜெயக்குமார், ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×