search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mallikarjuna Kharge"

    • இந்தியாவின் சாதனைகளை அடுத்த வருடம் இதே இடத்தில் பட்டியலிடுவேன்- மோடி
    • மோடி அவர் வீட்டில்தான் கொடியேற்றுவார்- கார்கே கிண்டல்

    இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினவிழாவையொட்டி பிரதமர் மோடி இன்று காலை ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    அதன்பின் செங்கோட்டையில் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது, ''என்னுடைய 2-வது பிரதமர் பதவி காலத்தில் 10-வது முறையாக உரையாற்றியுள்ளேன். இந்தியா அடைந்துள்ள சாதனைகளை, அடுத்த வருடமும் இதே இடத்தில் மக்களிடம் பட்டியலிடுவேன்'' எனத் தெரிவித்தார்.

    இதன்மூலம் 3-வது முறையாக பிரதமர் ஆவது உறுதி என்பதை சூசகமாக தெரிவித்தார். இந்த நிலையில் இதுகுறித்து பதில் அளித்த காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ''பிரதமர் மோடி மீண்டும் ஒருமுறை அடுத்த வருடம் செங்கோட்டையில் கொடியேற்றுவேன் எனத் தெரிவித்துள்ளார். அவர் அடுத்த வருடம் அவரது வீட்டில் கொடியேற்றுவார்'' எனத் தெரிவித்துள்ளார்.

    மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ''மோடி செங்கோட்டையில் கொடியேற்றுவது கடைசி இதுதான் முறை'' எனக் குறிப்பிட்டிருந்தார்.

    தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ''சுதந்திரம் வாங்கி 75 வருடங்கள் ஆன நிலையில், இந்தியாவில் வளர்ச்சி பாராட்டத்தக்கது. ஆனால், விரும்பிய இலக்கை இன்னும் எட்டவில்லை'' என்றார்.

    26-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து I.N.D.I.A. கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்த கூட்டணி மோடியை தோற்கடிக்க திட்டமிட்டுள்ளது.

    • புதிய செயற்குழுவில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் அதிக பிரதிநிதித்துவம் இருக்கும் என்று தெரிகிறது.
    • சில அதிருப்தியாளர்களை முக்கிய பொறுப்புகளில் இருந்து கழட்டி விட கார்கே திட்டமிட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    கர்நாடக சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அதே உற்சாகத்துடன் 5 மாநில சட்டசபைத் தேர்தலையும் சந்திக்க தயாராகி வருகிறார்கள்.

    கடந்த 3 நாட்களாக, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில பிரதிநிதிகளை அழைத்து ராகுல், கார்கே இருவரும் தீவிர ஆலோசனை நடத்தினார்கள். அதன்படி விரைவில் புதிய அறிவிப்புகளை வெளியிட காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளது.

    இதற்கிடையே காங்கிரஸ் கட்சி நிர்வாகத்தில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கார்கே 8 மாதங்களுக்கு முன்பு தலைவராக பதவி ஏற்றதும் காங்கிரஸ் செயற்குழுவை மாற்றி அமைக்க முடிவு செய்தார். இளைஞர்கள், பெண்களுக்கு செயற்குழுவில் அதிக முக்கியத்துவம் கொடுக்க திட்டமிட்டுள்ளார்.

    அடுத்த வாரம் செயற்குழு மாற்றம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய செயற்குழுவில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் அதிக பிரதிநிதித்துவம் இருக்கும் என்று தெரிகிறது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் சச்சின் பைலட் கடும் அதிருப்தியுடன் இருக்கிறார். எனவே அருக்கு தேசிய அளவில் முக்கிய பதவி வழங்கப்படும் என்று தெரிகிறது. பிரியங்காவுக்கு துணைத் தலைவர் பதவி கொடுக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.

    ஆனால் சில அதிருப்தியாளர்களை முக்கிய பொறுப்புகளில் இருந்து கழட்டி விடவும் கார்கே திட்டமிட்டுள்ளார். அது போல சில மாநில காங்கிரஸ் தலைவர்களும் மாற்றப்பட உள்ளனர். எனவே அடுத்த வாரம் காங்கிரஸ் வட்டாரங்களில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று கூறப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரெயில்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்பு உபகரணங்களை அமைக்க வேண்டும்.
    • ரெயில்வேயில் உள்ள காலி பணியிடங்கள் 9 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பது ஏன்?

    புதுடெல்லி:

    ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    இந்திய வரலாற்றில் மிக மோசமான ரெயில் விபத்தாக பாலசோர் ரெயில் விபத்து உள்ளது. இந்திய ரெயில்வேயில் 4 சதவீத வழித்தடங்களில் மட்டுமே 'கவாச்' பாதுகாப்பு கருவி பொருத்தப்பட்டு இருப்பது ஏன்? ரெயில்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்பு உபகரணங்களை அமைக்க வேண்டும். ரெயில்வேயில் உள்ள காலி பணியிடங்கள் 9 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பது ஏன்?

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மல்லிகார்ஜுன கார்கே கூறும்போது, "ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் ரெயில் விபத்தை சதி எனக்கூறிய பிரதமர் மோடி இப்போது என்ன சொல்லப் போகிறார்" என்று கூறினார்.

    • தேர்தல் பிரச்சாரத்துக்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு குண்டு வைத்து கொல்லப்பட்டார்.
    • ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    டெல்லி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 32வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    முன்னதாக ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் மே 21-ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தில் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூருக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருவதாக தகவல் வெளியான நிலையில் அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தேர்தல் பிரச்சாரத்துக்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு குண்டு வைத்து கொல்லப்பட்டார் என்பது நினைவு கூறத்தக்கது.

    • தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினுடனும் மல்லிகார்ஜூன கார்கே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
    • காங்கிரஸ் தலைவர் கார்கேயிடம் சில திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்வா? சாவா? என்ற மிகப்பெரிய சவாலை உருவாக்கி இருக்கிறது. கடந்த 2 பொதுத் தேர்தல் களில் பா.ஜனதாவிடம் படு தோல்வியை தழுவிய காங்கிரஸ் கட்சி 3-வது முறையாக பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

    கடந்த 2 தேர்தல்களில் ஏற்பட்ட மோசமான தோல்வி ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக தலைவர் பதவியில் இருந்து சோனியா, ராகுல் விலகி நிற்கும் நிலையில், கர்நாடகாவை சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே காங்கிரசுக்கு தலைமை பொறுப்பேற்று அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொண்டுள்ளார்.

    நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டினால் மட்டுமே பா.ஜனதாவை வீழ்த்த முடியும் என்ற நிர்ப்பந்தமான நிலையில் காங்கிரஸ் கட்சி சிக்கியுள்ளது. கார்கே பொறுப்பேற்றதும், இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். ஆனால் மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், சந்திரசேகர ராவ், சந்திரபாபு நாயுடு போன்ற தலைவர்கள் அவருக்கு சாதகமான பதிலை சொல்லவில்லை.

    இதனால் நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஓரணியில் ஒன்று திரளுமா? என்பதில் கேள்வி குறி எழுந்தது. இந்நிலையில் சமீபத்தில் ராகுல் காந்தியிடம் இருந்து எம்.பி. பதவி பறிக்கப்பட்டதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக 19 எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு பாராளுமன்றத்திலும், பாராளுமன்ற வளாகத்திலும் போராட்டங்கள் நடத்தின.

    ராகுல் பதவி பறிப்பு விவகாரத்தில் கைகோர்த்த எதிர்க்கட்சிகளை அப்படியே பாராளுமன்றத் தேர்தல் வரை ஒருங்கிணைத்து கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக உள்ளது. இதற்கான நடவடிக்கைகள் 2 தினங்களுக்கு முன்பு தொடங்கின.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களிடம் பேசத் தொடங்கி உள்ளார். குறிப்பாக மாநிலங்களில் பலத்த செல்வாக்குடன் இருக்கும் கட்சிகளுடன் கார்கே பேசி இப்போதே ஒரு முடிவுக்கு வர திட்டமிட்டுள்ளார். அதன்படி அவர் இந்த வார தொடக்கத்தில் இருந்து பேச்சு வார்த்தையை தொடங்கி உள்ளார்.

    தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினுடனும் மல்லிகார்ஜூன கார்கே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது நாடு முழுவதும் உள்ள எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.

    எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும்போது ஏற்படும் சவால்களை எப்படி எதிர்கொள்வது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கார்கே விவாதித்ததாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி, தெலுங்கானா கட்சிகளை எப்படி பேசி சமாளிப்பது என்றும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

    காங்கிரஸ் தலைவர் கார்கேயிடம் சில திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. எனவே எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் பணியில் காங்கிரசுக்கு மிக முக்கிய பலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்வார் என்று கருதப்படுகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பேசிய பிறகு பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோருடனும் மல்லிகார்ஜூன கார்கே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். விரைவில் நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி மிகப்பெரிய கூட்டம் நடத்த கார்கே ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது.

    • சரத் யாதவின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    • காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    முன்னாள் மத்திய அமைச்சரும், ஐக்கிய ஜனதா தள கட்சியின் முன்னாள் தலைவருமான சரத் யாதவ் காலமானார். சரத் யாதவின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    அந்த டுவிட்டர் பதிவில், " முன்னாள் அமைச்சர் சரத் யாதவின் மறைவு எனக்கு வருத்தமளிக்கிறது. பல தசாப்தங்களாக சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக நாட்டிற்கு சேவை செய்து சமத்துவ அரசியலை வலுப்படுத்தியவர். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    • ஒற்றுமையாக தேர்தலை சந்தித்தால் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி உறுதி.
    • அடுத்த முதலமைச்சர் யார் என்பதை காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யும்.

    அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடகா மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான கலபுரகிக்கு நேற்று வருகை தந்தார். அவருக்கு கர்நாடக காங்கிரஸ் நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கார்கே பேசியதாவது:- 


    இமாசல பிரதேச மாநில தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றுள்ளது. அதுபோல், கர்நாடகத்திலும் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக கர்நாடகத்தை சேர்ந்த நான் இருந்து வருகிறேன். எனக்கு பெருமை சேர்த்து கொடுக்கும் விதமாக கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பல பாஜக தலைவர்கள் தீவிரமாக இருப்பார்கள். அவர்களை போன்று நம்முடைய தலைவர்களும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும். நாம் ஒற்றுமையாக இருந்து உழைத்தாலே கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது உறுதி. நாம் ஒற்றுமையாக இல்லாமல் சட்டசபை தேர்தலை சந்தித்தால், அது மக்களுக்கு செய்யும் துரோகம்.

    எனக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்று யாரும் இல்லை. அடுத்த முதலமைச்சர் யார் என்பதை காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யும். அதுபோல அமைச்சரவையில் யார் இருக்க வேண்டும் என்பதையும் மேலிடம் தீர்மானிக்கும். இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

    ×