நாட்டிற்கு சேவை செய்து சமத்துவ அரசியலை வலுப்படுத்தியவர் சரத் யாதவ்- மல்லிகார்ஜூன கார்கே இரங்கல்

சரத் யாதவின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு சேவை செய்து சமத்துவ அரசியலை வலுப்படுத்தியவர் சரத் யாதவ்- மல்லிகார்ஜூன கார்கே இரங்கல்
Published on

முன்னாள் மத்திய அமைச்சரும், ஐக்கிய ஜனதா தள கட்சியின் முன்னாள் தலைவருமான சரத் யாதவ் காலமானார். சரத் யாதவின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அந்த டுவிட்டர் பதிவில், " முன்னாள் அமைச்சர் சரத் யாதவின் மறைவு எனக்கு வருத்தமளிக்கிறது. பல தசாப்தங்களாக சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக நாட்டிற்கு சேவை செய்து சமத்துவ அரசியலை வலுப்படுத்தியவர். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com