search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lorry"

    • சரக்கு லாரி ஒன்று ஸ்கூட்டர் மீது மோதுவது போல் வந்ததாக கூறப்படுகிறது.
    • அந்த லாரியை தொடர்ந்து வந்த சுமார் 10க்கும் மேற்பட்ட லாரிகளை சிறை பிடித்தனர்.

    பல்லடம்:

    பல்லடம்- செட்டிபாளையம் ரோட்டில் பணிக்கம்பட்டி அருகே உள்ள இலந்த குட்டை என்ற பகுதியில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த சரக்கு லாரி ஒன்று ஸ்கூட்டர் மீது மோதுவது போல் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிலை தடுமாறிய அந்தப் பெண் ரோட்டை விட்டு திடீரென கீழே இறங்கியதால், ஸ்கூட்டர் சரிந்ததாக கூறப்படுகிறது.

    விபத்தை ஏற்படுத்தி விட்டு அந்த லாரி நிற்காமல் சென்றதால், அதே பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் சென்று அந்த லாரியை சிறை பிடித்தனர். மேலும் அந்த லாரியை தொடர்ந்து வந்த சுமார் 10க்கும் மேற்பட்ட லாரிகளை சிறை பிடித்தனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதித்தது. தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    லாரி டிரைவர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து சிறைபிடிப்பு போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • பெரம்பலூர் மாவட்டம் பேரளியில் கட்டுப்பாட்டை இழந்த காய்கறி லோடு லாரி வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது
    • அதிர்ஷ்டவசமாக ரியல் எஸ்டேட் அதிபர் குடும்பத்தினர் உயிர்தப்பினர்

    குன்னம்,

    பெரம்பலூர் - அரியலூர் சாலையில் உள்ள பேரளி கிராமத்தில், ரியல் எஸ்டேட், தனியார் பேருந்து அதிபர் மனோகரன் என்பரின், சகோதரி வசந்தா என்பவரின் வீடு உள்ளது. வசந்தாவின் கணவர் சிதம்பரம் இறந்து விட்ட நிலையில் தனது குடும்பத்தினருடன் அவர் வசித்து வந்தார். வழக்கம்போல இவர்கள் இரவு நேரத்தில் உணவு உண்டபின்னர் தூங்கி உள்ளனர். அதிகாலை 4 மணி அளவில் இடி விழுந்தது போல சத்தத்துடன் வீடு அதிர்ந்துள்ளது. அலறி அடித்து எழுந்த வந்து பார்த்தபோது காய்கறி ஏற்றிய லோடு லாரி ஒன்று அவர்களது காம்பவுண்ட் சுவரை உடைத்து, ஆஸ்பெஸ்டாஸ் கூரையையும் உடைத்துக்கொண்டு உள்ளே நின்றதை பார்த்து அதிர்ந்துள்ளனர். இது குறித்து மருவத்தூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அரியலூரில் இருந்து காய்கறி ஏற்றிக்கொண்டு பெரம்பலூர் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து வீட்டிற்குள் புகுந்தது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சேலம் அருகே உள்ள ஆட்டையாம்பட்டி அடுத்த சென்னகிரி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் நவீன் குமார் (23), லாரி டிரைவர்.
    • லாரி எதிர்பாராத விதமாக நவீன் குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது இதில் படுகாயம் அடைந்த நவீன் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    சேலம் அருகே உள்ள ஆட்டையாம்பட்டி அடுத்த சென்னகிரி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் நவீன் குமார் (23), லாரி டிரைவர். இவர் நேற்று இரவு ஒரு மோட்டார் சைக்கிளில் கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வேம்படிதாளம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி எதிர்பாராத விதமாக நவீன் குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது இதில் படுகாயம் அடைந்த நவீன் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    • லாரி டயர் மற்றும் டீசல் டேங் வெடித்து சிதறியது.
    • அதிஷ்டவசமாக லாரி டிரைவர் உயிர் தப்பினார்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா உமையா ள்புரம் கிராமத்தில் உள்ள விவசாயி களிடமிருந்து 60 கட்டு வைக்கோல் போரை வாங்கிகொண்டு மினி லாரியில் ஏற்றி கொண்டு லால்குடி புறப்பட்டு சென்றனர்.

    இந்நிலையில் உமையாள்புரம் மெயின்ரோ ட்டில்ல வரும்பொழுது மின் வயரில் லாரி உரசியதாக கூறப்படுகிறது.

    இதில் லாரியில் இருந்த வைக்கோல் போர் தீ பிடித்து எரிந்தது. மேலும் லாரி டயர் மற்றும் டீசல் டேங் வெடித்து சிதறியது.

    இதில் அதிஷ்டவசமாக லாரி டிரைவர் உயிர் தப்பினார்.

    இது குறித்து லாரியின் உரிமையாளர் லால்குடி சாமிநாதன் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வம் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் இருக்க தீயை அணைத்தனர்.

    இந்த விபத்தில் ரூ. 4 லட்சம் சேதம் ஏற்பட்டது.

    இது குறித்து கபிஸ்தலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து சாலை விரிவாக்க பணிகள் மேற்கொண்டு வருகிறது.
    • சவுடு மண் ஏற்றி வரும் லாரிகளை வழிமறைத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சீர்காழி:

    விழுப்புரம்- நாகை நான்கு வழி சாலை விரிவாக்க பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது இந்த விரிவாகப் பணிக்காக விவசாய நிலங்கள் மற்றும் மனை பிரிவு, வீடுகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்தி விரிவாக்க பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    சீர்காழி தாலுகாவை பொறுத்தவரை சட்டநாதபுரம், செம்ப தனிருப்பு, காரைமேடு, காத்திருப்பு, அரசூர், சோதியக்குடி, எருக்கூர், தாடாளன் கோவில், கோபாலசமுத்திரம் உள்ளிட்ட 9 ஊராட்சிகளில் 5000 க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்தி கடந்த 2014 ம் ஆண்டில் இருந்து சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில் கடந்த 2017 -ம் ஆண்டு ஒரு சில விவசாயிகளிடம் முன் பணத்தை மட்டும் தேசிய நெடுஞ்சாலைத்துறை கொடுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஏற்கனவே கையகப்படுத்திய நிலங்கள் மட்டுமில்லாமல் கூடுதல் நிலத்தையும் நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்தி சாலை அமைக்கும் பணியில் தற்பொழுது ஈடுபட்டு வருகிறது.

    இந்நிலையில் கடந்த 6 வருடங்களாக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு பணம் கொடுக்காததால் கவலை அடைந்த விவசாயிகள் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பலமுறை மனுக்களும் அளித்துள்ளனர்.

    அவ்வாறு கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது எந்த வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் 20க்கும் மேற்பட்டோர் சீர்காழி புறவழிச் சாலையில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெறும் இடத்திற்ககு சென்று சாலை விரிவாக்க பணிக்காக சவுடு மண் ஏற்றி வரும் லாரிகளை வழிமறைத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

    விவசாயின் முக்கிய கோரிக்கையாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அரசின் சட்ட திட்டங்களை பின்பற்றாமல் வினை நிர்ணயம் செய்துள்ளதாகவும் இன்றைய சந்தை விலைக்கு நிர்ணயம் செய்து தொகை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அவிநாசி, திருப்பூா் சாலை வழியாக கேரளம் வழியாக லாரிகளில் எருமை மாடுகளை ஏற்றி செல்வது வழக்கம்.
    • பொக்லைன் உதவியுடன் அவிநாசி கால்நடை மருத்துவமனைக்கு எருமை மாடு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    அவிநாசி,ஜூலை.26-

    அவிநாசி, திருப்பூா் சாலை வழியாக கேரளம் வழியாக லாரிகளில் எருமை மாடுகளை ஏற்றி செல்வது வழக்கம்.

    லாரியில் சென்ற எருமை மாடு கட்டப்பட்ட கயிறு துண்டாகி விட்டது. இதன் காரணமாக எருமை மாடு தடுமாறு ஓடும் லாரியிலிருந்து கீேழ விழுந்தது. மிகவும் வேகமாக சென்ற லாரியிலிருந்து கீழே விழந்த சமயம் பின்னால் லாரியை தொடர்ந்து வந்த வாகனங்கள் மோதியதில் எருமை மாடு படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

    இதையறிந்த சமூக ஆா்வலா்கள், அவிநாசி பேரூராட்சி நிா்வாகத்தினா் உள்ளிட்டோா் கால்நடை மருத்துவரை சம்பவ இடத்துக்கு வரவழைத்து முதலுதவி சிகிச்சை அளித்தனா்.

    இதையடுத்து பொக்லைன் உதவியுடன் அவிநாசி கால்நடை மருத்துவமனைக்கு எருமை மாடு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் எருமை உயிரிழந்தது. 

    லாரியின் வலது பக்க பலகைகள் உடைந்ததால் மரங்கள் கீழே விழுந்தன.

    கோத்தகிரி,

    கோத்தகிரியை அடுத்த ஒன்னட்டி பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி மரம் ஏற்றிய லாரி ஒன்று புறப்பட்டது. லாரி ஒன்னட்டியை அடுத்த எஸ்.கைகாட்டி 2-வது வளைவில் திரும்ப முயன்ற போது அதிக பாரத்தின் காரணமாக லாரியின் வலது பக்க பலகைகள் உடைந்தன. இதனால் லாரியில் இருந்த மரங்கள் அனைத்தும் சாலையில் சரிந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த பகுதியில் வாகனங்கள் எதுவும் வராததால் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை. சாலையில் மரங்கள் சரிந்து விழுந்ததால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • தண்ணீர் லாரி மோதி தாயுடன் ஸ்கூட்டரில் சென்ற சிறுமி பலியானார்.
    • லாரி ஸ்கூட்டர் மீது மோதியது.

    மதுரை

    மதுரை அருகே மங்களக் குடி விலக்கு பகத்சிங் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது41). இவரது மனைவியும், 9 வயது மகள் அஜிதாவும் ஸ்கூட்டரில் சென்றார். பைக் மூன்றுமாவடி பகுதி யில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த தண்ணீர் லாரி ஸ்கூட்டர் மீது மோதியது.

    இதில் தாயும் குழந்தையும் கீழே விழுந்தனர். இதனால் படுகாயம் அடைந்த அஜிதா சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதுகுறித்து போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசில் காளிதாஸ் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்ணீர் லாரி டிரைவர் தனஇந்திரன் (51) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மன்னார்குடியில் இருந்து கம்பங்குடி ஆர்ச் நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
    • லாரியின் மீது எதிர்பாரா தவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே கம்பங்குடி ஆர்ச் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் ( வயது 30 ) கொத்தனார்.

    இவருக்கு திருமணமாகி சுதா ரஞ்சனி என்ற மனைவியும் மகதிஷ் ( 7) என்ற மகனும் , இரண்டு மாத பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் கார்த்திகேயன் நேற்று இரவு வேலை முடித்துவிட்டு மன்னார்குடியில் இருந்து கம்பங்குடி ஆர்ச் நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது திருத்துறைப்பூண்டி சாலையில் செம்மொழி நகர் எனும் இடத்தில் சென்ற போது முன்னாள் சென்ற லாரியின் மீது எதிர்பாரா தவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்தி கேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் கோட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்ஸ்பெ க்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் இள ங்கோவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலும் லாரி டிரைவர் திருப்பூர் மாவட்டம் கணப திபாளையம் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜை (33) கைது செய்தனர்.

    • டிரைவர் லாரியை நிறுத்தாமல் ஓட்டிச்சென்றார்.
    • சோதனை செய்தபோது 200 மூட்டைகளில் 9 டன் ரேசன் அரிசி கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக வேலூர் நோக்கி சென்ற லாரியை காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் ரம்யா தலைமையில், குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா, வட்ட வழங்கல் தாசில்தார் இந்துமதி மற்றும் அதிகாரிகள் நிறுத்த முயன்றனர்.

    ஆனால் டிரைவர் லாரியை நிறுத்தாமல் ஓட்டிச்சென்றார். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் லாரியை காரில் விரட்டிச்சென்று ராணிப்பேட்டை மாவட்டம், பெரும்புலிப்பாக்கம் பகுதியில் மடக்கி பிடித்தனர். அதில் சோதனை செய்தபோது 200 மூட்டைகளில் 9 டன் ரேசன் அரிசி கடத்தி வந்திருப்பது தெரிந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    • தஞ்சை -திருச்சி தேசிய நெடுஞ்சாலை செங்கிப்பட்டியில் லாரி வந்து கொண்டிருந்தது.
    • பேரிகார்டு மீது மோதாமல் இருப்பதற்காக லாரியை டிரைவர் திருப்பியுள்ளார்.

    தஞ்சாவூர்:

    கரூரை சேர்ந்தவர் ரத்தினகுமார். இவர் கரூரில் இருந்து நாகைக்கு கட்டிட வேலைக்காக லாரியில் ஜல்லி கற்கள் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்.

    தஞ்சை -திருச்சி தேசிய நெடுஞ்சாலை செங்கிப்பட்டியில் லாரி வந்து கொண்டிருந்தது.

    அப்போது திடீரென லாரி தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    அதில் இருந்த ஜல்லி முழுவதும் சாலையில் கொட்டியது. லாரியை ஒட்டி வந்த டிரைவர் ரத்தினகுமார் காயம் அடைந்தார்.

    உடனடியாக அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே ரத்தினகுமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து செங்கிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர்.

    முதல் கட்ட விசாரணையில் செங்கிப்பட்டி தேசிய நெடுஞ்சாலையின் உயர்மட்ட பாலம் சேதமடைந்துள்ளதால் அப்பகுதியில் ஏற்கனவே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    விபத்துக்குள்ளான லாரி மேம்பாலம் அருகில் வந்த போது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக வைக்கப்பட்டிருந்த பேரிகார்டு மீது மோதாமல் இருப்பதற்காக லாரியை டிரைவர் ரத்தினகுமார் திருப்பிய போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது தெரியவந்தது.

    இருப்பினும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெடுஞ்சாலை மத்தியில் வெள்ளை கோடு போடும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்ததால், ஒரு வழியை அடைத்து அந்த இடத்தில் ஒரு வழிச்சாலையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
    • கோவையில் இருந்து பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்த லாரி முன்னாள் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்தியது.

    பல்லடம்:

    கரூர் அருகே உள்ள பசுபதி பாளையத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் சரண் (வயது 22). இவர் கோவை தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்றவர், நேற்று கரூரில் இருந்து கோவை நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். பல்லடத்தை அடுத்த பெரும்பாலி என்ற இடம் அருகே சென்ற போது, நெடுஞ்சாலை மத்தியில் வெள்ளை கோடு போடும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்ததால், ஒரு வழியை அடைத்து அந்த இடத்தில் ஒரு வழிச்சாலையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

    அந்த வழியாக சென்ற போது, கோவையில் இருந்து பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்த லாரி முன்னாள் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்தியது. அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் சரண் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சரண் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த விபத்து குறித்து சரணின் தந்தை செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    ×