அவிநாசியில் லாரியில் இருந்து கீழே தவறி விழுந்த எருமை உயிரிழப்பு

அவிநாசி, திருப்பூா் சாலை வழியாக கேரளம் வழியாக லாரிகளில் எருமை மாடுகளை ஏற்றி செல்வது வழக்கம். பொக்லைன் உதவியுடன் அவிநாசி கால்நடை மருத்துவமனைக்கு எருமை மாடு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

அவிநாசி,ஜூலை.26-

அவிநாசி, திருப்பூா் சாலை வழியாக கேரளம் வழியாக லாரிகளில் எருமை மாடுகளை ஏற்றி செல்வது வழக்கம்.

லாரியில் சென்ற எருமை மாடு கட்டப்பட்ட கயிறு துண்டாகி விட்டது. இதன் காரணமாக எருமை மாடு தடுமாறு ஓடும் லாரியிலிருந்து கீேழ விழுந்தது. மிகவும் வேகமாக சென்ற லாரியிலிருந்து கீழே விழந்த சமயம் பின்னால் லாரியை தொடர்ந்து வந்த வாகனங்கள் மோதியதில் எருமை மாடு படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

இதையறிந்த சமூக ஆா்வலா்கள், அவிநாசி பேரூராட்சி நிா்வாகத்தினா் உள்ளிட்டோா் கால்நடை மருத்துவரை சம்பவ இடத்துக்கு வரவழைத்து முதலுதவி சிகிச்சை அளித்தனா்.

இதையடுத்து பொக்லைன் உதவியுடன் அவிநாசி கால்நடை மருத்துவமனைக்கு எருமை மாடு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் எருமை உயிரிழந்தது. 

X

Maalai Malar
www.maalaimalar.com