வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்தது

லாரி டயர் மற்றும் டீசல் டேங் வெடித்து சிதறியது.அதிஷ்டவசமாக லாரி டிரைவர் உயிர் தப்பினார்.
தீப்பிடித்து எரியும் லாரி.
தீப்பிடித்து எரியும் லாரி.
Published on

பாபநாசம்:

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா உமையா ள்புரம் கிராமத்தில் உள்ள விவசாயி களிடமிருந்து 60 கட்டு வைக்கோல் போரை வாங்கிகொண்டு மினி லாரியில் ஏற்றி கொண்டு லால்குடி புறப்பட்டு சென்றனர்.

இந்நிலையில் உமையாள்புரம் மெயின்ரோ ட்டில்ல வரும்பொழுது மின் வயரில் லாரி உரசியதாக கூறப்படுகிறது.

இதில் லாரியில் இருந்த வைக்கோல் போர் தீ பிடித்து எரிந்தது. மேலும் லாரி டயர் மற்றும் டீசல் டேங் வெடித்து சிதறியது.

இதில் அதிஷ்டவசமாக லாரி டிரைவர் உயிர் தப்பினார்.

இது குறித்து லாரியின் உரிமையாளர் லால்குடி சாமிநாதன் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வம் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் இருக்க தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் ரூ. 4 லட்சம் சேதம் ஏற்பட்டது.

இது குறித்து கபிஸ்தலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com