search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kuldeep Yadav"

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பீல்டர்களை மாற்ற சொன்ன குல்தீப் யாதவுக்கு டோனி எச்சரிக்கை விடுத்துள்ளார். #MSDhoni #KuldeepYadav #INDvAFG
    குல்தீப் யாதவின் பந்துவீச்சு நேற்று சிறப்பாக இருந்தது. அவரது பந்து வீச்சுக்கு ஏற்றார் போல் டோனி பீல்டர்களையும் நிற்க வைத்தார்.

    ஆனாலும் குல்தீப் மீண்டும் மீண்டும் பீல்டர்களை மாற்ற சொல்லிக் கொண்டே இருந்தார். இதனால் டோனி சற்று கடுப்பாகி அவரை எச்சரித்தார்.



    “பவுலிங் போடப்பா. இல்லையென்றால் பவுலரை மாற்றி விடுவேன்” என்றார். டோனி இந்தியில் கூறியது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியது. இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இதற்கு முன்பு இதே மாதிரி ஒருமுறை குல்தீப் யாதவை டோனி எச்சரித்து இருந்தார். #MSDhoni #KuldeepYadav #INDvAFG
    இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்டிற்கான இந்திய அணியில் இருந்து முரளி விஜய் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்டில் இந்தியா தோல்வியை சந்தித்தது. குறிப்பாக லார்ட்ஸ் டெஸ்டில் படுதோல்வியடைந்தது. இதனால் வீரர்கள் மீது கடும் விமர்சனம் எழும்பியது.


    பிரித்வி ஷா

    குறிப்பாக பேட்ஸ்மேன்கள் மீது முன்னாள் வீரர்கள் சாடினார்கள். இதனால் கடைசி இரண்டு டெஸ்டிற்கான இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று முடிந்த டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டாப் 5 பேட்ஸ்மேன்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.


    ஹனுமா விஹாரி

    இந்நிலையில் இன்று கடைசி இரண்டு டெஸ்டிற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் தொடக்க வீரர் முரளி விஜய், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பதிலாக இளம் வீரர்களான பிரித்வி ஷா மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியாவிற்கு எதிராக இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு தேர்வு செய்துள்ளது. புஜாரா, குல்தீப் யாதவ் இடம் பிடித்துள்ளனர். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    2-வது டெஸ்ட் லார்ட்ஸில் நேற்று தொடங்குவதாக இருந்தது. முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் டாஸ் கூட சுண்டப்படாமல் முதல்நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

    2-வது நாள் இன்று உள்ளூர் நேரப்படி சரியான 11 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.



    இந்திய அணியில் ஷிகர் தவான், உமேஷ் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு புஜாரா, குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து அணியில் போப் அறிமுகமாகியுள்ளார். பென் ஸ்டோக்ஸிற்குப் பதிலாக கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
    வெளிநாட்டு தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் குல்தீப் யாதவ் இடம் பிடித்திருப்பது ரிஸ்ட் ஸ்பின்னர்களுக்கு சிறப்பான விஷயம் என சாஹல் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்களாக அஸ்வினும், ஜடேஜாவும் இருந்தார்கள். மூன்று வகை கிரிக்கெட்டிலும் இருவரும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப்பின் இந்திய ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் ரிஸ்ட் ஸ்பின்னர்களான குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்த்ர சாஹல் இடம்பிடித்தார்கள்.

    இருவரும் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்த இந்தியா அஸ்வின் மற்றும் ஜடேஜா குறித்து யோசிக்கவில்லை. இந்நிலையில் வெளிநாட்டிற்கான இந்திய டெஸ்ட் அணியில் குல்தீப் யாதவ் இடம் பிடித்திருப்பது ரிஸ்ட் பின்னர்களுக்கு சிறப்பாக விஷயம என்று யுஸ்வேந்த்ர சாஹல் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து சாஹல் கூறுகையில் ‘‘குல்தீப் யாதவ் டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க தகுதியானவர். வாய்ப்பு கிடைத்தபோது அதில் சிறப்பாக பந்து வீசியுள்ளார். பிளாட் பிட்ச்-யில் கூட ரிஸ்ட் ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்பட முடியும். வெளிநாட்டு தொடரில் லெக் ஸ்பின்னர்கள் இடம்பிடித்திருப்பது சிறப்பான விஷயம். இது உலகளவில் பிரபலமாகி வருகிறது’’ என்றார்.
    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் குல்தீப் யாதவ் முக்கிய பங்கு வகிப்பார் என்று ரஹானே நம்பிக்கை தெரிவித்துள்ளார். #Rahane #KuldeepYadav
    பர்மிங்காம்:

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நாளை தொடங்கும் நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே நேற்று அளித்த பேட்டியில், ‘இங்கிலாந்துக்கு எதிரான சவாலுக்கு இந்திய அணி நன்றாக தயாராகி இருக்கிறது. போட்டி முடிவு குறித்து அதிகம் கவலைப்பட்டு நெருக்கடிக்கு ஆளாவதை விடுத்து சிறப்பான கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் இந்திய அணி அதிகம் கவனம் செலுத்தும். எங்கள் அணியில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் முக்கிய பங்கு வகிப்பார். அவர் இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி தொடரில் சிறப்பாக பந்து வீசினார். அதற்காக அஸ்வின், ரவீந்திர ஜடேஜாவை நாங்கள் மறக்கவில்லை. அவர்கள் எங்கள் அணிக்காக கடந்த காலங்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இங்குள்ள சூழ்நிலைக்கு தகுந்தபடி நம்மை விரைவாக மாற்றி கொள்ள வேண்டியது முக்கியமானதாகும்’ என்று தெரிவித்தார்.

    இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் அலஸ்டயர் குக் அளித்த ஒரு பேட்டியில், ‘கடந்த 18 மாதங்களில் அடில் ரஷித் நல்ல முதிர்ச்சி கண்டுள்ளார். அவர் நல்ல நிலையில் உள்ளார். அவர் இந்தியாவுக்கு எதிரான தொடரில் நெருக்கடியை சமாளித்து சிறப்பாக பந்து வீசுவார். அவர் தனது தேர்வு குறித்த விமர்சனத்தை கண்டு கொள்ளாமல் நேர்மறையான விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்’ என்று கூறினார். #Rahane #KuldeepYadav
    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் குல்தீப் யாதவுக்கு பதிலாக அஸ்வினை பயன்படுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹஸ்சி தெரிவித்துள்ளார். #ENGvIND #Ashwin #MikeHussey
    சென்னை:

    இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இங்கிலாந்துக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய குல்திப் யாதவுக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாகவே இங்கிலாந்து ஆடுகளங்கள் இருக்கும். இதனால் ஆடும் லெவனில் ஒரு சுழற்பந்து வீச்சாளர் மட்டுமே இடம் பெறுவார் என்று தெரிகிறது.

    இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் அஸ்வினை பயன்படுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹஸ்சி தெரிவித்துள்ளார்.


    அணியில் தனது இடத்தை தக்க வைக்க அஸ்வினுக்கு தகுதி இருக்கிறது. அவர் புத்திசாலித்தனமாக டெஸ்ட் பவுலர்.

    ஆஸ்திரேலிய ஆப்-ஸ்பின்னர் நாதன் லயன் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடது கை பேட்ஸ்மேனும் சிறப்பாக பந்து வீசினர். இதனால் அஸ்வின் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக முக்கிய பங்கு வகிப்பார். அவரை பயன்படுத்த வேண்டும்.

    குல்தீப் யாதவ் இளம் வீரர் அவரது வழியில் அவரை கற்றுக்கொள்ள விட வேண்டும். அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் தனது பணியை சிறப்பாக செய்வார் என்று உறுதியாக கூறுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #ENGvIND #Ashwin #MikeHussey
    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் குல்தீப் யாதவின் சுழல் பந்துவீச்சு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். #SachinTendulkar #ENGvIND #KuldeepYadav

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்குகிறது. இங்கிலாந்து சூழ்நிலை வேகப்பந்து வீச்சுக்கு, முக்கியமாக ஸ்விங் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் புவனேஸ்வர் குமார் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், இங்கிலாந்துக்கு ஏதிரான 3-வது ஒருநாள் போட்டியின்போது அவரது முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் முதல் மூன்று போட்டிக்கான இந்திய அணியில் அவரது பெயர் இடம்பெறவில்லை. 

    இந்நிலையில், இது குறித்து இந்திய முன்னாள் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘ஒரு நாள் கிரிக்கெட்டில் குல்தீப் யாதவின் சுழற்பந்து வீச்சை இங்கிலாந்தின் ஜோ ரூட் திறம்பட கையாண்டார். அவரது மணிக்கட்டு சுழற்சியை துல்லியமாக கணித்து அதற்கு ஏற்ப விளையாடினார். அவரை போல் மற்ற இங்கிலாந்து பேட்ஸ்மேன்களால் குல்தீப்பின் சுழலை சமாளிக்க முடியும் என்று நினைக்கவில்லை. 



    பெரும்பாலான வீரர்கள் நிச்சயம் தடுமாறுவார்கள். ஆடுகளம் வெயிலால் நன்கு காயும் போது குல்தீப் யாதவால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். ஆடுகளம் பேட்டிங்குக்கு ஏதுவாக உலர்ந்து காணப்பட்டால் இந்தியா வெற்றி பெற நல்ல வாய்ப்பு உள்ளது. 

    ஆனால், ஆடுகளத்தில் நிறைய புற்கள் இருந்தால் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் அச்சுறுத்தலாக இருப்பார்கள். இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார், பந்தை நன்கு ஸ்விங் செய்யக்கூடியவர். அவர் காயத்தால் அவதிப்படுவது இந்தியாவுக்கு உண்மையிலேயே மிகப்பெரிய பின்னடைவாகும்’ என்றார். 
    இங்கிலாந்துக்கு எதிரான முதல் மூன்று போட்டிக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளார். #ENGvIND @RishabPant777
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்றோடு முடிவடைந்தது. டி20 தொடரை இந்தியாவும், ஒருநாள் கிரிக்கெட் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர்  ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் முதல் மூன்று டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதிரடி பேட்ஸ்மேன் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் ஆப்கானிஸ்தான் டெஸ்டின்போது யோ-யோ டெஸ்டில் தேர்ச்சியடையாத  முகமது ஷமி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.



    சகா காயத்தில் இருந்து மீளாததால் தினேஷ் கார்த்திக் இடம்பிடித்துள்ளார். அதேபோல் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இடம் பிடித்துள்ளார்.

    18 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. விராட் கோலி (கேப்டன்), 2. ரகானே (துணைக் கேப்டன்), 3. தவான், 4. கேஎல் ராகுல், 5. புஜாரா, 6. முரளி விஜய், 7. கருண் நாயர், 8. தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), 9. ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), 10. அஸ்வின், 11. ஜடேஜா, 12. குல்தீப் யாதவ. 13. ஹர்திக் பாண்டியா. 14. மொகமது ஷமி, 15. இசாந்த் சர்மா, 16. உமேஷ் யாதவ், 17. பும்ரா, 18. சர்துல் தாகூர்.
    ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் நீடிப்பதைவிட, இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்வதே முக்கியமானது என மோர்கன் தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்றது. இதில் இந்தியா வெற்றி பெற்றது. 2-வது போட்டி லண்டன் லார்ட்ஸில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது.

    இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி நாளை லீட்ஸில் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இங்கிலாந்து தொடரை 1-2 என இழந்தால் கூட மாற்றம் ஏதும் வராது.

    இருந்தாலும் தரவரிசையை விட இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றுவதே முக்கியமானது என்று இங்கிலாந்து கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மோர்கன் கூறுகையில் ‘‘இந்தியா மிகவும் வலுவான அணி. முதல் போட்டியில் அவர்களது ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. இதனால் தொடரில் அவர்களை வீழ்த்தினால் குறிப்பிடத்தகுந்ததாக இருக்கும். குறிப்பாக நம்பிக்கை அதிகரிக்க முக்கியமானதாக இருக்கும்.



    2-வது போட்டியில் பெற்ற வெற்றியை எல்லா போட்டிக்கும் எடுத்துச் சென்றால் சிறந்ததாக இருக்கும். அதேபோல் ஆட்டத்தை வெளிப்படுத்துவது மிகமிக முக்கியமானது.

    நாளை நடக்கும் போட்டியில் குலதீப் யாதவ் சிறப்பாக பந்து வீசலாம். அதேபோல் உமேஷ் யாதவும் சிறப்பாக பந்து வீசலாம். இங்கிலாந்து வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் நீடிப்பதை விட இந்தியாவிற்கு எதிரான தொடரை கைப்பற்றுவதே சிறந்தது’’ என்றார்.
    லார்ட்ஸில் நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 323 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து. #ENGvIND #JoeRoot
    இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் போட்டியில் விளையாடியதுபோல் இந்த போட்டியில் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.

    முதல் 10 ஓவரில் 69 ரன்கள் சேர்த்திருந்தது. 11-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஜேசன் ராய் உமேஷ் யாதவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 42 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 40 ரன்கள் சேர்த்தார். அடுத்து பேர்ஸ்டோவ் உடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். ஜோ ரூட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் விளையாடிய பேர்ஸ்டோவ் 31 பந்தில் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். தொடக்க விக்கெட்டுக்களை வீழ்த்தி இங்கிலாந்தின் ரன்வேட்டைக்கு தடைபோட்டார் குல்தீப் யாதவ்.

    3-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் மோர்கன் ஜோடி சேர்ந்தார். ரூட் நிதானமாக விளையாட மோர்கன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். என்றாலும், 51 பந்தில் 53 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்து அணி 30.3 ஓவரில் 189 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் வந்த பென் ஸ்டோக்ஸ் (5), ஜோஸ் பட்லர் (4), மொயீன் அலி (13) ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.

    7-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் டேவிட் வில்லே ஜோடி சேர்ந்தார். அப்போது இங்கிலாந்து 41.4 ஓவரில் 239 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 96 பந்தில் 82 ரன்கள் எடுத்திருந்தார்.


    31 பந்தில் 51 ரன்கள் சேர்த்த டேவிட் வில்லே

    டேவிட் வில்லே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 46-வது ஓவரை சித்தார்த் கவுல் வீசினார். இந்த ஓவரில் டேவிட் வில்லே இரண்டு பவுண்டரியுடன் ஒரு சிக்ஸ் விளாசினார். 47-வது ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்தார். பாண்டியா வீசிய 48-வது ஓவரின் 4-வது பந்தில் ஒரு ரன் அடித்து லார்ட்ஸ் மைதானத்தில் முதல் சதத்தை பதிவு செய்தார். ஜோ ரூட். 109 பந்தில் சதம் அடித்த ஜோ ரூட்டிற்கு இது சர்வதேச அளவில் 12-வது சதமாகும்.

    டேவிட் வில்லேயின் அதிரடியால் 48-வது ஓவரை 300 ரன்னைத் தாண்டியது. டேவிட் வில்லே கடைசி ஓவரின் 5-வது பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து 30 பந்தில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த டேவிட் வில்லே அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் குவித்தது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 323 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. ஜோ ரூட் 116 பந்தில் 8 பவுண்டரி, 1 சிக்சருடன் 113 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா, குல்தீப் யாதவ் விளையாட வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். #EGNvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான டி20 கிரிக்டெக் தொடர் முடிவடைந்து தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இது முடிந்த பின்னர் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.

    டி20 தொடரின் கடைசி போட்டியில் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அதேபோல் குல்தீப் யாதவ் முதல் போட்டி ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.



    நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா அசத்தல் சதம் அடித்தார். குல்தீப் யாதவ் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார்.

    இருவரும் நல்ல பார்மில் உள்ளதால் இருவரையும் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சேர்த்து, ஆடும் லெவனில் விளையாட வைக்க வேண்டும் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். #ENGvIND #KuldeepYadav #SunilGavaskar #RohitSharma
    இங்கிலாந்து எதிரான நேற்றைய ஆட்டத்தில் குல்தீப் யாதவின் பந்துவீச்சு அபாரமாக இருந்து என இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். #ENGvIND #INDvENG #ViratKohli
    நாட்டிங்காம்:

    இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகள் மோதும் 3 ஆட்டம் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் முதல் ஆட்டம் நேற்று நாட்டிங்காமில் நடந்தது.

    முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 49.5 ஓவரில் 268 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. பென் ஸ்டோக்ஸ் (53) ஜோஸ் பட்லர் (50) அரை சதம் அடித்தனர். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 25 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர் ஷிகர் தவான் 40 ரன்னில் அவுட் ஆனார். அதன் பின் ரோகித்சர்மா-கேப்டன் விராட் கோலி ஜோடி சிறப்பாக விளையாடியது. ரோகித்சர்மா சதம் அடித்தார். விராட் கோலி 75 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்தியா 40.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 269 ரன் எடுக்க 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித்சர்மா 137 ரன்னுடனும், லோகேஷ் ராகுல் 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். வெற்றி குறித்து விராட் கோலி கூறியதாவது:-

    இந்த ஆடுகளம் ரன் குவிக்க உகந்தது என்பதை அறிவோம். ஆனால் நடு ஓவர்களில் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் பந்துவீச்சு தாக்கம் திருப்புமுனையாக இருந்தது. முதல் 10 ஓவருக்கு (வேகப்பந்து வீச்சு) பிறகு அவர்கள் சுழற்பந்து வீச்சில் திணறுவார்கள் என்பதை அறிவோம். குல்தீப்யாதவ் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. இதுவரை நான் ஒரு நாள் போட்டியில் இதுபோன்ற சிறந்த பந்து வீச்சை பார்த்ததில்லை என நினைக்கிறேன். அவர் தன்னம்பிகையுடன் இருக்க விரும்புகிறோம். ஏனென்றால் அவர் ஒரு நாள் போட்டியில் மேட்ச் வின்னராக இருக்கிறார். நீங்கள் விக்கெட் எடுக்க வில்லை என்றால் (குல்தீப் யாதவின் டெஸ்ட் வாய்ப்பு) அது மிகவும் கடினமாக இருக்கும். சில நாட்களில் டெஸ்ட் அணி தேர்வு செய்ய இருக்கிறோம்.அதில் சில ஆச்சரியங்கள் இருக்கலாம். இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறுவதை பார்த்தால் குல்தீப் யாதவை டெஸ்ட் அணியில் சேர்க்க வேண்டும் என்று எண்ண தோன்றுகிறது.

    அங்குள்ள வானிலை அற்புதமாக இருக்கிறது. வெளிநாட்டில் இருப்பது போன்ற உணர்வு இல்லை. ஆனால் எங்கள் முன்பு கடினமாக கிரிக்கெட் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #ENGvIND #INDvENG #ViratKohli
    ×