search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Murali Vijay"

    • பிசிசிஐ, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், ரசிகர்களுக்கு முரளி விஜய் நன்றி தெரிவித்தார்.
    • கடைசியாக 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார்.

    கிரிக்கெட் விளையாட்டில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி விளையாடுபவர் இந்திய வீரர் முரளி விஜய். இவர் இந்திய அணிக்காக 61 டெஸ்ட் போட்டிகள், 17 ஒருநாள் போட்டிகள், 9 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். 38 வயதான முரளி விஜய், கடைசியாக 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார்.

    அதன்பின்னர் ரஞ்சிக்கோப்பையில் கவனம் செலுத்திய அவர் 2019-ம் ஆண்டு முதல் அதற்கும் முடிவு கட்டினார். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக முரளி விஜய் அறிவித்தார். மேலும் பிசிசிஐ மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

    • 4 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை ஓபன் கோல்ப் பந்தயம் இன்று தொடங்குகிறது.
    • கிரிக்கெட் வீரர்கள் முரளிவிஜய், எஸ்.அணிருதா அமெச்சூர் வீரர்களாக கலந்து கொள்கிறார்கள்.

    சென்னை:

    4 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை ஓபன் கோல்ப் பந்தயம் இன்று தொடங்குகிறது. 26-ந்தேதி வரை 4 நாட்கள் இந்த போட்டி நடக்கிறது. இதில் 3 அமெச்சூர் வீரர்கள் உள்பட மொத்தம் 123 பேர் கலந்து கொள்கிறார்கள். கிரிக்கெட் வீரர்கள் முரளிவிஜய், எஸ்.அணிருதா அமெச்சூர் வீரர்களாக கலந்து கொள்கிறார்கள்.

    கரண்தீப் கோச்சார், அமன்ராஜ் உள்ளிட்ட தொழில் ரீதியான வீரர்கள் 123 பேர் பங்கேற்கிறார்கள். இந்தப் போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.4 லட்சம் ஆகும். கிண்டியில் உள்ள கோல்ப் மைானத்தில் போட்டி நடக்கிறது.

    போட்டியில் பங்கேற்பதற்கு கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என பிசிசிஐ கூறியிருந்தது

    சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் தமிழக அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஆனால் இந்த அணியில் நட்சத்திர வீரர் முரளி விஜய் இதுவரை இடம்பெறவில்லை. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

    போட்டியில் பங்கேற்பதற்கு கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவதுடன்,  ஒரு வாரத்துக்கு முன்பு கொரோனா தடுப்பு வளையத்தில் கட்டாயம் இருக்குமாறு பிசிசிஐ தெரிவித்திருந்தது.

    ஆனால், முரளி விஜய் தடுப்பூசி போட தயங்குவதுடன், ஒரு வாரம்  தடுப்பு வளையத்தில் இருக்கவும் விரும்பவில்லை என கூறப்படுகிறது.  இதனால், சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டிக்கான அணியில் முரளி விஜய் பெயரை தேர்வுக்குழுவினர் பரிசீலனை செய்யவில்லை என்றும், முரளியால் போட்டியில் பங்கேற்க முடியாது என்றும் ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி முரளி விஜய் தரப்பில் இதுகுறித்து விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. 

    கடந்த வருட ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக விளையாடினார் முரளி விஜய். அதன்பிறகு அவர் வேறு எந்த கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கவில்லை. இந்த வருடம் டிஎன்பிஎல் போட்டியிலிருந்தும் விலகினார். 

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் டிவிஷன் லீக் போட்டியிலும் முரளி விஜய் விளையாடாததால் சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டிக்கு அவரை தேர்வு செய்வதில் தமிழகத் தேர்வுக்குழுவினர் ஆர்வம் செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.
    சையத் முஸ்தாக் அலி கிரிக்கெட் தொடரில், மும்பை அணியின் முன்னணி வீரர் ஸ்ரேயாஸ் அய்யர், 55 பந்துகளில் 147 ரன்கள் விளாசி சாதனை படைத்தார். #SyedMushtaqAliTrophy #ShreyasIyer
    இந்தூர்:

    சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான டி20 தொடரின் முதல் சுற்று போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் இந்தூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை-சிக்கிம் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரகானே, முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். அதன்படி களமிறங்கிய மும்பை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் குவித்தது.

    ஸ்ரேயாஸ் அய்யர் 55 பந்துகளை எதிர்கொண்டு 15 சிக்சர்கள், 7 பவுண்டரிகளுடன் 147 ரன்கள் விளாசினார். இதன் மூலம் உள்ளூர் போட்டி மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார்.  இதற்கு முன் ரிஷப் பந்த், ஐபிஎல் போட்டியில் கடந்த ஆண்டு, சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 128 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது.

    இதுதவிர டி20 போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் ஸ்ரேயாஸ் அய்யர் (15 சிக்சர்கள்) எட்டினார். இதற்கு முன் முரளி விஜய் ஒரு இன்னிங்சில் 11 சிக்சர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. #SyedMushtaqAliTrophy #ShreyasIyer
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு திரும்ப வேண்டும் என்ற நோக்கத்தில் கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடவில்லை என்று முரளி விஜய் தெரிவித்துள்ளார். #MuraliVijay
    இங்கிலாந்து - இந்தியா இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து 4-1 என வெற்றி பெற்றது. முதல் இரண்டு போட்டியில் விளையாடிய தொடக்க வீரர் முரளி விஜய்  20,0,6,0 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இதனால் 3-வது டெஸ்டில் இருந்து இடம்பெறவில்லை. 4-வது மற்றும் 5-வது டெஸ்டிற்கான இந்திய அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அதன்பின் கவுன்ட்டி போட்டியில சசக்ஸ் அணிக்காக விளையாடினார். சசக்ஸ் அணிக்காக 56, 100, 85, 80 மற்றும் 2 என அசத்தினார்.

    இதனால் ஆஸ்திரேலியா தொடருக்கான நான்கு போட்டிகள் டெஸ்டிற்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கான கவுன்ட்டி போட்டியில் விளையாடவில்லை என்று முரளி விஜய் தெரிவி்த்துள்ளார்.



    இதுகுறித்து முரளி விஜய் கூறுகையில் ‘‘நான் என்மீது நம்பிக்கை வைத்திருக்க வேண்டும் என்பதுதான் முக்கியமான விஷயம். மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என்பதற்காக கவுன்ட்டி கிரிக்கெட் விளையாடவில்லை.

    கவுன்ட்டி போட்டியில் விளையாட இதுதான் சரியான நேரம் என்று நினைத்தேன். இதனால் கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடினேன். சிறப்பாக விளையாடினால், இந்திய அணியில் தானாக இடம் கிடைக்கும்’’  என்றார்.
    கருண் நாயர், முரளி விஜய் நீக்கப்பட்டதில் தகவல் பரிமாற்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் நிர்வாகக்குழு ரவி சாஸ்திரி, விராட கோலியிடம் விளக்கம் கேட்கிறது. #BCCI
    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட முரளி விஜய், கருண் நாயர் ஆகியோர் தேர்வு குழுவினரை விமர்சனம் செய்து இருந்தனர். நீக்கம் தொடர்பாக தேர்வுக்குழு தங்களை தொடர்பு கொள்ளவில்லை என்று இருவரும் குற்றமசாட்டி இருந்தனர். இது தொடர்பாக தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் விளக்கம் அளித்து இருந்தார்.

    இந்த நிலையில் வீரர்கள் மற்றும் தேர்வு குழுவுக்கு இடையே ஏற்பட்டுள்ள தகவல் பரிமாற்ற பிரச்சனை தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிர்வாகக்குழு இன்று ஐதராபாத்தில் ஆலோசனை நடத்துகிறது. இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலி மற்றும் தேர்வுக்குழுவினர் ஆகியோருடன் நிர்வாகக்குழு ஆலோசனை நடத்துகிறது.

    கருண் நாயர், முரளி விஜய் ஆகியோர் தேர்வு குழுவினர் மீது கூறிய குற்றச்சாட்டு குறித்து வினோத் ராய் தலைமையிலான நிர்வாக குழு விவாதிக்கிறது. தேர்வு குழுவினரிடம் இதுகுறித்து நிர்வாகக் குழுவினர் கேள்வி எழுப்புவார்கள். அதோடு அணி நிர்வாகத்திடமும் (ரவிசாஸ்திரி, கோலி) விளக்கம் கேட்பார்கள்.



    ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்துக்கு அணியை தயார் செய்வது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்படும். கூடுதலான பயிற்சி ஆட்டங்கள் இடம்பெற வேண்டும் என்று அணி நிர்வாகம் கேட்டுக்கொள்ளும். இதேபோல் வீரர்கள் நடத்தை விதிமுறை, ஒப்பந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்படும்.

    தேர்வு குழுவினரை விமர்சனம் செய்ததால் கருண் நாயரும், முரளி விஜய்யும் வீரர்கள் நடத்தை விதிமுறைகளை மீறி உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
    நீக்கத்துக்கான காரணம் முரளி விஜய் தெரிவிக்காததால் அந்த புகாருக்கு தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் மறுப்பு தெரிவித்துள்ளார். #MuraliVijay #Indianteamselectioncommittee

    புதுடெல்லி:

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம் பெற்ற தொடக்க வீரர் முரளி விஜய் சரியாக விளையாடாததால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இது குறித்து அவர் கூறும்போது, இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு என்னிடம் தேர்வு குழு தலைவரோ, உறுப்பினர்களோ பேசவில்லை. நீக்கத்துக்கான காரணத்தை வீரர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றார்.

    ஆனால் முரளி விஜய்யின் கருத்தை இந்திய அணி தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:-

    முரளி விஜய் அணியில் இருந்து ஏன் நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறித்து எனது சக தேர்வாளர் தேவங்காந்தி அவரிடம் தெளிவாக தெரிவித்து விட்டார். அதன்பிறகு முரளி விஜய் இப்படியொரு கருத்து தெரிவித்து இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. 

    ஷிகர் தவான் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் அவர் ஒரு நாள் போட்டியில் விளையாடும் ஆட்டத்தை டெஸ்ட் போட்டியில் வெளிப்படுத்தவில்லை. அவருக்கு நாங்கள் நிறைய வாய்ப்புகள் கொடுத்த பின்புதான் நீக்கும் முடிவை எடுத்தோம் என்றார். #MuraliVijay #Indianteamselectioncommittee

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய முரளி விஜய் கவுன்ட்டி கிரிக்கெட்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். #MuraliVijay
    இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கியவர் முரளி விஜய். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், 3-வது டெஸ்டிற்குப் பிறகு இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

    இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டதும் கவுன்ட்டி கிரிக்கெட்டில் சசக்ஸ் அணிக்காக விளையாடி முடிவு செய்தார். முதல் முறையாக கவுன்ட்டி போட்டியில் களம் இறங்கிய முரளி விஜய் முதல் போட்டியில் நாட்டிங்காம்ஷைர் அணிக்கெதிரான முதல் இன்னிங்சில் 56 ரன்களும், 2-வது இன்னிங்சில் சதம் (100) அடித்தும் அசத்தினார். 2-வது அட்டத்தில் வொர்செஸ்டர்ஷைர் அணிக்கெதிராக 85 ரன்கள் அடித்தார்.

    இந்நிலையில் 3-வது ஆட்டத்தில் சசக்ஸ் அணி சர்ரே அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த சர்ரே 67 ரன்னில் சுருண்டது. பின்னர் சசக்ஸ் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் பிரவுன் 2 ரன்னில் வெளியேறினார்.



    அடுத்து முரளி விஜய் உடன் வெஸ்லே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முரளி விஜய் 127 பந்தில் 80 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். வெஸ்லே 93 ரன்கள் எடுத்து முதல்நாள் ஆட்டம் முடியும் வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். எசக்ஸ் அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் சேர்த்துள்ளது.

    இங்கிலாந்து தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய முரளி விஜய், கவுன்ட்டி போட்டியில் தொடர்ச்சியாக நான்கு முறை 50-க்கு மேல் ரன்குவித்து அசத்தி வருகிறார்.
    இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்டிற்கான இந்திய அணியில் இருந்து முரளி விஜய் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்டில் இந்தியா தோல்வியை சந்தித்தது. குறிப்பாக லார்ட்ஸ் டெஸ்டில் படுதோல்வியடைந்தது. இதனால் வீரர்கள் மீது கடும் விமர்சனம் எழும்பியது.


    பிரித்வி ஷா

    குறிப்பாக பேட்ஸ்மேன்கள் மீது முன்னாள் வீரர்கள் சாடினார்கள். இதனால் கடைசி இரண்டு டெஸ்டிற்கான இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று முடிந்த டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டாப் 5 பேட்ஸ்மேன்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.


    ஹனுமா விஹாரி

    இந்நிலையில் இன்று கடைசி இரண்டு டெஸ்டிற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் தொடக்க வீரர் முரளி விஜய், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பதிலாக இளம் வீரர்களான பிரித்வி ஷா மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியா 11 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்துள்ளது. மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் லார்ட்ஸில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பந்து வீச்சு தேர்வு செய்தார். இந்திய அணியில் தவான், உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு புஜாரா, குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

    முரளி விஜய், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முரளி விஜய் எதிர்கொள்ள ஆண்டர்சன் முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் முரளி விஜய் ஸ்டம்பை பறிகொடுத்தார்.

    2-வது விக்கெட்டுக்கு லோகேஷ் ராகுல் உடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். 7-வது ஓவரை ஆண்டர்சன் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் லோகேஷ் ராகுல் ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.



    ஆண்டர்சன் முதல் இரண்டு விக்கெட்டுக்களையும் இழந்ததால், இந்தியா 6.1 ஓவரிலேயே தொடக்க விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

    3-வது விக்கெட்டுக்கு புஜாரா உடன் கேப்டன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். விராட் கோலி இரண்டு பந்துகள் சந்தித்து ஒரு ரன் எடுத்தபோது 6.3 ஓவரில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியா 6.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்துள்ளது.
    எட்ஜ்பாஸ்டன் டெஸ்டின் 2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாளில் 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் மேலும் இரண்டு ரன்கள் எடுத்த நிலையில் ஆல்அவுட் ஆனது. அஸ்வின் நான்கு விக்கெட்டுக்களும், முகமது ஷமி 3 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. தவான் மற்றும் முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் இந்தியா 11.1 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது. 14-வது ஓவரை சாம் குர்ரான் வீசினார். இந்த ஓவரில் இந்தியாவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 4-வது பந்தில் முரளி விஜய் எல்பிடபிள்யூ மூலம் வெளியேறினார். அடுத்து வந்த லோகேஷ் ராகுல் 6-வது பந்தில் க்ளீன் போல்டானார்.



    இந்த அதிர்ச்சியில் இருந்து இந்திய ரசிகர்கள் மீள்வதற்குள் சாம் குர்ரான் வீசிய 16-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் தவான் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 8 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்தது. 20 வயதே ஆன சாம் குர்ரான் மூன்று விக்கெட்டுக்களையும் வீழ்த்தி இந்தியாவிற்கு அதிர்ச்சியூட்டினார. பின்னர் 4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ரகானே ஜோடி சேர்ந்தார்.



    இந்த ஜோடி 2-வது நாள் மதிய உணவு இடைவேளை முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. இந்தியா மதிய உணவு இடைவேளை வரை 21 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 9 ரன்னுடனும், ரகானே 8 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    எசக்ஸ் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் அரைசதம் அடித்து முரளி விஜய், விராட் கோலி, கேஎல் ராகுல், தினேஷ் கார்த்திக் முத்திரை படைத்தனர். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 1-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன் இந்தியா - எசக்ஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் நேற்று தொடங்கியது.

    டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. ஷிகர் தவான் ரன்ஏதும் எடுக்காமலும், புஜாரா 1 ரன்னிலும், ரகானே 17 ரன்னிலும் வெளியேறினார்கள். 44 ரன்களுக்குள் 3 விக்கெட்டை இழந்தாலும் முரளி விஜய் 53 ரன்களும், விராட் கோலி 68 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக இருந்தனர்.

    அடுத்து வந்த லோகேஷ் ராகுலும் 58 ரன்கள் சேர்த்தார். 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக் ஹர்திக் பாண்டியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக தினேஷ் கார்த்திக் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் குவித்துள்ளது. தினேஷ் கார்த்திக் 82 ரன்னுடனும், ஹர்திக் பாண்டியா 33 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.



    முன்னணி பேட்ஸ்மேன்களான விராட் கோலி, முரளி விஜய், கேஎல் ராகுல், தினேஷ் கார்த்திக் அரைசதம் அடித்துள்ளனர். இதனால் ஆடும் லெவன் அணியில் யாரெல்லாம் இடம்பிடிப்பார்கள் என்ற ஆவல் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக தொடக்க வீரர்களான களம் இறங்க இரண்டு பேருக்கே வாய்ப்பு என்பதால் முரளி விஜய், தவான், லோகேஷ் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவும். #MuraliVijay #KLRahul #Dhawan
    ×