என் மலர்

  நீங்கள் தேடியது "1000th Test"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியா தோல்வியால் எட்ஜ்பாஸ்டனில் கடந்த 1962-ல் இருந்து 17 போட்டிகளில் ஆசிய அணிகள் வெற்றி பெற முடியாமல் தவித்து வருகிறது. #ENGvIND
  ஆசிய கிரிக்கெட் அணிகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேச அணிகள் வெளிநாட்டு மண்ணில் பெரிய அளவில் சாதித்தது கிடையாது. மேலும் குறிப்பிட்ட சில மைதானங்களில் வெற்றியை ருசித்ததே கிடையாது.

  நேற்று எட்ஜ்பாஸ்டனில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்ததன் மூலம் 1962-ல் இருந்து தற்போது வரை 17 போட்டிகளில் ஆசிய அணி வெற்றி பெறாமல் தவித்து வருகிறது. இதுதான் தொடர்ச்சியாக ஆசிய அணிகள் வெற்றி பெற முடியாத அதிக எண்ணிக்கையாகும்.  அதன்பின் லார்ட்சில் 1932 முதல் 1982 வரை 16 போட்டிகளில் வெற்றி பெறாமல் இருந்தது. அதேபோல் 1953 முதல் 2017 வரை கென்னிங்டன் ஓவரில் 16 போட்டிகளில் வெற்றியை ருசிக்க முடியாமல் இருந்துள்ளது.

  1983-ல் இருந்து 2017 வரை மெல்போர்ன் கிரிக்கெட் மைானத்திலும், 1953 முதல் 2004 வரை சபினா பார்க் மைதானத்தில் 13 போட்டிகளிலும், 2001 முதல் 2014 வரை லார்ட்ஸில் 13 போட்டிகளிலும், 1947-ல் இருந்து தற்போது வரை 13 போட்டிகளில் பிரிஸ்பேனிலும் வெற்றி பெற முடியாமல் இருக்கிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இங்கிலாந்து வீரர் தாவித் மலனை வீழ்த்தியதை ஆக்ரோஷமாக கொண்டாடிய இஷாந்த் ஷர்மாவிற்கு 15 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #ENGvIND
  இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 287 ரன்கள் சேர்த்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 274 ரன்னில் சுருண்டது.

  13 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னி்ங்சை தொடங்கியது. இங்கிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது விக்கெட்டுக்கு பேர்ஸ்டோவ் உடன் தாவித் மலன் ஜோடி சேர்ந்து விளையாடினார்.  இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. இங்கிலாந்து 70 ரன்கள் எடுத்திருக்கும்போது தாவித் மலன் 20 ரன்கள் எடுத்த நிலையில் இசாந்த் ஷர்மா பந்தில் ஆட்டமிழந்தார். விக்கெட் வீழ்த்திய சந்தோசத்தில் ஆக்ரோஷமாக தாவித் மலன் அருகில் சென்று சைகை காட்டினார்.  இது ஐசிசி-யின் விதிமுறைக்கு மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால் போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 15 சதவிகிதம் அபராதமும், தடைக்கான ஒரு புள்ளியும் வழங்கப்பட்டது. இஷாந்த் ஷர்மா அபராதத்தை ஒத்துக் கொண்டதால் விசாரணையின்றி இந்த பிரச்சனை அத்துடன் முடித்து வைக்கப்பட்டது,
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஸ்வின் மற்றும் விராட் கோலி விமர்சனங்களை தகர்த்தெறிந்தனர். #ENGvIND #ViratKohli #Ashwin
  இந்தியா அணி கடந்த 2014-ம் ஆண்டு இங்கிலாந்து சென்று விளையாடும்போது ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-3 என இழந்தது. இந்த தொடரின்போது விராட் கோலி 10 இன்னிங்சில் 134 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

  அதேபோல் அஸ்வினும் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தவில்லை. இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடி 3 விக்கெட்டுக்கள் மட்டுமே வீழ்த்தியிருந்தார். இதனால் வெளிநாட்டு மண்ணில் அஸ்வின் சிறப்பாக பந்து வீசுவதில்லை என்ற விமர்சனம் எழுந்தது.

  தற்போது அவருக்கு ஒருநாள் போட்டிக்கான இந்தியா அணியில் இடம் கிடைக்கவில்லை. இதை பயன்படுத்தி கவுன்ட்டி போட்டியில் விளையாடினார்.

  தற்போது நடைபெற்று வரும் எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் அவருக்கு இடம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்தது. இங்கிலாந்து அணியில் ஏராளமான இடதுகை பேட்ஸ்மேன்கள் இருந்ததால் விராட் கோலி அஸ்வின் மீது நம்பிக்கை வைத்து ஆடும் லெவனில் சேர்த்தார்.  வீராட் கோலியின் நம்பிக்கையை வீணடிக்காத வகையில் அஸ்வின் அபாரமான வகையில் பந்து வீசி முதல் நாளில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இவரது பந்து வீச்சால் இங்கிலாந்து 287 ரன்னில் சுருண்டது.

  கடந்த சீசனில் மூன்று விக்கெட்டுக்கள் மட்டுமே வீழ்த்திய அஸ்வின், ஒரே இன்னிங்சில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தி விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.  அதேபோல் 10 இன்னிங்சில் 134 ரன்கள் அடித்திருந்த விராட் கோலி நேற்றைய 2-வது நாளில் 149 ரன்கள் குவித்து விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இரண்டு ஜாம்பவான்கள் ஒரே நாளில் தங்களது விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இந்தியா 2-வது நாள் தேனீர் இடைவேளை வரை 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 53 நாட்அவுட். #ENGvIND
  இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாளில் 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் மேலும் இரண்டு ரன்கள் எடுத்த நிலையில் ஆல்அவுட் ஆனது. அஸ்வின் நான்கு விக்கெட்டுக்களும், முகமது ஷமி 3 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

  பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. தவான் மற்றும் முரளி விஜய் ஆகியோர் நல்ல தொடக்கம் கொடுத்தனர். இந்தியா 11.1 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது. 14-வது ஓவரை சாம் குர்ரான் வீசினார். இந்த ஓவரில் இந்தியாவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 4-வது பந்தில் முரளி விஜய் எல்பிடபிள்யூ மூலம் வெளியேறினார். அடுத்து வந்த லோகேஷ் ராகுல் 6-வது பந்தில் க்ளீன் போல்டானார்.

  இந்த அதிர்ச்சியில் இருந்து இந்திய ரசிகர்கள் மீள்வதற்குள் சாம் குர்ரான் வீசிய 16-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் தவான் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 8 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்தது. 20 வயதே ஆன சாம் குர்ரான் மூன்று விக்கெட்டுக்களையும் வீழ்த்தி இந்தியாவிற்கு அதிர்ச்சியூட்டினார்.

  பின்னர் 4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-வது நாள் மதிய உணவு இடைவேளை முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. இந்தியா மதிய உணவு இடைவேளை வரை 21 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி 9 ரன்னுடனும், ரகானே 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.  மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. ரகானே 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இந்த இரண்டு விக்கெட்டுக்களையும் பென் ஸ்டோக்ஸ் கைப்பற்றி இந்தியாவிற்கு நெருக்கடி கொடுத்தார்.

  6-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 2-வது நாள் தேனீர் இடைவேளைக்கு சற்றுமுன் ஹர்திக் பாண்டியா 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். விராட் கோலி - ஹர்திக் பாண்டியா ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்த்தது.

  ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்தாலும் விராட் கோலி மறுமுனையில் அரைசதம் அடித்தார். 7-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். தேனீர் இடைவேளை வரை இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 53 ரன்னுடனும், அஸ்வின் 6 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் விராட் கோலி அடித்த பந்தை கல்லி திசையில் நின்று பிடிக்க முயன்ற ஜோஸ் பட்லருக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டது. #ENGvIND
  இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அஸ்வின் (4), முகமது ஷமி (3) ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் 287 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

  பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் 13 ஓவர் வரை இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 14-வது ஓவரை சாம் குர்ரான் வீசினார். இந்த ஓவரில் முரளி விஜய், லோகேஷ் ராகுல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

  முதல் இரண்டு விக்கெட்டுக்களை இழந்ததால் அடுத்து விராட் கோலி களம் இறங்கினார். 2014-ம் ஆண்டு ஆண்டர்சனை ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில் பந்து வீசி விராட் கோலியை அவுட்டாக்கியது போல் தற்போதும் அதே யுக்தியை கடைபிடித்தார்.  ஆண்டர்சன் பந்தை விராட் கோலி தொட்டுவிட அது ஸ்லிப் அருகில் கல்லியில் நின்ற ஜோஸ் பட்லரின் அருகே பாய்ந்து சென்றது. பட்லர் இடது கையால் பந்தை பிடிக்க முயன்றார். அப்போது பட்லர் கைவிரலில் பந்தை பலமாக தாக்கிச் சென்றது.

  இதில் பட்லரின் இடது கையின் நடுவிரலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு எக்ஸ்-ரே பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முடிவில்தான் அவரது காயத்தின் வீரியம் தெரியவரும். ஒருவேளை எலும்பு முறிவு இருந்தால் தொடர்ந்து விளையாடுவது சந்தேகமே.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எட்ஜ்பாஸ்டன் டெஸ்டின் 2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND
  இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாளில் 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் மேலும் இரண்டு ரன்கள் எடுத்த நிலையில் ஆல்அவுட் ஆனது. அஸ்வின் நான்கு விக்கெட்டுக்களும், முகமது ஷமி 3 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

  பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. தவான் மற்றும் முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் இந்தியா 11.1 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது. 14-வது ஓவரை சாம் குர்ரான் வீசினார். இந்த ஓவரில் இந்தியாவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 4-வது பந்தில் முரளி விஜய் எல்பிடபிள்யூ மூலம் வெளியேறினார். அடுத்து வந்த லோகேஷ் ராகுல் 6-வது பந்தில் க்ளீன் போல்டானார்.  இந்த அதிர்ச்சியில் இருந்து இந்திய ரசிகர்கள் மீள்வதற்குள் சாம் குர்ரான் வீசிய 16-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் தவான் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 8 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்தது. 20 வயதே ஆன சாம் குர்ரான் மூன்று விக்கெட்டுக்களையும் வீழ்த்தி இந்தியாவிற்கு அதிர்ச்சியூட்டினார. பின்னர் 4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ரகானே ஜோடி சேர்ந்தார்.  இந்த ஜோடி 2-வது நாள் மதிய உணவு இடைவேளை முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. இந்தியா மதிய உணவு இடைவேளை வரை 21 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 9 ரன்னுடனும், ரகானே 8 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இங்கிலாந்து முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை 1 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் சேர்த்துள்ளது. #ENGvIND #1000thTest
  இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் புஜாரா நீக்கப்பட்டு லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டார். தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக பணிபுரிகிறார்.

  அலஸ்டைர் குக், ஜென்னிங்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 6 ஓவர் முடிந்த நிலையிலேயே அஸ்வின் பந்து வீச அழைக்கப்பட்டார். இதற்கு நல்ல பலனும் கிடைத்தது. 9-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் அலஸ்டைர் குக் க்ளீன் போல்டானார். அவர் 13 ரன்கள் சேர்த்தார்.


  ஜென்னிங்ஸ்

  அடுத்து ஜென்னிங்ஸ் உடன் கேப்டன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் இந்திய பந்து வீச்சாளர்களால் முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை.


  ஜோ ரூட்

  முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 28 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்துள்ளது. ஜென்னிங்ஸ் 38 ரன்னுடனும், ஜோ ரூட் 31 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  140 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் இன்று இங்கிலாந்து 1000-மாவது டெஸ்டில் கால் எடுத்து வைத்துள்ளது. இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. #ENGvIND #1000thTest
  1877-ம் ஆண்டு முதன்முதலாக இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தது. அப்போது இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் மட்டுமே போட்டி நடத்தப்பட்டது. அதன்பின் தற்போது 12 அணிகள் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாட அங்கீகாரம் பெற்றுள்ளது.

  இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் இன்று தொடங்கியது. இந்த டெஸ்டின் விளையாடியதன் மூலம் சுமார் 140 வருட காலத்தில் இங்கிலாந்து 1000-மாவது டெஸ்டில் விளையாடிய முதல் அணி என்ற சாதனையைப் படைத்துள்ளது.  ஆஸ்திரேலியா 812 டெஸ்ட் போட்டிகளுடன் 2-வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 535 போட்டிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளது.  இந்தியா 523 போட்டிகளில் விளையாடி 4-வது இடத்தில் உள்ளது. தென்ஆப்பிரிக்கா 427 போட்டிகளுடன் 5-வது இடத்திலும், நியூசிலாந்து (426) 6-வது இடத்திலும், பாகிஸ்தான் (415) 7-வது இடத்திலும், இலங்கை (274) 8-வது இடத்திலும், வங்காள தேசம் (108) 9-வது இடத்திலும் உள்ளது.
  ×