search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "denies"

    “மோடியை கன்னத்தில் அறைவேன்” என்று மம்தா பானர்ஜி சொன்னதாக பிரதமர் மோடி கூறியதை மம்தா பானர்ஜி மறுத்துள்ளார். #MamataBanerjee #PMModi
    கொல்கத்தா:

    “மோடியை கன்னத்தில் அறைவேன்” என்று மம்தா பானர்ஜி சொன்னதாக பிரதமர் மோடி கூறியதை மம்தா பானர்ஜி மறுத்துள்ளார். மேற்கு வங்காள மாநிலம் புருலியா மாவட்டம் சிமுலியாவில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது:-

    மோடியை கன்னத்தில் அறைவேன் என்று நான் பேசியதாக மோடி கூறியுள்ளார். அது, ஜனநாயக அறை. மொழியை புரிந்து கொள்ளுங்கள். நான் ஏன் உங்களை அறையப்போகிறேன். நான் அப்படிப்பட்ட ஆள் அல்ல.

    ஜனநாயக அறை என்றால், மக்கள் தங்கள் ஓட்டு மூலமாக தீர்ப்பு அளிப்பார்கள் என்று அர்த்தம்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #MamataBanerjee #PMModi 
    நீக்கத்துக்கான காரணம் முரளி விஜய் தெரிவிக்காததால் அந்த புகாருக்கு தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் மறுப்பு தெரிவித்துள்ளார். #MuraliVijay #Indianteamselectioncommittee

    புதுடெல்லி:

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம் பெற்ற தொடக்க வீரர் முரளி விஜய் சரியாக விளையாடாததால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இது குறித்து அவர் கூறும்போது, இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு என்னிடம் தேர்வு குழு தலைவரோ, உறுப்பினர்களோ பேசவில்லை. நீக்கத்துக்கான காரணத்தை வீரர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றார்.

    ஆனால் முரளி விஜய்யின் கருத்தை இந்திய அணி தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:-

    முரளி விஜய் அணியில் இருந்து ஏன் நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறித்து எனது சக தேர்வாளர் தேவங்காந்தி அவரிடம் தெளிவாக தெரிவித்து விட்டார். அதன்பிறகு முரளி விஜய் இப்படியொரு கருத்து தெரிவித்து இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. 

    ஷிகர் தவான் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் அவர் ஒரு நாள் போட்டியில் விளையாடும் ஆட்டத்தை டெஸ்ட் போட்டியில் வெளிப்படுத்தவில்லை. அவருக்கு நாங்கள் நிறைய வாய்ப்புகள் கொடுத்த பின்புதான் நீக்கும் முடிவை எடுத்தோம் என்றார். #MuraliVijay #Indianteamselectioncommittee

    முஷரப், சிட்ரால் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு அளித்த அனுமதியை பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அதிரடியாக திரும்பப் பெற்றனர். #Pakistan #PervezMusharraf
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப், கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் சிகிச்சை பெறுவதற்காக செல்வதாக கூறி துபாய் போனார். ஆனால் அவர் அங்கு இருந்து இன்னும் திரும்பவில்லை.

    ஆனால் அவர் பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பினார். அவர் சிட்ரால் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு, நிபந்தனையுடன் கூடிய அனுமதியை வழங்கியது.

    அந்த நிபந்தனையின்படி அவர் தன்மீது உள்ள வழக்கு விசாரணையை எதிர்கொள்வதற்கு லாகூர் கோர்ட்டில் கடந்த 13-ந் தேதி ஆஜராக தவறினார்.

    இதற்கு இடையே தன் மீதான தகுதி நீக்க வழக்கில் பெஷாவர் ஐகோர்ட்டு 2013-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார் தலைமையிலான அமர்வு முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது நேற்று 2 மணிக்குள் அவர் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராக நீதிபதிகள் கெடு விதித்தனர். ஆனால் அதன்படி அவர் ஆஜராகவில்லை.

    ஆனால் அவரது வக்கீல் கமர் அப்சல், முஷரப் நாடு திரும்ப கூடுதல் அவகாசம் கோரினார். அதைத் தொடர்ந்து அந்த வழக்கு மீதான விசாரணையை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

    அதே நேரம் முஷரப், சிட்ரால் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு அளித்த அனுமதியை நீதிபதிகள் அதிரடியாக திரும்பப் பெற்றனர். இதையடுத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற முஷரப்பின் கனவு பலிக்காமல் போய் விடும் சூழல் உருவாகி உள்ளது.  #Pakistan #PervezMusharraf  #tamilnews
    ×