என் மலர்
நீங்கள் தேடியது "Musharraf"
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தானை விட்டு வெளியேறி மருத்துவ சிகிச்சைக்காக துபாயில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நரம்பு சம்பந்தமான நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டார்.

துபாயில் உள்ள தனது வீட்டில் முஷரப் ஓய்வு எடுத்து வந்தார். இந்த அபூர்வ நோயால் அவர் நிற்கவும், நடக்கவும் முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறார். ‘அமைலோடோசிஸ்’ என்பது உடலில் உள்ள புரதம் உடைந்து பல்வேறு உறுப்புகளில் படிந்து விடுவதாகும். இதனால் அவரது எலும்புகள் பலவீனமடைந்துள்ளன.
இந்த நிலையில் தற்போது அவருக்கு ‘திடீர்’ உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் துபாயில் உள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக ஆஸ்பத்திரியின் பெயர் வெளியிடப்படவில்லை. தற்போது அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவர் விரைவில் குணமடைந்து வீட்டிற்கு திரும்புவார் என டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேற்கண்ட தகவல்களை பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் வெளிநாட்டு பிரிவின் தலைவர் அப்சல் சித்திகி தெரிவித்துள்ளார். #PervezMusharraf

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் கடந்த 2016-ம் ஆண்டு முதல் துபாயில் வசித்து வருகிறார். அவர்மீது தேச துரோக வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் அவர் போக்குகாட்டி வருகிறார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது முஷரப்பின் உடல்நிலை சீராக இல்லை எனவும், அதன் காரணத்தால் அவரால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது எனவும் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அடுத்த ஒருவாரத்துக்குள் முஷரப்பின் மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட தலைமை நீதிபதி கொண்ட அமர்வு, வழக்கு விசாரணையை வரும் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. #PervezMusharraf #PakistanSC
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப், தற்போது துபாயில் உள்ளார்.
இந்த நிலையில், அவர் அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (ஏ.பி.எம்.எல்.) கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். இது குறித்த தகவலை வெளியிட்ட அந்தக் கட்சியின் புதிய தலைவர் முகமது அம்ஜத். அரசியலில் இருந்து வாழ்நாள் முழுவதும் தடை செய்து பெஷாவர் ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அடுத்து முஷரப் பதவி விலகி உள்ளதாக கூறி இருந்தார். இதையடுத்து முஷரப் அரசியலுக்கு முழுக்கு போட்டு விட்டாரோ என்று யூகங்கள் எழுந்தன.
இதற்கு விளக்கம் அளிக்கிற வகையில் முஷரப், வீடியோவில் செய்தி விடுத்து உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட திட்டமிட்டேன். ஆனால் பாகிஸ்தானுக்கு திரும்பி வந்தால் கைது செய்யமாட்டோம், வாழ்நாள் தகுதிநீக்க உத்தரவை விலக்கிக்கொள்வோம், வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டோர் பட்டியலில் இருந்து (முஷரப்) பெயர் நீக்கப்படும் என்பதுபோன்ற வாக்குறுதிகளை விரும்பினேன்.
கவாஜா ஆசிப்பின் வாழ்நாள் தகுதி நீக்க உத்தரவு ரத்தாகிறபோது, எனக்கு விதிக்கப்பட்ட தடையை ஏன் ரத்து செய்யக்கூடாது? நவாஸ் ஷெரீப் நாட்டை விட்டு செல்லலாம், திரும்ப வரலாம் என்று இருக்கிறபோது எனக்கு அந்த உரிமை கிடையாதா?
நான் விரும்பிய வாக்குறுதிகள் அளிக்கப்படவில்லை. எனது கட்சிக்காக நான் எதுவும் செய்ய முடியாது என்பதை தெரிந்து கொண்டேன். எனவே கட்சித்தலைவர்களுடன் கலந்தாலோசனை செய்து விட்டு நாட்டுக்கு திரும்புவதில்லை என்று முடிவு எடுத்தேன்.
சட்டப்பிரச்சினைகளால்தான் இந்த முடிவை எடுத்தேன். நான் தொடங்கிய கட்சியை ஆதரிப்பேன். எதிர்கால நடவடிக்கை குறித்து பின்னர் நிலைமையைப் பொறுத்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார். இதன் மூலம் அவர் அரசியலுக்கு முழுக்கு போடவில்லை என்பதை சூசகமாக உணர்த்தி உள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு சிகிச்சை பெறுவதற்காக துபாய் சென்று பின் லண்டனில் சென்று தஞ்சம் அடைந்தார். அவர் மீதான வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராவதை முஷரப் தவிர்த்து வந்தார்.
இந்நிலையில், பாகிஸ்தானில் நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதி வேண்டி நீதிமன்றத்தில் அவர் அளித்திருந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், முஷரப் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் வேட்புமனுத்தாக்கல் செய்ய அனுமதித்தனர். ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவின்படி முஷரப் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதனால் நீதிபதிகள் அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு அளித்திருந்த அனுமதியை வாபஸ் பெற்றனர். மேலும், முஷரப் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் அறிவுறித்தினர்.
இந்நிலையில், காணொளி காட்சி மூலம் செய்தியாளர்களிடம் பேசிய முஷரப், ‘நான் தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டேன்., ஆனால் உச்சநீதிமன்றம் என்னை கைது செய்ய அளித்த உத்தரவு என் மனதை மாற்றுகிறது’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ‘நான் நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் என்னை கைது செய்வதால் நாட்டுக்கும், மக்களுக்கும் எவ்வித நன்மைகளும் விளையப்போவதில்லை. நான் குற்றவாளி இல்லை என்பது உலகமே அறியும். சரியான நேரத்தில் நாடு திரும்புவதற்காக நான் காத்திருக்கிறேன்’ என முஷரப் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் முகமது அம்ஜத், முஷரப் நாடு திரும்ப தயாராக இருப்பதாகவும், ஆனால் அவர் திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்யும் அளவுக்கு உச்சநீதிமன்றம் கால அவகாசம் அளிக்கவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார். #Musharraf #Pakistan
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாகிஸ்தானில் வருகிற ஜூலை 25-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெக்ரிக்-,இ- இன்சாப் கட்சி தலைவரான இம்ரான்கான் வெற்றி பெறுவார்.
எனவே இவரது கட்சியில் நிறைய பேர் சேர்ந்துள்ளனர். தேர்தலுக்கு பிறகு வெற்றி பெற்ற பின் மேலும் பலர் இணைவார்கள். ஒருவேளை தொங்கு பாராளுமன்றம் அமைந்தால் எனது அகில பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தனது நிலையில் இருந்து மாறி ஆட்சி அமைக்க உதவி செய்யும்.
என்னை பொறுத்த வரை பிரதமர் பதவிக்கு இம்ரான்கான் தகுதியானவர் ஆவார். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவர் மரியம் நவாஸ் அரசியலில் முதிர்ச்சியற்றவர். இவரால் பிரதமர் பதவியில் இருந்து கொண்டு இம்ரான்கானை விட சிறப்பாக ஆட்சி நடத்த முடியாது.
இம்ரான்கானிடம் பல நல்ல தகுதிகள் உள்ளன. ஆசிப் சர்தாரி மற்றும் நவாஸ் செரீப்பைவிட இவர் சிறந்தவர் என கருதுகிறேன். பாகிஸ்தான் தெக்ரிக்-இ- இன்சாப் கட்சி தலைவர் இம்ரான்கான் ஒரு உண்மையான மனிதர். மிக குறைந்த அளவே ஊழல் குற்றச்சாட்டு இவர் மீது உள்ளது. மேலும் இவர் நிறைய விஷயங்களை கவனிக்க வேண்டும். பேச்சை குறைக்க வேண்டும்.
வெளிநாட்டில் இருந்து திரும்புவது குறித்து நான் இன்னும் முடிவு செய்ய வில்லை. பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றை தீர்க்க காத்திருக்கிறேன். எனவே நாடு (பாகிஸ்தான்) திரும்புவது குறித்து சில நாட்களில் முடிவெடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார். #Musharraf #ImranKhan #pakistanelection