search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தகவல் பரிமாற்ற பிரச்சனை- ரவி சாஸ்திரி, விராட் கோலியுடன் கிரிக்கெட் வாரியம் ஆலோசனை
    X

    தகவல் பரிமாற்ற பிரச்சனை- ரவி சாஸ்திரி, விராட் கோலியுடன் கிரிக்கெட் வாரியம் ஆலோசனை

    கருண் நாயர், முரளி விஜய் நீக்கப்பட்டதில் தகவல் பரிமாற்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் நிர்வாகக்குழு ரவி சாஸ்திரி, விராட கோலியிடம் விளக்கம் கேட்கிறது. #BCCI
    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட முரளி விஜய், கருண் நாயர் ஆகியோர் தேர்வு குழுவினரை விமர்சனம் செய்து இருந்தனர். நீக்கம் தொடர்பாக தேர்வுக்குழு தங்களை தொடர்பு கொள்ளவில்லை என்று இருவரும் குற்றமசாட்டி இருந்தனர். இது தொடர்பாக தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் விளக்கம் அளித்து இருந்தார்.

    இந்த நிலையில் வீரர்கள் மற்றும் தேர்வு குழுவுக்கு இடையே ஏற்பட்டுள்ள தகவல் பரிமாற்ற பிரச்சனை தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிர்வாகக்குழு இன்று ஐதராபாத்தில் ஆலோசனை நடத்துகிறது. இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலி மற்றும் தேர்வுக்குழுவினர் ஆகியோருடன் நிர்வாகக்குழு ஆலோசனை நடத்துகிறது.

    கருண் நாயர், முரளி விஜய் ஆகியோர் தேர்வு குழுவினர் மீது கூறிய குற்றச்சாட்டு குறித்து வினோத் ராய் தலைமையிலான நிர்வாக குழு விவாதிக்கிறது. தேர்வு குழுவினரிடம் இதுகுறித்து நிர்வாகக் குழுவினர் கேள்வி எழுப்புவார்கள். அதோடு அணி நிர்வாகத்திடமும் (ரவிசாஸ்திரி, கோலி) விளக்கம் கேட்பார்கள்.



    ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்துக்கு அணியை தயார் செய்வது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்படும். கூடுதலான பயிற்சி ஆட்டங்கள் இடம்பெற வேண்டும் என்று அணி நிர்வாகம் கேட்டுக்கொள்ளும். இதேபோல் வீரர்கள் நடத்தை விதிமுறை, ஒப்பந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்படும்.

    தேர்வு குழுவினரை விமர்சனம் செய்ததால் கருண் நாயரும், முரளி விஜய்யும் வீரர்கள் நடத்தை விதிமுறைகளை மீறி உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
    Next Story
    ×