என் மலர்

  நீங்கள் தேடியது "Vinod Rai"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கிரிக்கெட் மட்டுமல்ல எல்லா வகையான போட்டிகளிலும் பாகிஸ்தானுக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
  புதுடெல்லி:

  காஷ்மீரில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் இந்திய துணை ராணுவப்படையினர் மீது நடத்திய கொடூர தாக்குதல் எதிரொலியாக உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடுவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த ஆட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் சிலர் கூறியுள்ளனர்.

  உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜூன் 16-ந்தேதி தான் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. அதற்கு இன்னும் அதிக நாட்கள் இருப்பதால் உரிய நேரத்தில் பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே கூறியுள்ளது. இந்த விவகாரம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

  உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுடன் விளையாடாவிட்டால் சிக்கல் நமக்கு தான் ஏற்படும். எங்களது இலக்கு எதுவென்றால், ஒரு கிரிக்கெட் தேசமான பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும். பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாட்டுடன் வருங்காலத்தில் எந்தவிதமான உறவும் வைத்துக் கொள்ளாதீர்கள் என்று கிரிக்கெட் விளையாடும் நாடுகளை ஏற்கனவே வலியுறுத்தியுள்ளோம். இனவெறி கொள்கை காரணமாக தென்ஆப்பிரிக்காவுக்கு 1970-ம் ஆண்டு 1991-ம் ஆண்டு வரை சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இதே போன்று பாகிஸ்தான் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். அதாவது கிரிக்கெட் மட்டுமல்ல எல்லா வகையான போட்டிகளிலும் பாகிஸ்தானுக்கு தடை விதிக்கப்பட வேண்டும். விளையாட்டில் இருந்து பாகிஸ்தானை தனிமைப்படுத்துவது அரசாங்க ரீதியாகத் தான் செய்ய முடியும். இதற்காக மற்ற நாடுகளுடன் பேச்சுவாத்தை நடத்தி கருத்து ஒற்றுமை ஏற்படுத்த அரசு முயற்சித்து வருகிறது.

  சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைமை நிர்வாக கமிட்டி உறுப்பினர்களின் கூட்டம் துபாயில் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் காஷ்மீர் தாக்குதல் பற்றிய எங்களது கவலையையும், உலக கோப்பை போட்டிக்கான பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் எடுத்துக் கூறுவோம்.

  இவ்வாறு வினோத் ராய் கூறினார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து கூறி சஸ்பெண்ட் ஆகியுள்ள ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் மீது ஹர்பஜன் சிங் கடுமையாக சாடியுள்ளார்.
  ‘காபி வித் கரண்’ டெலிவிஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் ஆகியோர் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள் தெரிவித்தது பெரும் பிரச்சனையாக விசுவரூபம் எடுத்துள்ளது. வீரர்கள் தங்களது செக்ஸ் பழக்கம் குறித்து வெளிப்படையாக பேசியது இந்திய கிரிக்கெட்டின் நன்மதிப்பை குலைப்பதாகும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

  சர்ச்சையில் சிக்கிய இரண்டு வீரர்களையும் விசாரணை முடியும் வரை இடைநீக்கம் செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள அந்த இருவரையும் உடனடியாக நாடு திரும்ப இந்திய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

  இந்த நிலையில் வீரர்கள் இருவரின் பேச்சுக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

  இந்த மாதிரியான விஷயங்களை நாங்கள் நண்பர்களுடன் கூட பேசமாட்டோம். ஆனால் இவர்களோ பலரும் பார்க்கும் டெலிவிஷன் நிகழ்ச்சியில் இப்படி பேசி இருக்கிறார்கள். தற்போது இதனைப் பார்த்த பொதுமக்கள் கிரிக்கெட் வீரர்கள் பற்றி என்ன நினைப்பார்கள். ஹர்பஜன்சிங்கும் இதுபோல் தானோ?, தெண்டுல்கர், கும்ப்ளே போன்றோரும் இப்படித்தான் இருப்பார்களோ என்று நினைக்கக்கூடும். இந்திய அணிக்கு வந்து குறுகிய காலமே ஆன ஹர்திக் பாண்டியா அணியின் கலாசாரம் குறித்து எப்படி பேச முடியும்.  இரண்டு வீரர்களையும் இடைநீக்கம் செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் எடுத்த நடவடிக்கை சரியானதுதான். இதுபோன்ற விஷயங்களில் இந்திய கிரிக்கெட் வாரியம் இப்படித்தான் கடுமையான நடவடிக்கையை தொடர்ந்து எடுக்க வேண்டும். இந்த தண்டனை எதிர்பார்த்ததுதான். இதில் எனக்கு ஆச்சரியம் எதுவுமில்லை. இந்திய அணியின் பஸ்சில் இவர்கள் இருவரும் பயணித்தால், எனது மனைவி அல்லது குழந்தை என்னுடன் வந்தால் நிச்சயம் இவர்களுடன் இணைந்து பயணிக்க மாட்டேன். பெண்களை ஒரே ஒரு கோணத்தில் மட்டும் பார்ப்பது சரியானது கிடையாது.

  இவ்வாறு அவர் கூறினார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கருண் நாயர், முரளி விஜய் நீக்கப்பட்டதில் தகவல் பரிமாற்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் நிர்வாகக்குழு ரவி சாஸ்திரி, விராட கோலியிடம் விளக்கம் கேட்கிறது. #BCCI
  வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட முரளி விஜய், கருண் நாயர் ஆகியோர் தேர்வு குழுவினரை விமர்சனம் செய்து இருந்தனர். நீக்கம் தொடர்பாக தேர்வுக்குழு தங்களை தொடர்பு கொள்ளவில்லை என்று இருவரும் குற்றமசாட்டி இருந்தனர். இது தொடர்பாக தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் விளக்கம் அளித்து இருந்தார்.

  இந்த நிலையில் வீரர்கள் மற்றும் தேர்வு குழுவுக்கு இடையே ஏற்பட்டுள்ள தகவல் பரிமாற்ற பிரச்சனை தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிர்வாகக்குழு இன்று ஐதராபாத்தில் ஆலோசனை நடத்துகிறது. இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலி மற்றும் தேர்வுக்குழுவினர் ஆகியோருடன் நிர்வாகக்குழு ஆலோசனை நடத்துகிறது.

  கருண் நாயர், முரளி விஜய் ஆகியோர் தேர்வு குழுவினர் மீது கூறிய குற்றச்சாட்டு குறித்து வினோத் ராய் தலைமையிலான நிர்வாக குழு விவாதிக்கிறது. தேர்வு குழுவினரிடம் இதுகுறித்து நிர்வாகக் குழுவினர் கேள்வி எழுப்புவார்கள். அதோடு அணி நிர்வாகத்திடமும் (ரவிசாஸ்திரி, கோலி) விளக்கம் கேட்பார்கள்.  ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்துக்கு அணியை தயார் செய்வது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்படும். கூடுதலான பயிற்சி ஆட்டங்கள் இடம்பெற வேண்டும் என்று அணி நிர்வாகம் கேட்டுக்கொள்ளும். இதேபோல் வீரர்கள் நடத்தை விதிமுறை, ஒப்பந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்படும்.

  தேர்வு குழுவினரை விமர்சனம் செய்ததால் கருண் நாயரும், முரளி விஜய்யும் வீரர்கள் நடத்தை விதிமுறைகளை மீறி உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
  ×