என் மலர்

  செய்திகள்

  லார்ட்ஸ் டெஸ்ட்- முரளி விஜய் 0, லோகேஷ் ராகுல் 8- இந்தியா 11/2
  X

  லார்ட்ஸ் டெஸ்ட்- முரளி விஜய் 0, லோகேஷ் ராகுல் 8- இந்தியா 11/2

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியா 11 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்துள்ளது. மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. #ENGvIND
  இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் லார்ட்ஸில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பந்து வீச்சு தேர்வு செய்தார். இந்திய அணியில் தவான், உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு புஜாரா, குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

  முரளி விஜய், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முரளி விஜய் எதிர்கொள்ள ஆண்டர்சன் முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் முரளி விஜய் ஸ்டம்பை பறிகொடுத்தார்.

  2-வது விக்கெட்டுக்கு லோகேஷ் ராகுல் உடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். 7-வது ஓவரை ஆண்டர்சன் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் லோகேஷ் ராகுல் ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.  ஆண்டர்சன் முதல் இரண்டு விக்கெட்டுக்களையும் இழந்ததால், இந்தியா 6.1 ஓவரிலேயே தொடக்க விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

  3-வது விக்கெட்டுக்கு புஜாரா உடன் கேப்டன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். விராட் கோலி இரண்டு பந்துகள் சந்தித்து ஒரு ரன் எடுத்தபோது 6.3 ஓவரில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியா 6.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்துள்ளது.
  Next Story
  ×