search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mushtaq Ali Trophy"

    சையது முஸ்தாக் அலி கோப்பையை தொடர்ந்து 2-வது முறையாக வாகை சூடி இருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    டெல்லியில் நடந்த சையது முஸ்தாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி கடைசி பந்தில் சிக்சர் அடித்து சாம்பியன் பட்டம் பெற்றது.

    3-வது முறையாக கோப்பையை கைப்பற்றி தமிழக அணி சாதனை படைத்தது. தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது.

    இந்தநிலையில் தமிழக கிரிக்கெட் அணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    சையது முஸ்தாக் அலி கோப்பையை தொடர்ந்து 2-வது முறையாக வாகை சூடி இருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

    ஷாருக்கான், சாய் கிஷோர் உள்ளிட்ட இளம் திறமையாளர்கள் சிறப்பான, துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். எல்லோரும், மேலும் உயரங்களை அடைய வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    கர்நாடகத்துக்கு எதிரான போட்டியில் தமிழக அணியின் ஷாருக் கான் கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடி 15 பந்தில் 3 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 33 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
    புதுடெல்லி:

    சையது முஸ்தாக் அலி கோப்பைக்கான இறுதி ஆட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா அணிகள் மோதின. டாஸ் வென்ற தமிழக அணி கேப்டன் விஜய் சங்கர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் பேட் செய்த கர்நாடகா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது. அதிகமாக மனோகர் 46 ரன்கள் எடுத்தார்.

    தமிழக அணி சார்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழகம் களமிறங்கியது. ஜெகதீசன் 41 ரன்னும், ஷரி நிஷாந்த் 23 ரன்னும் எடுத்து வெளியேறினர்.

    இறுதிக் கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஷாருக் கான் தமிழக அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். கடைசி ஓவரின் கடைசி பந்தில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஷாருக்கான் பந்தை சிக்சருக்கு பறக்க விட்டு தமிழக அணியை வெற்றி பெறச் செய்தார்.

    இந்நிலையில், கடைசி பந்தில் ஷாருக் கான் சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற வைத்ததை முன்னாள் கேப்டன் டோனி ரசித்துப் பார்த்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

    பலமுறை சிக்சர் அடித்து அணியை வெற்றிபெற வைக்கும் உலகின் தலைசிறந்த ஃபினிஷர் என்று பெயர்பெற்ற டோனி, ஷாருக் கான் கடைசி பந்து சிக்சரை ரசித்த காட்சியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

    சையது முஸ்தாக் அலி கிரிக்கெட் போட்டியில் கர்நாடகா அணிக்கு எதிரான இறுதி போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி கோப்பை கைப்பற்றியது.
    புதுடெல்லி:

    சையது முஸ்தாக் அலி கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு-கர்நாடகா அணிகள் இன்று மோதின. தமிழக அணி கேப்டன் விஜய் சங்கர் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    இதனையடுத்து கர்நாடகா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மனோகர் 46 ரன்கள் எடுத்தார். தமிழக அணி தரப்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழக அணி களமிறங்கியது. 

    தொடக்க ஆட்டக்காரர்களாக ஹரி நிஷாந்த்-ஜெகதீஷன் களமிறங்கினர். முதல் ஓவரில் 9 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். சிறப்பாக ஆடி வந்த நிஷாந்த் ரன் அவுட் முறையில் வெளியேறினார். அவர் 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார். இதில் 2 சிக்சர் 1 பவுண்டரி அடங்கும். 

    அடுத்து வந்த சுதர்சன் 9, சஞ்சய் யாதவ் 5, முகமது 5, என சீரான இடைவேளியில் விக்கெட்டுகளை இழந்தனர். 15-வது ஓவரில் விஜய் சங்கர் 18, ஜெகதீஷன் 41 அடுத்தடுத்து வெளியேறினர். 

    அதிரடியாக விளையாடிய ஷாருக் கான் தமிழக அணிக்கு வெற்றியை தேடி தந்தார். கடைசி ஓவரின் கடைசி பந்தில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஷாருக்கான் பந்தை சிக்சருக்கு பறக்க விட்டு அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். அவர் 15 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். இதில் 1 பவுண்டரி 3 சிக்சர் அடங்கும்.  

    வெற்றி கொண்டாட்டத்தில் தமிழக அணி வீரர்கள்

    சையது முஸ்தாக் அலி கோப்பையை தமிழ்நாடு அணி 3-வது முறையாக கைப்பற்றியுள்ளது.
    சையது முஸ்தாக் அலி கிரிக்கெட் போட்டியில் தமிழகத்துக்கு எதிரான இறுதி போட்டியில் கர்நாடகா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்துள்ளது.

    புதுடெல்லி:

    சையது முஸ்தாக் அலி கோப்பைக்கான அகில இந்திய 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு நடப்பு சாம்பியன் தமிழ்நாடு, கர்நாடகா அணிகள் தகுதி பெற்று இருந்தன.

    இறுதிப்போட்டி டெல்லியில் இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கியது. தமிழக அணி கேப்டன் விஜய் சங்கர் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். 5.1 ஓவர்களில் 32 ரன் எடுப்பதற்குள் கர்நாடகா அணியின் 3 விக்கெட்டை தமிழக வீரர்கள் கைப்பற்றினர்.

    இதனையடுத்து 20 ஓவர் முடிவில் கர்நாடகா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக மனோகர் 46 ரன்கள் எடுத்தார். தமிழக அணி தரப்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழக அணி விளையாடி வருகிறது. தற்போது வரை தமிழக அணி 1 விக்கெட் இழப்புக்கு 29 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பாக ஆடிய ஹரி நிசாந்த் 12 பந்துகளில் 23 ரன்களை எடுத்துள்ளனர். 

    20 ஓவர் கிரிக்கெட்டில் இரண்டு அணியும் 10 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்து உள்ளனர். அதில் 3-ல் தமிழகமும், 6-ல் கர்நாடகமும் வெற்றி பெற்றது. ஒரு ஆட்டம் டை ஆனது.
    புதுடெல்லி:

    13-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. 38 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான விஜய் சங்கர் தலைமையிலான தமிழக அணியும், மனிஷ் பாண்டே தலைமையிலான முன்னாள் சாம்பியன் கர்நாடகாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இன்று(திங்கட்கிழமை) பகல் 12 மணிக்கு நடக்கும் இறுதிப்போட்டியில் மகுடத்துக்காக இவ்விரு அணிகளும் மோதுகின்றன.

    தமிழக அணி அரைஇறுதியில் ஐதராபாத்தை 90 ரன்னில் சுருட்டி மிரட்டியது. வேகப்பந்து வீச்சாளர் சரவணகுமார் 5 விக்கெட்டுகளை அள்ளினார். கர்நாடகா அணி அரைஇறுதியில் விதர்பாவை 4 ரன் வித்தியாசத்தில் போராடி வீழ்த்தியது. இவ்விரு அணிகளும் 2019-ம் ஆண்டு இறுதிப்போட்டியில் சந்தித்த போது அதில் கர்நாடகா ஒரு ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க தமிழக அணி வரிந்து கட்டும் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

    20 ஓவர் கிரிக்கெட்டில் இவர்கள் 10 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்து உள்ளனர். அதில் 3-ல் தமிழகமும், 6-ல் கர்நாடகமும் வெற்றி பெற்றது. ஒரு ஆட்டம் ‘டை’ ஆனது.
    சையத் முஷ்டாக் அலி டிராபியில் விதர்பா அணிக்கு எதிரான போட்டியில் கர்நாடகாவின் தொடக்க ஆட்டக்காரர் ரோகன் கதம் 56 பந்தில் 87 ரன்கள் எடுத்து அசத்தினார்.
    புதுடெல்லி:

    சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான அரையிறுதிச் சுற்றுக்கு தமிழ்நாடு, ஐதராபாத், விதர்பா, கர்நாடகம் ஆகிய அணிகள்  தகுதிபெற்றன.

    இந்நிலையில், நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் தமிழ்நாடு, ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற தமிழகம் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 90 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    தமிழக அணி சார்பில் சரவணன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முருகன் அஷ்வின், முகமது தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 91 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தமிழக அணி களமிறங்கியது. சாய் சுதர்சன் 34 ரன், விஜய் சங்கர் 43 ரன் எடுத்து அணியை வெற்றிபெறச் செய்தனர். இதன்மூலம் தமிழக அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 

    இதேபோல், விதர்பா, கர்நாடகம் அணிகளுக்கு இடையே நடந்த அரையிறுதியில் கர்நாடகம் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

    இதன்மூலம் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் தமிழகம், கர்நாடகா அணியை எதிர்கொள்கிறது.

    போட்டியில் பங்கேற்பதற்கு கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என பிசிசிஐ கூறியிருந்தது

    சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் தமிழக அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஆனால் இந்த அணியில் நட்சத்திர வீரர் முரளி விஜய் இதுவரை இடம்பெறவில்லை. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

    போட்டியில் பங்கேற்பதற்கு கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவதுடன்,  ஒரு வாரத்துக்கு முன்பு கொரோனா தடுப்பு வளையத்தில் கட்டாயம் இருக்குமாறு பிசிசிஐ தெரிவித்திருந்தது.

    ஆனால், முரளி விஜய் தடுப்பூசி போட தயங்குவதுடன், ஒரு வாரம்  தடுப்பு வளையத்தில் இருக்கவும் விரும்பவில்லை என கூறப்படுகிறது.  இதனால், சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டிக்கான அணியில் முரளி விஜய் பெயரை தேர்வுக்குழுவினர் பரிசீலனை செய்யவில்லை என்றும், முரளியால் போட்டியில் பங்கேற்க முடியாது என்றும் ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி முரளி விஜய் தரப்பில் இதுகுறித்து விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. 

    கடந்த வருட ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக விளையாடினார் முரளி விஜய். அதன்பிறகு அவர் வேறு எந்த கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கவில்லை. இந்த வருடம் டிஎன்பிஎல் போட்டியிலிருந்தும் விலகினார். 

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் டிவிஷன் லீக் போட்டியிலும் முரளி விஜய் விளையாடாததால் சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டிக்கு அவரை தேர்வு செய்வதில் தமிழகத் தேர்வுக்குழுவினர் ஆர்வம் செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.
    ×