search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தவான்"

    • பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை சாம் கர்ரன் எடுத்துள்ளார்.
    • ராஜஸ்தான் ஐந்தில் நான்கில் வெற்றி பெற்று 5-வது வெற்றியை பதிவு செய்யும் வகையில் களம் காண்கிறது.

    ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 27-வது லீக் ஆட்டம் இன்று சண்டிகரில் நடக்கிறது. இதில் பஞ்சாப் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    பஞ்சாப் அணியில் இன்று அந்த அணியின் கேப்டன் தவான் களம் இறங்கவில்லை. அதனால் சாம் கர்ரன் கேப்டனாக செயல்படுகிறார்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் வகிக்கிறது. பஞ்சாப் கிங்ஸ் 5-ல் இரண்டு வெற்றிகளுடன் 8-வது இடத்தை பெற்றுள்ளது.

    • இந்திய அணியில் பேட்டிங்கில் 4-வது வரிசையில் அனுபவம் வாய்ந்த சூர்யகுமார் யாதவை இறக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.
    • இந்த முறை உலகக் கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு அதிக வாய்ப்புள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட தொடக்க ஆட்டக்காரர் 37 வயதான ஷிகர் தவான் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியில் எனது பெயர் இடம் பெறாதது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. அதன் பிறகு மனதை தேற்றிக் கொண்டேன். கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அணியில் இடம் பிடித்துள்ள இளம் வீரர்கள் அனைவரும் சிறப்பாக ஆடுவார் என்று நம்புகிறேன்.

    இந்திய அணிக்கு நான் திரும்புவதற்கு தயாராக இருப்பேன். அதனால் தான் உடல்தகுதியை நல்ல நிலையில் வைத்திருக்க தொடர்ந்து பயிற்சி மேற்கொள்கிறேன். எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் அதற்கு நான் தயார். கிரிக்கெட்டை நான் இன்னும் அனுபவித்து விளையாடுகிறேன். இதே போல் பயிற்சியிலும் உற்சாகமாக ஈடுபடுகிறேன். இவை எல்லாம் எனது கட்டுப்பாட்டில் உள்ள விஷயங்கள். எனது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து தேர்வாளர்களிடம் பேசவில்லை.

    அடுத்த கட்டமாக ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு தயாராக வேண்டும். அடுத்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஐ.பி.எல். கோப்பையை வெல்ல முடியும் என்று நம்புகிறேன். இதே போல் சயத் முஷ்டாக் அலி மற்றும் விஜய் ஹசாரே கோப்பை போட்டிகளிலும் விளையாடுவேன்.

    இவ்வாறு தவான் கூறினார்.

    'உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் பேட்டிங்கில் 4-வது வரிசையில் அனுபவம் வாய்ந்த சூர்யகுமார் யாதவை இறக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அனுபவமும், இளமையும் கலந்த அணியாக நம்மிடம் உள்ளது. அத்துடன் பரிச்சயமான மைதானம் மற்றும் சாதகமான உள்ளூர் சூழலில் நடப்பதால் இந்த முறை உலகக் கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு அதிக வாய்ப்புள்ளது' என்றும் தவான் குறிப்பிட்டார்.

    • 2வது ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக தீபக் ஹூடா சேர்க்கப்பட்டார்.
    • சாஹர் இரு திசைகளிலும் பந்தை ஸ்விங் செய்வதில் திறமையானவர் என்பதால் அவரை அணிக்குள் எடுத்தோம்.

    ஹாமில்டன்:

    நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஆக்லாந்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நேற்று நடைபெற்றது. ஹாமில்டனில் பெய்த மழை காரணமாக அந்த மழை போட்டி ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. இதனால் வரும் 30ஆம் தேதி நடைபெறும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை சமன் செய்ய முடியும். ஒருவேளை அந்த போட்டியும் மழையால் கைவிடப்பட்டால் ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றும்.

    இந்நிலையில், 2வது ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக தீபக் ஹூடா சேர்க்கப்பட்டார். டி20 தொடரில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. முதல் ஒருநாள் போட்டியில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் 2வது போட்டியில் வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து கேப்டன் தவானிடம் கேட்டபோது அவர் கூறியதாவது, நாங்கள் 6வது பந்துவீச்சாளர் வேண்டும் என விரும்பினோம். அதனால் சஞ்சு சாம்சன் வெளியேற்றப்பட்டார். ஹூடா அணிக்குள் வந்தார். மேலும், சாஹர் இரு திசைகளிலும் பந்தை ஸ்விங் செய்வதில் திறமையானவர் என்பதால் அவரை அணிக்குள் எடுத்தோம் என்றார்.

    ×