search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "K Veeramani"

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் மோடி அளித்த வாக்குறுதிகள் கேள்விக்குறியாகி விட்டது என்று, மன்னார்குடியில் கி.வீரமணி கூறினார்.
    மன்னார்குடி:

    மன்னார்குடியில் தஞ்சை பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தை ஆதரித்து திராவிடர் கழகம் சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் சித்தார்த்தன் தலைமை தாங்கினார். செயலவை தலைவர் அறிவுக்கரசு, பொதுச்செயலாளர் துரைசந்திரசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சித்தமல்லி சோமசுந்தரம், ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கால்பந்தாட்டத்தில் வெற்றி வாய்ப்பு கை நழுவிப் போய்விடும் என தெரிந்தவுடன் பந்தை விட்டுவிட்டு எதிராளிகளின் காலை உதைப்பதுபோல மக்களவை தேர்தலில் பா.ஜனதா கட்சியின் தோல்வி உறுதி என்பதை உணர்ந்து கொண்ட அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா கட்சியினர் தேர்தல் பிரசார கூட்டங்களில் தரம் தாழ்ந்து பேசி வருகின்றனர். கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் பணம் செலுத்தப்படும் என மோடி அளித்த வாக்குறுதி என்னஆனது? விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது? 2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற வாக்குறுதிகள் என்ன ஆனது?

    கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது மோடி அளித்த வாக்குறுதிகள் கேள்விக்குறியாகி விட்டது. விவசாயிகளின் வருமானம் 2 மடங்கு உயர்த்தப்படும் என்றார்கள். ஆனால் கடந்த 2015-ம் ஆண்டில் மட்டும் 12 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு பின் பா.ஜனதாவிடம் அடகு வைக்கப்பட்டுள்ள தமிழகத்தின் உரிமைகள் மீட்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    தொடர்ந்து தி.மு.க வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தனக்கு ஆதரவு திரட்டி பேசினார்.

    கூட்டத்தில் தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் பாலு, மாநில மாணவரணி செயலாளர் சோழராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    பாராளுமன்ற தேர்தலில் நடிகர்களால் பாதிப்பு இல்லை என்று திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். #kveeramani #parliamentelection

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு, ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தி.க. தலைவர் கி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ஜனதா மூழ்கும் கப்பல், வரும் பாராளுமன்ற தேர்தலில் நடிகர்களால் எந்த பாதிப்பும் இல்லை. ரஜினிகாந்த் இன்னும் அரசியலுக்கு வரவில்லை. அவர் கலைத்துறையில் மட்டுமே உள்ளார்.

    திராவிடர் கழக சமூக நீதி மாநாடு, வருகிற 23 மற்றும் 24-ந் தேதிகளில் தஞ்சையில் நடைபெற உள்ளது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அனைத்து தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.


    இட ஒதுக்கீடு, சமூக நீதி குறித்த தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்படுகின்றன. தேர்தலில் மக்களின் கடமைகள் என்ன என்பது குறித்தும் விளக்கப்பட உள்ளது. 

    இவ்வாறு அவர் கூறினார். #kveeramani #parliamentelection

    திராவிட கழகம் சார்பில் இயக்குநர் மீரா கதிரவனுக்கு பெரியார் விருது வழங்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த மீரா கதிரவன், இதனை தனது வாழ்வின் உயரிய விருதாக கருதுவதாக கூறினார். #MeeraKathiravan #PeriyarAward
    `அவள் பெயர் தமிழரசி', `விழித்திரு' உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமான மீரா கதிரவனுக்கு பெரியார் விருது வழங்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து மீரா கதிரவன் கூறும்போது,

    என்னுடைய இரண்டு படங்களையும் பல்வேறு அமைப்புகள் பாராட்டி விருதுகள் வழங்கியிருகின்றன. எனது முதல் படமான அவள் பெயர் தமிழரசி, திரைக்கு வருவதற்கு முன்பே துபாய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறப்பு கவனத்தைப் பெற்றது. இப்போது, திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தினரால் வருடந்தோறும் வழங்கப்படும் பெரியார் விருது இந்த ஆண்டு எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது.



    இந்த பெரியார் விருதானது கடந்த 1995 முதல் கடந்த 24 வருடங்களாக சமூகம் மற்றும் கலை, பண்பாட்டுத் தளங்களில் முக்கிய பங்காற்றி சிறந்து விளங்கி வரும் ஆளுமைகளூக்கு வழங்கப்படுகிறது. சென்ற வருடங்களில் திரைப்பட துறையிலிருந்து இயக்குநர்கள்  ராஜு முருகன், கோபி நயினார், நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர்  பார்த்திபன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

    தமிழர் பண்பாட்டு கலைகளை முதன்மைப்படுத்தியும், திரைநுட்பங்களில் தேர்ந்தும், திரைப்படங்களை வழங்கிடும் படைப்பூக்கத்தைப் பாராட்டும் வகையில் இந்த வருடம் திரைப்படத் துறையிலிருந்து என்னை சிறந்த இயக்குநராக தேர்ந்தெடுத்து, பெரியார் விருதினை வழங்கியுள்ளார்கள். மனிதர்கள் சாதி, மதம், இனம் எல்லாவற்றையும் கடந்து மனிதர்களாக வாழ்வதற்கு பெரியாரின் சித்தாந்தங்கள் மிக முக்கிய காரணமாக இருக்கிறது. பெரியார் இன்றளவும் இளைஞர்கள் மத்தியில் மிக அழுத்தமான செல்வாக்கினை செலுத்திக் கொண்டு இருக்கிறார். அவருடைய பெயரில் வழங்கப்படும் இந்த விருதை என் வாழ்வின் உயரிய விருதாக கருதுகிறேன். 



    இந்த விருதை வழங்கிய திராவிட கழக தலைவர், திரு.கி.வீரமணி அவர்களுக்கும், திராவிடர் கழக தோழர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த விருதானது சமரசமின்றி இன்னும் காத்திரமாக, தீவிரமாக, பொறுப்புடன் இயங்குவதற்கான நம்பிக்கையையும், உத்வேகத்தையும் தந்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றார். #MeeraKathiravan #PeriyarAward

    10 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து சட்டரீதியான போராட்டங்கள் நடத்தப்படும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். #EconomicalWeakerSectionQuota #Veeramani
    சென்னை:

    சென்னையில் திராவிட கட்சியின் தலைமை அலுவலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னர் தி.க. தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இது அரசியல் சட்டத்திற்கு புறம்பானது. இட ஒதுக்கீடு என்பது சமூக ரீதியாக சாதியின் அடிப்படையில்தான் வழங்க முடியும். பொருளாதார அடிப்படையில் வழங்க முடியாது.

    பொருளாதார அடிப்படையில் உயர் சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து  சட்டரீதியான போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தார்.

    இதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு தொடரப்படும் என குறிப்பிட்டார்.

    ஏற்கனவே, பொருளாதார அடிப்படையில் உயர் சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து திமுக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #EconomicalWeakerSectionQuota #Veeramani
    திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கருப்பு சால்வை போர்த்தி அஞ்சலி செலுத்தினார். #RIPKalaignar #கலைஞர் #DMK #RIPKarunanidhi
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து முதலில் கோபாலபுரம் இல்லத்தில் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதையடுத்து, அங்கிருந்து சிஐடி காலனிக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து கருணாநிதியின் உடல்  ராஜாஜி அரங்கத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு, கருணாநிதி உடலுக்கு முப்படை வீரர்கள் தேசியக் கொடி போர்த்தி அரசு மரியாதை செலுத்தினர்.

    அதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, கருணாநிதி உடலுக்கு கருப்பு சால்வை போர்த்தி அஞ்சலி செலுத்தினார். இதேபோல் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, தங்கமணி, காமராஜ் ஆகியோரும் கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

    தங்கள் பாசமிகு தலைவனை கடைசியாக ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என்பதற்காக ராஜாஜி அரங்கத்திற்கு திமுக தொண்டர்கள் படையெடுத்தவண்ணம் உள்ளனர்.
    பிற்படுத்தப்பட்டவர் அர்ச்சகர் ஆனது கலைஞர் கருணாநிதிக்கு கிடைத்த வெற்றி என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
    தென்காசி:

    திராவிடர் கழகம் சார்பில் குற்றாலத்தில் கடந்த 2-ந்தேதி முதல் நேற்று வரை பயிற்சி பட்டறை நடைபெற்றது. 110 மாணவர்கள் பயிற்சி பெற்றனர். இறுதிநாளான நேற்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

    சாதி மற்றும் தீண்டாமை ஒழிப்புக்காக பெரியார் தனது வாழ்நாளின் இறுதி வரை போராடினார். கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று போராடி வந்தார். இந்த போராட்டத்தின் காரணமாக சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை இயற்றுவதற்கு கலைஞர் கருணாநிதி தான் முழு காரணம். அவர் உடல்நலம் தேறி வருகிறார்.

    தற்போது இந்த சட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது. இது கலைஞருக்கு கிடைத்த வெற்றி. மதுரையில் ஒரு கோவிலில் பிற்படுத்தப்பட்ட ஒருவர் அர்ச்சகராகி உள்ளார். இதனை பாராட்டுகிறேன். மு.க.ஸ்டாலினும் இதற்கு வரவேற்பு அளித்துள்ளார்.

    தமிழகத்தில் உள்ள 38 ஆயிரம் கோவில்களில் 2 ஆயிரம் பேர் மட்டுமே ஆகம விதிகளின்படி உள்ள அர்ச்சகர்களாக உள்ளனர். மற்ற அர்ச்சகர்கள் ஆகம விதிகள் அறியாதவர்கள். தற்போது அரசு நடத்தும் இதற்கான பயிற்சி பள்ளிகளில் படித்து வேலை கிடைக்காமல் கஷ்டப்படுபவர்களுக்கு பணி கொடுக்க வேண்டும். இதில் எந்த கட்டுப்பாடும் தேவையில்லை.

    சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திலேயே கூறப்பட்டுள்ளது. எனவே இந்த பயிற்சி பள்ளிகளில் பெண்களையும் சேர்க்க வேண்டும். கோவில்களில் பெண்களும் அர்ச்சகர்களாக வேண்டும். நீட் தேர்வு தொடர்பாக சட்டம் இயற்றப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் ஜனாதிபதிக்கு அது அனுப்பப்படவில்லை. எதை கூறினாலும் தலையாட்டும் அளவுக்கு மாநில அரசு இருக்கக்கூடாது.

    தமிழக அரசின் செயல்பாடுகளில் சில நடவடிக்கைகள் ஏற்றுக் கொள்ளும்படி உள்ளன. சில நடவடிக்கைகள் ஏற்றுக் கொள்ள முடியாத அளவில் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.பிற்படுத்தப்பட்டவர் அர்ச்சகர் ஆனது கருணாநிதிக்கு கிடைத்த வெற்றி - கி.வீரமணி

    தென்காசி:

    பிற்படுத்தப்பட்டவர் அர்ச்சகர் ஆனது கலைஞர் கருணாநிதிக்கு கிடைத்த வெற்றி என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

    திராவிடர் கழகம் சார்பில் குற்றாலத்தில் கடந்த 2-ந்தேதி முதல் நேற்று வரை பயிற்சி பட்டறை நடைபெற்றது. 110 மாணவர்கள் பயிற்சி பெற்றனர். இறுதிநாளான நேற்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

    சாதி மற்றும் தீண்டாமை ஒழிப்புக்காக பெரியார் தனது வாழ்நாளின் இறுதி வரை போராடினார். கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று போராடி வந்தார். இந்த போராட்டத்தின் காரணமாக சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை இயற்றுவதற்கு கலைஞர் கருணாநிதி தான் முழு காரணம். அவர் உடல்நலம் தேறி வருகிறார்.

    தற்போது இந்த சட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது. இது கலைஞருக்கு கிடைத்த வெற்றி. மதுரையில் ஒரு கோவிலில் பிற்படுத்தப்பட்ட ஒருவர் அர்ச்சகராகி உள்ளார். இதனை பாராட்டுகிறேன். மு.க.ஸ்டாலினும் இதற்கு வரவேற்பு அளித்துள்ளார்.

    தமிழகத்தில் உள்ள 38 ஆயிரம் கோவில்களில் 2 ஆயிரம் பேர் மட்டுமே ஆகம விதிகளின்படி உள்ள அர்ச்சகர்களாக உள்ளனர். மற்ற அர்ச்சகர்கள் ஆகம விதிகள் அறியாதவர்கள். தற்போது அரசு நடத்தும் இதற்கான பயிற்சி பள்ளிகளில் படித்து வேலை கிடைக்காமல் கஷ்டப்படுபவர்களுக்கு பணி கொடுக்க வேண்டும். இதில் எந்த கட்டுப்பாடும் தேவையில்லை.

    சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திலேயே கூறப்பட்டுள்ளது. எனவே இந்த பயிற்சி பள்ளிகளில் பெண்களையும் சேர்க்க வேண்டும். கோவில்களில் பெண்களும் அர்ச்சகர்களாக வேண்டும். நீட் தேர்வு தொடர்பாக சட்டம் இயற்றப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் ஜனாதிபதிக்கு அது அனுப்பப்படவில்லை. எதை கூறினாலும் தலையாட்டும் அளவுக்கு மாநில அரசு இருக்கக்கூடாது.

    தமிழக அரசின் செயல்பாடுகளில் சில நடவடிக்கைகள் ஏற்றுக் கொள்ளும்படி உள்ளன. சில நடவடிக்கைகள் ஏற்றுக் கொள்ள முடியாத அளவில் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.
    நீட் தேர்வு பற்றிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #KVeeramani #Neetexam

    சென்னை:

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நீட் தேர்வு குளறுபடி காரணமாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு வரவேற்கத்தக்க மிகச் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட நீதி இது. கருணை மதிப்பெண்கள் என்பதை விட நியாயமாக அளிக்கப்பட வேண்டிய மதிப்பெண்களே இவை என்பதுதான் சரியானது.

    மேல்முறையீடு என்று கூறி, இந்த நியாயமான, மனிதாபிமான தீர்ப்பைப் புறந்தள்ளும் முயற்சியில் சி.பி.எஸ்.இ. ஈடுபடக் கூடாது என்பதே சமூக நீதி யாளர்களின் ஒடுக்கப்பட்ட மக்களின் விருப்பமும், கருத்துமாகும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். #KVeeramani #Neetexam

    நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுகிறது என்று மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க இதுவே சரியான தருணம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
    சென்னை :

    திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று கோரி மக்கள் நடத்திய போராட்டத்தை ஒடுக்க எந்தவித விதிமுறைகள், நியதிகளைப் பின்பற்றாமல் போலீசார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தைப் பார்க்கும்போது இனி போராட்டம், மக்கள் பேரணி என்று நடத்தினால் துப்பாக்கிச்சூடு தான் என்று அச்சுறுத்துவதற்காகவே நடத்தப்பட்டதாக கருத வேண்டி உள்ளது.

    நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுகிறது என்று மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க இதுவே சரியான தருணம். இதில் சுணக்கம் காட்டப்படுமேயானால், மக்கள் போராட்டம் என்பது கலவரமாக எங்கும் பரவக்கூடிய ஆபத்து இருப்பதை அரசு உணரத் தவறக் கூடாது.

    துப்பாக்கி சூடு பற்றி விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தீர விசாரித்து அறிக்கையை வழங்குவார் என்று எதிர்பார்க்கிறோம்.

    துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்த தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்கு தொடுத்திருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    மத்திய அரசு தலையீடு இல்லாமல் காவிரி ஆணையம் செயல்பட வேண்டும் எனவும் இதற்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கி.வீரமணி கூறியுள்ளார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சையில் விடுதலை விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திராவிட கழக தலைவர் கி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். காலூன்ற முயற்சி செய்து தனியார் பள்ளிகளில் பயிற்சி முகாம்களை நடத்துகிறது. இதற்கு தமிழக அரசு அனுமதி கொடுத்திருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. மதசார்பின்மை கட்சிகள் ஒன்று சேர வேண்டிய சூழ்நிலையை கர்நாடக தேர்தல் உண்டாக்கி விட்டது. இந்த நல்ல ஒற்றுமையை பிரதமர் மோடி தன்னுடைய அதீத நடவடிக்கையின் மூலமாக உருவாக்கியிருக்கிறார். இதுவரை ஒதுங்கியிருந்த கேரளா, ஆந்திரா, புதுச்சேரி முதல் மந்திரிகள், கர்நாடக எம்.எல்.ஏ.க்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறோம் என்று கூறி உள்ளனர்.

    மதர்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து பா.ஜனதாவை எதிர்க்க கூடிய கூட்டணி வர வேண்டும். இதன் மூலம் தான் இந்த தேசத்தை காப்பாற்ற முடியும், சமூக நீதியையும் காப்பாற்ற முடியும். நீட் தேர்வு நிலை பெற்று விடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து ஒத்த கருத்துடையவர்களுடன் இணைந்து நாங்கள் போராட்டத்தை நடத்தி வருகிறோம்.

    காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் திருத்தப்பட்ட மத்திய அரசு திட்டத்தை ஏற்கிறோம் என்று சொல்லியிருப்பது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. ஆணையமா? அல்லது வாரியமா? என்பது முக்கியமல்ல. நடுவர் மன்ற தீர்ப்பு படி நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்க வேண்டும். மத்திய அரசு தலையீடு இல்லாமல் ஆணையம் செயல்பட வேண்டும். இதற்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    போலீசுக்கு சவால் விடும் எஸ்.வி.சேகரை கைது செய்யாவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் ஒன்று திரட்டி பெரும் போராட்டம் நடத்துவோம் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    சென்னை:

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பா.ஜனதா பிரமுகர் எஸ்.வி.சேகர் ஊடகத் துறைகளைச் சேர்ந்த பெண்களை இழிவுபடுத்தி, சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார்.

    அவர்மீது, அமைதியை சீர்குலைப்பது, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில், தலைமறைவான எஸ்.வி.சேகர் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு போட்டும், நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்து விட்டதோடு, கடுமையாக நீதிபதி சாடியும் உள்ளார்.

    இந்தச் சூழ்நிலையில், அந்தப் பேர்வழி, சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொண்டுள்ளார். அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்துள்ளார்.

    செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எஸ்.வி.சேகர் ஒரு விழா நிகழ்ச்சியில் பங்கு கொண்டதையும், தனக்கு வணக்கம் தெரிவித்ததையும் ஒப்புக் கொண்டுள்ளார்.

    இதைவிடக் கொடுமை என்னவென்றால், நான் சென்னையில்தானிருக்கிறேன். காவல்துறை முடிந்தால் கைது செய்து பார்க்கட்டும் என்று சவால் விடுத்துள்ளார்.

    சென்னைப் பெருநகரக் காவல்துறை அவரைக் கைது செய்யாதது ஏன்? ஒரே நேரத்தில் 62 ரவுடிகளைப் பிடித்துச் சாதனை படைத்த திறமைக்குச் சொந்தமானது சென்னைப் பெருநகரக் காவல்துறையும் சிறப்பான ஆணையரும்.

    எஸ்.வி.சேகர் வி‌ஷயத்தில் கைகட்டிக் கொண்டு இருப்பது ஏன்? யாருடைய கட்டளையால் இந்த நிலை? தமிழக அரசின் தலைமைச் செயலாளரே பின்னணியில் இருக்கிறார் என்ற கருத்துப் பரவலாக இருக்கிறதே!

    சவால் விடும் அந்தப் பேர்வழியை இன்றே கைது செய்யாவிட்டால், அனைத்துக் கட்சிகளையும் ஒன்று திரட்டி பெரும் போராட்டத்தை நடத்த நேரிடும் என்று எச்சரிக்கின்றோம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    போலீசாருக்கே சவால் விடும் எஸ்.வி. சேகரை கைது செய்யாவிட்டால், அனைத்துக் கட்சிகளையும் ஒன்று திரட்டி பெரும் போராட்டத்தை நடத்த நேரிடும் என்று கி.வீரமணி கூறியுள்ளார்.
    சென்னை:

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பா.ஜ.க. பிரமுகர் எஸ்.வி.சேகர் ஊடகத் துறைகளைச் சேர்ந்த பெண்களை இழிவுபடுத்தி, கொச்சைப்படுத்தி சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார். பெண்கள் மட்டுமல்ல, அனைவரும் கடுமையான வகையில் கண்டனத்தை தெரிவித்து, வழக்குத் தொடுக்கப்பட்ட நிலையில் அவர்மீது, வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அவரது முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    இந்த சூழ்நிலையில், அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், எஸ்.வி.சேகர் ஒரு விழா நிகழ்ச்சியில் பங்கு கொண்டதையும், தனக்கு வணக்கம் தெரிவித்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார். இதைவிடக் கொடுமை என்னவென்றால், நான் சென்னையில் தான் இருக்கிறேன். காவல்துறை முடிந்தால் கைது செய்து பார்க்கட்டும் என்று சவால் விடுத்துள்ளார்.

    காவல்துறை எஸ்.வி.சேகர் விஷயத்தில் கைகட்டிக் கொண்டு இருப்பது ஏன்?. யாருடைய கட்டளையால் இந்த நிலை?. தமிழக அரசின் தலைமைச் செயலாளரே பின்னணியில் இருக்கிறார் என்ற கருத்துப் பரவலாக இருக்கிறதே. உடனே, சவால் விடும் எஸ்.வி. சேகரை கைது செய்யாவிட்டால், அனைத்துக் கட்சிகளையும் ஒன்று திரட்டி பெரும் போராட்டத்தை நடத்த நேரிடும் என்று எச்சரிக்கின்றோம்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். #tamilnews
    ×