search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "House"

    • கட்டுப்பாட்டை இழந்த கிரேன் பார்த்தியநாதனின் மகன் ஜெரால்டு குடியிருக்கும் வீட்டின் மீது வேகமாக மோதியது.
    • மெட்ரோ ரெயில் பணியில் ஈடுபட்டு வந்த ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    போரூர்:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிகள் தொடங்கப்பட்டு வேகமாக நடந்து வருகிறது.

    மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், கலங்கரைவிளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரையிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை என 3 வழித்தடங்களில் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதற்காக போருர் ஏரி அருகே சாலையின் நடுவே பள்ளம் தோண்டப்பட்டு ராட்சத தூண்கள் அமைக்கும் பணியில் இரவு பகலாக நடந்து வருகிறது.

    இதையொட்டிய அஞ்சுகம் நகரில் வசித்து வருபவர் பார்த்திய நாதன். 2 தளம் கொண்ட இவரது வீட்டின் மாடியில் 3 வீடுகள் உள்ளன. இதில் ஒருவீட்டில் மகன் ஜெரால்டு, அவரது மனைவி அஸ்வினி, மகன் ஷியாம், மகள் யாஷிகா ஆகியோரும், மற்றொரு வீட்டில் 2-வது மகனும், இன்னொரு வீட்டை வாடகைக்கும் விட்டு உள்ளனர். கீழ்தளத்தில் உள்ள வீட்டில் பார்த்தியநாதன் மனைவியுடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் பார்த்தியநாதன் வீட்டை ஒட்டிய பகுதியில் மெட்ரோ ரெயில் பணி நடைபெற்றது. அப்போது அங்கிருந்து ராட்சத கிரேனை ஊழியர்கள் இயக்க திருப்பினர். இதில் கட்டுப்பாட்டை இழந்த கிரேன் பார்த்தியநாதனின் மகன் ஜெரால்டு குடியிருக்கும் வீட்டின் மீது வேகமாக மோதியது.

    இதில் வீட்டின் தடுப்பு சுவர்கள் மற்றும் மேல்பகுதி ஷீட்டுகள் பயங்கர சத்தத்துடன் உடைந்து விழுந்தன. அந்த நேரத்தில் வீட்டில் இருந்த அஸ்வினி தனது மகன்ஷியாம், மகள் அஸ்வினியை வெளியே உள்ள கழிவறைக்கு அழைத்து சென்று இருந்தார். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். அஸ்வினியின் கணவரான கார்டிரைவர் ஜெரால்டு வெளியே சென்று இருந்ததால் அவர் வீட்டில் இல்லை. வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்ததில் பிரோ, கட்டில், மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்தன.

    கிரேன் மோதியதில் அருகில் இருந்த மற்ற 2 வீடுகள் மற்றும் கீழ்தளத்தில் உள்ள வீடு குலுங்கியது. சுவர்களிலும் விரிசல் விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வீடுகளில் இருந்த வர்கள்அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    கிரேன் பலமாக மோதி இருந்தால் அந்த கட்டிடம் முழுவதும் பலத்த சேதம் அடைந்து இருக்கும். அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை.

    இதுபற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    அவர்கள் மெட்ரோ ரெயில் பணியில் ஈடுபட்டு வந்த ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பதட்டமான நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் மெட்ரோ பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    விபத்து ஏற்படுத்திய இந்த ராட்சத கிரேன் மெட்ரோ ரெயில் பணியில் துளையிட பயன்படுத்தப்படும் எந்திரம் ஆகும். சுமார் 100 டன் எடை கொண்டது. 200 அடிக்கு மேல் உயரம் செல்லும் வசதி கொண்டது. சாய்வாக இருக்கும் இந்த எந்திரத்தை பயன்படுத்த செங்குத்தாக நிலை நிறுத்த வேண்டும். அப்படி நிலை நிறுத்தும்போது அருகில் இருந்த வீட்டை கவனிக்காமல் கிரேனை இயக்கிய ஆபரேட்டர் கவனக் குறைவாக செயல்பட்டதால் விபத்து ஏற்பட்டு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து மெட்ரோ அதிகாரிகள் மற்றும் போரூர் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வீடு புகுந்து நகை-பணம் திருட்டு நடந்தது.
    • வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார்.

    மதுரை

    திருநகர் பாலசுப்பிரமணி யம் நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மகன் ஆதி (வயது 25). இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது முன்கத வின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 3½ பவுன் நகை, வெள்ளி பொருட்கள், ரூ.10 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. யாரோ மர்ம நபர்கள் பாலசுப்பிரமணியம் வெளியூர் சென்றதை நோட்டமிட்டு நகை-பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

    இதுகுறித்து திருநகர் போலீஸ் நிலையத்தில் பாலசுப்பிரமணியம் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்களில் ‘கியூ ஆர்’ கோடு ஒட்டும் பணியில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
    • கியூஆர்’ கோடு மூலம் வரிகள், புகார்களை வீடுகளில் இருந்து செய்ய முடியும்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி உத்தரவின் படி மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா, சுகாதார அலுவலர் சாகுல் அமீது ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் நெல்லை மாநகராட்சியில் வீடுவீடாக 'கியூ ஆர்' கோடு ஒட்டும் மணி தீவிரமடைந்துள்ளது.

    அதன்படி தச்சை மண்டலத்திற்கு உட்பட்ட நெல்லை சந்திப்பு செல்வி அம்மன் கோவில் பகுதியில் சுகாதார ஆய்வாளர் முருகன் தலைமையில் துப்புரவு ஆய்வாளர் ஜானகிராமன், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் சங்கர், மகாலட்சுமி, சந்துரு, இசக்கி, ஆறுமுகம், பிரேமா, கணேசன், முருகன், வகாப், ராஜசேகர், சுரேஷ், கிருஷ்ணன் ஆகியோரை கொண்ட குழுவினர் வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்களில் 'கியூ ஆர்' கோடு ஒட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இந்த 'கியூஆர்' கோடு மூலம் சொத்து வரி, தொழில்வரி, பிறப்பு, இறப்பு சான்றிதழ், வரைபட அனுமதி தொழில் நிலுவைத் தொகை, தெருக்களில் உள்ள புகார்கள் அனைத்தையும் வீடு மற்றும் கடைகளில் இருந்து செய்ய முடியும். 

    • பண்ணப் பட்டி மாட்டுக்காரன்புதூர் பகுதியை சேர்ந்தவர் ரவி குமார் சமையல் அறையில் கியாஸ் சிலிண்டர் பயன்படுத்தி சமையல் செய்து வந்தார்.
    • நேற்று ரெகுலேட்டர் டியூப்பில் கியாஸ் கசிவு ஏற்பட்டுள்ளது.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடை யாம்பட்டி அருகே பண்ணப் பட்டி மாட்டுக்காரன்புதூர் பகுதியை சேர்ந்தவர் ரவி குமார் (வயது 45). தொழி லாளி. இவர் வீட்டில் சமையல் அறையில் கியாஸ் சிலிண்டர் பயன்படுத்தி சமையல் செய்து வந்தார்.

    நேற்று ரெகுலேட்டர் டியூப்பில் கியாஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை அவரது குடும்பத்தினர் கவனிக்கவில்லை. இதனால் கியாஸ் கசிவு சமயல் அறை முழுவதும் பரவி தீப்பிடித்தது.

    இதனை கண்ட ரவிகுமார் குடும்பத்தினர் உடனடியாக காடையாம்பட்டி தீய ணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். காடை யாம்பட்டி நிலைய அலுவ லர் ராஜசேகரன் தலைமை யில் தீயணைப்புத் துறையி னர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இத னால் தீ மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.

    • சேலம் மரவனேரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வீட்டின் பூட்டை உைத்து மர்ம நபர்கள் 38 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
    • சேலம் மாவட்டம் காரிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டிலும் 6 1/2 பவுன் தங்க நகைகளை திருடியது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் மரவனேரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வீட்டின் பூட்டை உைத்து மர்ம நபர்கள் 38 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

    இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்த நிலையில், இன்று காலை இந்தக் கொள்ளை வழக்கில் தொடர்புடைய, கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் ரஞ்சித் (வயது 25), கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த சோமாசிபாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் குமரவேல் (23) ஆகிய இருவரையும் கைது செய்தனார்.

    மேலும் அவர்களிடம் இருந்து 20 பவுன் நகைகளை போலீசார் மீட்டுள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மற்றொருவரையும் தேடி வருகின்றனர். போலீசார் விசாரணையில், இந்த கொள்ளையர்கள் சேலம் மாவட்டம் காரிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டிலும் 6 1/2 பவுன் தங்க நகைகளை திருடியது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பழனிசாமி நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றிருந்தார்.
    • புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் தாயம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 55 ). விவசாயி. இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றிருந்தார். பின்னர் மதியம் வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்ததில் வீட்டில் பீரோவில் வைத்திருந்த ரூ. 2 லட்சம் பணம் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து பழனிசாமி அவினாசி பாளையம் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அவிநாசிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டுகள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விவசாயிகள், பொதுமக்கள் ஏற்கனவே புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • தினமும் இரவு அருகில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுவது வழக்கம்.
    • குன்னத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

    குன்னத்தூர் :

    குன்னத்தூர் கருங்கல் மேட்டை சேர்ந்தவர் வளர்மதி (வயது 52). இவர் தனியாக வசித்து வருகிறார். தினமும் இரவு அருகில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுவது வழக்கம். அப்போது தனது வீட்டை பூட்டாமல் சென்று வந்துள்ளார். நேற்று இரவு வீட்டில் வைத்திருந்த 8 பவுன் தங்க நகை மற்றும் பணம் ரூ.35 ஆயிரத்தை மர்ம நபர் யாரோ திருடி சென்று விட்டதாக குன்னத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

    புகாரை பெற்றுக் கொண்ட குன்னத்தூர் போலீசார் அருகில் உள்ள நபர்களை கண்காணித்து வந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் விஜயகுமார் ( 29) ஒயின்ஷாப்பில் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு அனைவரிடமும் பணத்தை காண்பித்து உள்ளார். உடனே குன்னத்தூர் போலீசார் விஜயகுமாரை விசாரணை செய்தபோது வளர்மதி வீட்டில் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். 

    • கடந்த 2003 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் 110 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது.
    • அந்த பகுதியில் மாற்று மதத்தை சேர்ந்தவர்களுக்கு பட்டா வழங்கப்படுவதாக தெரிகிறது.

    நெல்லை:

    மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் மானூர் லெட்சுமியாபுரம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு ஒரு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    மானூர் லெட்சுமியாபுரத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலமாக கடந்த 2003 மற்றும் 2012-ம் ஆண்டு களில் எட்டான் குளம், மானூர் வடக்குத் தெரு கரையிருப்பை சேர்ந்த 110 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது.

    அந்த இடத்தில் சிலர் வீடு கட்டி மின் இணைப்பு, வாக்காளர் அட்டை உள்ளிட்ட அனைத்தையும் மாற்றம் செய்து குடியிருந்து வருகின்றனர். ஒரு சிலர் வீடு கட்ட முடியாத நிலையில் உள்ளனர். இந்நிலையில் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி தாசில்தார் மற்றும் சில அதிகாரிகள் எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் ஜே.சி.பி. எந்திரம் கொண்டு பட்டா இடத்தை அகற்றி வருகிறார்கள்.

    மேலும் இந்த பகுதியில் மாற்று மதத்தை சேர்ந்தவர்களுக்கு பட்டா வழங்கப்படுவதாக தெரிகிறது. இதனால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அந்த பகுதியில் நாங்கள் வீடு கட்டி குடியிருக்க அரசும், மாவட்ட நிர்வாக மும் நடவடிக்கை எடுத்து அனுமதி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மருத்துவ செலவுக்காக என்னிடம் அண்ணன் முருகேசன் பணம் கேட்டார் .
    • வீட்டை எனது பெயரில் அண்ணன் முருகேசன் கிரயம் செய்து கொடுத்துள்ளார்.

    திருப்பூர் :

    தாராபுரம் வேங்கிபாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி மல்லிகா (வயது 42) என்பவர் திருப்பூர் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனது அண்ணன் முருகேசன் பெருந்தொழுவில் வசித்து வருகிறார். அவரது மனைவி தங்கமணி.

    இவர்களுக்கு குழந்தையில்லை. இந்நிலையில் தங்கமணிக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. அதற்கான மருத்துவ செலவுக்காக என்னிடம் அண்ணன் முருகேசன் பணம் கேட்டார் . நானும் கொடுத்தேன். இந்தநிலையில் நான் கொடுத்த பணம் போதவில்லை. அதனால் பெருந்தொழுவில் உள்ள வீட்டை முருகேசன் விற்க முடிவெடுத்தார். அது குறித்து நான் கேட்டபோது வீட்டை நீ வேண்டுமானால் வாங்கி கொள் என்று சொன்னார். அதன்படி அந்த வீட்டுக்கு ரூ. 14 லட்சத்தை கிரயத்தொகையாக வங்கியில் செலுத்தியுள்ளேன். அந்த வீட்டை எனது பெயரில் அண்ணன் முருகேசன் கிரயம் செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில் அந்த வீட்டை தங்கமணி அபகரிக்க முயல்கிறார். எனவே உரிய நடவடிக்கை எடுத்து எனது வீட்டை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

    • 3 ஆண்டுகள் ஆகியும் வீட்டுமனையும், பணத்தையும் திருப்பித் தராமாலும் காலம் தாழ்த்தி வந்துள்ளாா்.
    • பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து உழைப்பாளி பூபாலை கைது செய்தனர்.

    திருப்பூர் :

    பெருமாநல்லூா் அருகே காளிபாளையம் குருவாயூரப்பன் நகரைச் சோ்ந்தவா் பழனிசாமி மகன் மஞ்சுநாதன் (33), கட்டடத் தொழிலாளி. இவரிடம், தைலாம்பாளையத்தில் வீட்டுமனை வாங்கித் தருவதாக கூறி கடந்த 2020ஆம் ஆண்டு, திருப்பூா் செட்டிபாளையம், அய்யங்காளிபாளையம் பகுதியைச் சோ்ந்த வீராசாமி மகன் பாலு (எ) உழைப்பாளி பூபாலு (57) (இந்து மக்கள் கட்சி மாநில அமைப்பு பொதுச்செயலாளா்) என்பவா் ரூ.5 லட்சம் பெற்றுள்ளாா்.

    இருப்பினும் 3 ஆண்டுகள் ஆகியும் வீட்டுமனை வாங்கித் தராமலும், பணத்தையும் திருப்பித் தராமாலும் காலம் தாழ்த்தி வந்துள்ளாா். இது குறித்து மஞ்சுநாதன் அளித்த புகாரின்பேரில், பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாலு (எ) உழைப்பாளி பூபாலை கைது செய்து திருப்பூர் சிறையில் அடைத்தனர்.

    நெல்லை அருகே வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை கொள்ளை போனது.
    நெல்லை:

    நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள குறிச்சிகுளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சந்தோசம் (வயது 55).

    இவர்களது மகள் காந்திமதியை அதே பகுதியில் திருமணம் செய்து கொடுத்திருந்தனர். சமீபத்தில் காந்திமதி இறந்துவிட்டார். இதனால் சந்தோசம் தனது மகள் வீட்டுக்குச் சென்று அவரது குழந்தைகளை கவனித்து வருகிறார்.

    நேற்று காலை வழக்கம்போல தனது வீட்டில் வேலையை முடித்துவிட்டு கதவை பூட்டி விட்டு சந்தோஷம் தனது மகள் வீட்டுக்கு சென்றார். மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது முன்பக்க கதவு உடைந்து கிடந்தது.

     இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.அப்போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் தங்க செயின் திருட்டு போயிருந்தது.

    இது தொடர்பாக சந்தோஷம் தாழையூத்து போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு தங்க நகையை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
    எப்போதும் ஸ்டோர் ரூமில் வைக்கும் பொருட்களை, அதன் வகை மற்றும் பயனுக்கு ஏற்ப, தனித்தனி அட்டைப்பெட்டிகளில் அல்லது பைகளில் பிரித்து வைப்பது சிறந்தது.
    வீட்டின் அனைத்து அறைகளையும் பராமரித்து, அவற்றில் இருக்கும் தேவையில்லாத பொருட்களை, ஸ்டோர் ரூமில் குவித்து வைத்து விடுவோம். அவசரத் தேவையின்போது, அந்த அறையில் நமக்குத் தேவையான ஒரு பொருளைத் தேடி எடுப்பதற்கு ஒரு நாள் ஆகிவிடும். ஸ்டோர் ரூமை எப்படி பராமரிப்பது என்பது குறித்து பார்ப்போம்.

    முதலில் ஸ்டோர் ரூமின் அளவை கவனிக்க வேண்டும். அதற்கு ஏற்றார்போல் பொருட்களை அடுக்கி வைக்க வேண்டும். இரண்டாவது அந்த அறையில் போதுமான அளவு வெளிச்சம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் அல்லது அறையின் இரண்டு புறமும் மின்விளக்குகள் பொருத்துவது சிறந்தது.

    எப்போதும் ஸ்டோர் ரூமில் வைக்கும் பொருட்களை, அதன் வகை மற்றும் பயனுக்கு ஏற்ப, தனித்தனி அட்டைப்பெட்டிகளில் அல்லது பைகளில் பிரித்து வைப்பது சிறந்தது. மேலும், அந்த பைகள் அல்லது அட்டைப்பெட்டியின் மீது உள்ளிருக்கும் பொருட்களின் பெயர்கள் கொண்ட பட்டியலை குறிப்பிடுவது நல்லது. இது அவசர நேரத்தில் நாம் தேடும் பொருளை எளிதாக எடுக்க உதவும்.

    ஸ்டோர் ரூமில் பொருட்களை பக்கவாட்டில் அடுக்குவதை விட, நேர்கோடாக அடுக்குவது சிறந்தது. இது இட வசதியை ஏற்படுத்துவதுடன் பொருட்களை வகைப்படுத்தவும் எளிதாக இருக்கும். ஸ்டோர் ரூமில் ஜன்னல் அல்லது 'எக்சாஸ்ட் பேன்' கட்டாயம் இருக்க வேண்டும்.

    அப்போதுதான் அறையினுள் சூரிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் நிலவும். இது அறையில் இருக்கும் தூசு வாசனை மற்றும் பழைய பொருட்களின் வாசனையை குறைக்கும். வாரம் ஒரு முறை ஸ்டோர் ரூமை சுத்தம் செய்ய வேண்டும். அப்போதுதான் பூச்சிகள், ஒட்டடை மற்றும் தூசுகளிடம் இருந்து பொருளையும், அறையையும் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். ஸ்டோர் ரூமில் ஏர் பிரஷ்னர் அல்லது ரூம் பிரஷ்னரை தினமும் பயன்படுத்துவது நல்லது.

    இதனால், தூசு, பழைய பொருள் வாசனையால் நம் உடல் ஆரோக்கியத்துக்கு எவ்வித பாதிப்பும் வராது தடுக்க முடியும். மாதம் ஒரு முறை ஸ்டோர் ரூமில் உள்ள பொருட்களை எடுத்துப் பார்க்கவும். அப்போதுதான் நமக்குத் தேவையில்லாத பொருட்கள் இடத்தை அடைத்துக் கொண்டிருப்பதை அறிந்துகொள்ள முடியும்.

    மேலும், நாம் ஸ்டோர் ரூமில் என்னென்ன பொருட்கள் வைத்துள்ளோம் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவில் வைத்துக்கொள்ள உதவும். தனியாக ஸ்டோர் ரூம் இல்லாதவர்கள் வீட்டில் உள்ள பரண் அல்லது ஸ்லாப்களில் தேவையில்லாத பொருட்களை வைத்திருப்பார்கள். அவர்களும் இதே பராமரிப்பு முறையை பின்பற்றலாம்.
    ×