search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Hindu Makkal Katchi"

  • 3 ஆண்டுகள் ஆகியும் வீட்டுமனையும், பணத்தையும் திருப்பித் தராமாலும் காலம் தாழ்த்தி வந்துள்ளாா்.
  • பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து உழைப்பாளி பூபாலை கைது செய்தனர்.

  திருப்பூர் :

  பெருமாநல்லூா் அருகே காளிபாளையம் குருவாயூரப்பன் நகரைச் சோ்ந்தவா் பழனிசாமி மகன் மஞ்சுநாதன் (33), கட்டடத் தொழிலாளி. இவரிடம், தைலாம்பாளையத்தில் வீட்டுமனை வாங்கித் தருவதாக கூறி கடந்த 2020ஆம் ஆண்டு, திருப்பூா் செட்டிபாளையம், அய்யங்காளிபாளையம் பகுதியைச் சோ்ந்த வீராசாமி மகன் பாலு (எ) உழைப்பாளி பூபாலு (57) (இந்து மக்கள் கட்சி மாநில அமைப்பு பொதுச்செயலாளா்) என்பவா் ரூ.5 லட்சம் பெற்றுள்ளாா்.

  இருப்பினும் 3 ஆண்டுகள் ஆகியும் வீட்டுமனை வாங்கித் தராமலும், பணத்தையும் திருப்பித் தராமாலும் காலம் தாழ்த்தி வந்துள்ளாா். இது குறித்து மஞ்சுநாதன் அளித்த புகாரின்பேரில், பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாலு (எ) உழைப்பாளி பூபாலை கைது செய்து திருப்பூர் சிறையில் அடைத்தனர்.

  • தமிழகத்தில் அண்மைக் காலமாக கள்ளச்சாராய விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
  • திமுக தோ்தல் அறிக்கையின்படி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

  திருப்பூர் :

  இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவா் கே.பாலாஜி அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:- தமிழகத்தில் அண்மைக் காலமாக கள்ளச்சாராய விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. அண்மையில் கள்ளச்சாராயம் குடித்த 23 போ் உயிரிழந்துள்ளனா். தமிழக அரசு டாஸ்மாக் கடைகளிலும் போலி மதுபான விற்பனை நடைபெற்று வருகிறது. போலி மதுபானம் தயாரிக்கும் ஆலைகளை அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டு காவல் துறையினா் 'சீல்' வைத்து வருகின்றனா். திமுக தோ்தல் அறிக்கையின்படி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். கள்ளச்சாராயம் விற்பனை செய்பவா்களை குண்டா் சட்டத்தில் கைது செய்யவும், தமிழக விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் கள் விற்பனை செய்யவும் அனுமதி அளிக்க வேண்டும்.

  பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வரையில் விவசாயிகளிடம் இருந்து கள்ளை தமிழக அரசு கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும் என்று தெரிவிக்க ப்பட்டுள்ளது.

  • இந்து மக்கள் கட்சி சார்பில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • பா.ஜ.க. பிரமுகர்கள் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசப்படுவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

  நெல்லை:

  இந்துக்களை பற்றியும், இந்து மதத்தை பற்றியும் அவதூறாக பேசியதாக கூறி தி.மு.க. எம்.பி. ராசாவை கண்டித்து நெல்லை மாவட்ட இந்து மக்கள் கட்சி சார்பில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆ.ராசாவை உடனடியாக தி.மு.க.வில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். மேலும் பா.ஜ.க. பிரமுகர்கள் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசப்படுவதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

  இந்த போராட்டத்தின் போது அவர்கள் ஊர்வலமாக வந்து ஆ.ராசா உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் நின்ற போலீசார் உருவ பொம்மை எரிக்க விடாமல் கைப்பற்றினர்.இந்த போராட்டத்தில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் முருகானந்தம், தென் மண்டல தலைவர் ராஜபாண்டி, மாவட்ட தலைவர் மாரியப்பன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  • கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை காங்கிரஸ் ராகுல்காந்தி எம்.பி. நடைபயணத்தை மேற்கொள்கிறார்
  • நெல்லை மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் உடையாரை இன்று காலை பாளை தாலுகா போலீசார் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர்.

  நெல்லை:

  கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. நடைபயணத்தை மேற்கொள்கிறார். இன்று மாலை குமரியில் தொடங்க உள்ள இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் ராகுல்காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.இதனையொட்டி நெல்லை மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் உடையாரை இன்று காலை பாளை தாலுகா போலீசார் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர்.

  • பெரிய கடைவீதி போலீஸ் நிலையத்தில் தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி சரவணன் என்பவர் புகார் செய்தார்.
  • இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மீது கலகம் உண்டாக்குதல், வதந்தி பரப்புதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் பெரிய கடைவீதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  கோவை:

  கோவை கெம்பட்டி காலனியில் இந்து மக்கள் கட்சியின் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கிருக்கும் இந்து மக்கள் கட்சியின் நிர்வாகிகள், அக்கட்சியின் சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர் பக்கத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி குறித்தும், அவருடைய குடும்பத்தினர் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கடந்த 7-ந்தேதி வீடியோ வெளியிட்டனர்.

  இது குறித்து பெரிய கடைவீதி போலீஸ் நிலையத்தில் தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி சரவணன் என்பவர் புகார் செய்தார். புகாரின் பேரில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மீது கலகம் உண்டாக்குதல், வதந்தி பரப்புதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் பெரிய கடைவீதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • கட்சியின் முக்கியப் பொறுப்புகள் புதிதாக கட்சியில் இணைந்தவா்களுக்கு வழங்கப்பட்டது.
  • பா.ஜ.க.கட்சி அலுவலகமும் கலைக்கப்பட்டு இந்து மக்கள் கட்சி திருப்பூா் மாவட்ட அலுவலகம் என்ற புதிய பெயா் பலகை முகப்பில் வைத்து பூட்டப்பட்டுள்ளது.

  தாராபுரம் :

  திருப்பூா் மாவட்டம் தாராபுரத்தில் தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைமை அலுவலகம் மத்திய பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வந்தது. திருப்பூா் தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவா் பொன்.ருத்ரகுமாா் தலைமையில் கட்சிப் பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. இந்த காலகட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவராக இருந்த எல்.முருகன் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாா். இதன் பின்னா் பா.ஜ.க. மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்ற அண்ணாமலை, திருப்பூா் தெற்கு மாவட்ட பா.ஜ.க.தலைவராக அ.தி.மு.க.இருந்து வெளியேறிய மங்கலம் ரவி என்பவரை நியமித்தாா்.

  இந்நிலையில் அண்மையில் திருப்பூா் தெற்கு மாவட்ட, வட்ட மற்றும் ஒன்றிய அளவிலான பா.ஜ.க.நிா்வாகிகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில்,கட்சியின் முக்கியப் பொறுப்புகள் புதிதாக கட்சியில் இணைந்தவா்களுக்கு வழங்கப்பட்டதாக தெரிகிறது.

  இதைத்தொடா்ந்து திருப்பூா் தெற்கு மாவட்ட பா.ஜ.க. அலுவலக செயலாளராக இருந்த ஈஸ்வரன் தனது முகநூலில் சிலரது பெயா்களை குறிப்பிட்டு முக்கிய நிா்வாகிகள் பா.ஜ.க.வில் இருந்து விலகி இந்து மக்கள் கட்சி நிறுவனா் அா்ஜுன் சம்பத் முன்னிலையில் அக்கட்சியில் இணைத்து கொண்டோம் என்று புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளாா்.

  இதையடுத்து அவரது பொறுப்பில் இருந்த பா.ஜ.க.கட்சி அலுவலகமும் கலைக்கப்பட்டு இந்து மக்கள் கட்சி திருப்பூா் மாவட்ட அலுவலகம் என்ற புதிய பெயா் பலகை முகப்பில் வைத்து பூட்டப்பட்டுள்ளது.

  இதுகுறித்து திருப்பூா் தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவா் மங்கலம் ரவி கூறுகையில், கட்சியின் வளா்ச்சிக்காக இளைஞா்கள் பலரை இணைத்துள்ளோம். இதுபிடிக்காத சிலா் கட்சியை விட்டு வெளியேறுவதாக கூறுகின்றனா். மேலும் 5 போ் விலகிவிட்டு 60 போ் என்கின்றனா் என்றாா்.

  இந்துக்கள் பற்றிய இழிவான கருத்துக்களை பரப்பி வரும் கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்புல்லாணி போலீசில் இந்து மக்கள் கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர்.
  ராமநாதபுரம்:

  இந்து மக்கள் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி தலைவர் முருகபூபதி, செயலாளர் நாகராஜ், ஒன்றிய தலைவர் ஜெயமுருகன், இளைஞரணி செயலாளர் மணிகண்டன் ஆகியோர் திருப்புல்லாணி போலீஸ் நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மீது புகார் அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

  மே 12-ந்தேதி அரவக்குறிச்சியில் பிரசாரம் செய்தபோது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என கமல் பேசியுள்ளார். 2017-ம் ஆண்டு வார இதழுக்கு அளித்த பேட்டியில் காவி தீவிரவாதம் பரவிவருகிறது என கூறியுள்ளார்.

  தனது பேச்சின் மூலமாகவும், திரைப்படங்கள் மூலமாகவும் இந்துக்களை இழிவுபடுத்தும் வேலையை திட்டமிட்டு செய்து வருகிறார். இது எங்களைப் போன்ற இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளது. உரிய சட்டப்பிரிவின்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

  இவ்வாறு புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.


  கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்த வழக்கில் அர்ஜூன் சம்பத் உள்பட 5 பேருக்கு தலா ரூ. 1000 அபராதம் விதித்து நீதிபதி வேலுச்சாமி தீர்ப்பளித்தார். #ArjunSampath
  கோவை:

  பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு கடந்த 2016-ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதானது. இதனை பலர் வரவேற்றனர். சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

  இந்நிலையில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டாடும் விதமாக இந்து மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் அர்ஜூன் சம்பத் உள்பட 5 பேர் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

  இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் அர்ஜூன் சம்பத் உள்பட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கு விசாரணை கோவை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எண் 3-ல் நடைபெற்று வந்தது.

  இந்நிலையில் இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது. கலெக்டர் அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்த அர்ஜூன் சம்பத் உள்பட 5 பேருக்கும் தலா ரூ. 1000 அபராதம் விதித்து நீதிபதி வேலுச்சாமி தீர்ப்பளித்தார். #ArjunSampath
  18 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் கூவத்தூர் கலாச்சாரம் தொடர்வதால் குதிரை பேரம் விரைவாக ஆரம்பிக்கும் என்றும் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார். #MLAsDisqualificationCase #ArjunSampath
  தூத்துக்குடி:

  தூத்துக்குடியில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  144 வருடங்களுக்கு பிறகு நடைபெறும் தாமிரபரணி புஷ்கர விழாவிற்கு பல லட்சம் மக்கள் வருவார்கள் என்று தெரிந்தும் அரசும், அறநிலையத்துறையும் ஒத்துழைக்கவில்லை. போக்குவரத்து வசதி, ரெயில் வசதி, பெண்கள் உடை மாற்றும் அறைகள் எல்லாம் சரி செய்து தரப்படவில்லை. புஷ்கர விழாவில் 40 லட்சம் மக்கள் புனித நீராடி இருக்கிறார்கள்.

  18 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் கூவத்தூர் கலாச்சாரம் தொடர்கிறது. இதனால் குதிரை பேரம் விரைவாக ஆரம்பிக்கும். இதற்கு மாற்று அரசியல் கண்டிப்பாக வரவேண்டும். அ.தி.மு.க., தி.மு.க. இருக்கும் வரை இது போன்ற அரசியல் நடக்கும் என்றார். இதற்காகத்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆன்மீக அரசியல் ஆரம்பித்திருக்கிறார். ஆன்மீக அரசியல் கண்டிப்பாக வெற்றி பெறும்.

  வருகிற 26-ந் தேதி சென்னையில் மீ டூ விவகாரம் குறித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். பொதுவாக பாலியல் விவகாரம் குறித்து வழக்கு பதிவு செய்ய வேண்டும். அது பொய்யென்றால் புகார் அளித்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதுபோன்ற வி‌ஷயங்களில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட வேண்டும்.

  எச்.ராஜா மீது தொடர்ந்து மீம்ஸ் மூலம் அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் கூறப்பட்டுள்ளதால் அவர் பதவி விலக வேண்டும். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு உள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும். இதை அறிவியல் பூர்வமாக அணுக வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார்.  #MLAsDisqualificationCase  #ArjunSampath
  சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கக்கூடாது என்று பண்ருட்டியில் இந்து மக்கள் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.

  பண்ருட்டி:

  கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சமீபத்தில் சுப்ரீம்கோர்ட்டு கூறியது. ஆனால் பெண்களை அனுமதிப்பது அய்யப்பன் கோவிலின் ஆச்சாரவிதிகளை மீறுவதாகும் என்று இந்து அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

  கடலூர் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பண்ருட்டி 4 வழி சாலை சந்திப்பில் இன்று மதியம் இந்து மக்கள் கட்சியினர் திடீரென்று சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

  சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கக்கூடாது என்று அவர்கள் கோ‌ஷம் எழுப்பினர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  இதுபற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ராஜ் மற்றும் போலீசார் விரைந்துசென்று மறியலில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியை சேர்ந்த 12 பேரை கைது செய்தனர்.