search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்து மக்கள் கட்சியில் இணைந்த பா.ஜ.க. நிர்வாகிகள்
    X

    காேப்புபடம்

    இந்து மக்கள் கட்சியில் இணைந்த பா.ஜ.க. நிர்வாகிகள்

    • கட்சியின் முக்கியப் பொறுப்புகள் புதிதாக கட்சியில் இணைந்தவா்களுக்கு வழங்கப்பட்டது.
    • பா.ஜ.க.கட்சி அலுவலகமும் கலைக்கப்பட்டு இந்து மக்கள் கட்சி திருப்பூா் மாவட்ட அலுவலகம் என்ற புதிய பெயா் பலகை முகப்பில் வைத்து பூட்டப்பட்டுள்ளது.

    தாராபுரம் :

    திருப்பூா் மாவட்டம் தாராபுரத்தில் தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைமை அலுவலகம் மத்திய பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வந்தது. திருப்பூா் தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவா் பொன்.ருத்ரகுமாா் தலைமையில் கட்சிப் பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. இந்த காலகட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவராக இருந்த எல்.முருகன் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாா். இதன் பின்னா் பா.ஜ.க. மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்ற அண்ணாமலை, திருப்பூா் தெற்கு மாவட்ட பா.ஜ.க.தலைவராக அ.தி.மு.க.இருந்து வெளியேறிய மங்கலம் ரவி என்பவரை நியமித்தாா்.

    இந்நிலையில் அண்மையில் திருப்பூா் தெற்கு மாவட்ட, வட்ட மற்றும் ஒன்றிய அளவிலான பா.ஜ.க.நிா்வாகிகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில்,கட்சியின் முக்கியப் பொறுப்புகள் புதிதாக கட்சியில் இணைந்தவா்களுக்கு வழங்கப்பட்டதாக தெரிகிறது.

    இதைத்தொடா்ந்து திருப்பூா் தெற்கு மாவட்ட பா.ஜ.க. அலுவலக செயலாளராக இருந்த ஈஸ்வரன் தனது முகநூலில் சிலரது பெயா்களை குறிப்பிட்டு முக்கிய நிா்வாகிகள் பா.ஜ.க.வில் இருந்து விலகி இந்து மக்கள் கட்சி நிறுவனா் அா்ஜுன் சம்பத் முன்னிலையில் அக்கட்சியில் இணைத்து கொண்டோம் என்று புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளாா்.

    இதையடுத்து அவரது பொறுப்பில் இருந்த பா.ஜ.க.கட்சி அலுவலகமும் கலைக்கப்பட்டு இந்து மக்கள் கட்சி திருப்பூா் மாவட்ட அலுவலகம் என்ற புதிய பெயா் பலகை முகப்பில் வைத்து பூட்டப்பட்டுள்ளது.

    இதுகுறித்து திருப்பூா் தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவா் மங்கலம் ரவி கூறுகையில், கட்சியின் வளா்ச்சிக்காக இளைஞா்கள் பலரை இணைத்துள்ளோம். இதுபிடிக்காத சிலா் கட்சியை விட்டு வெளியேறுவதாக கூறுகின்றனா். மேலும் 5 போ் விலகிவிட்டு 60 போ் என்கின்றனா் என்றாா்.

    Next Story
    ×