என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  நெல்லையில் ஆ.ராசா உருவபொம்மையை எரிக்க முயன்ற இந்து மக்கள் கட்சியினர்
  X

  ஆ.ராசா உருவபொம்மையை ஊர்வலமாக எடுத்து வந்த இந்து மக்கள் கட்சியினர்.

  நெல்லையில் ஆ.ராசா உருவபொம்மையை எரிக்க முயன்ற இந்து மக்கள் கட்சியினர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்து மக்கள் கட்சி சார்பில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • பா.ஜ.க. பிரமுகர்கள் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசப்படுவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

  நெல்லை:

  இந்துக்களை பற்றியும், இந்து மதத்தை பற்றியும் அவதூறாக பேசியதாக கூறி தி.மு.க. எம்.பி. ராசாவை கண்டித்து நெல்லை மாவட்ட இந்து மக்கள் கட்சி சார்பில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆ.ராசாவை உடனடியாக தி.மு.க.வில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். மேலும் பா.ஜ.க. பிரமுகர்கள் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசப்படுவதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

  இந்த போராட்டத்தின் போது அவர்கள் ஊர்வலமாக வந்து ஆ.ராசா உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் நின்ற போலீசார் உருவ பொம்மை எரிக்க விடாமல் கைப்பற்றினர்.இந்த போராட்டத்தில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் முருகானந்தம், தென் மண்டல தலைவர் ராஜபாண்டி, மாவட்ட தலைவர் மாரியப்பன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×