ராகுல்காந்திக்கு எதிராக போராட்டம் அறிவிப்பு- இந்து மக்கள் கட்சி நெல்லை மாவட்ட தலைவர் கைது

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை காங்கிரஸ் ராகுல்காந்தி எம்.பி. நடைபயணத்தை மேற்கொள்கிறார்நெல்லை மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் உடையாரை இன்று காலை பாளை தாலுகா போலீசார் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர்.
ராகுல்காந்திக்கு எதிராக போராட்டம் அறிவிப்பு- இந்து மக்கள் கட்சி நெல்லை மாவட்ட தலைவர் கைது
Published on

நெல்லை:

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. நடைபயணத்தை மேற்கொள்கிறார். இன்று மாலை குமரியில் தொடங்க உள்ள இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் ராகுல்காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.இதனையொட்டி நெல்லை மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் உடையாரை இன்று காலை பாளை தாலுகா போலீசார் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com