குன்னத்தூரில் வீடு புகுந்து நகை திருடிய வாலிபர் கைது

தினமும் இரவு அருகில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுவது வழக்கம். குன்னத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
 கைது செய்யப்பட்ட விஜயகுமார்.
 கைது செய்யப்பட்ட விஜயகுமார்.
Published on

குன்னத்தூர் :

குன்னத்தூர் கருங்கல் மேட்டை சேர்ந்தவர் வளர்மதி (வயது 52). இவர் தனியாக வசித்து வருகிறார். தினமும் இரவு அருகில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுவது வழக்கம். அப்போது தனது வீட்டை பூட்டாமல் சென்று வந்துள்ளார். நேற்று இரவு வீட்டில் வைத்திருந்த 8 பவுன் தங்க நகை மற்றும் பணம் ரூ.35 ஆயிரத்தை மர்ம நபர் யாரோ திருடி சென்று விட்டதாக குன்னத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

புகாரை பெற்றுக் கொண்ட குன்னத்தூர் போலீசார் அருகில் உள்ள நபர்களை கண்காணித்து வந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் விஜயகுமார் ( 29) ஒயின்ஷாப்பில் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு அனைவரிடமும் பணத்தை காண்பித்து உள்ளார். உடனே குன்னத்தூர் போலீசார் விஜயகுமாரை விசாரணை செய்தபோது வளர்மதி வீட்டில் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com