search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "H Raja"

    • விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் என பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேட்டிளித்தார்.
    • சீமான் தமிழ் தேசியத்தை கை விட்டால் பா.ஜ.க.வுடன் நெருங்கி வரலாம்.

    சிவகங்கை

    சிவகங்கையில் மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க கண்காட்சி நடந்தது. இதனை பா.ஜ.க முன்னாள் தேசிய செயலா ளரும், மூத்த தலைவருமான எச்.ராஜா தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாட்டின் குடிமகனாக உள்ள எவரும் அரசியலுக்கு வரலாம். விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். சினிமா பாப்புலாரிட்டி மட்டுமே அரசியலுக்கு உதவாது என்ற திருமா வளவனின் கருத்தை ஏற்று கொள்கிறேன்.

    2016-ல் மோடி ஆட்சி அமையவில்லை என்றால் பிச்சைக்கார நாடாக இந்தியா மாறியிருக்கும். மெட்ரோ ெரயில் பணிக்கு தகுதி இருந்தும் ஒப்பந்தம் கிடைக்காதவர்களே சி.பி.ஐக்கு புகார் செய்தனர். 6-வது நபராகவே அண்ணா மலை புகார் அளித்துள்ளார்.அதில் மு.க.ஸ்டாலினை விசாரிக்க வாய்ப்புள்ளது.

    நெல்லை எம்.பி ஞான திரவியத்திடம் திமுக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது என்பது தி.மு.க.வின் கண்துடைப்பு நாடகம். மணிப்பூர் கலவரம் என்பது நீண்ட நாட்களாக நடந்து வரும் பிரச்சினை.விரைவில் முடிவுக்கு வரும்.

    சிதம்பரம் தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு என்பது பொய் வழக்கு. அறநி லையத்துறை அங்கு செல்லவே அதிகாரமில்லை. பீகாரில் நடந்த எதிர்கட்சி கூட்டம் என்பது அமலாக் கத்துறையால் பாதிக்கப் பட்டவர்கள் பங்கேற்ற கூட்டம். அடுத்த கூட்டம் சிம்லாவில் நடைபெற வாய்ப்பில்லை.

    பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் மோடி, ஆனால் அந்த கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் யார்?. சீமான் தமிழ் தேசியத்தை கை விட்டால் பா.ஜ.க.வுடன் நெருங்கிவரலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர்கள், வக்கீல் சொக்கலிங்கம் தேசிய பொது குழு உறுப்பினர், நாகேசுவரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியை போலீசார் கைது செய்தபோது நாடகமாடி மக்களை திசை திருப்பினர்.
    • மத்திய அரசிற்கு எதிராக பேசினால் மக்கள் ஆதரவு கிடைக்கும் என்று இவர்கள் எண்ணுகின்றனர்.

    காரைக்குடி :

    காரைக்குடியில் பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 8 நாட்கள் சோதனை முடிந்து அதில் கிடைத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகம், தலைமைச் செயலகம் ஆகியவற்றில் சோதனை நடத்தி அதன் பின்னர் தான் அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்தனர். இதை சகித்து கொள்ள முடியாதவர்கள் தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.

    தமிழகத்தில் தி.மு.க.வினர் ஒரு நாடகத்தை நடத்தி வருகின்றனர். இதற்கு காரணம் மக்களிடம் அனுதாபம் பெறலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகின்றனர். மத்திய அரசிற்கு எதிராக பேசினால் மக்கள் ஆதரவு கிடைக்கும் என்று இவர்கள் எண்ணுகின்றனர். ஒடிசா மாநில முதல்வர் நவீன்பட்நாயக் அந்த மாநிலத்தில் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். இதை தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடைபிடித்து முன்னுதாரணமாக இருக்க வேண்டும். தமிழகத்தில் மதுபாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்குவதை அனைத்து மீடியாக்களும் வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நாள் ஒன்றுக்கு பல லட்சம் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு ஒரு பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வைத்து பல கோடி ரூபாய் மோசடி செய்யப்படுவதாக டாக்டர் கிருஷ்ணசாமி கவர்னரிடம் புகார் மனு கொடுத்துள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியை போலீசார் கைது செய்தபோது நாடகமாடி மக்களை திசை திருப்பினர். அதைபோல் இன்று அதே நாடகத்தை கையில் எடுத்துள்ளனர்.

    இது மக்களுக்கு நன்றாக தெரியும். அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்வதற்கு முன்பு வரை வராத நெஞ்சுவலி அதற்கு பின்னர் எப்படி வந்தது? திடீரென ஒரு நாள் இரவு எப்படி அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதில் பல்வேறு சந்தேகம் உள்ளது. இதற்கு உயர்தர டாக்டர்கள் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்க வேண்டும். அமலாக்கத்துறை கைது செய்ததால் அவருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது நமது கடமையாகும்.

    நேற்று நீட் தேர்வு ரிசல்ட் வந்துள்ளது. இதில் 720-க்கு 720 மதிப்பெண் எடுத்து இந்திய அளவில் முதல் மாணவனாக தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் வெற்றி பெற்றுள்ளார்.

    மேலும் இந்திய அளவில் முதல் 10 இடத்தில் நான்கு பேர் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் தான். இதன் மூலம் தமிழக மாணவர்கள் நீட் தேர்வை ஏற்றுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவில் நிலங்களை எந்த ஒரு பொதுக்காரியத்திற்காகவும் விற்பனை செய்யக்கூடாது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    • கோர்ட்டு உத்தரவை மீறி விற்பனை செய்தால் பா.ஜ.க. சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்.

    திருப்பரங்குன்றம்:

    மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா இன்று காலை சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலங்களை எந்த ஒரு பொதுக்காரியத்திற்காகவும் விற்பனை செய்யக்கூடாது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் தி.மு.க. அரசு கோவில் நிலங்களை விற்க திட்டமிடுகின்றது.

    கோவில் நிலத்தை விற்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. கோர்ட்டு உத்தரவை மீறி விற்பனை செய்தால் பா.ஜ.க. சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்.

    ஒடிசா ரெயில் விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரணை தொடங்கியுள்ளது. விசாரணை முடிந்த பின்புதான் உண்மை தெரியவரும். ரெயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரெயில்வே அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார்.

    தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் பலியான விவகாரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி ராஜினாமா செய்யவில்லை. இதுகுறித்து கேட்காத திருமாவளவன் ரெயில்வே அமைச்சரை ராஜினாமா செய்ய சொல்ல தகுதியில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • தி.மு.க. ஆட்சியை அகற்றாவிட்டால் தமிழகம் பாலைவனமாகும் என மதுரையில் எச்.ராஜா பரபரப்பாக பேசினார்.
    • திராவிட மாடல் என்பது தமிழகத்தை குடிபோதை நாடாக மாற்றியது என்றார்.

    மதுரை

    மதுரையில் பா.ஜ.க. வக்கீல் பிரிவு பொறுப் பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. இதில் மாநில வக்கீல் அணி தலைவர் வணங்காமுடி, மாவட்ட தலைவர் அய்யப்பராஜா, துணைத்தலைவர்கள் நிரஞ்சன்குமார், அருண், தமிழரசன், அமிழ்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா பேசுகையில், தமிழகத்தில் இந்து விரோத மனபான்மை அதிகரித்து வருகிறது. நாம் தற்போது நெருக்கடியான காலக்கட்டத்தில் உள்ளோம். திராவிட தீயசக்திகளின் கைகளில் தமிழகம் சிக்கியுள்ளது. தி.மு.க.வை ஆட்சி கட்டிலில் இருந்து அகற்றாவிட்டால், தமிழகம் பாலைவனமாக மாறிவிடும். திராவிட மாடல் என்பது தமிழகத்தை குடிபோதை நாடாக மாற்றியது என்றார்.

    கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன், மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் மகா சுசீந்திரன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது
    • பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக அரசு தடை விதித்துள்ளது.

    பெரம்பலூர், திருமாந்துறை சுங்கச்சாவடியில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜாவை போலீசார் கைது செய்தனர். திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள தடையை மீறி சென்றதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்யும் தி.மு.க. அரசு என எச்.ராஜா குற்றச்சாட்டியுள்ளார்.
    • மனு கொடுக்கும் நூதன போராட்டம் நடந்தது.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட பா.ஜனதா சார்பில் தல்லா குளத்தில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு கோரிக்கை மனு கொடுக்கும் நூதன போராட்டம் நடந்தது. இதில் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களி டம் கூறியதாவது:-

    தி.மு.க. அரசு பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது. அவர்களை அம்பேத்கார்தான் தட்டிக்கேட்க வேண்டும். எனவே தான் அவரது சிலைக்கு மனு கொடுத்து உள்ளோம்.

    திராவிட கட்சிகள் பட்டியலின மக்களுக்கு அநீதி செய்கிறது. அவர்கள் மீது தாக்குதல் நடத்திவரும் தி.மு.க.வுடன் திருமாவள வன் எதற்காக கூட்டணி வைத்துள்ளார். மத்திய அரசு பட்டியலின சமூகத் துக்கு ஒதுக்கிய பல கோடி ரூபாய் நிதியை பயன்படுத்தா மல் அதனை தமிழக அரசு திருப்பி அனுப்பி மோசடி செய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாவட்ட தலைவர் சுசீந்திரன் உடனிருந்தார்.

    • கருத்தியல் ரீதியாக விடுதலை சிறுத்தைகளுக்கும், பாரதிய ஜனதாவுக்கும் தான் யுத்தம்.
    • பா.ஜனதாவை அவரால் எதிர்க்க முடியுமா? அசைத்துக் கூட பார்க்க முடியாது.

    சென்னை:

    விடுதலைகள் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பா. ஜனதாவின் தீவிர எதிர்ப்பாளர் என்பது தெரிந்ததே. கருத்தியல் ரீதியாக விடுதலை சிறுத்தைகளுக்கும், பாரதிய ஜனதாவுக்கும் தான் யுத்தம். பாரதிய ஜனதாவை ஓட ஓட விரட்டுவோம் என்று கடுமையாக விமர்சித்து இருந்தார். இது தொடர்பாக பா. ஜனதா மூத்த தலைவர் எச். ராஜா கூறியதாவது:

    திருமாவளவனிடம் என்ன கருத்து இருக்கிறது. அவரை பொறுத்தவரை ஒரு காலிடப்பா. அவரை ஒரு பொருட்டாகவே நாங்கள் கருதவில்லை. பா.ஜனதாவை அவரால் எதிர்க்க முடியுமா? அசைத்துக் கூட பார்க்க முடியாது. பா.ஜனதா சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்று ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி பார்த்தார்கள். ஆனால் இன்று வட கிழக்கு மாநிலங்களில் நடந்திருப்பது என்ன? 90 சதவீதம் சிறுபான்மை மக்கள் வாழும் அந்த மாநிலங்களில் பெரும்பான்மை பலத்துடன் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சமூகம் டெல்லியில் இருந்து ஆட்டி படைக்கிறது என்று ஒரு தவறான தகவலை பரப்பி பார்க்கிறார். ஏன் மக்களுக்கு புரியாதா? பிரதமர் மோடி ஒரு பிற்பட்ட சமூகத்தை சார்ந்தவர். ஜனாதிபதி முர்மு மலைவாழ் மக்கள் சமூகம், உள்துறை அமைச்சர் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர். அப்படி இருக்கும்போது இவர் சொல்வதை மக்கள் எப்படி ஏற்பார்கள். பா.ஜனதா மீது இவர்கள் எப்படிப்பட்ட விமர்சனங்களை வைத்தாலும் அதை ஒவ்வொன்றாக மக்களே முறியடிப்பார்கள்.

    இப்போது சனாதனம் எதிர்ப்பு என்று ஒன்றை சொல்கிறார். சனாதனம் என்றால் என்ன? தொன்மையானது என்பது தான்! இந்துக்கள் எதிர்ப்பு என்று சொல்கிறார். ஆனால் தேர்தல் நேரத்தில் சிதம்பரம் கோவிலில் சென்று பரிவட்டம் கட்டி தீட்சிதர்களிடம் ஆசி பெறுகிறார். இந்த வேடம் எதற்கு? என்று அவர் கூறினார்.

    • பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா மற்றும் தேனி மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள் ஓ.பி.எஸ். தாயார் பழனியம்மாள் நாச்சியார் உருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
    • ஓ.பி.எஸ். மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறிச்சென்றனர்.

    திண்டுக்கல்:

    தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (95). வயது மூப்பால் கடந்த மாதம் 24ம் தேதி மரணமடைந்தார்.

    இதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அவரது வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா மற்றும் தேனி மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள் நேரில் சென்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த தாயார் பழனியம்மாள் நாச்சியார் உருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

    அதனை தொடர்ந்து ஓ.பி.எஸ். மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறிச்சென்றனர்.

    • சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை காவல் துறை அதிகாரிகளும், அரசும் பின்பற்ற வேண்டும்.
    • 2024-ல் தேசிய அளவில் விடியல் ஆட்சி அமையும் என தமிழக முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவைக்கு வந்த பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய பட்ஜெட்டில் சிறப்பு அம்சங்கள் பல இடம்பெற்றுள்ளது. இவற்றினால் மூலதன செலவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் நிதி பற்றாக்குறை 5.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 2025-26-ம் ஆண்டு பட்ஜெட்டுக்குள் நிதி பற்றாக்குறை முழுமையாக தீரும். அனைத்து தரப்பு மக்களும் பயனடைக்கூடிய அளவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இது அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பட்ஜெட் ஆகும். இருப்பினும் பிரதமர் மோடி தாக்கல் செய்து விட்டாரே என்ற ஒரே காரணத்துக்காக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எதிர்கட்சிகள் கூறுவது போல் இது தேர்தலுக்கான பட்ஜெட்தான். ஏன் என்றால் ஏழை எளிய மக்களுக்கு போடப்பட்ட பட்ஜெட். அதனால் மக்கள் பா.ஜனதாவுக்கு வாக்களிப்பார்கள்.

    தமிழகத்தில் 3 மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதித்தார்கள். அங்கே கலவரம் நடக்கவில்லை. திட்டமிட்டே தேசிய அமைப்புகள் செயல்படாமல் இருக்க வேண்டும் என சிலர் நினைக்கிறார்கள். இதனால் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கின்றனர். தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக சீமானும், திருமாவளவனும் ஊர்வலம் நடத்த அனுமதி தருகின்றனர்.

    இந்து அமைப்புகளுக்கு எதிராக தமிழக அரசு செயல்படுகிறது. சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை காவல் துறை அதிகாரிகளும், அரசும் பின்பற்ற வேண்டும். 2024-ல் தேசிய அளவில் விடியல் ஆட்சி அமையும் என தமிழக முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.

    இவர்களுக்கு ஈரோட்டில் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். இது விடியாத ஆட்சி என்பதே சரி. சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதால் கடலில் பேனா வைக்கக்கூடாது. அதானி பிரச்சினையால் வங்கிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை உணர்ந்துதான் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் அமைதியாகி விட்டன.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    முன்னதாக புதுவை மாநில பா.ஜனதா சார்பில் பட்ஜெட் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி கடற்கரை சாலை தனியார் உணவகத்தில் நடந்தது.

    மாநில தலைவர் சாமிநாதன் தலைமை வகித்தார். பா.ஜனதா தேசிய செயலாளர் ராஜா பட்ஜெட் குறித்து விரிவாக எடுத்துக் கூறினார். கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் வி.பி. ராமலிங்கம், அசோக் பாபு, சிவசங்கரன், பா.ஜனதா தொழில்துறை பிரிவு மாநில அமைப்பாளர் ராஜகணபதி, முன்னாள் நீதிபதி அருள், மாநில பயிற்சியாளர் பிரிவு இணை அமைப்பாளர் சக்திவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • உண்மைக்கு புறம்பான தகவல்களை ஆளுநர் உரையில் கூறிவிட்டு படிக்கச் சொன்னால் ஆளுநர் எப்படி படிப்பார்.
    • ஆளுநரை எதிர்த்தால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

    திருச்சி:

    திருச்சியில் இன்று பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக ஆளுநருக்கு அரசு அனுப்பிய உரையில் தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் கஞ்சா அதிகமாக பிடிப்படுகிறது. கோவையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. பிரமுகர்களின் 18 பேர் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இப்படி பல சம்பவங்கள் நடந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.

    தமிழகம் அந்நிய முதலீட்டை அதிகமாக ஈர்த்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடகத்தில் கடந்த ஆண்டு 18 பில்லியன் டாலரும், மகாராஷ்டிராவில் 11.6 பில்லியன் டாலரும் அந்நிய முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்திற்கு 2.5 பில்லியன் டாலர் மட்டுமே அந்நிய முதலீடு வந்துள்ளது.

    இவ்வாறாக உண்மைக்கு புறம்பான தகவல்களை ஆளுநர் உரையில் கூறிவிட்டு படிக்கச் சொன்னால் ஆளுநர் எப்படி படிப்பார். தொடர்ந்து ஆளுநரை கண்டித்து வருகின்றனர். ஆனால் தற்போது ஆளுநரை கண்டித்து பேசக்கூடாது என்று அவர் கூறியுள்ளார். நிலைமையை புரிந்ததனால் முதல்வர் அவ்வாறு கூறியுள்ளார்.

    தொடர்ந்து ஆளுநரை எதிர்த்தால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும். திமுகவினர் ஆளுநரை விமர்சிப்பதை நிறுத்திக் கொண்டால் அவர்களது அரசை காப்பாற்றிக் கொள்ளலாம்.

    திருமாவளவன் நடத்திய பேரணிக்கு மட்டும் தமிழக அரசு அனுமதி கொடுத்தது. ஆனால் ஆர்எஸ்எஸ் நடத்தும் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சித்திரை தான் நமக்கு தமிழ் புத்தாண்டு. பொங்கல் பண்டிகை இந்துக்கள் பண்டிகை. இது நாடு முழுவதும் பல்வேறு பெயர்களில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மஞ்சுவிரட்டு, ஏர் தழுவுதல் எல்லாம் நமது பாரம்பரிய விழாக்கள் ஆகும்.

    இவ்வாறு எச்.ராஜா கூறினார்.

    • இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான இடங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன.
    • அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அமைச்சர் சேகர்பாபு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    திருச்சி:

    வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    6.7.2021 நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னும், ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டு காலம் ஆகியும் 2,000 கோவில்களை புனராவர்த்தனம் செய்வதற்கு பரிசீலிப்பதாக தி.மு.க. அரசு கூறி வருகிறது.

    தமிழகத்தில் இருக்கும் கோவில்களின் எண்ணிக்கையே தமிழக அரசாங்கத்திற்கு தெரியாது. நீதிமன்ற தீர்ப்பில் 44,000 கோவில்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்து சமய அறநிலையத்துறை கொள்கை விளக்க குறிப்பேட்டில் 36,000 கோவில்கள் இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.

    இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான இடங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன. அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அமைச்சர் சேகர்பாபு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த அரசாங்கம் இந்து மக்களின் சொத்துக்களை கொள்ளையடிக்கிறது.

    இதை வன்மையாக கண்டிப்பதோடு, கோவில்கள் அனைத்தையும் இந்து மக்கள் மற்றும் அறங்காவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இலவசங்கள் வழங்குவதற்கு, அதனை வழங்காமல் இருக்கலாம். ஏதோ பணமாக மக்களின் வங்கி கணக்கில் செலுத்தினால் பயன்படுத்த ஏதுவாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பாரதிய ஜனதா தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட 5 பேரும் தோல்வி முகத்தில் உள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று உள்ள பா.ஜன தாவுக்கு 5 தொகுதி ஒதுக்கப்பட்டது.

    இதில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் கன்னியாகுமரி தொகுதியிலும் மாநில பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி தொகுதியிலும், தேசிய செயலாளரான எச்.ராஜாவும், சி.பி.ராதா கிருஷ்ணனும், ராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனும் போட்டியிட்டனர். இந்த 5 பேரும் தோல்வி முகத்தில் உள்ளனர்.

    2014 பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் 1½ லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். ஆனால் தற்போது 10 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வசந்தகுமாரிடம் பின்தங்கி இருக்கிறார்.

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை விட 20 ஆயிரம் ஓட்டுகள் பின்தங்கி இருக்கிறார். பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரத்திடம் தோல்வியை தழுவினார்.

    கோவையில் சி.பி.ராதா கிருஷ்ணன் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் நடராஜனிடமும், ராமநாதபுரம் தொகுதியில் நயினார் நாகேந்திரன் முஸ்லிம்லீக் வேட்பாளர் நவாஸ்கனியிடமும் பின்தங்கி இருக்கிறார்கள்.

    ×