search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவில் நிலங்களை விற்பனை செய்தால் போராட்டம் நடத்துவோம்- எச்.ராஜா
    X

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளிேய வந்த எச்.ராஜா.

    கோவில் நிலங்களை விற்பனை செய்தால் போராட்டம் நடத்துவோம்- எச்.ராஜா

    • கோவில் நிலங்களை எந்த ஒரு பொதுக்காரியத்திற்காகவும் விற்பனை செய்யக்கூடாது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    • கோர்ட்டு உத்தரவை மீறி விற்பனை செய்தால் பா.ஜ.க. சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்.

    திருப்பரங்குன்றம்:

    மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா இன்று காலை சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலங்களை எந்த ஒரு பொதுக்காரியத்திற்காகவும் விற்பனை செய்யக்கூடாது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் தி.மு.க. அரசு கோவில் நிலங்களை விற்க திட்டமிடுகின்றது.

    கோவில் நிலத்தை விற்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. கோர்ட்டு உத்தரவை மீறி விற்பனை செய்தால் பா.ஜ.க. சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்.

    ஒடிசா ரெயில் விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரணை தொடங்கியுள்ளது. விசாரணை முடிந்த பின்புதான் உண்மை தெரியவரும். ரெயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரெயில்வே அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார்.

    தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் பலியான விவகாரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி ராஜினாமா செய்யவில்லை. இதுகுறித்து கேட்காத திருமாவளவன் ரெயில்வே அமைச்சரை ராஜினாமா செய்ய சொல்ல தகுதியில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×