search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "G20"

    • மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்கிறார்
    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளைமறுதினம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்

    டெல்லியில் வருகிற 9 மற்றும் 10-ந்தேதிகளில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் அமெரிக்க அதிபர் உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். மேலும், ஐரோப்பிய யூனியன் மற்றும் சர்வதேச அமைப்பின் தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இதனால் டெல்லி விழாக்கோலம் பூண்டுள்ளது.

    இதற்கிடையே, செப்டம்பர் 9-ம்தேதி அன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு சார்பில் வழங்கப்படும் இரவு விருந்தில் பல்வேறு நாட்டு அதிபர்களும், உள்நாட்டு தலைவர்கள் என பலர் பங்கேற்க உள்ளனர்.

    இந்த விருந்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக நாளைமறுதினம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    ஏற்கனவே, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி இந்த விருந்தில் பங்கேற்பதாக தெரிவித்துள்ளார்.

    • ஜி20 மாநாட்டை முன்னிட்டு ராமாயணம், மகாபாரதத்தை மேற்கோள் காட்டி 2 புத்தகங்களை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.
    • ‘ஜனநாயகத்தின் தாய் பாரதம்’ என்ற புத்தகத்தில் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான வெண்கலச் சிலையின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

    புதுடெல்லி:

    ஜி20 உச்சிமாநாடு வருகிற 9, 10-ந்தேதிகளில் புதுடெல்லியில் நடக்கிறது. இந்த மாநாட்டுக்கு வரும் பல்வேறு நாட்டு தலைவர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் விருந்து அளிக்கப்பட உள்ளது. இந்த விருந்துக்கான அழைப்பிதழில் பாரத குடியரசு தலைவர் என அச்சிடப்பட்டிருந்தது.

    இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. இந்தியாவை பாரத் என்று பெயர் மாற்றும் முயற்சியாக இந்த நடவடிக்கை இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

    இதனிடையே ஜி20 மாநாட்டை முன்னிட்டு ராமாயணம், மகாபாரதத்தை மேற்கோள் காட்டி 2 புத்தகங்களை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. இந்த கையேடுகள் கி.மு. 6 ஆயிரம் முதல் இந்தியாவின் வரலாற்றைக் குறிப்பிடுகின்றன.

    'ஜனநாயகத்தின் தாய் பாரதம்' என்ற புத்தகத்தில் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான வெண்கலச் சிலையின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. வரலாற்று காலத்தில் இருந்து பாரதம் எப்படி ஜனநாயகத்தின் தாயாக இருந்தது என்பதுபற்றி இதில் விவரம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் அதில் "பாரத் என்பது நாட்டின் அதிகாரப்பூர்வ பெயர் . இது 1946-48 வரையிலான அரசிலயமைப்பு தொடர்பான விவாதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது" என்று எழுதப்பட்டு உள்ளது.

    26 பக்கங்களைக் கொண்ட இந்தக் கையேட்டில், பாரதத்தில் அதாவது இந்தியாவில், ஆட்சியில் மக்களின் சம்மதத்தைப் பெறுவது ஆரம்ப காலத்தில் இருந்தே வாழ்க்கையின் ஒரு பகுதியாகும் என்று கூறுகிறது. இது "பாரதத்தில் ஜனநாயக நெறிமுறைகளை" பண்டைய காலத்திலிருந்து இன்றைய காலம் வரை விவரிக்கிறது, மதங்கள், பாடல்கள் மற்றும் ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசங்களின் நிகழ்வுகளும் இதில் குறிப்பிடப்பட்டு உள்ளன.

    இந்திய நெறிமுறைகளின்படி, ஜனநாயகம் என்பது நல்லிணக்கம், தேர்வு சுதந்திரம், பல கருத்துகளை வைத்திருக்கும் சுதந்திரம், ஏற்றுக்கொள்ளும் தன்மை, சமத்துவம், மக்கள் நலனுக்கான நிர்வாகம் மற்றும் சமூகத்தில் உள்ளடக்கம் போன்றவற்றை உள்ளடக்கியது. இவை அனைத்தும் மக்களை வழிநடத்த அனுமதிக்கின்றன என்று அந்த புத்தகம் கூறுகிறது.

    • அதிகாரிகள் தரப்பில் 12 சுற்று பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருக்கிறது
    • இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக்

    அமெரிக்கா, சீனா, ரஷியா, இங்கிலாந்து மற்றும் இந்தியா உட்பட 19 நாடுகளையும், ஐரோப்பிய ஒன்றியத்தையும் உள்ளடக்கிய கூட்டமைப்பான ஜி20 அமைப்பின் 18வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புது டெல்லியில் வரும் 9, 10 தேதிகளில் நடைபெறவிருக்கிறது. இதில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் (43) இந்தியாவிற்கு வருகை தர உள்ளார்.

    இதற்கிடையே, இங்கிலாந்திற்கும் இந்தியாவிற்குமிடையே ஒரு தாராள வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement) ஏற்படுத்தும் முயற்சியில் இரு நாடுகளின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக தற்போது வரை அதிகாரிகள் தரப்பில் 12 சுற்று பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருக்கிறது.

    இந்த பேச்சுவார்த்தைகள் குறித்து இங்கிலாந்து பிரதமரின் கருத்தாக அந்நாட்டிலிருந்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அதில் தெரிவிக்கப்படுவதாவது:

    பொருளாதார வகையில் மட்டுமின்றி அனைத்து ஜனநாயக நாடுகளும் சந்தித்து வரும் சவால்களை எதிர்கொள்வதிலும் மற்றும் அனைத்து வகையிலான இரு தரப்பு உறவிலும், இங்கிலாந்திற்கு இந்தியா ஒரு தவிர்க்க இயலாத முக்கியமான வர்த்தக பங்காளி. தற்போது நடைபெறும் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவுக்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து முன்னேறி வருகிறது.

    பிரிட்டன் முழுவதிற்கும் பலனளிக்க கூடிய ஒரு ஒப்பந்த முயற்சிக்குத்தான் பிரதமர் ஒப்புதல் அளிக்க விரும்புகிறார்.

    வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்தியாவுடன் நீடித்து நிற்கும் ஒரு உறவுமுறையை ஏற்படுத்த தாம் விரும்புவதாக கேபினெட் சந்திப்பில் பிரதமர் தெரிவித்தார்.

    இவ்வாறு அந்த தகவல்கள் கூறுகின்றன.

    இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக்கிற்கு இந்திய வருகையின் போது, சிறப்பான வரவேற்பளிக்க இந்திய அரசு தயாராகி வருகிறது.

    இந்திய மென்பொருள் துறையின் முன்னணியில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனரான இந்தியாவின் முன்னணி கோடீசுவரர் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷரா மூர்த்தி, ரிஷி சுனக்கின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

    • டெல்லியில் மூன்று நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்படுகிறது
    • ஜென்மாஷ்டமியை தொடரந்து நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

    டெல்லியில் வருகிற 9 மற்றும் 10-ந்தேதிகளில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் அமெரிக்க அதிபர் உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். மேலும், ஐரோப்பிய யூனியன் மற்றும் சர்வதேச அமைப்பின் தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.

    இதனால் டெல்லி விழாக்கோலம் பூண்டுள்ளது. ஜி20 மாநாட்டைத் தொடர்ந்து வருகிற 8-ந்தேதியில் இருந்து 10-ந்தேதி வரை டெல்லியில் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 7-ந்தேதி (நாளை) ஜென்மாஷ்டமியை தொடர்ந்து விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் கல்வித்துறையைச் சேர்ந்த ஊழியர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்ல வாய்ப்புள்ளது. அதேவேளையில் ஜி20 மாநாட்டில் பல்வேறு துறை சார்பாக வேலையில் ஈடுபட மனிதவளம் தேவைப்படும். அவ்வாறு தேவைப்படும்போது, கல்வித்துறையில் இருந்து ஊழியர்களை அனுப்பி வைக்க நேரிடும். இதற்கான அனைவரும் டெல்லிலேயே இருக்க வேண்டும். போன் எப்போதும் செயல்பாட்டில் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் அழைக்கப்படும்போது உடனடியாக வரவேண்டும் என சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • ரஷிய அதிபர் புதின் மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என ரஷியா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது
    • அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே பல்வேறு சிக்கல்கள் நிலவுகிறது

    உலக பொருளாதாரத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்க கூடிய பிரச்சனைகள் குறித்து ஆராய்ந்து தீர்வு காண அமைக்கப்பட்டது உலகின் 19 நாடுகளையும், ஐரோப்பிய ஒன்றியத்தையும் உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்பு.

    இக்கூட்டமைப்பு, முதல் முறையாக 2008-ல் அமெரிக்காவின் வாஷிங்டனில் சந்தித்தது. தற்போது இம்மாதம் 9, 10 ஆகிய தேதிகளில் இந்திய தலைநகர் புதுடெல்லியில் இதன் அடுத்த உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.

    இதில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவிற்கு வருகை தருகிறார். ஆனால், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், இந்த மாநாட்டில் கலந்து கொள்ள போவதில்லை என்றும் புதினுக்கு பதிலாக ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லவ்ரவ் பங்கேற்பார் எனவும் ரஷியா அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.

    சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே, ரஷிய-உக்ரைன் போர் குறித்த மாறுபட்ட நிலைப்பாடுகள் காரணமாகவும், இரு நாட்டு பொருளாதார உறவில் எழுந்துள்ள பல்வேறு சிக்கல்கள் காரணாமாகவும், சமீப காலமாக இரு நாடுகளுக்கும் இடையே உறவு சுமூகமாக இல்லை.

    அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாட்டு அதிபர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கும் போது சந்தித்து கொள்வார்கள் என்றும் அப்போது அவர்கள் இருவருக்கும் இடையிலான சிக்கல்களை தணிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடக்கலாம் எனவும் நம்பப்பட்டது.

    ரஷிய அதிபர் புதினை போல சீன அதிபரும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என அதிகாரபூர்வமாக சீனா அறிவித்திருக்கிறது. சீன அதிபருக்கு பதிலாக அந்நாட்டு தூதர் லி கியாங் வருகை தருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் டெலாவேர் மாநிலத்தில் உள்ள ரெகோபோத் கடற்கரையில் ஜோ பைடனுக்கு சொந்தமான 2 வீடுகள் உள்ளன. தற்போது அங்கு சென்றிருக்கும் அவரிடம் இது குறித்து கேட்கப்பட்டது.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    சீன அதிபர் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள போவதில்லை எனும் அறிவிப்பால் நான் ஏமாற்றமடைந்துள்ளேன். ஆனாலும், அவரை நான் விரைவில் சந்திப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆனால், எந்த நாட்டில், எப்போது சீன அதிபரை பைடன், சந்திப்பதாக இருக்கிறார் என்பது குறித்த தகவல்கள் தற்போது இல்லை.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம், இந்தோனேசியாவில் உள்ள பாலியில் ஜி ஜின்பிங்கும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சந்தித்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெற இருக்கிறது
    • அமெரிக்க அதிபர் உள்ளிட்ட உலக தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்

    ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்தி வருகிறது. 200 மாநாடு 32 இடங்களில் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்திலும் மாநாடு நடைபெற்றது. உச்சி மாநாடு டெல்லியில் அடுத்த மாதம் 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடைபெற இருக்கிறது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.

    இதனால் டெல்லி நகரை அழகுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சுவர்கள் அனைத்திலும் வண்ண வண்ண படங்கள் வரைதல், மரங்கள் வளர்த்தல், பூச்செடி வைத்தல், சாலைகள் சீரமைப்பு போன்ற பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

    டெல்லி என்றாலே மத்திய அரசுக்கும், அம்மாநில அரசுக்கும் இடையில் மோதல் போக்கு இருந்து வருகிறது. தற்போது டெல்லியை அழகுப்படுத்துவதிலும் பா.ஜனதாவுக்கும், ஆம்ஆத்மிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

    டெல்லி மாநில அரசின் செலவில்தான் நகரம் புதுப்பொழிவாக ஜொலிக்க இருக்கிறது என்கிறது ஆம் ஆத்மி கட்சி. ஆனால், மத்திய அரசுதான் பணம் செலவழிக்கிறது என்கிறார் டெல்லி மாநில பா.ஜனதா தலைவர். இதனால் டெல்லியை அழகுபடுத்தும் பணியில் பணம் செலவழிப்பது யார்? என்பதில் வார்த்தை போர் ஏற்பட்டுள்ளது.

    கடந்த வாரம் டெல்லி மாநில பா.ஜனதா தலைவர் விரேந்த்ரா சச்வாடா கூறுகையில் ''டெல்லியில் ஜி-20 மாநாட்டிற்காக, நகரை அழகுப்படுத்தும் பணிகளை டெல்லி அரசு மற்றும் டெல்லி மாநகராட்சி செய்து வருகின்றன. ஆனால், இவை அனைத்தும் மத்திய அரசு வழங்கும் நிதியில் இருந்து செய்யப்படுகிறது'' என்றார்.

    இதற்கு ஆம் ஆத்மி கட்சி சார்பில் ''புதுடெல்லி நகராட்சி கார்பரேசன் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றின் சாலைகள் தொடர்பான திட்டத்திற்கு மட்டும் மத்திய அரசு பணம் அளித்துள்ளது.

    ஆம் ஆத்மி கட்சியால் செய்த வேலைகளை பா.ஜதான செய்தது என்று சொல்வது அதிர்ச்சி அளிக்கிறது. பொதுப்பணித்துறை சாலைகளுக்கு அனைத்து பணமும் டெல்லி அரசின் பொதுப்பணித்துறையால் செலவழிக்கப்பட்டுள்ளது. அதேபோல் எம்.சி.டி. சாலைகள் பணிக்கான செலவை எம்சிடி செய்துள்ளது'' என பதிலடி கொடுக்கப்பட்டது.

    இதற்கு சச்வாடா பதில் கூறுகையில் ''டெல்லியை அழகுப்படுத்துவதற்கான அனைத்து செலவுகளையும் மத்திய அரசு செய்துள்ளது. மத்திய அரசு செய்த வேலைகளை ஆம் ஆத்மி மற்றும் கெஜ்ரிவால் மந்திரிகள், தாங்கள் செய்ததாக பெயரை தட்டிச்செல்ல பார்ப்பது அவமான செயல்'' என்றார்.

    மேலும், "டெல்லியை அழகுப் படுத்துவதற்கான ஒரு திட்டத்தை செய்ததாக கெஜ்ரிவால் அரசால் சொல்ல முடியுமா?" என சாவல் விட்டுள்ளார். 

    • கொள்கை ஸ்திரதன்மையை கொண்டு வந்துள்ளோம்
    • வெளிநாட்டு முதலீடுகளுக்கான தாராள மையம் போன்றவற்றை விரிவாக்கம் செய்துள்ளோம்

    ஜி-20 வர்த்தக மற்றும் முதலீடு மந்திரிகளுக்கான மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    இன்று இந்திய பொருளாதாரத்தில் உலகளாவிய நம்பிக்கையை நாம் காண்கின்றோம். வாய்ப்புகள் மற்றும் விருப்பங்களின் கலவையாக இந்தியா பார்க்கப்படுகிறது. டிஜிட்டல், புதுமையை ஊக்குவித்தல், தடையில் இருந்து சிகப்பு கம்பளம், வெளிநாட்டு முதலீடுகளுக்கான தாராள மையம் போன்றவற்றை இந்தியா விரிவாக்கம் செய்துள்ளது.

    எல்லாவற்றிற்கும் மேலாக கொள்கை ஸ்திரதன்மையை கொண்டு வந்துள்ளோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவை உலக பொருளாதாரத்தில் 3-வது நாடாக உயர்த்த உறுதிபூண்டுள்ளோம்.

    நியாயமான விலையில் பொருட்கள் கிடைப்பது, குறைகளை கையாளும் வழிமுறைகள் ஆகியவற்றில் நுகர்வோர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கண்டறிவது அவசியமானது.

    சிறுகுறு, நடுத்தர தொழில்கள் மூலம் 60 முதல் 70 சதவீதம் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. உலக ஜிடிபி-யில் 50 சதவீதம் பங்களிக்கிறார்கள். அவர்களுக்கு நாம் தொடர்ந்து ஆதரவு அளிப்பது அவசியம்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    • ஜி20 அமைப்பின் சுகாதார அமைச்சர்கள் சந்திப்பு காந்திநகரில் நடைபெற்றது
    • 2030 ஆம் வருடத்திற்கு முன்னதாகவே காசநோயை இந்தியா ஒழித்து விடும்

    அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட 19 நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியத்தையும் உள்ளடக்கிய சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான ஒரு அமைப்பாக உருவாக்கப்பட்டது தான் ஜி20. முக்கிய சர்வதேச பொருளாதார பிரச்சினைகளில் உலகளாவிய ஒத்துழைப்புடன் உறுப்பினர் நாடுகளுக்கு ஒரு கட்டமைப்பை வடிவமைப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

    இந்த அமைப்பின் தலைமை பொறுப்பு ஒவ்வொரு நாட்டுக்கும் சுழற்சி முறையில் தரப்படுகின்றது.

    1 டிசம்பர் 2022 முதல் 30 நவம்பர் 2023 வரை ஜி20 அமைப்பின் தலைவர் பதவியை இந்தியா வகிப்பதால் 2023 ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமையேற்று இருக்கிறது. இதையொட்டி ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பல்வேறு துறைகளின் பணிக்குழு கூட்டம் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஜி20 அமைப்பின் சுகாதார அமைச்சர்கள் சந்திப்பு குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்றது. இதில் 70க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வீடியோ மூலம் கலந்து கொண்டு உரையாற்றினார். அதில், "

    அடுத்து ஒரு பெரும் சுகாதார அச்சுறுத்தல் மற்றும் சுகாதார அவசரநிலை வரும் போது அதனை எதிர்கொள்ளும் வகையில் நம்மை நாம் இப்போதே தயார் செய்து கொள்ள வேண்டும். உலக சுகாதாரத்திற்கான பல உலகளாவிய முயற்சிகளை டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் ஒன்றிணைத்து நாம் ஒரே தளத்தில் கொண்டு வர முடியும். இதன் மூலம் ஒரே ஆராய்ச்சியை வேறு வடிவத்தில் வேறொருவர் செய்வதும் அதனால் நேரமும், பணமும் விரயமாவதை தவிர்க்கலாம்."

    "நமது புது முயற்சிகள் அனைத்தும் பொது நன்மைக்காக இருக்க வேண்டும். தொழில்நுட்பம் அனைவருக்கும் பயன்படும்படி பொதுவானதாக மாற்ற வேண்டும். இதன் மூலம் உலகளாவிய ஆரோக்கிய கட்டமைப்பை உருவாக்குதல் சாத்தியமாகும். "நிக்ஷே மித்ரா" எனப்படும் காசநோய் ஒழிப்பிற்கான நண்பர்கள் அமைப்பின் மூலம் மக்களின் பங்களிப்புடன், இந்தியா, முன்பு நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கான 2030 ஆம் வருடத்திற்கு முன்னதாகவே காசநோயை ஒழித்து விடும்," என்று மோடி கூறியிருந்தார்.

    2020ல் உலகெங்கும் பரவிய கொரோனா பெருந்தொற்றையும் அதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு மற்றும் உயிர்சேதம் ஆகியவற்றை மறைமுகமாக குறிக்கும் விதமாகத்தான் இந்த உரையில் மோடி 'அடுத்த சுகாதார அவசரநிலை' என குறிப்பிட்டதாக சமூக வலைதளங்களில் சில பயனர்கள் கருத்து தெரிவித்தனர்.

    • உக்ரைன்- ரஷியா போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை
    • உக்ரைனில் இருந்து தானியம் ஏற்றுமதி ஆவதற்கு ரஷியா தொடர்ந்து முட்டுக்கட்டை

    இந்தியாவின் தலைநகர் டெல்லியில் அடுத்த மாதம் ஜி-20 மாநாடு நடைபெறுகிறது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இந்த ஜி-20 மாநாட்டில் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருவதுதான் முக்கிய தலைப்பாக இருக்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    ''எங்களுடைய கூட்டணி நாடுகளுடன் நடைபெறும் உரையாடலில் உக்ரைன் போர் குறித்ததுதான் முக்கிய தலைப்பாக இருக்கும். இனிவரும் உரையாடல்களில் இதற்குதான் முக்கியத்துவம். ஜி-20 மாநாட்டில் இது உண்மையாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை'' என அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்.

    ரஷியா உக்ரைன் மீது தாக்குதல் தொடங்கி சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. தற்போது டிரோன் தாக்குதல் அதிகரித்துள்ளது. உக்ரைன் தானிய ஏற்றுமதி செய்ய முடியாத அளவிற்கு ரஷியா முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இது உலகளவில் தானிய தட்டுப்பாட்டிற்கு வழிவகுக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'.
    • இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது.

    ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது.


    நாட்டு நாட்டு பாடல் (ஆர்.ஆர்.ஆர்.)

    'நாட்டு நாட்டு' பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்ததற்கு அதன் நடனமும் ஒரு காரணமாகும். ஜூனியர் என்.டி.ஆரும் ராம் சரணும் போட்டி போட்டு ஆடிய இந்த பாடலுக்கு அதே ஸ்டெப்புகளை போட்டு ரீல்ஸ்களை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் பகிர்ந்தனர். 'நாட்டு நாட்டு' பாடலுக்கு தென்கொரியாவிலும் அதிக வரவேற்பு கிடைத்தது.


    நாட்டு நாட்டு பாடல் (ஆர்.ஆர்.ஆர்.)

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில் கலந்துகொண்ட இந்தியாவிற்கான தென் கொரிய தூதர் ஜாங் ஜே போக், ஆர்.ஆர்.ஆர். படத்தின் கதாநாயகன் ராம் சரணுடன் மேடையில் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனமாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    • ஜெர்மனி வெளியுறவுத் துறை மந்திரி அன்னாலெனா பேர்பாக் இந்தியாவிற்கு வருகை தர உள்ளார்.
    • பல சமூக சவால்கள் இருந்தபோதிலும் உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக இந்தியா விளங்குகிறது என்றார்.

    பெர்லின்:

    ஜெர்மனி ஜி7 நாடுகள் குழுவின் தலைமைப் பொறுப்பேற்ற பின், இந்தியாவிற்கு வருகை தருவதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை மந்திரி அன்னாலெனா பேர்பாக் தெரிவித்தார். இதுதொடர்பாக அன்னாலெனா பேர்பாக் கூறியதாவது:

    ஜெர்மனி ஜி7 நாடுகள் குழுவின் தலைமைப் பொறுப்பு வகிக்கும் கடைசி மாதங்களில் நான் இந்தியாவிற்கு வருகை தருகிறேன்.

    ஜி20 தலைவர் பதவியை இந்தியா ஏற்ற சில நாட்களில் இந்த பயணம் அமையவுள்ளது.

    இந்திய பயணத்தின்போது தற்போதைய சூழலில் அவசர கவனம் செலுத்த வேண்டிய விஷயங்களான காலநிலை நெருக்கடி மற்றும் விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கைப் பராமரித்தல் ஆகியவை குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறும்.

    வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாகவும், உறுதியான ஜனநாயகமாகவும் உள்ள இந்தியா அனைத்து உள் சமூக சவால்கள் இருந்தபோதிலும் உலகின் பல நாடுகளுக்கு முன்மாதிரியாகவும் பாலமாகவும் உள்ளது.

    உக்ரைனில் ரஷிய ஆக்கிரமிப்புப் போருக்கு எதிராக ஜி20 உள்ளது, இறுதியில் இந்தியாவிற்கும் நன்றி. இந்தியா ஜெர்மனியின் கூட்டணி நாடாக உள்ளது என தெரிவித்தார்.

    • ஜி20 அமைப்பிற்கு, இந்த ஆண்டு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது.
    • தலைமை பொறுப்பை ஏற்ற இந்தியாவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    புதுடெல்லி:

    இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் முடிவில் ஜி20 அமைப்பிற்கு, இந்த ஆண்டு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. இதற்கான மாநாட்டையும் இந்தியா அடுத்த ஆண்டு தலைமை ஏற்று நடத்தவுள்ளது. இந்த பொறுப்பு பிரதமர் நரேந்திர மோடி வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் ஜி 20 மாநாடு அடுத்த ஆண்டு நடந்து முடியும் வரை இந்த தலைமை பொறுப்பு நம் வசம் இருக்கும்.

    இதற்கிடையே, ஜி 20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    இந்நிலையில், ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்ற இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்த உலக தலைவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், நன்றி. உங்கள் மதிப்புமிக்க ஆதரவு இந்தியாவின் ஜி20 தலைமை பதவிக்கு பலமாக இருக்கும். ஒரு சிறந்த உலகை படைக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம் என பதிவிட்டுள்ளார்.

    மேலும், ஐரோப்பிய கவுன்சில் தலைவரான சார்லஸ் மைக்கேலுக்கும் பிரதமர் மோடி தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

    ×