search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "G20"

    • பிரதமர் மோடி ‘எக்ஸ்’ சமூக வலைத்தள முகப்பு படத்தை மாற்றியுள்ளார்.
    • முன்புறத்தில் நடராஜர் சிலை நின்றிருக்க, விளக்குகளால் ஒளிரும் பாரத் மண்டபம், முகப்பு படமாக இடம்பெற்றுள்ளது.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' சமூக வலைத்தள பக்கத்தின் முகப்பு படமாக மூவர்ண கொடியை வைத்திருந்தார்.

    டெல்லியில் இன்று ஜி-20 மாநாடு தொடங்கும் நிலையில், அவர் 'எக்ஸ்' சமூக வலைத்தள முகப்பு படத்தை மாற்றியுள்ளார். ஜி-20 மாநாடு நடக்கும் பாரத் மண்டபத்தின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.

    முன்புறத்தில் நடராஜர் சிலை நின்றிருக்க, விளக்குகளால் ஒளிரும் பாரத் மண்டபம், முகப்பு படமாக இடம்பெற்றுள்ளது.

    • ‘கலாசார வழித்தடம்-ஜி20 டிஜிட்டல் அருங்காட்சியகம்’ என்ற ஒரு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
    • ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் பணம், யு.பி.ஐ. ஒன் வேர்ல்டு, ருபே உள்ளிட்ட திட்டங்களும் இடம்பெற்றுள்ளன.

    புதுடெல்லி:

    ஜி-20 மாநாடு நடக்கும் பாரத் மண்டபத்தில் கண்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை இந்தியாவின் தொழில்நுட்ப திறன் மற்றும் கைவினை பொருட்கள் திறனை பிரதிபலிப்பதாக இருக்கும்.

    இந்தியா, ஜி-20 அமைப்புக்கு தலைமை ஏற்றுள்ளது. டெல்லியில், இன்றும், நாளையும் ஜி-20 மாநாடு நடக்கிறது.

    ஜி-20 அமைப்பில் இடம்பெற்றுள்ள 20 நாடுகள் மற்றும் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்ட 9 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் மாநாட்டு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    அங்கு நிறைய கண்காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள் கண்டுகளிக்கலாம்.

    'கலாசார வழித்தடம்-ஜி20 டிஜிட்டல் அருங்காட்சியகம்' என்ற ஒரு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதில், ஜி-20 நாடுகளின் பாரம்பரியம் மற்றும் கலாசார பெருமையை பறைசாற்றும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

    பாரத் மண்டபத்தின் 4 மற்றும் 14-ம் எண் அறைகளில், 'டிஜிட்டல் இந்தியா அனுபவ மண்டலம்' என்ற கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு வரும் தொழில்நுட்ப திட்டங்களின் அனுபவத்தை பார்வையாளர்கள் அறிந்து கொள்ளலாம்.

    உதாரணமாக, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முக்கியமான முன்முயற்சிகள், ஆதார், டிஜிலாக்கர், யு.பி.ஐ., இசஞ்சீவானி, திக்ஷா, பாஷினி, ஓ.என்.டி.சி., ஆஸ்க் கீதா ஆகிய திட்டங்களின் சிறப்பம்சங்கள் அதில் விளக்கப்பட்டுள்ளன.

    மேலும், மைகவ், கொரோனா தடுப்பூசி திட்டத்துக்கு பயன்படுத்தப்பட்ட 'கோவின்' இணையதளம் மற்றும் ஜன்தன், இ-நாம், ஜி.எஸ்.டி.என், பாஸ்டேக் போன்ற முக்கியமான தொழில்நுட்ப திறன்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.

    ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் பணம், யு.பி.ஐ. ஒன் வேர்ல்டு, ருபே உள்ளிட்ட திட்டங்களும் இடம்பெற்றுள்ளன. இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினர், இந்தியாவில் வங்கி கணக்கு இல்லாதபட்சத்தில், பண பரிமாற்றத்துக்காக, 'யு.பி.ஐ. ஒன் வேர்ல்டு' அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

    இதுதவிர, 'கைவினை பொருள் பஜார்' என்ற கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. அதில், 'ஒரு மாவட்டம், ஒரு பொருள்' என்ற தலைப்பில் நாட்டின் பல பகுதிகளை சேர்ந்த கைவினை பொருட்கள், காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

    சுமார் 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தயாரிப்புகள், கதர் கிராம தொழில் ஆணையம் போன்ற மத்திய அமைப்புகளின் தயாரிப்புகளை அதில் பார்க்கலாம்.

    ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள், இந்திய உள்ளூர் தயாரிப்புகளை வாங்குவதற்காக இந்த கைவினை பொருள் பஜார் அமைக்கப்பட்டுள்ளது.

    • சுமார் ஆயிரத்து 200 மரங்களை டெல்லி மாநகராட்சி அலங்கரித்துள்ளது.
    • கண்காட்சியில் தமிழ்நாட்டின் பூம்புகார் கழகம் சார்பிலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் சார்பிலும் அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    *'ஜி-20' மாநாட்டையொட்டி தலைநகர் டெல்லி பூங்காவனமாய் மாறியிருக்கிறது.

    மரங்கள் எல்லாம் பூக்களாய் மலர்ந்திருக்கின்றன. ஆனால் இயற்கையாய் பூத்த பூக்கள் அல்ல. சாமந்தி, செவ்வந்தி, டெய்சி என பல வண்ணப்பூக்கள் டெல்லியின் சர்தார் படேல் உள்ளிட்ட முக்கியச் சாலைகளில் உள்ள மரங்களில் பொருத்தப்பட்டுள்ளன. சுமார் ஆயிரத்து 200 மரங்களை டெல்லி மாநகராட்சி இவ்வாறு அலங்கரித்துள்ளது.

    * ஜி-20 இலச்சினை, அதன் முத்திரை வாக்கியமான 'வசுதைவ குடும்பகம்-ஒரு உலகம், ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்'-மும் மலர்களை கொண்ட மலர்த்தட்டிகளில் உருவாக்கப்பட்டு முக்கிய இடங்களில் வைக்கப்பட்டிருக்கின்றன.

    * 'வருக' என்பதும், 'வசுதைவ குடும்பகம்' என்பதும் ஜி-20 நாடுகளின் மொழிகளில் ஆங்காங்கே வரவேற்பு பலகைகளில் பொறிக்கப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் ஜெர்மன் முதல் ஸ்பானிஷ் வரையிலான பல மொழி பலகைகளை தலைநகரில் காணமுடிகிறது.

    * மாநாட்டு மைதானத்தில் இந்திய பாரம்பரியத்தை உலக நாடுகள் தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு மாநிலங்களின் கண்காட்சி அரங்குகளும் திறக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியில் தமிழ்நாட்டின் பூம்புகார் கழகம் சார்பிலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் சார்பிலும் அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தின் பலவகை கைத்தறி துணி வகைகள், பல்வேறு தொன்மைப் பொருட்கள், மாமல்லபுரம் கல் சிற்பங்கள், கள்ளக்குறிச்சி மரவேலைப்பாட்டு பொருட்கள், நாச்சியார் கோவில் பித்தளை விளக்குகள், தஞ்சாவூர் பொம்மை, கலை தட்டுக்கள், ஓவியங்கள், பத்தமடை பாய்கள், வடசேரி கோவில் நகைகள் மற்றும் மயிலாடி கல் பொருட்கள் போன்றவை இடம்பெற்று உள்ளன.

    * வெடிகுண்டுகளும், துப்பாக்கிகளும் நிறைந்த ஓர் ஆட்டோ, ஜி-20 மாநாடு நடைபெறும் பிரகதி மைதானம் நோக்கிச் செல்கிறது என்று ஒருவர், சமூக வலைதளத்தில் வெடிகுண்டு புரளியை கிளப்பினார். அதிரடி நடவடிக்கையில் இறங்கிய போலீசார், நேற்று அந்த நபரை தேடிக் கண்டுபிடித்து, கைது செய்தனர்.

    • இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், தனது மனைவி அக்‌ஷதா மூர்த்தியுடன் டெல்லி வந்தார்.
    • ஜி-20 உச்சி மாநாட்டை இந்தியா வெற்றிகரமாக்க எங்களின் பங்களிப்பை அளிப்பதற்கும் வந்துள்ளேன்.

    புதுடெல்லி:

    ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், தனது மனைவி அக்ஷதா மூர்த்தியுடன் டெல்லி வந்தார்.

    இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகனுமான ரிஷி சுனக், டெல்லியில் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார். இதை அவரது வார்த்தைகளும் உறுதிப்படுத்தின.

    வரவேற்பு நிகழ்ச்சிக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் கூறுகையில், 'நான் இந்தியாவுக்கு வந்திருப்பது எனக்கு தனிப்பட்ட முறையில் சிறப்பு வாய்ந்தது. இந்தியா நான் மிகவும் நேசிக்கும் நாடு. எனது குடும்பம் சார்ந்த நாடு. ஆனால் நான் இங்கிலாந்தை பிரதிநிதித்துவப்படுத்தவும், இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புகளை உருவாக்குவதற்கான வழிகளை கண்டறியவும், ஜி-20 உச்சி மாநாட்டை இந்தியா வெற்றிகரமாக்க எங்களின் பங்களிப்பை அளிப்பதற்கும் வந்துள்ளேன்' என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    • உலக தலைவர்கள் பலரும் இந்தியாவின் அழைப்பை ஏற்று, மாநாட்டில் பங்கேற்பதை உறுதிப்படுத்தினர்.
    • பிரதமர் இல்லத்தில் ஜோ பைடன் மற்றும் பிரதமர் மோடி இடையே பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது.

    ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் உள்பட ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அனைவருக்கும் இந்தியா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

    அதன்படி ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் இந்தியாவின் அழைப்பை ஏற்று, மாநாட்டில் பங்கேற்பதை உறுதிப்படுத்தினர். இதேபோன்று, அதிபர் ஜோ பைடன் இந்தியா வருவதை வெள்ளை மாளிகை உறுதி செய்தது.

     

    இந்நிலையில், ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அதிபர் ஜோ பைடன் விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தார். அதிபர் ஜோ பைடனை மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங் வரவேற்றார். அவருடன் உயர் அதிகாரிகளும் அதிபர் பைடனை வரவேற்றனர்.

    புது டெல்லி விமான நிலையம் வந்தடைந்த அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க அவரது இல்லத்திற்கு செல்கிறார். பிரதமர் இல்லத்தில் ஜோ பைடன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையே இரு தரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற இருக்கிறது. இன்றைய சந்திப்பைத் தொடா்ந்து, செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டு அமா்வுகளில் ஜோ பைடன் பங்கேற்க உள்ளார்.

    • டெல்லியில் நாளையும், நாளை மறுநாளும் டாக்சி, ஆட்டோ ஆகியவை இயங்க கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளன.
    • வெளிநாட்டு தலைவர்கள் வந்து செல்லும் பகுதிகளில் 5 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    * ஜி-20 உச்சி மாநாட்டுக்காக டெல்லி விழாக்கோலம் பூண்டுள்ளது.

    * டெல்லி நகரம் முழுக்க சாலை சந்திப்புகள், சாலையோர கட்டிடங்கள் அனைத்தும் அழகுப்படுத்தப்பட்டுள்ளன.

    * வெளிநாட்டு தலைவர்கள் பயணத்துக்கு இடையூறு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக டெல்லி மக்களுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    * டெல்லியில் நாளையும், நாளை மறுநாளும் டாக்சி, ஆட்டோ ஆகியவை இயங்க கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    * பாதுகாப்புக்காக 2 லட்சம் பேர் கொண்ட பாதுகாப்பு படை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    * வெளிநாட்டில் இருந்து வரும் தலைவர்களுக்காக 500 வகை உணவுகள் தயாராகி வருகின்றன. அந்த உணவுகள் தங்கம், வெள்ளி முலாம் பூசப்பட்ட பாத்திரங்களில் வினியோகம் செய்யப்படும்.

    * டெல்லியில் கொசு தொல்லையை கட்டுப்படுத்த 8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    * வெளிநாட்டு தலைவர்களை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு 17 மத்திய மந்திரிகளிடம் பிரித்து ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    * ஜி-20 மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் கல்லூரிகள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    * குற்றத்தை தடுப்பதற்காக செயற்கை நுண்ணறிவு உதவியுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    * வெளிநாட்டு தலைவர்கள் வந்து செல்லும் பகுதிகளில் 5 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    • கேபினெட் மந்திரிகள், மாநில முதலமைச்சர்களுக்கு அழைப்பு
    • இந்திய அரசின் செயலாளர்கள் அனைவருக்கும் அழைப்பு

    ஜி20 மாநாட்டையொட்டி இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு விருந்து அளிக்கிறார். இதற்காக ஜனாதிபதி மாளிகை அழைப்பு விடுத்து வருகிறது.

    ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    இன்றுகாலை தேவகவுடா, மன்மோகன் சிங் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. தேவகவுடா உடல்நலத்தை காரணம் காட்டி பங்கேற்க இயலாது எனக் கூறிவிட்டார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்த தகவலை அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய எதிர்க்கட்சி தலைவர் கேபினெட் மந்திரிக்கு சமமானவர் எனவும் குறிப்பிட்டுள்ளது.

    எதிர்க்கட்சி தலைவர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. அனைத்து கேபினெட் மந்திரிகள், மாநில முதல்வர்கள் ஆகியோர் அழைக்கப்படடுள்ளனர். இந்திய அரசின் அனைத்து செயலாளர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். மேலும் புகழ்பெற்றவர்கள் விருந்தினர் பட்டியலில் உள்ளனர்.

    • உலகத் தலைவர்கள் வருகையையொட்டி டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
    • மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் இருந்து நாளை காலை ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லிக்கு செல்கிறார்.

    சென்னை:

    டெல்லியில் ஜி-20 மாநாடு 9 மற்றும் 10-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட பல்வேறு உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர். ஐரோப்பிய யூனியன் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

    இந்த மாநாட்டை மிகச்சிறப்பாக நடத்த பிரதமர் மோடி பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளார். உலகத் தலைவர்கள் வருகையையொட்டி டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    'ஜி-20' மாநாட்டில் பங்கேற்கும் உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் மாநில முதல்-அமைச்சர்கள் உள்ளிட்ட விருந்தினர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை இரவு( 9-ந்தேதி ) விருந்து அளிக்கிறார்.

    ஜனாதிபதி அளிக்கும் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்ட அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை (சனிக்கிழமை) டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

    அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து நாளை காலை 10.05 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லிக்கு செல்கிறார். விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (10-ந் தேதி) மதியம் ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தடைகிறார்.

    • பிரதமர் மோடி இன்று அமெரிக்க அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்
    • நாளை ஜப்பான், இங்கிலாந்து, ஜெர்மனி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்

    ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் நாளை மற்றும் நாளைமறுதினம் நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக பல்வேறு நாட்டு தலைவர்கள் இந்தியா வந்த வண்ணம் உள்ளனர். இதனால் டெல்லி விழாக்கோலம் பூண்டுள்ளது. தலைவர்கள் தங்கும் ஓட்டல்கள், தெருக்கள், சாலைகள் ஜொலிக்கின்றன.

    ஜி20 மாநாட்டில் தலைவர்கள் உரையாற்றுவார்கள். பிரதமர் மோடியும் உரையாற்றுவார். ஜி20 மாநாட்டிற்கிடையே இருநாடு தொடர்பான பேச்சுவார்த்தையிலும் பிரதமர் மோடி ஈடுபடுவார். அந்த வகையில் 18 நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி, இருநாடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்துவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    இன்று அமெரிக்க அதிபர், வங்காளதேச பிரதமர், மொரீசியஸ் தலைவர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். நாளை இங்கிலாந்து, ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி தலைவர்களுடன் இருநாட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்.

    ஜி20 மாநாட்டில் உலகம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.

    • முக்கிய தலைவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைப்பு
    • மம்தா, ஸ்டாலின் உள்ளிட்ட முதல்வர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்

    ஜி-20 உச்சி மாநாடு நாளை மற்றும் நாளைமறுதினம் டெல்லியில் நடைபெற இருக்கிறது. ஜி20 மாநாட்டையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு பிரமுகர்களுக்கு விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில் கலந்து கொள்ள பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கிடையில் முன்னாள் பிரதமர்களான தேவகவுடா மற்றும் மன்மோகன் சிங் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக இன்று காலை செய்தி வெளியானது.

    இந்த நிலையில், ''ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்பாடு செய்துள்ள விருந்தில் நான் கலந்து கொள்ளமாட்டோன். என்னுடைய உடல்நலம் கருதி கொண்டு அதில் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து அரசுக்கு நான் ஏற்கனவே தகவல் தெரிவித்துள்ளேன். மிகப்பெரிய அளவில் ஜி-20 மாநாடு வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்'' என தேவகவுடா தெரிவித்துள்ளார்.

    மன்மோகன் சிங் கலந்து கொள்வாரா? என்பது உறுதியாகவில்லை. சமீபத்தில் முடிவடைந்த பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின்போது, மன்மோகன் சிங் அவைக்கு சக்கர நாற்காலியில் அமர்ந்து வந்திருந்தார். இதனால் உடல்நலம் கருதி கலந்து கொள்வது சந்தேகமே.

    • இன்று காலை முதல் ஞாயிறு நள்ளிரவு வரை பலத்த பாதுகாப்பு
    • பொதுமக்கள் இந்தியா கேட் பகுதிக்கு செல்ல வேண்டாம் என வலியுறுத்தல்

    டெல்லியில் நாளை மற்றும் நாளைமறுதினம் ஆகிய இரண்டு நாட்கள் ஜி20 மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் டெல்லி வந்த வண்ணம் உள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டுள்ளார்.

    தலைவர்கள் அனைவரும் டெல்லியில் கூட இருப்பதால், இன்று காலை ஐநது மணி முதல் ஞாயிறு இரவு 11.59 மணி வரையிலான உச்சக்கட்ட பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    டெலிவரி சேவை உள்ளிட்ட அனைத்திற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. முக்கியமான மருந்து தொடர்பான சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் இந்தியா கேட், கார்தவ்யா பாத் போன்ற இடங்களில் நடைபயிற்சி, சைக்கிளிங் மற்றும் பிக்னிக் செல்ல வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளனர். இந்த பகுதி கட்டுப்பாட்டு பகுதி-1 என வரையறுக்கப்பட்டுள்ளது.

    டெல்லி மாவட்டத்தில் வாகன போக்குவரத்து ஒழுங்கு படுத்தப்பட்ட நிலையில், ஆம்புலன்ஸ் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. உள்ளூர் மற்றும் சுற்றுலா வந்தவர்கள் உரிய ஆவணங்களுடன் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    டெல்லி போலீசார் கேட்டுக்கொண்டதன்படி, இன்று முதல் 10-ந்தேி வரை மெட்ரோ ரெயில் சேவை அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார், மோப்ப நாய்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெருமைமிக்க இந்துவாக இந்தியா மற்றும் இந்திய மக்களுடன் எனக்கு எப்போதும் தொடர்பு இருக்கும்.
    • நான் இங்கிலாந்து பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு இந்திய மக்களிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது.

    புதுடெல்லி:

    டெல்லியில் வருகிற 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள 'ஜி-20' மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இந்தியா வரவுள்ளார். இதையொட்டி அவர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.

    அந்த பேட்டியில் இந்தியாவுக்கும், தனக்குமான பிணைப்பு, இந்திய-இங்கிலாந்து உறவு, இங்கிலாந்தில் அதிகரித்து வரும் காலிஸ்தான் ஆதரவாளர்களின் வன்முறைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ரிஷி சுனக் விரிவாக பேசினார். அதன் விவரம் பின்வருமாறு:-

    இந்திய வம்சாவளி என்பதிலும், இந்தியாவுடனான எனது தொடர்புகள் குறித்தும் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். உங்களுக்கு தெரியும், என் மனைவி ஒரு இந்தியர். அதோடு பெருமைமிக்க இந்துவாக இந்தியா மற்றும் இந்திய மக்களுடன் எனக்கு எப்போதும் தொடர்பு இருக்கும்.

    நான் இங்கிலாந்து பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு இந்திய மக்களிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது. பிரதமர் ஆன பிறகு நான் செய்த முதல் காரியங்களில் ஒன்று, பிரதமர் அலுவலககத்தில் இந்திய வம்சாவளிகளுடன் சேர்ந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடியது.

    அரசியலை குடும்பத்தில் இருந்து பிரித்து வைத்திருப்பது மிகவும் முக்கியம், ஆனால் எனது பெற்றோர் மற்றும் மாமனார்-மாமியார் போலவே எனது மனைவியும், 2 மகள்களும் எனது மதிப்புகளை மிகவும் வழிநடத்துகிறார்கள்.

    'ஜி-20' மாநாட்டுக்காக மனைவி அக்ஷதாவுடன் இந்தியாவுக்கு பயணம் செய்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சிறுவயதில் நாங்கள் சென்ற சில இடங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம்.

    பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பல்வேறு உலகளாவிய சவால்களை கையாள்வதில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஒத்துழைப்பு எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து ஆலோசிக்க ஆவலுடன் இருக்கிறேன்.

    இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் அதன் அசாதாரண வெற்றிகள், 'ஜி-20' மாநாட்டை சரியான நேரத்தில் நடத்துவதற்கு இந்தியா சரியான நாடு என்பதை உணர்த்துகிறது. இந்தியா இத்தகைய உலகளாவிய தலைமையை வெளிப்படுத்துவதை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    உலக பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது முதல் பருவநிலை மாற்றத்தை கையாள்வது வரை உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ள 'ஜி-20' தலைவர் பதவியின் மூலம் இந்தியாவுடன் நாங்கள் நெருக்கமாக பணியாற்றுவோம்.

    இரு தரப்புக்கும் பயனளிக்கும் மற்றும் 2030-க்குள் வர்த்தகத்தை இரட்டிப்பாக்குவதற்கான பகிரப்பட்ட லட்சியத்தை எளிதாக்கும் ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதற்கு இன்னும் சில வழிகள் உள்ளன. இது முன்னோக்கிய மற்றும் நவீன ஒப்பந்தமாக இருக்கும்.

    இங்கிலாந்தில் எந்த விதமான பயங்கரவாதத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது, வன்முறை, பிளவுபடுத்தும் சித்தாந்தங்கள் எதுவாக இருந்தாலும், அவற்றை எதிர்க்க வேண்டிய கடமையை நான் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறேன்.

    அந்த வகையில் காலிஸ்தான் சார்பு பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலைச் சமாளிக்க இந்திய அரசாங்கத்தில் உள்ள எங்கள் கூட்டாளிகளுடன் நாங்கள் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம்.

    இவ்வாறு அந்த பேட்டியில் ரிஷி சுனக் பேசினார் 

    ×